நம்ம அந்த விடத்தலூரு கதையக்கேளு - நீல் ஆம்ஸ் ஸ்ட்ரோங்

நம்ம அந்த விடத்தலூரு நம்ம ஊரு கதையக்கேளு- தோழா நீயும் தோழா-

நம்ம விடத்தலூரின் புகழப்பாடு- தோழா நீயும் தோழா- கடற்கரையில் நடந்த கதையைச் சொல்வேன் நீயும் கேளு - எங்கள் கடைத்தெருவில் நடந்த கதையை சொல்றேன் நீயும் கேளு- பள்ளமடுக்குளத்தில் நடந்த கதை கேளு - எங்கள் பள்ளமடுக்குளத்தில் நடந்த கதை கேளு- இந்தப் பொன்மாலை நேரத்தில்-

நம் நாட்டின் சங்கதியை - பண்பாடிச்சொல்லப்போறேன் நீயும் கேளு- நாளாந்தம் போய் வந்தோம்- கடலுக்குள்ளே போய் வந்தோம்- ஏராளம் மீன்கள் அள்ளி அள்ளி வந்தோம்-

நாங்கள் நாளாந்தம் போய்வந்தோம் வயலுக்கும் போய் வந்தோம்-வேளான்மை செய்து நெல்லுக்கொண்டு வந்தோம்-

நம்ம ஊரு கதையக்கேளு தோழா நீயும் தோழா..... அடைக்கலம் அன்னையும் சந்தியோடு மையோரும்- எமை நாளும் காத்து நின்ற கதை சொல்வேன் நீ கேளு- பள்ளி வாசலிலும் பிள்ளையார் கோவிலிலும் - நோன்புக்கஞ்சியும் பொங்கல் சோறும் உண்ட கதை கேளு- றம்ழான் திருநாள் என்றல் ஊருகக்கெல்லாம் பலகாரம்- நந்தாரும் தீபாவளியும் ஊரே சேந்து கொண்டாடும்- ஜாதிமதபேதம் இல்லா ஊரு நம்ம ஊரடா- காக்கா குருவி கூட வியந்து நிற்கும் பாரடா - நம்ம ஊரு கதையக்கேளு- தோழா நீயும் தோழா

தண்ணிக் குடம் கொண்டு பெண்கள் வரும் அழகைப்பார்- அதை சந்திக்கட்டுக்கட்டி பார்த்து நிற்கும் காளையர் பார்- நொங்கு வண்டிக்கதை கேளு- சீட்டாட்ட கதை கேளு- புதுக்கட்டில் Football விளையாடிநின்ற கதை கேளு - கோவில் மணியோசையும் பள்ளி பாங்கோசையும்- நாளாந்தம் கேட்டு நிற்கும் அதுதான் எங்கள் ஊரடா- திருந்தாதி அடித்த பின்ன வீட்ட போனா அடி விழும் - செபமால சொன்ன பின்தான் இரவுச்சோறு மடி விழும்- மீரான் காக்க கடையும் இருந்தது- மகுறுப் கடையும் இருந்தது-

காறுமேன் காக்கா புடவக்கடையும் இருந்தது-

அந்தோனிப்பிள்ளையரும் வெள்ளச்சிலுவையரும் - இசைகள் வாசிக்க கேட்டு நின்றோமே- அடைக்கலம் ஐயாவும் சவிரியப் அண்ணயும் - நாட்டுக்கூத்துக்கள் கட்ட பார்த்து நின்றோமே- கணபதி அண்ணயின்ர சைக்கிள் கடையும் நீபாரு- ஆசமுத்து அண்ணையின்ர சலூன் கதையும் நீ கேளு- ஆடிக்காற்றில் பட்டம் விட்டு மகிழ்ந்து நின்ற ஊரடா- நம் ஊரப் போல ஒரு ஊரே இங்கு இல்லடா-