விடத்தல்தீவு மீனவர் சங்கம் - திரு பொன்ராசா றொபேட் பாலசிங்கம்

(ராஜன், தலைவர்)

1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடத்தல்தீவில் மீனவர் சங்கம் இயங்கியதாக அறிய முடிகிறது. அக்காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் மூன்று சங்கங்கள் மாத்திரமே இயங்கியதாகவும், 1.முசலி 2. மன்னார் 3. விடத்தல்தீவு இந்த விடத்தல்தீவு மீனவர் சங்கமானது பாப்பாமோட்டை முதல் வெள்ளாங்குளம் வரையான மீனவர்களுக்குத் தலைமைச் சங்கமாக இருந்ததாகவும் தெற்குப் பகுதியில் மிக முக்கியமான அமைப்பாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அக்கரையோரப் பகுதி மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் – கடலட்டை மற்றும் கடலுணவுப் பொருட்களை விடத்தல்தீவு சங்கத்தில் விற்று, தங்களுக்கு தேவையான வலை உபகரணங்களை இங்கிருந்து பெற்றுச் சென்றதாக அறிய முடிகிறது. மேலும் இச்சங்கங்களை வடக்கு மீனவ சமாசம் (யாழ்ப்பாணம்) வழிநடத்தியதாகவும் அறியமுடிகிறது. (தகவல்: வடமாகாண கூ.க.தலைவர்)

இக்காலப்பகுதியின் பின் சங்கத்தினை வழிநடத்தியவர்களாக திரு. அ லூக்காஸ் (சம்மாட்டி), திரு. அ அந்திரேஸ்(சம்மாட்டி), திரு அடைக்கலம்(சம்மாட்டி), திரு நீக்சிலாப்பிள்ளை(சம்மாட்டி), திரு பொன்குமார் (சம்மாட்டி) ஆகியோர் ஆவார்கள்.

இக்காலப்பகுதிகளில் கடலில் மேற்கொள்ளப்பட்ட தொழில்கள் வத்துக் களங்கட்டி திருக்கை வலை மற்றும் விற்பனைச் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கவை.

1ம் பொருள் - வலைகள்

திடுவலை, மணல் வலை, போன்ற தொழில்கள் அக்காலப் பகுதியில் முதன்மையான மீன்வள தொழில்களாக காணப்பட்டன. அக்காலத்தில் இயந்திரங்கள் இல்லாதபடியால், பாய்வளல்கள் மட்டுமே பயன்பட்டதாக அறிய முடிகிறது.அக்காலப்பகுதியில் தானி உமாமை சுற்றி கல் அணை கடலுக்குள் நுழையாமலே கட்டப்பட்டதாக அறிய முடிகிறது. (1958–1987 க்குள்).

இக்காலப் பகுதியில் தான் அருகிலுள்ள சணல் எனும் இடத்தில் சல் தடை கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மன்னாரில் இருந்த அர்னால்ட் என்று அழைக்கப்படும் ஒருவர் இதற்குத் தலைவர் அல்லது முன்னோடியாக இருந்ததாகவும் அறிய முடிகிறது.

1965–1970 காலப் பகுதியில் சங்க நிர்வாகம் மாற்றமடைந்து, திரு ஞானமணி அண்ணர் தலைமையில் திரு

அ லூக்காஸ் (சம்மாட்டி), திரு தேவசகாயம் (சம்மாட்டி), திரு நீக்கிலாப்பிள்ளை (சம்மாட்டி), திரு ஆ மரியாம்பிள்ளை (சம்மாட்டி) போன்றோர் உறுப்பினர்களாக இருந்த நிர்வாகக் குழுவின் கீழ் இது ஒரு சிறந்த அமைப்பாக இயங்கியது.

இக்காலப்பகுதியில் இன்று இருணேர்படாசல் என்ற இடத்தில் இருக்கும் காப்பர் பந்து பொலிசு நிலையம் இருந்த இடம் சிரமமான பணி மூலம் சிறிய பாசன நிலமாக ஆழப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 1970 முதல் 1980 வரையிலான காலப்பகுதியில் தொழில் மாற்றமடைந்தது. இக்காலத்தில், இயந்திரப் படகுகள், வெளியிணைப்பு இயந்திர வள்ளங்கள்தொழிலுக்கு செல்லத் துவங்கின; வெள்ளாங்குளம் போன்ற இடங்களில் இருந்து மக்கள், கட்டுப்பாட்டு விதிகளின்றி மீன்பிடி முயற்சிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், “நண்டு வலை” எனப்படும் புதிய தொழில்நுட்ப வலை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன்

வழிச்சல் வலை, கண்டி வலை ஆகியவையும் காணப்பட்டன் இக்காலத்தில் சங்கம் பதியப்படாமலே இயங்கி வந்துள்ளது.

1965 முதல் 1970 காலப்பகுதியில், ஞானமணி அண்ணல், லூக்கேசர், நீக்கியாப்பிள்ளை, தேவசகாயம் போன்ற சம்மாட்டிமார் இச்சங்கத்தை நடத்தி சென்றதாகவும் நாவற்கரைத்தீவில் இச்சங்கம் செயல்பட்டதாகவும், 1975 காலப்பகுதியில் யாக்கோப்பு சம்மாட்டி தலைமையின் கீழ் இச்சங்கம் இயங்கியதாகவும் கூறப்படுகிறது. அக்காலப் பகுதியில், தற்போது இருக்கும் காபர் பகுதியில் அவருடைய படகையும் மற்றும் சங்கத்திற்கு சொந்தமான படகுகளையும் கட்டுவதற்காக, மண்வெட்டி மூலம், ஆட்களை சிரமதான முறையில் சேர்த்துக்கொண்டு கட்டியதாக அறியப்படுகிறது.

(தகவல்: நியூலெவல் ஆட்டர் ஞானமணி அண்ணர்)

1975 முதல் 1980 வரை, இச்சங்கம் செல்வராசா சம்மாட்டி, திரு நாயக் கோன், திரு. சான் போன்றோரின் தலைமையில், கிராமிய மீனவர் சங்கமாக இயங்கியது. (தகவல்: கிராமிய மீனவர் அமைப்பிற்கான வங்கி புத்தகம்)

1980 பின்னர், சங்கமானது திரு செல்வராசா சம்மாட்டி தலைமையில், மீனவ கிராமிய அமைப்பாக பதியப்பட்டது. இவர்களின் சங்கம் சிறிது காலமே இயங்கி, 1981ம் ஆண்டில் மீண்டும் நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டது. அந்த நிர்வாகம் அட்டை ஏற்றுமதி சங்கத்திற்கு மானியமாக வழங்கப்பட்ட நான்கு படகுகள் மூலம் கிடைத்த வருமானத்தில், வலை வியாபாரம் மற்றும் மீன் ஏலம் மூலமாக வருமானம் ஈட்டியதாகவும், இவை சங்க உறுப்பினர்களுக்கு இலகு கடன் முறையில் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை காலமும் சங்கத்திற்கென்று ஒரு நிரந்தர கட்டிடம் இல்லாதபடியால், சங்கமானது பொதுக்கட்டிடங்களிலேயே கூட்டங்களை நடத்தி வந்தது என்பது அறியத்தக்கது. இந்நிர்வாகத்தில் முகாமையாளராக திரு சி. அண்ணல், தலைவராக திரு. சி.அன்ரன், தலைவராக திரு. யுவானிஸ் அவர்களும் ஆகியோர் இருந்தனர்.

இச்சங்கத்தில் அட்டை பெற்றவர்கள் நிரந்தர உறுப்பினர்களாகவும் இருந்ததாகவும், இச்சங்கம் கூட்டுறவுத்துறைக்குள் ஒழுங்குபடுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின் நிர்வாகம் மாற்றமடைந்து திரு அல்போன்ஸ் மாஸ்டர் தலைவராகவும், திரு அ யோசப் முகாமையாளராகவும் திரு அன்ரன் செயலாளராகவும் இருந்தனர். அந்நேரத்தில், அட்டை ஏற்றுமதி கருவாடு மீன் கொள்முதல் நடவடிக்கைகளில் சங்கம் ஈடுபட்டிருந்ததாக அறியப்படுகிறது. 1983 யூலை கலவரம் காரணமாக, சூழ்நிலை மிக மோசமாக மாறியதால், சங்கத்தினரால் சரியான முறையில் செயற்பட முடியவில்லை 1985-1986 காலப்பகுதியில், மீண்டும் சங்கம் புனரமைக்கப்பட்டு, திரு. இசக்கியேல் தலைமையில், திரு க அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ், திரு முத்திராசா ஆகியோர் கணக்காளராகவும், வாரிய உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

பின்னர், அச்சங்கமானது 1989ம் ஆண்டு மேற்கு மீனவர் கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்பட்டது. பெருங்களிப்பற்று மாந்தை மேற்கு பிராந்தியத்தில் பதியப்பட்ட முதல் சங்கமாக விடத்தல்தீவு சங்கமே இருந்தது. அப்போது 120 அங்கத்தவர்களுடன் இச்சங்கம் பதியப்பட்டது.

அந்த நேரத்தில், IRO அலுவலர்கள் மற்றும் வெளிநாட்டு உதவியாளர்களுடன் இச்சங்கம் இணைந்து செயல்பட்டது. 1991இல் நிர்வாகம் மாற்றப்பட்டது. புதிய நிர்வாகத்தில் திரு யா. ஞானசீலன் தலைவராகவும் திரு. றொபேட் பாலசிங்கம் செயலாளராகவும் திரு நெவிலஸ் முகாமையாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்காலப்பகுதியில், அச்சங்கமானது தொழிலாளர்களிடம் இருந்து 1 சி.மீனிற்றுக்கு 1 ரூபாய் இறை வீதம் அறவிட்டு, அவ்வருமானத்தை அனுசரிப்பு முறையில் கடனாக வழங்கி, ஆயுள் காப்பீடு, வலை உபகரணங்கள், விற்பனை போன்ற சேவைகளை முன்னெடுத்துச் சென்றது.

அதன்பின், 1994ஆம் ஆண்டு நிர்வாகம் மாறியபோது, அந்நிருவாகத்தில் திரு பொ. யேசுராசா தலைவராகவும் திரு. கூபீற்றர் செயலாளராகவும் திரு இ. கோட்வின் முகாமையாளராகவும் இருந்தனர். இவர்கள், முன்னர் இருந்த சங்கத்தின் நடைமுறைகளையே பின்பற்றி சங்கச் செயற்பாடுகளை மேற்கொண்டனர்.

1994ல் ஏற்பட்ட இடம் பெயர்வு காரணமாக, அச்சங்கமானது சில காலம் இயங்க முடியாமல் இருந்தது.

2010 மீள்குடியேற்றத்தின் பின்னர், இச்சங்கம் சீராக இயக்கப்படவில்லை. அதிகாரப்பூர்வ பதிவுகளும் சரியாக பராமரிக்கப்படவில்லை. 2017இல், புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டபோது,

திரு டிலீப்குமார் தலைவர்,

திரு எ. எடிசன் செயலாளர்,

திரு அ அருள்நேசன் பொருளாளராகப் பொறுப்பேற்றனர்.

இக்காலப்பகுதியில் 79 உறுப்பினர்கள் இச்சங்கத்தில் இருந்தனர். அதன்பின் சங்க வளர்ச்சிக்காக ஓர் அங்கத்தவரிடமிருந்து ரூ 100 நன்கொடையாகப் பெற்றுத் திரும்பப் பெறும் முறையில் பயன்படுத்தப்பட்டது. இக்காலப்பகுதியில் மீள்குடியேற்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஏற்கனவே இருந்த பழைய காபர் புனரமைக்கப்பட்டது. அத்துடன் அருநோன்டா சணலும் புனரமைக்கப்பட்டது. அதன்பின் 2019இல், புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டபோது,

திருகெசத்தியதீபன் தலைவராகவும்

திருயான்சன் பொருளாளராகவும்,

திரு எ. எடிசன் செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, 2021 இல், திரு சி. சுரேஸ் தலைவராகவும்

திரு அலன் நிர்மல், பொருளாளராகவும் திரு S. சத்தியதீபன் செயலாளராகவும் புதிய நிர்வாகம் பதவியேற்றது.

அந்த நேரத்தில், 200க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இச்சங்கத்தில் இருந்தனர்.

இவர்கள் காலப்பகுதியில், மண்ணெண்ணை விற்பனை மூலமாகவும், கம்பு வியாபாரம் மூலமாகவும் வந்த ஊருமானத்தில் பல அபிவிருத்தி வேலைகள் நடைபெற்றன.

2023 ஆம் ஆண்டில், புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது.

தற்போது,

திரு ரொபெட் பாலசிங்கம் தலைவராகவும்

திரு. ப. சுலைக்சன் செயலாளராகவும்

திரு. வ.நிரோஜன் பொருளாளராகவும் செயலாற்றுகின்றனர்.

சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 300 உறுப்பினர்கள் இச்சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.