
விடத்தல்தீவு அன்னையர் கழகம்.
விடத்தல்தீவில் உள்ள பல்வேறுபட்ட அரச அரசசார்பற்ற அமைப்புகள், சங்கங்களை போன்று ஊரிலுள்ள அன்னையர்களை அங்கத்தவர்களாக கொண்டதுதான் இந்த விடத்தல்தீவு அன்னையர் கழகம்.
கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பானது உத்தியோகபூர்வமாக பதியப்படாததும் நிர்வாக அலகுகளை கொண்டிராததுமான ஒரு அமைப்பாக இயங்கிவருவதுடன் அமைப்பின் ஊடாக பல்வேறுபட்ட பணிகள் சேவைகள் ஆற்றுப்படுகிறது.
அந்த வகையில் வீடுகளிலும், வைத்தீயசாலைகளிலும் உள்ளநோயளர்களைதரிசித்தல், ஊரில் பொது இடங்களில் குறிப்பாக எமது பள்ளமடு குளம் மற்றும் விடத்தல்தீவு வைத்தியசாலை உட்பட பல பகுதிகளில் சிரமதான பணிகளை மேற்கொள்ளுதல், இறப்பு நிகழ்ந்த வீடுகளில் தேவைப்படும் அவசிய தேவைகளுக்காக உதவுதல்,போன்ற பணிகளை தாமாகவே முன்வந்து ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.