
சுடுகின்ற நினைவுகள் எம் ரீ எப் அமீர்
சுடுகின்ற நினைவுகள்...... ஓர் ஊர் ஆகையினால் ஒன்றாக உறவாடினோம். தாயும், பிள்ளையும் போல்... சொந்தங்களும் ஒன்றாய் நண்பர்களும் சொந்தம் போல்.... சொந்தங்களைப் பிரிந்து நட்புக்களை இழந்து இதயத்தில் சோகங்களைச் சுமந்து எங்கோ பல ஊர்களில் உயிர் காக்கக் காலடி வைத்தோம்... ஓர் ஊர் என வாழ்ந்தவர்கள் பல ஊர்களிலும்.... சென்ற சென்ற இடங்களில் சிதறுண்டு வாழ்ந்தனர்... சொத்துக்கள் சிதைந்தன. சொந்தங்கள் சிதறியது. கலாச்சாரம் கை நழுவியது. கல்வி சீரழிந்தது. நட்புக்கள் திசை மாறியது..... ஓர் ஊர் என வாழ்ந்த எம்மவர்கள் பல ஊர்களுக்கும், அகதி என்ற முத்திரையுடன் விதைக்கப்பட்டனர்.... புலம் பெயர்ந்தோர்,
புலத்தில் மீளக் குடியேறியோர், புத்தளம் நகரிலும், அல்-ஜித்தா, கரம்பை,
ஹுசைனியாபுரம், இருபத்தைந்து
ஏக்கர்,
குருநாகல், பாணந்துறை, பகுதிகளிலும்,
தோட்டவெளி கிராமத்திலும், கொழும்பு மா நகரின் பல இடங்களிலும்......
இங்கு அறுவடையாகும் விதைகள் இன்னும் நாட்டின் எட்டுத்திக்கிலும். இப்புதிய விதைகளுக்குத் தெரியாது எமது பூர்வீகம் விடத்தல் தீவென.... சொந்த மண்ணை இழந்து, மாற்றான் மண்ணில் அகதியாக.... சொந்த மண்ணில் வேற்றூரான் காலூன்றி
சொந்தக்காறன் செல்லும் வேளை
சொந்த ஊர் எது என வேற்றூரான் கேட்க என் மனம் எரிமலையாய் வெடிக்கின்றது... புதிய இருப்பிடத்தில்
புதிய சொந்தங்கள் உருவாகியது.
பழைய சொந்தங்களும்
பழைய நட்புக்களும்,
மறக்கடிக்கப்பட்டது.
பெண் கொடுத்து, பெண் எடுத்த திருமண பந்தத்தால் திசை மாறியது உறவு.... சொந்த ஊரில் அனைத்து வீட்டிலும் அனுமதி இன்றி நுளையும் விசா எமக்குண்டு.....
இங்கு அயலவர் வீட்டில் நுளைவதற்கு அழைப்பு மணி அளுத்தியபின் அனுமதிக்காகக் காத்திருக்கும் விசா... சிறகடித்துப் பறந்து திரிந்த எமக்கு கூண்டிற் கிளியாக... பத்துப் பேச் காணிக்குள் சிறகை விரித்துப் பறக்கவே பாவி எமக்கு வழியில்லை..... மூன்று பிள்ளை பெற்றவர்கள் முப்பது பேச் காணி, வீடு வாங்க
மூன்று (முப்பது+முப்பது)இலட்சம் காணி, வீடு வாங்கக் காசேது? கட்சி ஒன்றே என்ற எம்மிடம் கண்டவன்,
கண்டவன் கைகளில் கட்சி தாவும் அரசியல்
கை நீட்டாத எம்மவரை கை நீட்டப் பழக்கிய அரசியல் கட்சி வெல்ல இனங்களுக்கிடையே
முட்டி,மோதப் பழக்கிய அரசியல் சுய நல அரசியல் ஆனதுவே... இன்னும், இன்னும்
காலம் போகப், போக...... இருக்குது எமக்குப் பிரட்ச்சினை... கடந்த கால நினைவுகள்
கண் முன் தோன்றும் வேளையிலே என் மனம் சுடுகின்றது........