
"கோணாமலை எனும் மனிதம் சாய்ந்தது".
தன் ஆயுள் முழுதும் எங்கள் ஊருக்காக உழைத்த "கோணாமலை" ஐயா இறைவனடி சேர்ந்தார்.
பெயருக்கு ஏற்றால் போலவே பார்போரெல்லாம் பாக்குமனவிற்கு ஆறடிக்கு மேல் உயர்ந்து வளர்த்து கட்டுமஸ்தான முறுக்கேறிய அங்காங்கே நரம்புகள் முறுக்கேறி புடைத்த தோற்றம்.
காரத்தை மடிச்சு சந்திக்கட்டு கட்டி வாயில் வெத்திலை சப்பியவாறு, தோவில் துவாயும் சாற மடிப்பில் வெத்தில பாக்கு, கண்ணாம்பு பைய சொரிகியும் காலுக்கு அவருக்கு அளவான செருப்பு தேடியும் கிடைக்காத செருப்பொன்றை கொழுவிக்கொண்டு செய்யும் தொழிலை மிக நேர்த்தியாக செய்து முடிக்கும் மனிதம் எமது கோணாமலை ஐயா
கைய கட்டி கட்டின கைய கிழே விடாமல்,எதுக்கும் முந்தியடிக்காமல் ஏதோ ஒரு ஓரத்தில் திண்டு தனது தேவைகளை பூர்த்திசெய்ய யாரையும் மனநோக செய்யாதவர், தானுண்டு தன்ர வேலையுண்டு என்று சாதுவாக யாருக்கும் தீங்கு எண்ணாத உத்தமர்.
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இன்றியமையாத அடிப்படை மனித தேவைக்குரிய பணியை கோணாமலைஐயா அவர்கள் எமக்கும் எமது ஊருக்கும் ஆற்றியமைக்கு நாம் என்ன கைம்மாறு செய்தாலும் அதற்கு ஈடாகா. தன் பணி நாளில் எமக்காகவும் எமது ஊருக்காகவும் உழைத்த மனிதம் எமது வாழ்நாள் தெய்வம் எமது கோணாமலை ஐயா என்றால் அது மிகையாகாது.
ஊரில் எம்மவரது துப்பரவு பணிகளாக இருந்தாலும், ஏனைய வேலைகளாக இருந்தாலும், அலலது நெருக்கமான எமது காணி வேலிகளை அடைப்பதாக இருந்தாலும் அவற்றை நேர்த்தியாக செய்து முடிக்க எமக்கெல்லாம் பரிச்சாத்தமான பெயர் கோணாமலை ஐயா
ஊரில் வேறு சிலர் இவ் வேலைகளை செய்த போதிலும் நேரம் பித்தாமல் கொடுக்கும் வேலையை சொன்ன நேரத்துக்கு வந்து செய்துமுடித்து வருவதற்கு அவருக்கு நிகர் எவருமிலர்.
குறிப்பாக கொல்லப்போனால் எனது அனுபவத்தில் பக்கத்து விட்டு காரருக்கு பங்கம் விளைவிக்காத வகையில் ஒரு இஞ்சி அளவு கூட தப்பாத வகையில் நடு வேலிக்கட்டைகளை போடுவதில் மணுசன் நேர்மையாளன். கத்துமதில் அத்திவார கிடங்கு, மலசல கூட குழிக்கிடங்கு, அச்சுப்பிசகாத கிடுகு அடைப்பு கம்பி வேலிக்கு முள்ளுக்கம்பி இழுத்து கொண்டி அடிக்கிற நேர்த்தி இருக்கே அப்பப்பா அவருக்கு நிகர் அவரேதான்,
பஞ்சிப்பட்டு வேலை செய்வது அவரது இயல்பிலில்லை, பார்ப்போரெல்லாம் "இந்த வேலி கோணாமலை அண்ணன் அடைச்சதுதானே " எண்டு கொல்லுமளவுக்கு அவரது நேர்த்தியான வேலை அவருக்கு சான்றுபககும்.
வளஞ்சு,நெழிஞ்சு இருக்கும் வேலிக்கட்டைகள் கூட இவரது கை பட்டதும் நேராக நிமிர்த்து சலியூட் அடிக்கும், தான்வேலிக்கட்டைகள்போடும் போது அயல்வீட்டாரையும் கூப்பிட்டு அவர்கள் முன்னிலையிலே கிடங்கு கிண்டி கட்டை போடுவது இவரது நேர்த்தியான, நேர்மையான வேலைக்கு எப்பவுமே சான்றுகள். இப்படியாக கோணாமலை ஐயா தனது வாழும் நாட்களில் எமக்கும் எமது ஊருக்கும் செய்த பணிகள் ஏராளம்.உங்கள் இறப்பு செய்தி கேட்டதும் ஐயா நீங்கள் எமக்கு செய்தவைகளை எண்ணி உங்கள் இரு கரங்களையும் இறுக பற்றி உங்கள் பாதத்தில் கண்ணீர் பூக்களை காணிக்கையாக அஞ்சலித்து உங்கள் ஆன்மா இறைவன் சந்திதியில் அமைதியில் இளைப்பாற பிராத்திக்கின்றோம்.
ஊருக்கு கொடுத்து உதவி செய்த சலமோன் அவர்கள்.
VAJ உரிமையாளர் அமரர்.சலமோன் அவர்கள்.
பொழுது விடிய காலம சந்தியோகுமையோர் கோவில்ல பூசைக்கு போகப்போறி நேரம் ஒத்த கையில் காவிக்கொத்தும் கிப்ஸ் சாறத்த மற்ற கையால உயத்தி பிடிச்சுக்கொண்டு புள்கை சேட்ட 2 தெறி திறந்துவிட்டு புலிப்பல் சங்கிலி தெரிய முறுக்கு மீசையோட தனது வாடிக்கு ஒவ்வொரு நாளும் தடந்து போகும் ராஜநடை இன்றும் நினைவுக்கு வந்துபோவதுண்டு.
இரண்டு இஸ்கஸ் லொறி, மூன்று கன்டர், வண் ரூ பைவ் மோட்டசைக்கில் என காலடியில் வாகனங்கள்,சொத்துக்கள் மற்றும் ஏராளமான பண புழக்கம் இருந்தும் எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் சாதாரணமாக தனது நண்பர்களுடன் பொழுதை கழித்து மகிழ்ந்த மனிதர்.
மேடைகளில் முதல் இருக்கையை விரும்பாதவர். தான் என்ற கர்வம் இவரிடம் அறவே இல்லை. ஆலய கட்டுமான பணிக்கும்,ஆலயத்தின் ஏனைய தேவைகளுக்கும் ஆன்மீக தேவைகளுக்கும் முதன்முதலில் உதவிசெய்ய நீளும் கை இவருடையதே ஊரின் அடிப்படை தேவைகளாக காணப்பட்ட கல்வி, விளையாட்டு கலை கலாச்சாரம் மற்றும் ஆன்மிகம் ஆகியவற்றில் இவரிடம் இருந்து நாம் பெற்றுக்கொண்டவை அதிகம். அந்தவகையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மண் நிரப்ப எமது ஐக்கிய விளையாட்டுகழகத்திற்கு துணை நின்றார்.பாடசாலை விளையாட்டு போட்டி மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு உதவியதுடன் பாடசாலை தொண்டர் ஆசிரியர்களுக்கு சம்பளத்தையும் வழங்கியிருந்தார்.எமது ஊரில் மேடையேறும் வரலாற்று நாடகங்கள்,வாசாப்புக்கள் போன்ற கலை நிகழ்வுகளில் சக கலைஞனாக பங்கேற்பதுடன் அதற்காக ஏற்படும் செலவுகளின் ஒரு பகுதியை பல முறை இவர் கையேற்றுமிருக்கிறார்.
விளையாட்டை பொறுத்தமட்டில் எமது ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு அளப்பரிய உதவிகளை வழங்கி தீவிர ரசிகனாக வலம் வந்தவர். திரவுகுளம் நிரப்ப,பாடசாலை விளையாட்டு மைதானம் நிரப்ப ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு துணை நின்றார்.திதி உதவிகளை வழங்கி வாகன வசதிகளை செய்து தந்த உத்தமர் என்றால் அது மிகையாகாது.ஊரின் ஆன்மிக தேவைகளில் குறிப்பாக மறைபரப்பு நிகழ்வுகளுக்கு நிதியையும் மற்றும் தவக்கால தாக காத்தி குளிர்பானங்களை தனது வாகனத்தில் வைத்து வழங்கும் உயரிய பண்பையும் கொண்டிருந்தார்.
இவரிடம் இருந்த பண பலத்திற்கும் மக்களின் செல்வாக்கிற்கும், ஊரை பிரித்து பல கழகங்களை தோற்றுவித்து,பிரிவுகளை உண்டுபண்ணியிருக்கலாம் ஆனால் சிறிதளவேனும் அந்த அற்ப புத்தி இவருக்கு அறவே இருந்ததில்லை.
மற்றும் சமூக இவருடைய காலத்தில் இப்ப இருக்கும் இன்டர்நெட் வசதி,வட்சாப்,முகநூல் வலைத்தளங்களில் சிலர் செய்வதை போல் தம்மை பிரபல்யம் ஆக்கி பேட்டி குடுத்ததோ அல்லது நான் தான் இத்தனை காலமும் ஊருக்கு இதை செய்தேன், அதை செய்தேன் என்றோ இவ்வளவு பணத்தை செலவழித்தேன் என்றோ பொது இடங்களில் சொல்லி திரியவே இல்லை.
அத்துடன் விடுதலை புலிகள் உங்கள் கடலுணவு வாணிபத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள் என பணித்த நேரம் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் புனித யாகப்பர் வாணிபம் என பெயர் வைக்க இவரை சொல்ல "இந்த பெயரை வைத்து ஊருக்குள் பிளவை ஏற்படுத்தவோ அல்லது ஏனைய ஊரவர்களின் நன்மதிப்பை இழக்க மாட்டேன் என்று அந்த பெயரை நிராகரித்து குழந்தை இயேசு கடலுணவு வாணிபம் என்று பெயரிட்ட சிந்தனையாளர்.
இன்னும் தனது கடற்றொழிலாளர்களின் ஒரு ரூபாயை கூட கணக்கில் வைத்துக் கொடுப்பதில் சிறந்த முதலாளி இவர்.இறுதியாக சாலமோன் என்ற றிசேவ் பேங் ஏரி.ம் மிசினிலிருந்து எமது ஊர் பெற்றுக்கொண்ட பண உதவிக்கும் ஏனைய உதவிகளுக்கும் அளவே இல்லை.
எமது ஊரினதும் எமது ஐக்கிய விளையாட்டு கழகத்தினதும் வாழ் நாள் சாதனையாளன் அமரர். ம. சலமோன் அவர்கள்.
50 வருடங்களை கடந்த கிராமத்தின் அடையாளம் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம்.
விடத்தல்தீவு வரலாற்றில் ஐக்கிய வினையாட்டு கழகத்தை உருவாக்கிய ஸ்தாபகர் முன்னாள் பங்குத்தந்தை அமரர் அருட்பணி ரெஜிஸ் இராயநாயகம் அடிகளார். 1973 ம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்ட விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகத்தின் நிர்வாகத்தின் முதலாவது தலைவராக யா.ஞானசீலன் அவர்களின் தலமையிலும் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றிப்பவனி வந்தது என்றால் அது மிகையாகாது.
மாந்தை பெருநிலப்பரப்பில் அதிகளவு இளைஞர் யுவதிகளை கொண்டு A B C என ஒரே கழகத்தில் அணிகளை கொண்டு, விளையாட்டு நிகழ்வுகளில் குறிப்பாக உதைபந்தாட்டத்திலும் வலைப்பந்தாட்டத்திலும் பல வெற்றிகளை பெற்ற எமது ஐக்கிய விளையாட்டு கழகம். எமது பாரம்பரியங்களை,கிராம கலாச்சாரங்களை கிராம ஒற்றுமையை வலுப்பெற செய்ய முன்வருவோம்.
50 வருடங்கள் கடந்தும்,சல சலப்புகளுக்கு அஞ்சாமல் வெற்றிப்பவனி வரும் கிராமம் சார் ஒரேயொரு கழகம் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் ஏனெனில் அதன் ஆரம்பம், ஆரம்பித்தவர்,அதன் நோக்கம் என்பவையே முக்கிய காரணிகளாக சான்று பகர்கின்றன.
அமரர். செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் நினைவலைகளில்
நாம் வாழும் நாட்களில் எம்மோடு வாழ்ந்து மறைந்துபோனவர்களை, அவர்களுடைய செயற்பாடுகளை, அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகளை எனிதில் மறந்துவிட முடியாது. அந்தவகையில் தன்னுடைய வாழ்நாட்களில் பலரைதன்பால் ஈர்த்தவரும் பல நினைவலைகளை மீள்கொணரக்கூடியவகையில் வாழ்ந்து இறந்தபோனவர் தான் அமரர் செபஸ்தியாம்பிள்ளை அவர்கள்.
அமரர் செபஸ்சியாம்பிள்ளை அவர்கள் இலங்கை போக்குவரத்துசபையின்முன்னாள் பேரூந்து நடத்துனராக எமது கிராமம் உட்பட பல கிராமங்களில் சேவையாற்றி பலராலும் அறியப்பட்டவர். பேரூந்து நடத்துனராக பணிபுரிந்த நாட்களில் மற்றவர்களை மகிழ்வித்து, தனது பகிடி கதையாலும், தகைச்சுவையான செயலாலும் சிரிக்கவைப்பது இவரது இயல்பாக இருந்தது.
மூன்று ஆண் பிள்ளைகளையும், மூன்று பெண் பிள்ளைகளையும் பெற்று மனைவி பிள்ளைகளுடன் ஊரில் வாழ்ந்த காலத்தில் நாட்டு பிரச்சனை காரணமாக தனது இ.போ.க. நடத்துனர் சேவையை இடைநிறுத்தி தனது விட்டில் ஒரு சிறிய சைக்கில் திருத்தும் கடையையும், பழைய பேக்கரிக்கு பக்கத்தில் ஒரு கடையை சைக்கில் திருத்தும் கடையாகவும் கொண்டிருந்தார்.
செய்யும் தொழிலே தெய்வம் என்பதை போல தான் செய்யும் தொழிலில் நேர்த்தியையும், தொழில் தர்மத்தையும் கொண்டிருந்தார். கத்தியல், குறடு,ஆணி அலவாக்கு, இவை அணைத்தையும் பாடசாலை வேலி அடைக்க உடைஞ்ச கதிர மேச திருத்து, பண்ணிக்குட தோட்டத்துக்கு வேலி அடைக்க என இவர் கடையில் இருந்து நண்பன் ரென்சி கொண்டுவருவது வழமையாக இருந்தது. அந்த காலத்தில்
நான் கண்டு வியந்த சம்பவம் அவருடைய கையெழுத்து, மாட்டுத்தாள் உறை போட்டு மிகவும் அழகான கையெழுத்தில் நண்பன் ரென்சியின் பெயர், பாடத்தின் பெயர், புத்தகத்தின் பெயர், என்பவை மிகவும் நேர்த்தியாக எழுதிக்கொடுத்து பள்ளிக்குடத்துக்கு அனுப்புவார்.
அந்தநேரம் பெச் ஒட்ட கொலுசன் இல்லாத தட்டுப்பாடான காலம் அடிக்கடி நாங்க விளையாடும் பந்து பெச்சாப்போகும், எங்கட பூட்ஸ் பிஞ்சு அடுத்தநாள் கொண்டு போனால் ஒருக்கா அண்ணாந்து பாத்துவிட்டு பத்துக்கு பெச் ஒட்டி தந்து பூட்ஸ் யும் தைச்சுத்தருவார் . IAS முத்தரை பொறிக்கப்பட்டதை போலவேதான் இவர் பாவிக்கும் பொருட்களில் SMF என்று எழுதப்பட்டிருக்கும். சருவ குடத்திலும் SMF, சைக்கிலிலும் SMF, இப்படியாக இவர் வீட்டில் அனைத்திலும் SMF என்று எழுதப்பட்டிருக்கும்.
வெத்தில, பாக்கு, சுண்ணாம்பு பையுடன் காற்சட்டை அணிந்து, சாறத்தை கட்டி, கண்ணில் கண்ணாடியை கொழுவிய வண்ணம் வெறும் மேலுடன் தன்னுடைய தொழிலை செய்யும் தொழில்பக்தி நிறைந்தவராகவே இவரை நான் பார்த்ததுண்டு.
தமது வீடாக இருந்தாலும் சரி,அவரது பிள்ளைகளின் விடாக இருந்தாலும் சரி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டு தன்னந்தனியான செய்து முடித்திடுவார், வேலியடைப்பு, வீட்டு மேச்சல் மேற்பார்வை, கிடங்கு கிண்டுதல், கல்லரிதல்,என அனைத்தையும் நேர்த்தியாக செய்துமுடிக்கும் தன்மைகொண்டவர். இவரிடமிருந்து கற்றுக்கொண்டது பல. கோவிலுக்கு சென்றால் என்ன என்ன அலுவலாக இருந்தாலும், எந்த கொண்டாட்டமாக இருந்தாலும், என்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் புருசனும் பொஞ்சாதி சகிதமாக முதிர்ந்த போதும் இருவரும் சேர்ந்தே செல்வது இவரின் படிக்கக்கூட பண்புகளில் பின்பற்றக்கூடியவற்றில் முதன்மையானது, அவ்வளவு ஏன் ஒப்பாரி போவதென்றாலும் இருவரும் சேர்த்தே இணைபிரியாத சோடிகளாக செல்லுவது கண்டு வியந்ததுண்டு.
இயல்பிலேயே கலைநயம் மிக்கவரான இவர் இனிமையான குரல் வளத்தை கொண்டு பாடும் ஆற்றலை கொண்டிருந்தார். ஊரில் அரங்கேறிய பாஸ், நாட்டுக்கூத்துகள், மேடை நாடகங்கள், கச்சேரிகளில் கலைஞனாக முக்கிய வேடங்களில் பங்கேற்றியவர். எமதுகாலத்தில்நாம் கண்டுகளித்த சந்தியோகுமையோர் நாட்டுக்கூத்து, தேவசகாயம்பிள்ளை நாட்டுக்கூத்து என்பன இவர் பங்கேற்று நடித்த நாடகங்களில் சிறப்புமிக்கவை. இயேசுவின் பாடுகள் மரணம் உயிர்ப்பு நாட்களிலிலும், ஆலய திருவிழா நாட்களிலும், இறப்பு வீடுகளில் எம்மவர்களால் பாடப்படும் ஒப்பாரி, தாளிகை கவி போன்றவற்றில் ரசித்து கேட்டு உணரும் குரலில் இவருடைய குரலுக்கு தனிச்சிறப்பு இருந்தது.
பாடப்படும் பாடலை உயர்த்தி பாடுவதிலும், பாட்டில் வரும் வசனங்களும், கருத்துக்களும் அனைவருக்கும் விளங்கும்படியாக அறுத்துறுத்து ,ஏற்றி இறக்கி பாடுவது இவரது மற்றுமொரு சிறப்பம்சம் ஒப்பாரி பாடல்கள் அடங்கிய புத்தகங்களை வைத்து பேணி பாதுகாத்ததும், ஒப்பாரி பாடச்செல்லும் இடங்களில் அனைவருக்கும் பாடல் புத்தகங்களை கொடுத்து தனது முறை வந்ததும் புத்தகத்தை பார்க்காமலே அனைத்து பாடல்களிலும் தனது பாடல் வரிகளை பாடுவதும் இவரின் சிறப்பே.
வாலுலா....என தொடங்கும் தானிசை பாடல் எனக்கு இவர் பாடுவதில் மிகவும் பிடித்த பாடல் சந்தியோகுமையோர் கோவில் திருவிழா காலங்களில் இயேசுவின், பாடுகள் மரணம் உயிர்ப்பு காலங்களில் எங்கட வீட்டுப்படியில் இருந்து பாடலை கேட்டு வந்த அந்த நாட்களை மறக்கமுடியாது. வியாகுல பிரசங்கம் வாசிப்பதில் வல்லவர் இவர், தனக்கெண்டு ஒரு ஸ்ரையிலில் வாசிப்பார், ஏற்றம், இறக்கம், கமா, முற்றுப்புள்ளி பாத்து அழகாக வாசிப்பார். இவர் உட்பட வாழும் நாட்களில் நாம் பின்பற்றத்தவறிய கௌரவிக்க மறந்த,எம்மூர் கலைஞர்கள் ஏராளம்.
உழைப்பால் உயர்ந்து முதன்முதலில் மாடிவீடு கட்டி பஸ் சேவையை செய்த வித்தகர் துரையப்பா அவர்கள். விளக்குகிறார் - திருவாளர் வைத்தியர் கிறிஸ்தோதொம் அவர்கள்.
எங்கள் ஐயா சத்தியசீலனின் தாரக மந்திரம் இதுதான் ” தந்தை மகற்காற்றும் உதவி அவயத்து முந்தி இருக்க செயல்". வார்த்தைக்கு வார்த்தை இதுதான் சொல்வார். ஒவ்வொரு தந்தைக்கும் இதுதான் தாரக மத்திரம். நம் ஊரில் பல சாதனையாளர்கள் தங்கள் கடின உழைப்பாலும்,விடாமுயற்சியாலும் வெற்றிபெற்று நம் ஊருக்கு பெருமை சேர்த்தார்கள்.
அனேகமான இளம் தலைமுறையினருக்கு ஞாபகம் இருக்காது. திருவாளர் துரையப்பா, திருமதி கத்தஜீனா அவர்கள் குடும்பத்தார்தான் அவர்கள். எங்கள் ஊரில் முதன்முதலாக ஒரு பேருந்து கொம்பனி ஆரம்பித்து பெருமை சேர்த்தவர்கள். Rita Bns company அதன் அது. Rita என்பது அவருடைய மகன். அவரின் பெயரால்தான் ஆரம்பித்தார்கள். விடத்தல்தீவு, மன்னார், யாழ்பாண பிராத்தியங்களில் இவர் பேரூந்துகள்தான் ஓடின.
1945 லிருந்து 1938 வரை சேவை தொடர்ந்தது. 1958ம் ஆண்டு பண்டாரநாயக பிரதமரானதும் பேருந்து கொம்பணிகளை தேசிய மயமாக்கி இவரின் பேருந்துகளை அரசவசமாக்கிக்கொண்டார். அப்படித்தான் CTB bus service ஆரம்பமானது. துரையப்பா அப்பாவுக்கு அரசாங்கம் எதுவித நஷ்ட ஈடும் கொடுக்கவில்லை. 190
துரையப்பா அவர்களின் தண்ணீர் லொறிகளில் மூலம்தான் பள்ளமடு கிணறுகளில் இருந்து தண்ணீர் நம் ஊருக்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு நெல் அரைக்கும் ஆலையையும் வைத்திருந்தார். எங்கள் வீட்டுக்கு அண்மையில் அந்த ஆலை இருந்தது. நம் ஊர் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அது ஒரு வரப்பிரசாதகமாக இருந்தது.
இலுப்பகடவை, கள்ளியடி, கோவில்குளம்,புதுக்குளம்,ஆகிய விவசாயக் கிராமங்களில் இருந்து உளவு இயந்திரங்களில் நெல் மூட்டைகளை கொண்டு வந்து அதை அரிசியாக்கி கொண்டு செல்வார்கள். முதன் முதலாக இரட்டை #மாடி விட்டை எங்கள் கடைத்தெருவில் கட்டியதும் அவர்தான். 1940 இல் கட்டப்பட்ட அந்த வீடு இன்றும் இருக்கிறது . அத்துடன் இன்னொரு பெரிய வீடும் எங்கள் கோவிலுக்கு அண்மையில் கட்டி சிறப்பாக வாழ்ந்தார்கள்.
Rita அவர்கள் அண்மையில் காலமாகி நம் ஊரும் அடக்கம் செய்யப்பட்டார். துரையப்பா அப்பாவின் மகளின் பிள்னைகள், குஞ்சு Baba, சின்ன Baba வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். மிக குறைந்த அடிப்படை வசதிகள் கொண்ட நம் மண்ணில் இருந்து இப்படியான காதணையாளர்கள் இருந்தார்கள் என்பது மறக்கவோ மறுக்கவோ முடியாத ஒரு உண்மை. நாமும் உழைப்போம், உயர்வோம்”
தேசிய கலா விபூஷண விருது வென்றார் திரு அ அந்திரேஸ் அவர்கள்.
'வாழும் போதே வாழ்த்துவோம்' தேசிய ரீதியில் 25 மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்களுக்கும் கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்களுக்குமான நான்காவது தேசிய கலா விபூஷணம் 'உலகத் தமிழர் விருது வழங்கும் விழா' 25/2/2023 அன்று மன்னார் பிரதேச செயலகப் பிரிவு பேசாலை சங்கவி பட மாளிகையில் இடம் பெற்றது. இதில் 25 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த உழைத்தவர்கள் 180 கலைத்துறை சார்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவ் நிகழ்வில் #சிற்ப #கலை மற்றும் நாடக கலை நிகழ்வுக்கான விருது எமது கிராமத்தின் திரு. அ.அந்திரேஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன், பொன்னாடை போர்த்தப்பட்டு, நினைவு சின்னம் வழங்கப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது. இதேவேனை சிறப்பான முறையில் கலையை முன்னெடுத்துச் செல்லும் நபர்களுக்கும் நடிகர்கள் மற்றும் பாடல் கலைஞர்கள் உள்னிட்ட பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.
சிற்பக்கலையிலும், இயல் இசை நாடக துறையிலும் சிறப்புற்ற அடைக்கலத்தாரின் வாரிசு
எமது விடத்தல்தீவின் கலைத்தாயின் புத்திரர்களாக தந்தை அடைக்கலத்தாரின் வழிவந்த தனயர்கள் வரிசையில் சிற்பக்கலையிலும், இயல், இசை நாடக துறையிலும் சிறப்புற்றிருப்பவர்தான் அந்திரேஸ் அவர்கள்.தந்தை அடைக்கலத்தாரின் வழிவில் தனது சிறுவயதில் இருந்தே சிற்பங்களை உருவாக்குவதிலும், நாடகங்களை எழுதி மேடையேற்றுவதிலும், பாடல்களை எழுதி இயற்றுவதிலும், சித்திரங்களை வரைவதிலும், ஒப்பனை கலைஞனாகவும், நாடகங்களுக்கான காட்சி அமைப்பு வகைகளையும் வரைவதிலும் கைதேர்ந்த பல்திறமை கொண்ட கலைஞன் தான் எமது அந்திரேஷ் அவர்கள்.
அந்திரேஸ் அவர்களது சிற்ப வேலைப்பாடுகளை நோக்குமிடத்து எமது விடத்தல்தீவில் உள்ள குருசுக்கோவிலில் அமைந்துள்ள ஆண்டவர் சிலுவையில் தொங்குவதை பிரதிபலித்த திருச்சுரூபத்தை சீமெந்தில் செய்திருந்ததுடன், தட்சனாமருதமடுவில் மரத்தில் செதுக்கிய சூரன் சிலையையும், எமது விடத்தல்தீவு முன்னான் பங்குத்தந்தையாக பணியாற்ற அருட்பணி செல்வநாதன் பீரிஸ் அவர்களது வேண்டுகைக்கு அமைவாக மாதா திருச்சுருபம் ஒன்றை சீமெத்தில் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈச்சளவக்கையில் அமைந்துள்ளகோயிலில் அம்மன்சிலை ஒன்றை சீமெந்தின்மூலம் உருவாக்கிவிருந்ததுடன் பாலம்பிட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் பழமைவாய்ந்த திரையை வரைந்து கொடுத்ததுடன் முருங்கன், ஆத்திக்குளி, இசைமாலைத்தாழ்வு, மற்றும் மாவிலங்கேணி, ஆகிய பகுதிகளில் உடைந்து சேதமடைந்த சிற்பங்களை அவை முன்னர் இருந்ததை போலவே அச்சு அசலாக செய்துகொடுத்திருந்தார்.
உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாக முன்பே அதன் கதை, வசனத்தை கொண்டு *உண்மைகள் உறங்குவதில்லை” என்ற பெயரிடப்பட்ட நாடகத்தை பெரியமடு முஸ்லிம் சகோதரர்கனை கலைஞர்களாக கொண்டு 1976ம் ஆண்டு மேடையேற்றிய பெருமை அந்திரேஸ் அவர்களையே சாரும்.
அந்திரேஸ் அவர்கள் புரட்சி நாடகங்களையும், கிறிஸ்து பிறப்பு பற்றிய நாடகங்களையும், சுரோல்
பாடல்களையும்,புரட்சி பாடல்களையும், சரித்திர நாடகங்களான "குழந்தை இயேசு", "ஏரோது மன்னன்” ,"சூழ்ச்சி",போன்றவற்றை எழுதி இயக்கியதுடன் "சூழ்ச்சியின் வீழ்ச்சி"நாடகத்தில் நாடக கலைஞனாக பாத்திரமேற்று நடித்து பலரதும் பாராட்டை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது ஊரில் மேடையேற்றப்பட்ட நாடகங்கள், நாட்டுக்கூத்துகள் வரிசையில் இயேசுவின் பாடுகள்,மரணம், உயிர்ப்பை பிரதிபலித்த பாஸ், காத்தவராயன் கூத்து, மற்றும் தேவசகாயம்பிள்ளை நாட்டுக்கூத்து போன்றவற்றுக்கு ஒப்பனை கலைஞனாக செயற்பட்டதுடன், நாடகங்களுக்கு தேவையான காட்சி அமைப்புகளை வரைவதுடன், திரைச்சீலை காட்சி அமைப்பு வகைகளையும்,குறிப்பாக பாலம்பிட்டியில் முத்துமாரி அம்மன் சிலை உருவத்தை ஏழு அரை (7 1/2) அடி உயரத்தில் வரைந்ததுடன், மணி உடுப்புகளை உருவாக்கி,பிறிஸ்டல் போட் போன்ற உபகரணங்களை கொண்டு அரச கிரிடங்களையும், நாடகத்திற்கு தேவையான வர்ண பூச்சுகளையும் உருவாக்கியிருந்தார்.
அத்துடன் அந்திரேஸ் அவர்கள் பல்வேறுபட்ட விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அந்த வகையில் உதவி அரசாங்க அதிபர் காரியாலயம் வழங்கிய கலைமதி விருதை 2021ம் ஆண்டு பெற்றுக்கொண்டதுடன், அத்துடன் உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஊடாக வழங்கப்பட்ட கலைஞர் கவிதம் விருதை 2019 ம் வருடத்திலும் பெற்றுக்கொண்டு கலைத்துறையில் சிறப்பாக பங்காற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அமரர் இம்மனுவேல் அன்னமலர் ஆசிரியர் ( மலர் ரீச்சர்)
அந்தோனி அத்திரேசு அருளப்பு அப்புலோனியா தம்பதிகளின் இரண்டாவது பிள்ளையாக 1951 ஆனி மாதம் 22 ஆம் தான் பிறந்தார்.
தனது பள்ளி படிப்பை மன்/விடத்தல் தீவு றோ.க.த.க பாடசாலையில் 23-04-1956 இல் ஆரம்பித்து 1967-ல் க/பொத சாதாரண தரத்தில் சித்தி அடைந்தார். பின்னர் 1969 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 22 ஆம் தேதி திருவாளர் சுவக்கீன் இம்மனுவேல் ஆசிரியரை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து தனது 20 ஆவது வயதில் ஆசிரியராக தனது பணியை மன்' சின்னப் பண்டி விரிச்சான் அ.த.க. பாடசாலையில் ஆரம்பித்தார்.
1973 மற்றும் 1974 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கோப்பாய் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதர சான்றிதழ் பத்திரத்தை பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து 1975 ஆம் ஆண்டு தொடக்கம் மன்/ விடத்தல் தீவு றோ.க.த.க.பாடசாலை, மண்/மறத்தி கன்னாட்டி அ.த.க.பாடசாலை மற்றும் மன் சிறுக்கண்டல் அதகபாடசாலைகளில் ஆசிரியராக பணிபுரிந்து, 1983 இல் மீண்டும் மண்/ விடத்தல் தீவு றோ.க.த.க.பாடசாலையில் ஆசிரியராக கடமை ஏற்று 1998 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.
இக்காலத்தில் ஆரம்பக் கல்வியின் வகுதித் தலைவராக சிறப்புடன் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 15.06.1998 இல் மாவட்டத்தில் மன்னார் வலயக் கல்வி அலுவலகம் மட்டும் செயற்பட்ட காலப்பகுதியில், மன்னார் மாவட்டத்தின் கல்வி வலயத்தில் ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகராக நியமனம் பெற்று 30.11.1998 வரை கடமை புரிந்தார்.
தொடர்ந்து மடு வலயக் கல்வி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் மடு வலயக் கல்வி அலுவலகத்தில் ஆரம்ப கல்வி பாட விசேட உதவிக் கல்விப் பணிப்பாளராக ( பதில் கடமை) 01.12.1998 தொடக்கம் 31.12.2000 வரை சிறப்பாக பணி புரிந்தார். தொடர்ந்து இடப்பெயர்வு காரணமாக மண்/ விடத்தல் தீவு ஜோசவ் வாஸ் ம.வி பேசாலையில் இயங்கிய காலப்பகுதியில் 02.01.2001 இல் மீண்டும் ஆசிரியராக கடமையை பொறுப்பேற்று மண்' விடத்தல் தீவு றோகதகபாடசாலையில் 31.12.2002 வரை பணிபுரிந்தார். தொடர்ந்து பேசாலையிலிருந்து பாடசாலை தோட்ட வெளிக்கு இடம் மாறிய காலப் பகுதியான 01.01.2003 இல் இருந்து 14.02.2012 இல் ஒய்வு பெறும் வரை ஆசிரியராக 41 வருடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சிறப்பாக பணி புரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமரர் இ. அன்னமலர் ஆசிரியை அவர்களது குடும்ப பின்னணி பற்றி நோக்கினால், சகோதரன் அலோசியஸ், அவர்களும் சகோதரி அமரர் அலிஸ்மேரி ஆகியோருடன், பிள்ளைகள் எட்வின் அமல்றாஜ், கோட்வின் விமல் றாஜ் செல்வின் நிமல் றாஜ். அல்வின் கமல் றாஜ். யூட்வின் டிமல் றாஜ் .டிவ்னா பத்மலோஜினி. றொபினா கிறிசாத்தி ஆகிய ஏழு பிள்ளைகளையும் சமூகத்தில் உயர்ந்தவர்கள் ஆக உருவாக்க இவர் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே இல்லை என்றால் அது மிகையாகாது.
துணை நின்ற தாயாரும், கை கொடுத்த ஆசிரியத் தொழிலும் கூடவே உழைத்த தையல் இயந்திரமும் பிள்ளைகள் கரை சேரத் துணையாகியது. இருப்பினும், நீண்ட கால சுவாச மற்றும் ஈரல் நோய்களால் கடும் சுகவீனமுற்று, பிள்ளைகளினதும் பேரக் குழந்தைகளினதும் வெற்றிக்கனிகளை சுவைக்கும் இப்பருவத்தில் ஆண்டவர் அவரை அழைத்ததன் பேரில் தனது இவ்வுலக பணியில் இருந்து ஓய்வு பெற்று, 09.04.2025 இல் ஜோசப் வாஸ் நகர், தோட்ட வெளியில், அமைதியில் இளைப்பாறினார்”.
பள்ளிக்குட நிர்வாகத்தில் ஆரம்ப பிரிவின் பகுதி தலைவராக இருந்து தனது கடமைகளை சிறப்பாக ஆற்றும் பண்பை அவர் கொண்டிருந்தார். விளையாட்டு போட்டிகளின் போது இல்லங்களுக்கு இவரை பொறுப்பாக போட மாட்டார்கள் விளையாட்டு Cammittee யில் இருந்து அனைத்து வேலைகளையும் குறிப்பாக பதிவுகளை ஒழுங்காக மேற்கொண்டு புள்ளிகள் வழங்குதல்,சான்றிதழ்களை எழுதுதல் போன்றவற்றை சீராக நேர்த்தியாக செய்து முடிப்பார். பாடசாலையில் இடாப்பு பதிவுகளை மேற்கொள்வது இவரது தனிச்சிறப்பாகும். இடாப்பு பதிவுகளை பல வருடங்களாக தொடர்ச்சியாக சரியாக செய்துவந்தது மலர்ரிச்சர் என்றால் அது மிகையாகாது.
மடுவலயத்தில் ஆரம்ப கல்வி உதவி கல்வி பணிப்பாளராக பணியாற்றியிருந்தார். இயல்பிலேயே கதை புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருந்த அவர் நிறைய கதைப்புத்தகங்களை வீட்டில் வாசித்து வாசிப்பு பழக்கத்தை தனது பிள்ளைகளுக்கு ஊட்டியிருந்தார். ஊரில்குடிதண்ணி பற்றாக்குறையாக பவுசரில் கொண்டு வந்து பைப்படியில் இருந்த வக்கில் நிரப்பி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுப்பது மாதர் சங்க தலைவியாக இருந்த இவரது பணியாக இருந்தது. அதனை சரியான முறையில் செய்துமுடிப்பார். தையல் கலையில் பிரசித்திபெற்ற அவர்க்கு ஒய்வே இருக்காது பள்ளிக்குடம் முடிய மிசினில குந்தினா சாமம் செல்லும் தையல் முடிய. அந்த அளவிற்கு தையல் இழுத்துப்போட்டு செய்து அதிலே சிறப்பு தேர்ச்சி பெற்றிருந்தார்.
வேலைகளை பேசாலை நலன்புரி நிலையத்தில் இருந்து எமது தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயம் பேசாலை வெற்றிநாயகி ஆலய வளவில் இயங்குவதற்கு உழைத்தவர்களுள் அவரும் ஒருவராவார். இடம்பெயர்ந்த நிலையிலும் எமது பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியை சிறப்பாக நடாத்தியதில் அவரின் பங்கு அளப்பெரியதாக இருந்தது.
முகாமில் எமக்கான பாடசாலை அமைத்து பிரதி அதிபராக எமது பாடசாலையை ஏனைய ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடாத்திய நிர்வாகத் திறமை அவரையே சோரும். பின்னர் ஜோசப்வாஸ் நகரில் மீளக்குடியேறிய அந்த ஆரம்ப நாட்களில் பாடசாலையை பொறுப்பெடுத்து சிறப்பாக நிர்வகித்திருந்தார்.
மடு வலயத்தில் குறிப்பாக இலுப்பை கடவை, ஆண்டான்குளம், கருங்கண்டல், வட்டக்கண்டல் மற்றும் பண்டிவிரிச்சான் போன்ற இடங்களில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளுக்கும், தமிழ் தின போட்டி மற்றும் ஆங்கில தின போட்டிகளுக்கும் மாணவர்களை ஒழுங்குபடுத்தி ஒவ்வொரு நிகழ்விற்கும் பொறுப்பாசிரியர்களாக எம்மோடு அழைத்து வந்திருந்த அந்த நாட்களை மறக்க முடியாது.
எமது பாடசாலை முன்னாள் அதிபர் திரு.விஸ்வராஜா அவர்கள் வன்னியில் இருந்து ஜோசப்வாஸ் நகருக்கு வந்து போவது சிரமமாக இருந்த நாட்களில் பாடசாலையின் அனைத்து பொறுப்புகளையும் தன்னந்தனியாக சிறப்பாக நிர்வகித்த பெருமை அவரையே சாரும். சில காலமாக மன்னார் கல்வி வலயத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகராக பதவிவகித்திருந்தார்.
தேவையில் உதவும் பண்பு அவரிடம் நிறையவே இருந்தது. ஊர் சாந்த பொதுவிடயங்களில் தனது தாரான மனதுடன் பல்வேறுபட்ட உதவிகளை வழங்கியிருப்பது மறந்துவிட முடியாது.
அவர் தனது வாழ்நாளில் தனது பிள்னைகளுக்காக அவர்களது சிறப்பான வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்த, தன்னை உருக்கிய மெழுகாக வாழ்ந்து,வெற்றிகளை அடைந்த இரும்பு பெண் என்பதில் ஐயமில்லை.
மனித நேயம் என்பதன் மறுவடிவம் இம்மானுவேல் மாஸ்ரர்
இம்மனுவேல் மாஸ்ரர் என்று எமது ஊரவர்களால் மட்டுமன்றி மன்னார் மாவட்டம் தாண்டி பல்வேறுபட்ட இடங்களில் வாழும் மக்களால் அறியப்படுகிற மக்களின் நன்மதிப்பை வென்ற,விளையாட்டுத்துறையின் முன்னோடியானவர். விடத்தல்தீவு 7ம் வட்டாரத்தில் கவக்கின் செபமாலை (முத்தம்மா) தம்பதியினருக்கு மகனாக 11 சகோதர சகோதரிகளுடன் பிறந்தார்.
அமரர் கூஇம்மனுவேல் அவர்கள் 1/9/1964 ம் ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்றார். தனது முதல் நியமனத்தில் 1/9/1964ம் ஆண்டு தொடக்கம் 31/4/1966ம் ஆண்டுகள் வரையான காலப்பகுதியில் மன்னார் சின்னவலயன் கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக 2 வருடங்கள் பணியாற்றியிருந்தார். தொடர்ந்து 1/2/1966ம் ஆண்டு தொடக்கம் 25/1/1967ம் ஆண்டு வரையான 1வருட காலத்தில் மன்னார் வெள்ளாங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியராக அங்கே சேவையாற்றியிருந்தார்.அதன் பின்னர் 26/1/1967ம் ஆண்டு தொடக்கம் 31/42/7968ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் பயிற்சியை நிறைவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரிய பயிற்சி காலத்தில் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கலாகாலையில் கூஇம்மனுவேல் அவர்கள் விளையாட்டுத்துறையில் பல்வேறுபட்ட சாதனைகளை நிலைநாட்டி முதன்மை விரனாக வெற்றிக்கிண்ணங்களையும், கேடயங்களையும் தனதாக்கிக்கொண்டார்.
தொடர்ந்து1/4/1969ம் ஆண்டு தொடக்கம்31/12/1970ம் ஆண்டுவரையில்மன்னார் பெரியமுறிப்பு அரசினர்தமிழ் கலவன் பாடசாலையிலும் 14/4971ம் ஆண்டு தொடக்கம் 31/8/1971ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மன்னார் விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் பணியாற்றியதுடன்1/9/1971ம் ஆண்டு தொடக்கம் 31/42/4972ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதன் பின்னர் மன்னார் மாவட்டத்தின் கன்னாட்டி சிறுக்கண்டல் மற்றும் தேவன்பிட்டி ஆகிய பாடசாலைகளிலும் தனது கடமையை சிறப்பாக ஆற்றி ஆசிரிய பணியில் இருந்து ஒய்வு பெற்றிருந்தார்.
ஆசிரியர் திரு. க. இம்மானுவேல் அவர்கள் விடத்தல்தீவின் உதைபத்தாட்ட வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிக்கிறார். அவர் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மெயவல்லுனர் விளையாட்டுக்களில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாது, தனது அபாரத்திறமையின் மூலம் மன்னார், மாந்தை பிரதேசங்களில் விடத்தல்தீவுக்கு பெருமை தேடித்தந்தார். இவர் சிறந்த உதைபந்தாட்ட வீரனாகவும்,பயிற்றுவிப்பாளராகவும், நடுவராகவும் திகழ்ந்தார். ஐக்கிய விளையாட்டுக்கழக உருவாக்கத்தில் இவர் முக்கியமான பங்ககை வகித்திருந்தார். அக்கலங்களில், எமது வீரர்களை உதைபந்தாட்டத்திலும் ஏனைய விளையாட்டுகளிலும் பயிற்றுவித்து, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்க வைப்பதிலும், இவர் முக்கிய பங்காற்றியிந்தமை குறிப்பிடத்தக்கது.
"ON YOUR MARK" என விளையாட்டு போட்டிகளில் விடப்படும் கட்டனைவின் கம்பீரமான குரலை கேட்டு கதிகலங்கி பயத்தால் நடுநடுங்கிப்போகும் வண்ணம் இம்மனுவேல் மாஸ்ரரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கும். வாயில் விகிலுடன் மைதான மூலை முடுக்குகளில் கண்ணும் கருத்துமாக இருப்பார். இவருக்கு தெரியாதே விளையாட்டு சட்ட நுணுக்கங்களே இல்லை எல்லா சட்டவிதிகளையும் அறித்துவைத்திருந்தார் கஇம்மனுவேல் மாஸ்ரர் அவர்கள். உள்ளூரில் நடைபெறுகின்ற அனைத்து விளையாட்டுப்போட்டிகளிலும் தலமை நடுவராக தனது பொறுப்பை செவ்வனே செய்துமுடிப்பார். எமது ஊர் தவிர்ந்த வன்னி பெருநிலப்பரப்பெங்கும் குறிப்பாக பாடசாலைகள் அனைத்திலும் இம்மனுவேல் மாஸ்ரின் நாமம் உச்சரிக்கப்படாத இடமே கிடையாது எனலாம் அந்த அளவிற்கு விளையாட்டிற்கு முன்னுதாரனமாக திகழ்ந்திருந்தார்.
ஜோசப்வாஸ் நகரில் இடம்பெயர்ந்த நிலையில் ஜோசப்வாஸ் நகரில் ஒரு கழகத்தை புதிதாக தொடங்கும் எண்ணம் . நிலவியதை அறிந்து விடத்தல்தீவில் இருந்து ஜோசப்வாஸ் நகருக்கு வந்து எமது ஐக்கிய விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடனும் மக்களுடனுமான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். விளையாட்டு போட்டிகளுக்காக ஊரில் இருந்து பிற இடங்களுக்கு வீரர்களை கொண்டு சென்று தனது தலமையின் கீழ் பல்வேறுபட்ட போட்டிகளில் பங்குபற்றியதுடன் வெற்றிவாகைகளை கடவும் காரணகர்த்தாவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல அறிவுரைகளை சொல்லி ஆசிரியப்பணிபற்றி வழிகாட்டியவர், பற்பலதிறமைகளுக்கு சொந்தக்காரர் அவர். விளையாட்டு,ஒழுக்கம், கல்வி போன்றவற்றுக்கு முன்னோடியானவர். இனமையிலே சிறந்த கல்வியாளனாகவும், விளையாட்டுக்களில் சிறந்த வீரனாகவும் திகழ்ந்ததுடன் உதவும் மனப்பாங்கு நிறைந்தவருமாவார்.
ஒருமுறை மைதானத்தில் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி நடத்துவதற்கான மைதான ஓடு பாதை( track) அடிப்பதற்காக பலமுறை பல தேர்ச்சி பெற்றவர்கள் முயன்றும் அவர்களால் சரியான அளவில்,சரியான முறையில் அதை செய்துமுடிக்க இயலவில்லை. கூப்பிடுங்கடா வாத்தியார என்டு சொல்லவும் வந்து இறங்கினார் மைதானத்தினுள், ஒரு சில வினாடிகளுக்குள் சரியான அளவில் மைதானத்தில் ஓடுபாதையை தயார்செய்து தந்தார் . இவ்வாறான பல நிகழ்வுகள் ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கும்,எமக்கும் பல சேவைகளை உதவிகளை வழங்கியிருந்தார்.
சிறந்த மனிதாபிமானியும் சமூக செயற்பாட்டாளருமாகிய திரு சுவைக்கின் இம்மானுவேல் ஆசிரியரைப் பற்றிய அனுபவப்பகிர்வு - அன்ரன் லாஸ், டென்மார்க்க
எனது பெயர் திரு அன்ரன் லாஸ். நான் விடத்தல்தீவை பிறப்பிடமாகக் கொண்டவன். 1986 ஆம் ஆண்டிலிருந்து நான் டென்மார்க்கில் வசித்து வருகிறேன். நான் விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயின்றவன். அத்தருணத்தில் தான் எனக்கும் இம்மானுவேல் ஆசிரியருக்கும் நெருக்கமான உறவு ஆரம்பித்தது. நான் ஏழாம் ஆண்டு கல்வி கற்கும் போது அவர் எனது கணித ஆசிரியராக இருந்தார்.
ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு வரைவிலக்கணமாகவே அவரை நான் பார்த்தேன். நிமிர்ந்த கம்பீரமான நடை அவரது தலை முடியின் அழகு, அவர் வேட்டியுடன் வெள்ளை சட்டையுடனும் வருகின்றபோது அனைவரின் கண்ணும் அவரையே பார்க்க தூண்டும் அளவிற்கு புன்சிரிப்புடன் தான் ஒவ்வொரு நாளும் பாடசாலையில் அவரை நான் பார்த்திருக்கிறேன். பாடசாலையில் சிறந்த ஆசிரியராக அவர் செயற்படாத தருணங்களே கிடையாது. ஆனால் பாடசாலைக்கு வெளியே அவர் தனது மாணவர்களுடன் மாணவன் என்று பழகுவதை தவிர்த்து தனது பிள்ளைகள் போலவே அவர்களை நடத்துவது என்னால் இன்றும் மறக்க முடியாத விடயம்.
திரு.இம்மானுவேல் ஆசிரியரிடம் நான் பார்த்து வியந்த பல விடயங்களை எனது அனுபவத்தில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் ஆசைப்படுகிறேன். இந்த வரலாற்று நாயகனின் ஆசிரிய, சமூக, விளையாட்டு கலை கலாச்சாரம், மற்றும் ஏனைய சமூக சேவைகள், குறிப்பாக தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்று அதனால் அவர் செய்து வந்த சாணக்கியமான அரசியல் செயற்பாடுகள் சிறுவர்களாக இருந்த எங்களை மிகவும் தூண்டியது.
அவரால் தான் எமக்கு சமூகத்திலும் நல்ல பெயர் கிட்டியது, இதைவிட அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட தன்னம்பிக்கை என் வாழ்க்கையில் இன்றுவரை என்னை வழிநடத்தி செல்கிறது.
பாடசாலைக்கு அவர் ஆற்றிய சேவை.
அவருடைய ஆசிரியர் சேவை காலத்தில் மன்னாரில் பல இடங்களிலும் பணி செய்து. மிகவும் நல்ல ஒரு பெயரைப் பெற்று 1977 வது காலப்பகுதியில் அவர் எமது பாடசாலையான மண்' விடத்தல் தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் ஒரு கணித ஆசிரியராக இருந்தாலும் எமது கிராமத்தின் மாணவர்களின் வளர்ச்சிக்காக தன்னை பல வழிகளில் அர்ப்பணித்தார்.
சிறப்பாக பாடசாலை நேரம் தவிர்ந்த மாலை வேலைகளில் அனைத்து வகுப்புகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை குன்றும் குழியுமாக இருந்த ஒரு சிறு இடத்துக்குள் தட்டு எறிதல், குண்டு எறிதல், ஓட்டப்போட்டி நீளம் பாய்தல், உயரம் பாய்தல் ஆகிய பல விளையாட்டுகளை மாணவர்களாகிய எமக்கு கற்றுக் கொடுத்தார்.
எமது வளர்ச்சியை பார்த்து ஒவ்வொரு நாளும் ரசித்த மனிதர்களில் எனது ஆசிரியரை மிஞ்சஆட்கள் இல்லை என்றே கூறுவேன். ஏனென்றால் அவரின் கைகளால் ஒவ்வொரு முறையும் செதுக்கப்படும் சிலைகளாக எங்களை மாற்றினார். எமது மாணவர்களின் விளையாட்டு துறை சார் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முகமாக எங்கள் பாடசாலைக்கு அருகில் இருந்த காணிகளில் குடியிருந்த மக்களிடம், பாடசாலையின் எதிர்கால தேவையும் சமூகத்தின் தேவைகளையும் வலியுறுத்தி மிகவும் அன்பான முறையில் பேரம் பேசி, பாடசாலை அருகில்பாடசாலைக்கு என ஒரு விளையாட்டு மைதானத்தை அவரே நின்று மேற்பார்வையிட்டு உருவாக்கிய பெரும் பங்கு எனது இமானுவேல் ஆசிரியரே சாரும்.
விளையாட்டு துறையில் எனது ஆசிரியரை மிஞ்சுமளவுக்கு மன்னார் மாவட்டத்தில் யாரும் இருக்கவில்லை. ஏன் நான் அதை கூறுகிறேன் என்றால் கீழ்மட்டம் தொடக்கம் கல்வி திணைக்களம் வரை அவருக்கு தெரியாத நபர்களே கிடையாது. அவர் மிகச்சிறந்த விளையாட்டு வீரன் என்பதனை ஒவ்வொரு முறையும் அவர்
போட்டிகள் நடைபெற்ற காலத்தில் அவர் எங்களை உழவு இயந்திரங்களில் ஏற்றிக்கொண்டு தானும் அதே உழவியந்திரத்தில் எங்களுடனே பயணித்து வந்ததும் அவர் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்பு அவரை சுற்றி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாளும் பல நடுவர்கள் வேறு பாடசாலை ஆசிரியர்கள் ஒன்று கூடி அவரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட விதங்கள் எம்மை இப்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.
விளையாட்டு துறையில் ஏதாவது வந்துவிட்டால் எனது ஆசிரியர் இம்மானுவேல் சொல்வதை மட்டும் தான் கடைசி முடிவாக ஏற்றுக் கொண்ட காலம் அது. எமது ஆசிரியரின் அளப்பெரிய அர்ப்பணிப்பினால் சென்று
வந்த போட்டிகளில் எல்லாம் குறிப்பாக வலைப்பந்தாட்ட போட்டிகள் தொடக்கம் மற்றைய ஏனைய போட்டிகளில் எமது பாடசாலை பல சாதனைகளை குவித்தது. அவரின் காலம் தான் எமது பாடசாலை விளையாட்டு துறையில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தது. வீறு கொண்ட நடையும் நிமிர்ந்த பார்வையும் அழகான தோற்றமும் கொண்ட எனது ஆசிரியன் தான் நான் பல தடவைகள் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டங்களில் முதல் இடங்களை அன்னிக் குவிக்க வித்திட்ட மகான். எனது மனதில் நாங்கள் அடைந்த மாபெரும் வெற்றியை நாங்கள் குவித்த வெற்றி கிண்ணங்களையும் கேடயங்களையும் பாடசாலையில் வைத்து எம்மை கௌரவித்து அழகு பார்த்த எனது ஆசிரியனை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இது இவ்வாறு இருக்க தியூசியான் 400 மீற்றர் ஓட்டத்திலும், கில்லரி 800 மீற்றர் ஓட்டத்திலும் முதலிடங்களை குவித்தும் வந்தார்கள். இந்த வெற்றி கேடயங்களுடனும் கிண்ணங்களுடனும் விடத்தல்தீவை அடையும் வரை பெரும் திருவிழா கோலம் போலவே அக்காலங்கள் காட்சியளித்தன. எனது ஆசிரியரின் வருகைக்குப் பின்பு தான் நாங்கள் பல இடங்களுக்கு சென்று விளையாட்டு துறையில் எங்களை நிரூபித்து காட்ட சரியான சந்தர்ப்பங்களை உருவாக்கி தந்தார். விட்டில் பூச்சியாக இருந்த என்னை விமானம் ஆக்கியவன். நாங்கள் முதல்முறை சென்ற அந்த விளையாட்டுப்போட்டியிலேயே அவர் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் சிறந்த ஆசான் என்பதற்கான மிகச்சிறந்த விருதினை வழங்கி பல ஆசிரியர்கள் புடைசூழ கௌரவித்தனர். அப்போது எல்லாம் மன்னாருக்கு செல்வது ஏதோ வெளிநாட்டுக்கு செல்வதைப் போல ஒரு உணர்வு, நாங்கள் அனுபவித்த அந்த சந்தோஷத்தினை எங்களால் வர்ணிக்க வார்த்தைகன் இல்லை. அவை மிகவும் பசுமையான காலங்களே, விடத்தல் தீவு மண்ணுக்கு அவர் ஆற்றிய சமூகப்பணி.
அக்காலத்தில் விடத்தல் தீவு தமிழ் மக்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் இரண்டு பகுதியாக வாழ்ந்தனர். ஒரு சாரார் புனித யாகப்பர் ஆலய பகுதிகளிலும் ஏனையோர் புனித அடைக்கல மாதா ஆலய பகுதிகளை அண்டி வாழ்ந்து வந்தனர். . தற்போது அந்த நிலை மாறி இருப்பது ஓரளவு சந்தோஷத்தையே கொடுக்கிறது.
ஆனாலும் இவ்விரு சாராரும் ஒன்றாகஒற்றுமையாக சேரவேண்டும் என்பதற்காகபுனிதர்யாகப்பர்பகுதியில் இருந்த எனது ஆசிரியரானஇம்மானுவேல் அவர்களும் அவரால் ஊக்கப்படுத்தப்பட்டமற்றொருவரும் மாதா கோயில் பக்கம் இருப்பவர்களை மாறி மாறி திருமணம் செய்து கொண்டால் இப்பிரச்சனைக்கு தீர்வாகலாம் என்று அதை செய்தவரும் எனது ஆசிரியர்தான் அதற்கு ஊக்குவித்தவரும் எனது ஆசிரியர்தான். இவற்றைத் தாண்டி கிராமத்தில் இரண்டு பிரிவாக விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை ஒரு கழகமாக கட்டி எழுப்பி அவர்கள் பல வெற்றிகளை குவிப்பதற்கு ஆசை கொண்ட அன்றைய பங்கு குருவானவர் அருட்திரு ஹெஜீஸ் ராஜநாயகம் அவர்களின் பரிந்துரையின் கீழும் இம்மானுவேல் ஆசிரியரின் முயற்சியாலும்,மற்றும் சிலரின் முயற்சியாலும் விடத்தல் தீவு ஐக்கிய விளையாட்டு கழகம் என்ற கழகத்தை உருவாக்கி அது பல வெற்றிகளை குவிப்பதற்கு வழிவகுத்தத்துடன் ஒரு வகையில் விடத்த தீவின் ஒற்றுமையையும் உலகுக்கு கூறக்கூடிய ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
இன்றும் அந்த ஐக்கிய விளையாட்டு கழகம் மாவட்ட மட்டங்களிலும் மாகாண மட்டங்களிலும் அதன் திறமைகளை வழிகாட்டி பெறுவது மிகவும் சந்தோஷம் அளிக்கின்றது. அன்று அவர்கள் போட்ட விதை என்ற ஆலமரமாக கிளை பரப்பி நிற்பது எமது மக்களின் ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றுகிறது இதன் அச்சாணியாக செயல்பட்ட எனது ஆசிரியரே நான் மிகவும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
அரசியல் மற்றும் கலாச்சார பணிகள்.
ஆசிரியர் இம்மானுவேல் ஒரு சிறந்த தமிழ் பற்றாளன். ஒரு வகையில் எமது ஊரில் அவர் ஒரு மாற்றத்தை உருவாக்கும் விடிவெள்ளியாக திகழ்ந்தவர். ஏனென்றால், ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கு ஒரு பூரண சுதந்திரம் நிச்சயம் வேண்டும் என உணர்ந்ததால் அவர் தமிழரசு கட்சியின் ஒரு உறுப்பினராகவும், மிகவும் அர்ப்பணிப்பு உள்ள ஒரு தொண்டனாகவும் தேர்தல் காலங்களில் அவரை நான் பார்த்திருக்கிறேன். அவரது தமிழ் பற்றினையும் அரசியல் ஈடுபாட்டினையும் கூறுகின்ற போது எனக்கு அவர் பற்றி ஒரு நல்ல ஞாபகம் எழுதுகின்றது. தமிழிலும் எமதுசமூகத்திலும்நடக்கின்ற சமூக அநியாயங்களை அடக்குமுறைகளை தோலுரித்துக் காட்டுவதற்காக அவர் பல நாடகங்களை மாணவர்களாகிய எங்களை உபயோகித்தும் அரங்கேற்றம் செய்து வந்தது இப்போதும் என் கண் முன்னே இருக்கின்றது. அதில் சில நாடகங்களில் நானும்
நடித்துள்ளேன். என்னை பொறுத்தவரையில் ஒரு குயவன் கையில் மட்பாண்டம் போல எனது பாடசாலை பருவத்திலேயே மிகவும் அக்கறை எடுத்து என்னையும் என்னை போன்றோரையும் அழகாக வனைந்து இந்த சமூகத்துக்கு வழங்கிய பெருந்தொண்டினை ஆற்றிய மாமனிதர் அவர். எனது ஆசிரியரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட பல விடயங்களை என்றும் என் வாழ்க்கையில் நான் கடைப்பிடித்து வருகிறேன். குறிப்பாக தன்னம்பிக்கை, திட்டமிடல்., விடாமுயற்சி, மற்றும் மனம் உடைந்து போகாத உறுதியான நிலை என்பவற்றை கூறலாம்.
வர்மக்கலை.
ஆசிரியர் இம்மானுவேல் பல திறமைகளை தன்னகத்தே கொண்ட ஒரு பல்கலைக்கழகம் அவரிடமிருந்து
அசாத்தியமற்ற திறமைகளில் மிக முக்கியமான என்னைக் கவர்ந்த திறமை அவரிடமிருந்த வர்மக்கலை என்பதை கூறினால் ஆச்சரியமில்லை. அவர் அந்த கலைவினை தனது சொந்த தேவைக்காக கற்றிருந்தார் தவிர மற்றவர்களுக்கு தீங்கு செய்வதற்காக அல்ல. ஆனாலும் அவர்களுக்கு எதிரிகள் அன்று யாருமே இருக்கவில்லை.
அவருக்கு அருகில் செல்லவும் பயப்படுவார்கள். நான் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக மன்னாருக்கு சென்றேன். அப்போது தெருவில் சண்டை செய்து கொண்டிருந்த ஒரு ஒரு பையனை அழைத்து அவனது கழுத்து அருகில் கையை வைத்து ஏதோ செய்தார் அவன் கழுத்தை திருப்ப முடியாமல் அழுது கொண்டிருந்தார். அவன் அவரிடம் இனிமேல் நான் யாருடனும் சண்டை செய்ய மாட்டேன் நான் செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியதன் பின்னர் தான் அவனுடைய கழுத்து பிடிப்பை மீண்டும் அவர் சரி செய்து விட்டார். இது போன்ற பல விடயங்களை அவர் செய்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிறந்த மனித நேயம் கொண்டவர்.
ஆசிரியர்தொழில் செய்தகாலங்களிலும் அதன்பின்னரும் அவர்தனதுசமூகமனிதாபிமானசெயல்பாடுகளை கைவிடவில்லை. இதற்கு அவரால் பலன் அனுபவித்த மக்களும் அவர்களின் உறவினர்களும் தான் சாட்சி. இம்மானுவேல் ஆசிரியர் அவர்கள் தமிழ் சிங்கள ஆங்கிலம் போன்ற மொழி நிறமைகளை தன்னகத்தே கொண்டவர். இவர் ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அனுராதபுரம், கொழும்பு, கண்டி போன்றவைத்தியசாலைகளுக்கு மொழிபிரச்சனைகாரணமாகவும்,பணபிரச்சனைமற்றும்துணைக்கு யாரும் இல்லை என்ற நிலையிலும் தானே முன்வந்து எமது ஊரைச் சேர்ந்த பலரை அவர் வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்று அவர்களுடன் நின்று ஆற்றிய தொண்டு வாராலும் மறக்க முடியாதது.
பல பெரும் பெரும் கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்து அவர்களுடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிய ஒரு மாபெரும் மனிதன் எனது ஆசிரியர். இதை பலர் தமது சொந்த வாய்களால் சொல்ல நான் காது கொடுத்து கேட்டிருக்கிறேன். என்றும் அவரின் சேவையை பாராட்டி பலர் நினைவுகளில் அவர் வாழ்ந்து வருகிறார் என்பதுதான் உண்மையான விடயம்.
மன்னார் அமுது - கல்வி, கலைத்துறையில் மிளிரும் அந்தோனிமுத்து அரியம் மாஸ்ர் விடத்தல்தீவு அடைக்கலம், லூர்த்தம்மா ஆகியோரின் மகனாக 1940 ம் ஆண்டு ஆவணி மாதம் 19ம் திகதி பிறந்தார் அந்தோனிமுத்து மாஸ்ரர் அவர்கள்.
தனது ஆரம்ப கல்வியை 1945ம் ஆண்டு காலப்பகுதியில் தொடங்கி விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் SSC வரை கற்றுத்தேர்ந்தார். அரியம் மாஸ்ரர் அவர்கள் தனது ஆசிரியர் முதல் நியமனத்தில் II0/1962 ம் ஆண்டு மன்னார் பெரியமுறிப்பு பாடசாலையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரிய பயிற்சி காலத்தை யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் நிறைவுசெய்து பெரியமுறிப்பு, விடத்தல்தீவு, தட்சனாமருதமடு, கற்கடத்தகுளம், ஆண்டான்குளம், பண்டிவிரிச்சான் மற்றும் தாழ்வுபாடு போன்ற பாடசாலைகளில் ஆசிரியராக சேவையாற்றியிருந்தார். தொடர்ந்து 1975ம் ஆண்டு காலப்பகுதியில் அதிபராக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் விடத்தல்தீவு, பண்டிவிரிச்சான் மற்றும் தாழ்வுபாடு பாடசாலைகளில் பணியாற்றியிருந்தார்.
அதிபர் தரத்தில் Grade 1 தரத்தை பெற்ற அரியம் மாஸ்ரர் அவர்கள்
மரு கல்வி வலய ஆரம்ப பிரிவு ADE ஆக பதவிவகித்திருந்தார். கலைத்துறையில் இயற்கையாகவே அமைந்த ஆளுமையின் நிமித்தம் சிறந்த பன்முக படைப்பாளியாகவும், நாடக நடிகரும், ஏழுத்தாளரும், பேச்சாளரும் மன்னார் கலைச்சுரபியும் கலைமாமணி விருது வென்றவருமானவருமாக 1 வயது தொடக்கம் 5 வயது வரையிலான சிறுவர்களுக்கான பாலருக்கான 50 கவிதை அடங்கிய புத்தகம் உட்பட கவிதைகள் கட்டுரைகள், நாடகம், வில்லுப்பாட்டு, நாட்டுக்கூத்து, மற்றும் நாவல்கள் போன்றவற்றை கோட்ட மட்டத்திலும்,மாவட்ட மட்டத்திலும், மாகாண மற்றும் தேசிய மட்டத்திலும் கொண்டு சென்றிருந்து பல பாராட்டுகளையும், நினைவு சின்னங்களையும், பெற்றதுடன் அதியுயர் விருதான கலாபூசண விருதையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கற்கடந்தகளம் பாடசாலையில் கடமையாற்றிய நாட்களில் முருங்கன்பாடசாலைக்கு கல்விகற்க போய்வந்த மாணவன் ஒருவன் பாடசாலைக்கு செல்வதை நிறுத்தியதை அறிந்து அந்த மாணவனை அழைத்து விசாரனை நடத்தியதில் அந்த மாணவன் பரீட்சையில் சித்தியடையாத காரணத்தை தெரிந்து அந்த மாணவனுக்கு பிரத்தியேகமாக பாடங்களை சொல்லிகொடுத்தது மட்டுமல்லாமல் அந்த மாணவனுக்கு ஆசிரியர் ஒருவரின் உதவியை பெற்றுக்கொடுத்து அவரின் கற்பித்தலின் பிற்பட்ட நாட்களில் அந்த மாணவன் பரீட்சையில் சித்தியடைந்தது மட்டுமன்றிகிராம சேவகராக தற்போது பதவிவகித்து உயர்நிலையில் உள்ளதும், கற்கடந்தகுளத்தில் ஆலய வளாகத்தில் அமைந்திருந்த பாடசாலையை வேறொரு இடத்தற்கு மாற்றி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்ததும் மறக்கமுடியாத அனுபவாக இருப்பதாக அரியம் மாஸ்ரர் அவர்கள் எடுத்திரைத்தார்.
மன்னார் மாவட்டத்தில் 28 முதியோர் சங்கங்களை கொண்டு இயங்கும் முதியோர் சங்க சம்மேளனத்தின் தலைவராக அரியம் மாஸ்ரர் அவர்கள் சுமார் 10 வருடங்களாக பதவிவகித்திருந்தார்.மன்னார் துவர் துடைப்பு மறுவாழ்வு சங்க உறுப்பினராகவும்,மன்னார் வாழ்வுதயம் நிறுவனத்தில் அருட்பணியாளர்களான எமில் அடிகளார் மற்றும் யேசுராஜா அடிகளார் அவர்களது காலத்தல் 5 வருடங்கள் செயலாளராக பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட ரீதிவில் நடைபெறும் தமிழ், இலக்கிய விழாக்களில் நடுவராகவும், தமிழ் மொழிசார்ந்த போட்டிகளில் முக்கிய நடுவராகவும் விருந்தினராகவும் அழைக்கப்பட்டு பங்குபற்றியுள்ளார். மேலும் அந்தகாலத்து சிறுவர்களோடு ஒப்பிடுகையில் இவ் சமகாலத்தில் வாழும் சிறுவர்கள் குழந்தைகள் மிகவும் புத்திசாலியான விவேகம் கூடிய பிள்ளைகளாக காணப்படுகிறார்கள் என்றும் இந்த காலத்து சிறுவர்களுக்கான வசதி வாய்ப்புகள் நிறைந்து காணப்படுகின்ற நிலையில் தொலைபேசி உபயோகம் அதிகரித்து அறிவை தேடி ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவது அவசியம். ஆனால் ஆக்கபூர்வமாக செயற்படுவதை தவிர்த்து தொலைபேசி பாவனையை குழந்தைகள் பயன்படுத்துவதால் பாரிய பாதகமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிடுகிறார்.
தமது பணிக்காலத்தில் வசதிவாய்ப்பு இல்லாத கற்க வசதிகள் அற்ற மாணவர்களுக்கான இலவச பிரத்தியேக வகுப்புகளை நடாத்தியதியதுடன் தமிழ் அறிவை போதித்ததில் அரியம் மாஸ்ரர் அவர்களது பங்கு அனப்பெரியது. படிக்க ஆர்வம் இருந்தும் வசதிவாய்புகள் அற்ற அந்த காலத்து மாணவர்கள் பாதையிலே கல்வியை இடைநிறுத்தி கடலுக்கும் வேறு தொழில்களுக்கும் சென்றதைகட்டிக்காட்டிய அரியம் மாஸ்ரர் அவர்கள் இந்த கால மாணவர்கள் அதிகமானோர் ஆசிரியர்களுக்கு பயப்படாமல் நட்பாக நண்பர்களாக பழகிவருவதும்,அதிகரித்துவரும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியால் அறிவை பெருக்கும் விடயங்களில் ஈடுபட்டு தன்னம்பிக்கை மிக்க வருங்கால தலைவர்களாக வாழவேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்திருந்தார்.
சிங்கம் அண்ணண் என நாங்க கூப்பிடும் இரட்ணசிங்கம்.
இரட்ணசிங்கம் அவர்கள் ஞானப்பிரகாசம், லூசியா ஆகியோரின் மகனாக 1/1925 ம் ஆண்டு விடத்தல்தீவில் பிறந்து நீக்கிலாப்பிள்ளை, ஜோசப் மாஸ்ரர், மாக்கிறற், டானியேல் (ஞானம்) மற்றும் பாக்கியம் ஆகிய சகோதர சகோதரிகளுடன் வாழ்த்துவந்தார்.
சிங்கம் அண்ணண் அவர்கள் தமது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்து கல்லூரியிலும் கற்றார்.
எமதுவிடத்தல்தீவுகிராமத்தின் முதலாவதுதபால் ஊழியராக சுமார்1950ம் ஆண்டளவில் எமது கிராமத்தில் உள்ள தபாலகத்தில் நியமனம் பெற்று பணியாற்றியிருந்தார். எமது பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் தோறும் குறிப்பாக இலுப்பைக்கடவை, கள்வியடி, பெரியமடு, கோவிற்குனம், புதுக்குளம், ஆத்திமோட்டை, கன்னியடி போன்ற கிராமங்களுக்கு பேரூந்தில் பயணித்து ( Mail ) தபால் விநியோகத்தில் ஈடுபட்டிருந்ததுடன் மழை காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்துகள் தடைப்பட்டு ஸ்தம்பிதமடைந்த காலங்களில் கால் நடையாக சென்று தபால் விநியோக பணிகளை சிறப்பாக ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்நாட்களில் தொழில்நுட்ப வசதிகள் அற்று வெறும் கடித பரிமாற்றம் மட்டும் நடைமுறையில் இருந்த அக்காலகட்டத்தில் சிங்கம் அண்ணண் தனது சேவையை சிறப்பாக ஆற்றிலிருந்ததுடன் எமது கிராம தபாலக அதிபராக எமது,கிராமத்தின் அந்தோனிப்பிள்ளை அவர்கள் கடமையாற்றிவிருந்தார். ஆரம்பகாலத்தில்மழை, வெள்ளம் எனபார்க்காமல்பலநெருக்கடிகளுக்கு மத்தியிலும் வசதி வாய்ப்புகள் அற்ற வேளையிலும் எமது ஊரில் நிறைவான சேவை செய்த சிங்கம் அண்ணண் அவர்கள் 1977ம் ஆண்டு தனது,தபால் ஊழியர் சேவையில் இருந்து ஒய்வுபெற்றார்.
எமது ஊர் அந்நாட்களில் பல்வேறுபட்ட வசதிகள் குறைந்து காணப்பட்ட இடமாகவும் குறிப்பாக குடிநீருக்கு ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இருந்த பள்ளமடு கிணற்றில் இருந்தே குடிநீர் பெறவேண்டிய நிலைகாணப்பட்டிருந்தது. தபால் ஊழியரான சிங்கம் அண்ணண் அவர்கள் தனது ஓய்வுக்கு பிற்பாடு தனது சீபனோபாயமாக வெள்ளாமை செய்ததுடன் ஊரில் உள்ள குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பன்னமடு கிணற்றில் இருந்து குடிநீரை மக்களுக்கு வழங்கியும், விற்பனை செய்தும் இருந்தார்.
ஊரில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளுக்கு குறிப்பாக, ஊரில் நடைபெறும் திருமண வைபவங்களுக்கும் இறப்பு வீடுகளுக்கும் ஊரவர்களின் தேவைகளுக்கு ஏற்றமாதிரியும் குடிநீரை வழங்கியும் விற்பனை செய்தும் வந்தார்.அதிகாலை 4 மணிக்கு துமிலெழும்பி மரத்தால் ஆன சில்லு பூட்டப்பட்ட ஒத்த மாட்டு வண்டியில் பீப்பா ( றம்) ஏற்றப்பட்டு பெரிய வாளி ஒண்டும் 2 ஆடி நீளம் உடைய Hose pipe ஒண்டும் கொழுவியபடி பள்ளமடு குனத்துக்குள் இருந்த நல்ல தண்ணி கிணற்றில் இருந்து குடிநீரை கொண்டு வத்து எமது மக்களுக்கு அவர்களுடைய தேவையிலும், கடைகளுக்கும் விற்பனை செய்வதை சிங்கம் அண்ணண் வழக்கமாக கொண்டிருந்தார். பள்ளமடுவில் இருந்து ஊருக்கு வரும் வழியில் எமது குளத்தில் முழுகிவிட்டு விடுவரும் சிறுவர்கள், குழந்தைகளை வண்டிலில் ஏற்றிவருவதும், உடுப்பு கூடைகளை தலையில் சுமந்துவரும் தாய்மாரின் சுமைபோக்கி அந்த கூடைகளை தனது வண்டிலில் ஏற்றுக்கொண்டு வந்து கடத்தெருவு சத்தியில் இறக்கிவிட்டு செல்வதும் சிங்கமா அண்ணன் எமக்கு வழங்கிய சேவைகளாகும். சிங்கம் அண்ணன் அவர்களுக்கு மாட்டு வண்டியை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இருந்து எமது கிராமத்தின் நவரெட்ணம் ஐயா அவர்கள் வழங்கியிருந்தார். 1999ம் ஆண்டு இடப்பெயர்வு வரை சிங்கம் அண்ணன் தண்ணீர் வழங்கும் சேவையில் ஈடுபட்டதுடன் 2011ம் ஆண்டு மார்கழி மாதம் 28ம் திகதி இறைபதமடைந்தார். சிங்கம் அண்ணண் அவர்களுடன் இணைந்து அவரது பிள்ளைகளான கான்ஸ் ஜோசப் (றாஜன்) ஜோகராஜன் ஜோசப் (ஜோகன்) இயேசுதாசன் ஜோசப் (றஞ்சன்) ஆகிய மூவரும் சில்லு பூட்டிய வண்டிலில் ஊரில் குடிநீர், விற்கு போன்றவற்றை ரயர் பூட்டப்பட்ட மாட்டு வண்டிலில் வழங்கி விற்பனை செய்துவந்தனர்.
விடத்தல்தீவு எம்.ஏ.அப்துல் மஜீத்
விடத்தல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.ஏ.அப்துல் மஜீத் விடத்தல்தீவு அலிகார் மகா வித்தியாலயம் மற்றும் வாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரி (கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்) ஆகியவற்றின் பழைய மாணவர்) அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசியரான எம்.ஏ. அப்துல் மஜீத் பின்னர் அதிபர் தரத்துக்கு 1971 ஆம் ஆண்டு மன்னார் வேளாகுளம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்திலும் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரை மன்னார் சொர்ணபுரி அரசினர் வித்தியாலயத்திலும் அதிபராகக் கடமையாற்றினார். தொண்ணூறாம் ஆண்டில் இடம்பெற்ற புலப்பெயர்வுக்குப் பின்னர் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக புத்தளம் பாத்திமா கல்லூரியில் நடத்தப்பட்ட மாலை நேரப் பாடசாலையின் அதிபராகவும் கடமையாற்றியவர்.விடத்தல்தீவு முஸ்லிம்களின் பண்பாடும் வரலாறும் என்ற நூலையும் எழுதி,எம்.ஏ.அப்துல் மஜீத் தமது அடையாளத்தை வேரூன்றச் செய்தவருமாவார்.இது தவிர மன்னார் மாவட்டத்தின் முதலாவது முஸ்லிம் ஆசிரியர் மற்றும் முதலாவது முஸ்லிம் தலைமை ஆசிரியரென்ற தனிப் பெருமை பெற்ற முஹம்மது அலி என்பவரின் புத்திரரே இந்த எம்.ஏ. அப்துல் மஜீத் என்பது குறிப்பிடத்தக்கது. அருளப்பு ஜேம்ஸின் சமூகப் பங்களிப்பு
மன்னார் மாவட்டத்தில் எமது விடத்தல்தீவு கிராமம் கல்வி,கலை கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய துறைகளிலும் ,ஊரின் முன்னேற்றம் கருதி வாழ்ந்த மகத்தான மனிதநேயம் கொண்டு வாழ்ந்த மகான்களையும் தன்னகத்தே கொண்ட தனிச்சிறப்பு வாய்ந்த கிராமமாக திகழ்கின்றது .அந்த வகையில் விடத்தல்தீவு கிராமத்தின் அருமை பெருமைகளையும், ஊருக்காக வாழ்ந்து உழைத்தவர்களையும் சொல்லிமீனாது. தமது வாழ்நாளில் ஊருக்காகவும் அதன் அபிவிருத்திக்காகவும், வளர்ச்சிக்காகவும் தனிமனித ஆளுமைமிகுந்து செயல்வடிவம் கொடுத்தவர்களுள் சொந்த நலன் பாராது பொதுநலனுக்காக வாழ்ந்த எமது மண்ணின் அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் முயன்மையானவர் என்றால் அது மிகையாகாது.
அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ராசையா
கனகம்மா என்று எம்மவர்களால் அறியப்படுகின்ற அருளப்பு மற்றும் மரியப்பிள்ளை ஆகியோருக்கு இரண்டாவது மகனாக 6 சகோதர சகோதரிகளுடன் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் கற்று பின்னர் எருக்கலம்பிட்டி மகாவித்தியாலயத்தில் கல்வியை தொடர்ந்த அவர் SSC சித்தியடைந்தார்.
எமது விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலய விளையாட்டு மைதான காணி அருளப்பு ஜேம்ஸ் அவர்களுடைய முன்னோர் வழிவந்த பரம்பரை காணியாக அவர்களது பெற்றோர் ஆட்டுப்பட்டி வைத்து தமது சீவியத்தை போக்கிவந்த நாட்களில் எமது பாடசாலைக்கு மைதானம் தேவைப்பட்ட காரணத்தினால் அரசாங்கம் அதனை கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆட்டுப்பட்டி வைத்து தமது சீவனோபாயத்தை போக்கிவந்த அந்த நிலையிலும் அந்த காணியை எமது பாடசாலைக்காக வழங்க தமது பெற்றோரை வலியுறுத்தியதுடன் பாடசாலை விளையாட்டு மைதானம் அமைய அந்த காணியை வழங்க காரணகர்த்தாவாக இருந்தவர் அருளப்பு ஜேம்ஸ் என்றால் அது மிகையாகாது.
"தொட்டதெல்லாம் துலங்கும்" என்று சொல்லும் வார்த்தை மெம்படும் அளவிற்கு திரு.அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ஊர் சார்பாக எடுக்கும் அனைத்து காரியங்களும் அவருக்கு கைகூடிவந்ததுடன் அவரால் மேற்கொள்ளப்பட்ட ஊர் சார்பான அபிவிருத்திகள் அனைத்தும் அவருக்கு வெற்றியாகவே அமையப்பெற்றது.
ஆளுமை, தற்துணிவு,சாதிக்கும் திறன் அனைத்திற்கும் சொந்தக்காரரான அருளப்பு. ஜேம்ஸ் அவர்கள் எமது விடத்தல்தீவு கிராமத்தின் பல்வேறுபட்ட துறைகளில் அபிவிருத்திகளை ஏற்படுத்தியிருந்தார். ஊரில் படித்து வேலைகளுக்காக காத்திருந்தவர்களுக்கு அந்தந்த துறைகளுக்கான அமைச்சர்களை அமைச்சின் அதிகாரிகளை சந்தித்து அவர்களூடாக வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தார். அதாவது கிராம சேவகர், பொலிஸ் உத்தியோகம் என பல வேலைவாய்புகளை எம்மவருக்கு பெற்றுக்கொடுத்திருந்தார். விடத்தல்தீவு வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினராக பதவி வகித்த அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் எமது வைத்தியசாலையில் உள்ள ஆனணி பற்றாக்குறை மற்றும் ஏனைய குறைபாடுகளை உடனுக்குடன் மன்னார் மாவட்ட வைத்திய பணிப்பாளருக்கும் அதனோடு தொடர்புபட்ட அமைச்சுக்கும் தெரிவித்து விடத்தல்தீவு வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்திருந்தார்.
சன்னார் குனத்தில் இருந்து பெரியகுளம் ஊடாக எம்மவர்களது நெற்பயிர்செய்கை வயல் நிலங்களுக்கு தண்ணி நிறந்துவிடப்படுவதில் இருந்த முரன்பாடுகளையும், சிக்கல்களையும் உரியமுறையில் கையாண்டு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கையாண்டும் இருந்தார். மன்னாரில் இருந்து இரவு 10:30 மணிக்கு புறப்படும் இலங்கை போக்குவரத்துசபையின்பேருந்துஎமதுவிடத்தல்தீவுகிராமத்திற்குள்ளேவந்து திரும்பி போவதற்கான நடவடிக்கைகளில் அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாடசாலையில் அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினராக பதிவி வகித்ததுடன் பாடசாலையின் ஆசிரிய பற்றாக்குறை மற்றும் ஏனைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரும்பாடுபட்டிருந்தார்.
எமது துறையில் இருந்து வெளி கடலுக்கு படகுகன்,தோணிகள் சோளம், வாடை போன்ற அனைத்து பருவ காலங்களிலும் எவ்வேளையிலும் செல்லத்தக்க வகையில் இருக்கும் என்று சொல்லப்படுகின்ற கல்லோடையை வெட்டி அதனை ஆழப்படுத்த பெரிதும் ஈடுபாட்டுடன் உனைத்தவர்களுள் அருளப்பு ஜேம்ஸ் அவங்களும் ஒருவராக திகழ்ந்தார். இலங்கையில் எந்த பகுதியிலும் இல்லாத தமிழ்-முஸ்லிம் உறவுக்கு சிறப்பான உதாரணமாக திகழும் எமது விடத்தல்தீவு கிராமத்தில் முஸ்லிம், கிறிஸ்தவ மத,இன ஒற்றுமையையும், நல்லுறவையும் கொண்டிருந்ததுடன் முஸ்லிம் மக்களுடன் நெருங்கிய உறவையும் தொடர்பையும் அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் பேணி வந்தார்
எமது ஊரில் அருளப்பு ஜேம்ஸ் அவர்களது தலையீடு எல்லா இடத்திலும் காணப்பட்ட காலம் அது. அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ஊரின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தேவைப்பட்ட, தீர்வு கொடுக்கக்கூடிய வழிவகைகளை கையாளத்தக்க ஒருவராக ஊரின் அனைவராலும் அடிக்கடி வேண்டப்பட்ட ஒருவராக இருந்திருந்தார். ஊரில் போக்குவரத்து பிரச்சனை, வைத்தியசாலை பிரச்சனை, பாடசாலை பிரச்சனை, மீனவர் எதிர்நோக்கும் பிரச்சனை போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு அவ்வாறான பிரச்சனைகளை உரிய இடங்களுக்கு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வாறான பிரச்சனைகளை தீர்த்துவைத்ததே அருளப்பு ஜேம்ஸ் அவர்களது சிறப்பியல்பாகும். இவ்வாறு விடத்தல்தீவின் அபிவிருத்தியின் முன்னோடியாக திகழ்ந்திருந்தார்.
கடற்றொழில் அமைச்சரை விடத்தல்தீவுக்கு வரவழைத்து கடற்றொழிலாளரின் பாரிய பிரச்சனை தீர்க்கப்பட்டது.
1981ம்/ 1982 ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் கடற்றொழில் அமைச்சராக பெஸ்ரஸ் பெரேரா
அவர்கள் பதிவிவகித்த காலப்பகுதியில் எமது விடத்தல்தீவு கிராமத்தில் அயல் பிரதேசமான மூன்றாம் பிட்டி கிராமத்தில் மாழ்ப்பாண மாவட்ட பாசையூர் மற்றும் குருநகர் போன்ற பகுதிகளில் இருந்து வந்து தங்கியிருந்ததுடன் கடற்றொழிலில் சீசன் தொழில் செய்யவும் அதாவது அவர்களது சொந்த இடத்தில் கடற்றொழில் செய்து அங்கே அதன் சீசன் முடிவடைந்த நிலையில் கடற்றொழிலுக்கான சீரற்ற காலநிலை அங்கே தென்படும்காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து இங்கு வந்து எமது பகுதிகளில் மூன்றாம் பிட்டி, இலுப்பைக்கடவை,மற்றும் கத்தாளம்பிட்டி கிராமங்களை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக குடியேறி பல மாதங்களாக தங்கியிருந்து தொழில்செய்யத்தொடங்கினார்கள்.
பெருமளவு மீனவர்கள் சீசனுக்கு வந்து மேற்படி கிராமங்களை அண்டிய பகுதிகளில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டதனால் எமது விடத்தல்தீவு கடற்றொழிலாளர்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் எமது கடல்வளத்தை குறையாடி எடுத்துச்சென்ற நிலையில் எமது விடத்தல்தீவு மீனவர்களும், மூன்றாம்பிட்டி இலுப்பைக்கடவை மற்றும் கத்தாளப்பிட்டி பகுதிகளை சொந்த இடமாக கொண்டு கடற்றொழில் செய்யும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையை அறிந்த அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களது முறைப்பாட்டை அந்த நாட்களில் கடற்றொழில் அமைச்சராக பதவிவகித்த கடற்றொழில் அமெச்சர் கௌரவ பெஸ்ரஸ் பெரேரா அவர்களிடம் மன்னாரில் இருந்து கொழும்பு சென்று அமைச்சரின் காரியாலயத்தில் நேரடியாக அமைச்சரை சந்தித்து எமது ஊரவர்கள் சார்பாக எமது ஊரவர்களின் இக்கட்டான சூழ்நிலையையும்,எமது ஊரவர்கள் அடைந்த பாதிப்புகளையும், பாதிக்கப்பட்ட நிலையையும் எடுத்துச்சொன்னதுடன் அமைச்சர் பெஸ்ரஸ் பெரேரா அவர்கள் எமது நிலையை நேரில் வந்து அறிவதற்கான குறிக்கப்பட்ட அந்த நான் திகதியையும் பெற்றுவந்தார்.
அதன் அடிப்படையில் கடற்றொழில் அமைச்சர் பெஸ்ரஸ் பெரேரா அவர்கள் எமது கிராமம் விடத்தல்தீவுக்கு தமது அமைச்சின் அதிகாரிகளோடு விஜயம் செய்து எமது விடத்தல்தீவில் இருந்து ஒரு படகு மூலமாக அமைச்சர் பெஸ்ரஸ் பெரேரா மற்றும் அவரது அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழுவும் மூன்றாம்பிட்டி வரை சென்று எமது கடல்பகுதிகளையும், கடல் மற்றும் எமது பகுதியில் காணப்படும் கண்ணா வளங்களையும் பார்வையிட்டு மூன்றாம்பிட்டி கரையை அடைந்தனர். மூன்றாம்பிட்டியில் தங்கியிருந்து தொழில் செய்த பாசையூர் மற்றும் குருநகர் பகுதியை சேர்ந்த மீனவர்களோடு கலந்துரையாடி அவர்களோடு ஒரு பேச்சுவார்த்தையை நடாத்தி குறிக்கப்பட்ட ஒரு கால அவகாசத்தை அவர்களுக்கு வழங்கியதுடன் கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் மூன்றாம்பிட்டி பகுதியில் தொழில் செய்வதை நிறுத்தி சொந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டதுடன், மூன்றாம்பிட்டி கடல் வளம் எமது பகுதி மீனவர்களுக்கான கடல்வளம் என்றும் இந்த கடல் பரப்பையும், கடல் வனத்தையும் நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஒரு தனியாளாக, தனி மனிதனாக செயல்பட்டு எமது கடல்வளத்தையும், எமது ஊர் மக்களின் தொழிலையும் பாதுகாப்பதற்காக பாரிய முயற்சியை திரு-அகுளப்பு ஜேம்ஸ் அவர்கள் எடுத்து அதிலே வெற்றியடைந்தமையும் எமது ஊருக்கும் ஊரவர்களுக்கும் திரு அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ஆற்றிய மகத்தான சேவையில் முக்கியமானவைகளில் ஒன்றாகும். இவ்வாறான கடற்றொழில் சம்மந்தமான, எமது மீனவர்கள் பிரச்சனை சம்மந்தமான பல பிரச்சனைகளை உரிய இடங்களுக்கு கொண்டு செல்வதுடன் அவற்றுக்கு தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.
தனது வாழ்நாளில் சமூகசேவைகளையும், ஊரின் அபிவிருத்திகளையும் சிரமேற் கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வாழ்ந்த அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் 1980 கவில் ஊரில் அனேக பதவிகளை வகித்திருந்தார் அந்த வகையில் விடத்தல்தீவு கிராமோதய சபை தலைவராக பதவிவகித்து பாரிய பங்காற்றியதுடன் மாந்தை மேற்கு கடற்றொழில் மீனவ கூட்டுறவு சங்க தலைவராகவும், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதியாகவும், மாந்தை பிரிவு மீனவர் தலைவராகவும், விடத்தல்தீவு சனசமூக நிலைய உறுப்பினராகவும், இயக்குநர் சபை உறுப்பினராகவும், மாந்தை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினராகவும் பதவிவகித்திருந்தார். கமக்கார அமைப்பிலும், விவசாய சங்கத்திலும் உபதலைவராக பதவிவகித்திருந்தார்.
பள்ளமடு சந்தியால ஊருக்குள்ள வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து-
அந்த காலப்பகுதியில் போக்குவரத்து சேவை,வசதிகள் இப்ப மாதிரி அடிக்கடி இல்லாத காலம் சனம் CTB பஸ்ச மட்டும் நம்பி இருந்த காலம் நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகுதான் ஒன்டுரெண்டு பஸ் ஒடுற நேரமது. என்னதான் அவசர வேலையாக இருந்தாலும், வேலைகளுக்கு ஊரிலிருந்து வெளியே போவதாக இருந்தாலும்,வருத்தம் எண்டு ஆஸ்பத்திரிக்கு அவசியம் போவதாக இருந்தாலும், பஸ்சுக்காக காத்திருந்து, அவதிப்பட்ட காலம். ஊருக்குள்ள பஸ் வராமல் சனம் தமது அன்றாட தேவைகளுக்காக பள்ளமடு சந்திக்கு நடந்து 432 றோட்டில் சங்குப்பிட்டி,மன்னார் போய் வாற பஸ்சுக்காக காத்திருந்து சன நெருசலில் முண்டியடித்து அல்லல்பட்டு தமது பயனங்களை தொடர்ந்த காலம். நமக்கென்ன பஸ் ஊருக்குள்ள வந்தா என்ன, வராட்டி என்ன எண்டு தத்தமது வேலையோடு இருந்தவர்கள் பலர். சங்குப்பிட்டி ஊடாக வாழ்ப்பாணம் போய் வாற பஸ்சுகள் பள்ளமடு சந்தியால ஊருக்குள்ள வந்தா எங்கட சனங்களுக்கு போக்குவரத்திற்கு பிரச்சனை இருக்காது என்டதால மன்னார் டிப்போக்கு,கடிதம் எழுதி நேர போய் கடிதம் குடுத்து கதைச்சும் ஊருக்குள்ள பஸ் வந்தபாடில்ல. கச்சேரிக்கு போய் GA,ட்ட முறையிட்டும் பள்ளமடு சந்தியால போற பஸ் ஊருக்குள்ள வராமலே போய்கொண்டிருந்தது. வழமையாக காலம சங்குப்பிட்டிக்கு போக வந்த பஸ்க ஊருக்குள்ள பஸ்க விடுங்க சனம் நிறைய பேர் இருக்கு எண்டு சொல்லவும் "ஏலாது பஸ்ச உள்ள விட ஏலாது சந்தியில இறங்கி நடந்து போங்க என்டாராம் றைவர். *“அண்ண பஸ்ச எடுக்காதேங்க றோட்டுக்கு குறுக்கால ஒரு ஆள் பஸ்ச மறிச்சுக்கிடக்கு" எண்டு கொண்டைக்ற்றர் கத்தவும் அங்க பார்த்தால் அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் நோட்டுக்கு குறுக்கால பஸ்ச மறிச்சு கிடந்திருந்தாராம். எவ்வனவோ சொல்லிப்பாத்தும் எழும்பவேயில்லையாம் ஊருக்குன்ன பஸ்ச திருப்பு, திருப்பினாத்தான் நான் எழும்புவன் இல்லாட்டி பஸ்ச எனக்குமேல ஏத்திற்றுப்போ எண்டாராம் அதன் பின்னர் மன்னார் பேரூந்து சாலை அதிகாரிகள் அந்த இடத்திற்கு வருகைதந்து வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து அன்றைய தினம் முதல் 432 சங்குப்பிட்டி மன்னார் றோட்டில போய் வாற இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் ஊருக்குள்ள வந்து போனதாம்.
சிலவேளைகளில் 432 பிரதான வீதியூடாக மன்னாரில் இருந்து சங்கப்பிட்டி நோக்கி பயணம் செய்யும் பேரூத்தில் ஜேம்ஸ் அவர்கள் விடத்தல்தீவுக்கென பயணசீட்டை புத்திசாலித்தனமாக பெற்றுக்கொண்டு பேரூந்துகள் எமது விடத்தல்தீவினுள் செல்லாது பள்ளமடு சந்தியூடாக சங்குப்பிட்டி நோக்கி பயணிப்பதை தடுத்துநிறுத்தி ஊரினுள்ளே இவரால் வந்துபோன சந்தர்ப்பங்களும் உண்டு. ஆளுமை, தற்துணிவு, சாதிக்கும் திறன் அனைத்துக்கும் சொந்தக்காரரான அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் ஊர் பிரச்சனைகள், ஊரின் தேவைகள், ஊரின் அபிவிருத்திகளை மனதில் கொண்டு அதனை தீர்த்துவைக்க மன்னார் மாவட்ட புனர்வாழ்வு புணர்நிர்மான அமைக்கோடும் அதன் அதிகாரிகளோடும் அதிக தொடர்பினை பேணிவந்ததுடன் அடிக்கடி அமைச்சின் காரியாலயத்திற்கு சென்று தேவைகளை, குறைபாடுகளை தெரிவித்து அவற்றை எமது ஊர் பெற்றுக்கொள்ளவும் வழிசெய்தார்.
அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் எமது விடத்தல்தீவு புனித அடைக்கலமாதா ஆலய நிர்வாகத்தில் உறுப்பினராக இருந்த காலத்தில் புனித அடைக்கலமாதா ஆலய திருவிழா திருப்பலியை முதன்முதலாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபன அலைவரிசையில் ஒலிபரப்பு செய்த வரலாற்று நிகழ்விற்கு சொந்தக்காரராவார். அந்நாட்களில் சுயநலவாதிகளாக தானுண்டு தன்னுடைய வேலை, குடும்பம் என்றிருந்தவர்களே அதிகமாக வாழ்ந்துவந்த காலம் ஊருக்காக பொதுநலனுக்காக ஊரின் தேவைகளை தீர்த்துக்கொள்ளுவதற்கான உரிய வழிகளை கையாண்டு அணுகவேண்டியவர்களை அணுகினார் அருளப்பு ஜேம்ஸ். மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்கள் அரச அதிகாரிகள் யாவரும் இவருக்கு அத்துப்படி எங்கு சென்று யாரை அணுகினால் ஊரின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமோ அதனை திறம்பட ஆற்றுவது ஜேம்ஸ் அவர்களது சிறப்பியல்பாக காணப்பட்டது. அரச அதிகாரிகளுடனான தொடர்பும் அமைச்சினதும், அமைச்சர்களினதும் தொடர்பும் ஜேம்ஸ் அவர்களுக்கு கிட்டியிருந்த காலம்.
மாந்தை மேற்கு கூட்டுறவு சங்கத்தின் விடத்தல்தீவு கிளைக்கு தலைவராக ஜேம்ஸ் அவர்கள் பதவி வகித்த காலப்பகுதியில் மதரீதியான பாகுபாடுகள் தழைத்தோங்கி இருந்த காலப்பகுதியில் மதரீதியான செயல்பாடுகளை தனிமனிதனாக தகர்த்தெறிந்து கூட்டுறவு சங்கத்தில் எம்மவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுத்திருந்தார்.
எமது கடற்றொழிலாளரது நலன்கருதி எமது கடற்கரையில் பிரமாண்டமாக அமையப்பெற்ற வெளிச்சக்கூடு எமது கிராமத்தில் அமைந்ததில் அருளப்பு ஜேம்ஸ் அவர்களது பங்கு அளப்பெரியதாக இருந்தது. மீன்பிடி அமைச்சர் பெஸ்செற் பெரேரா, தபால் தந்தி அமைச்சர் குமாரசூரியர் ஆகியோர் விடத்தல்தீவில் கால்பதித்து எம் மக்களது பிரச்சனைகள் தீர்க்கப்படவும் அருளப்பு ஜேம்ஸ் அவர்களே காரணகர்த்தாவாக இருந்தார். அதன் பின்னர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அக்பர் மற்றும் றக்ம் ஆகியோர் எமது விடத்தல்தீவிற்கு அருளப்பு ஜேம்ஸ் அவர்களது ஏற்பாட்டின் நிமித்தம் வருகைதந்திருந்தனர். அந்நாட்களில் கொழும்பு சென்று உரிய அமைச்சுகளோடும் திணைக்களங்களோடும் தொடர்பை ஏற்படுத்தியிருந்ததுடன் எமது மீனவர்களுக்கான துறை விஸ்தரிப்பை இலுப்பைக்கடவை வரைக்கும் கொண்டு சென்றிருந்தார். குறைந்த விலைக்கு என்ஜின் போட், பெரிய பிளாஸ்ரிக் போட்டுகளை எமது விடத்தல்தீவு சங்கத்திற்கும் ஊரவர்களின் சிலருக்கும் பெற்றுக்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விவசாய கடன்களை பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகளை கையாண்டு உரிய அதிகாரிகளினூடாக எமது ஊரவர்களுக்கு வழங்கியவருந்ததுடன் 1977ம் ஆண்டு காலப்பகுதிகளில் விடத்தல்தீவு ஊருக்குள்ளே பேரூந்துகள் பயணிக்கதக்கதான பல்வேறுபட்ட விடையங்களை கையாண்டு அதில் வெற்றியும் கண்டிருந்தார். எமது பாடசாலையின் ஆசிரிய வனம் மற்றும் ஏனைய பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்ததுடன் ஒரு தொலைபேசி அழைப்பனூடாகவே அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துக்கொள்ளும் ஆற்றலையும் திறமையையும் அருளப்பு.ஜேம்ஸ் அவர்கள் கொண்டிருந்தார். அத்துடன் குறைந்த விலையில் எமது மீனவர்களுக்கான வெளியிணைப்பு இயந்திரத்தை பெற்றுக்கொடுத்ததும் இவரது செயற்பாடாகும். எமதுவிடத்தல்தீவுகல்லோடைபுனரமைப்புதிட்டத்தில் எமதுகிராமசேவையாளர்கவேரியான் அவர்களோடு
இணைந்து செயற்பட்டமையும் அருளப்பு ஜேம்ஸ் அவர்களின் முக்கிய பங்காக காணப்படுகிறது. தனது ஊருக்காக பல்வேறுபட்ட சேவைகளை செய்த அருளப்பு ஜேம்ஸ் அவர்கள் 1984/12/8ம் திகதி எம்மைவிட்டு பிரித்தார்.
வடமோடி இராகத்திற்கு பெருமைசேர்த்த விடத்தல்தீவு சங்கீத குழு
மன்னார் மாவட்டத்தில் பல அருமை பெருமைகளை கொண்டு கல்வி, கலை, விளையாட்டு போன்ற துறைகளில் தனிச்சிறப்புப்பெற்ற கிராமங்களில் எமது விடத்தல்தீவு கிராமம் முதன்மை வாய்ந்தது என்றால் அது மிகையாகாது.
இசையால் வசமாகா இதயமேது” அந்த வகையில் இலங்கை கலை வரலாற்றில் வடமோடி இராகத்தில் அமைந்த கலை இலக்கிய வரலாற்றில் நாடகங்கள், நாட்டுக்கூத்துகள், வில்லுப்பாட்டு, தாலையம், பாடல், இசைகருவிகள் மீட்டுதல், மற்றும் இசை துறையில் எமது ஊரும் ஊரவர்களும் கலஞர்களாக எல்லாவற்றிலும் சிறப்புப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
எமது ஊரில் பிறப்பிலிருந்தே இயற்கை அன்னையால் வழங்கப்பட்டது என சொல்லத்தக்க வகையில் எமதுமண்ணின் பெருமை சாற்றும் கலைத்துறை சார்ந்த வித்தகர்கள் பலர் அவர்களின் கலைத்திறனில் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கேற்ப அவ்வவ்போது கலையையும் கலைத்திறனையும் வளர்த்துகொண்ட எமது முன்னோர்கள் கலைவளர்ச்சியில் என்னும் எமது முன்னோடிகளாக நிகழ்கிறார்கள்.
அந்த வகையில் ஆர்மோனிய வித்தகர் சீமான்பிள்ளை அவர்களின் தலமையில் எமது விடத்தல்தீவில் இசையையும், கலையையும் மையப்படுத்திய குழுவாக எமது ஊரின் பல இசைத்துறை ஜாம்பவான்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டதுதான் விடத்தல்தீவு சங்கீத கோஸ்டி ஆகும்.
சுமார் 1960 களில் ஆர்மோனிய இசை கலைஞர் அமரர் சீமான்பிள்ளை அவர்களையும், புல்லாங்குழல் மற்றும் ஆர்மோனிய இசைகலைஞ்ஞரான அமரர் சிலுவைரானா (வெள்ளச்சிலுவை) அவர்களையும், மிருதங்க வித்துவான் அமரர் செபஸ்ரி. அந்தோனிப்பிள்ளை,அவர்களையும், தேனமிர்த குரலோன் அமரர் மாசில்லாமணி அவர்களையும், தாள வித்தகர் பேதுறுப்பிள்ளை அவர்களையும், ஆர்மோனிய இசை சக்கரவர்த்தி அமரர் பொன்னுத்துரை அவர்களையும், மிருதங்க இசைகலைஞன் அமரர் க.தாவீது அவர்களையும், மற்றும் அமரர்அந்தோனிப்பின்ளை(அந்தோணி) அவர்களையும் உள்ளடக்கி விடத்தல்தீவு சங்கீத கோஸ்டி என்ற புகழ்பூத்த இசைக்குழுவாக பட்டிதொட்டியெங்கும் இசைமழை பொழிந்திருந்தமை விடத்தல்தீவு சுலை வராலாற்றில் பொன்னெழுத்துகளால் பதியப்படவேண்டியவை.
இவ் விடத்தல்தீவு சங்தே கோஸ்டி குழுவின் தனிச்சிறப்பு யாதெனில் ஒவ்வொருவருக்குமென தனித்தனியான வாத்திய இசை கருவிகளை மீட்டுவது மட்டுமல்லாது பாடல்களை பாடுவதிலும் இவர்கள் தேர்ச்சிபெற்ற தனிச்சிறப்பு வாய்ந்த கலைஞர்களாக அந்நாட்களில் பட்டயைகிளப்பியிருந்தார்கள் எனலாம். 1960 களுக்கு பிற்பாடு எமது விடத்தல்தீவு பழைய இறைச்சிக்கடை கட்டடத்தில் விடத்தல்தீவு சங்கீத கோஸ்டி குழுவின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன அந்த கட்டடத்தில் ஒரு சிலருக்கு இசை கருவிகளை மீட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எமது மாத்தை மேற்கு மற்றும் அடம்பன் பிரதேசங்களிலும், தட்சனாமருதமடு, பிரதேசங்களிலும் நிகழும் ஆலய திருவிழாக்கள் காலங்களிலும் எமது ஊரில் எமது ஆலய பெருநான் காலங்களிலும்,கலை நிகழ்வுகளிலும், நாடகங்கள், மற்றும் நாட்டுக்கூத்து போன்ற நிகழ்வுகளிலும் இசைமழையை பொழித்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தனர்.
மக்கள் மனதில் பதிந்த நாடகக் கலைஞர்: அந்திரேஸ்
மிகச் சிறந்த நாடகக் கலைஞர். எங்கள் மண்ணில் பிறந்த கலையின் ஒரு ஒளிவிளக்கே முன்னோடி நாட்களிலும் திருவிழா காலங்களிலும் அவருடைய குரல் எங்கும் ஒலிப்பதை நினைத்துப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த கிராமமே ஒரு நாடக மேடையாகவே தோன்றும். அவர் மேடையில் நிற்கும்போது, மக்கள் மனங்களில் எழும் உற்சாகம் கொல்லிக் கூறமுடியாதது.
ஒரு நாள் பிள்ளையார் கோவிலில் திருவிழாநடந்தது. எங்களும் சேர்ந்து சிறு நாடகக் குழுவாக அமைந்து பல வீடுகளுக்குச் சென்று இசை, நாடகம், மிஞ்சு ஆகியவற்றைக் காட்சிப்படுத்தினோம். அப்போது அந்திரேஸ் அவர்கள் ஒருவிதமான கலாசார எழுச்சியை தூண்டினார். கலை வழியே ஒரு சமூக ஆழமுள்ள உரையாடலை உருவாக்கினார்.
அந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, நாங்கள் சில நாடக உபகரணங்களை சேகரித்து, ஊருக்குள் ஒரு தெருநாடகத்தை மேடையிறுத்தினோம். அந்த நாடகத்தில்தான், அவரது தலைமையால் ஒரு சாதாரண நிகழ்வு, மக்கள் மனங்களில் நிலைக்கும் கலை நிகழ்வாக மாறியது. அவர் உருவாக்கிய காட்சி, அவரது குரல் ஒலிகள், அவை எல்லாம் கலையின் ஆழத்தையும், சமூகத்தின் உணர்வையும் ஒருங்கிணைத்து ஒலித்தன.
அவர் சிறப்பாக மட்டுமல்ல, பொதுவாகவும், பக்தி வழிப்பாட்டு மக்களிடையே மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தார். கிராமங்களுக்குள் சென்றபோதெல்லாம், அவர் அனைவரிடமும் கலந்துவிழுந்து அவர்களின் மகிழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆணவம் இன்றி, அனைவருடன் பழகியவர்.
மருதமடு போன்ற பழங்குடி மக்கள் வாழும் இடங்களிலும், மின்சாரம் இல்லாத இருளிலும், கேரசின் விளக்கின் ஒளியில்கூட, அவர்கதைகளைச்சொன்னபோது, மக்கள் அசைந்தார்கள். அந்த இடங்களில் கூட கலை, கல்வி, சமூக விழிப்புணர்வு என்பவை அவரது வாய்மொழி வாயிலாக எடுத்துரைக்கப்பட்டன.
அந்த நேரங்களில், அவர் கலைவழியாகக் கொண்டுவந்த ஒன்று - அது சுத்தமான பொழுதுபோக்கு அல்ல, அது மக்களின் நினைவுகள், வரலாறு, நெஞ்சை உரைக்கும் உண்மைகள் ஆகியவற்றின் ஓர் பிரதிபலிப்பாக இருந்தது.
அது வெறும் நாடகமா? இல்ல, எதிர்ப்பும் அதிர்வும் கலந்த கலை! அந்திரேஸ் ஒரு சாதாரண கலைஞர் அல்லர். அவர்தான் மறக்கப்பட்டவர்களின் வரலாற்றை எடுத்துரைத்த கலைஞர். அவர் நாடகங்கள் சமூக உணர்வையும், அரசியல் உணர்வையும் கொண்டிருந்தன. சாதியமைப்பு, ஏழ்மை, குடியேற்றம், போராட்டங்கள் போன்றவற்றைத் தைரியமாக பேசினார். மரபு, புராணம், புனைவுகள்,
கேலிச்சித்திரம், இலக்கணமற்ற வரிகள் — அனைத்தும் அவரது கதைகளில் ஒன்றிணைந்து ஓர் உணர்ச்சி புனலாகக் காட்சியளித்தன.
அவரது கதாபாத்திரங்கள் தொலைவிலிருந்தவர்களல்ல நாமே. அவர்கள் நம் பேச்சிலும், நம் சிந்தனையிலும், நம் போராட்டத்திலும் வாழ்ந்தவர்கள். அவர் கலைக்காக வாழவில்லை - அவர் கலைவழியாக வாழ்ந்தார்.அரசு தடுக்க நினைத்தபோதும், அவர் ஒதுங்கவில்லை. ஒரு முறை பிச்சைக்கார வேடத்தில் கூட, மேடையை அடைத்தவர். மற்றொரு முறை பைத்தியக்காரனாக நடித்துத் தன்னை மீட்டார். அவரது கலை, ஒரு எதிர்ப்பும், ஒரு இறைபாசமும் ஆனது.
அவர் இறந்தபோது, அதுபோல ஒரு பெரிய முரசுசிதறிய உணர்வு. ஆனாலும், இன்றுவரை தெருநாடகங்கள், சந்தம் உள்ள கலைநிகழ்வுகள், பண்ணியரங்கங்கள் அனைத்திலும் அவர் உயிருடன் இருக்கிறார்.அந்திரேஸ் ஒரு கவி, நாடகாசிரியர், மேடை நடிகர் - ஒரே மனிதனில் மூன்று வடிவங்கள். தமிழ் மக்கள் வாழ்க்கையின் உணர்வுகளைக்கலைமயமாக ஆழ்ந்த முறையில் பதிவு செய்தார். அவர் வரலாறு பாடசாலைப் புத்தகங்களில் இல்லை – அது மக்களின் நெஞ்சிலும், தெருக்களின் அரங்கங்களிலும் வாழ்கிறது. இவர்சிறந்தகலைஞர் இவர் புணைந்த நாட்டுக்கூத்து சூழ்ச்சியின் வீழ்ச்சி இதை காணும்போது இப்படித்தான் நாட்டுக்கூத்து இருக்குமென அறியலாம். பெரிய மேடைவிட்டு அலங்கரித்து அழகான தோரணங்கள் இட்டு கீழ் அருகேயுள்ள தரையில் சாக்கு படங்கால் கம்பளமிட்டு அத்தனை பேரும் அமர்ந்து நாடகத்தைரசிப்பார் பார்வையில் ஆச்சரியமான பல நிகழ்வுகள் ஆர்மோனியமும் மிருதங்கமும் கைத்தாளமும் மட்டுமே இசைக்கருவியாகி அழகு தமிழ் சொல்லெடுத்து அழகான பாடலும் அதற்குப் பிற்பாடு பாடுவதும் பாடகர் குழாமின் பக்கபலமும் ஒலிவாங்கி இல்லாமல் மந்தகாசமாய் தெரியும்.
வடலிப்பிட்டி புதுக்கட்டு தீர் போகும் வாய்க்கால் வழியில் உள்ள பெரும் வெளியில் "சூழ்ச்சியின் வீழ்ச்சி" எனும் நாடகம் புது மெருகோடு பிரமாண்ட மேடையில் பெருத்த பாடகர்களின் கூட்டணியில் அரங்கேறியது. நாடக பாணியில் நடை உடை பளபளக்கும் அங்கியும் அரிதாரம் பூசிய அழகு வதனங்களும் தலை கிரீடங்களும் பொடிநடையும் வீரநடையும் தெறிக்கும் வசனங்களுக்கும் இதற்கு உரியவர்யாரென விளைந்த போதுதான் அந்தோணி அத்தரேஸ் ஆவார். அமைதியும் அழகுமான அந்த மனிதருக்குள் இவ்வளவு பெரிய கலையாற்றலா? ரோமாபுரி அரச சபையே நேரில் காண வைத்த கற்பனை கதை.
அவரோடு கூட பிறந்தவர்கள்: மதலையினான், பால்புறா, லூகாஸ் அத்திரேஸ், லூர்து, சிலுவை, ஆபிரகாம், ராணியம்மா அவர்களும் பங்காளிகள் தான். அந்திரேஸ் எழுதி வசனமாக்கி நாடகப் பாடலாக்கி அதற்குத் தகுந்த இசை ஆக்கி மேடையேற்ற எவ்வளவு கலை ஆற்றல் வேண்டும். அவரை நாம் போற்றுவோம் அவர் வாரிசுகள்: அலோசியஸ், அன்ன மலர், அலிஸ்
மேலைத்தேய நாடுகளில் தமிழர் கூத்து வடிவங்கள் மிக மிக பிரமாதமாக மேடைகளில் அரங்கேறும். அங்கெல்லாம் எமது ஊர் அந்தரேசைய்யா, அடைக்கலத்தார், கரடி அந்தோணியார், அரியம் வாத்தியார் வித்துவான் வித்தோரி செல்லன், போசி என்பவர்களின் கலையுணர்வும் உயர்ந்த குரல் வளமும் நினைவு வரும்.அதில் வரும் ஒரு பாடல்
தெருவிலே தோரணம் தூக்இங்கோ மன்னன் வரும் விதி தனை வடிவாக்குங்கோ சித்திரமாய் பத்தல் ஏற்றுங்கோ, சேனை வீரரை நாமழைப்போமே சேனை வீரரை நாமழைப்போமே, சத்துருக்கள் போற்றும் பிரதாபன்ரோமச்சக்கரவர்த்தியின் அதிதூதன் வித்துக்கள்பத்துக்கு பாகரன், சேனை வீரரை நாமழைப்போமே சேனை வீரரை நாமழைப்போமே.
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை பேணிய மணி மாஸ்ரர்.
எமது விடத்தல்தீவு கல்விமானாக சமூகம் சார்ந்த கல்விசார் நடவடிக்கைகளில் எமது சமூகம் மேலோங்கி சிறப்புற்று வாழ தமது கல்விப்பணியை ஆசிரியராக, அதிபராக,கொத்தனி அதிபராக, வலயத்தின் உதவிகல்வி பணிப்பாளராக கடமையாற்றிய மகான்களில் எமது மணி மாஸ்ரர் அவர்களும் ஒருவர். சூசைப்பிள்ளை எனும் இயற்பெயரை கொண்டு மணி மாஸ்ரர் என பவராலும் அறியப்படுகிற மணிமாஸ்ரர் அவர்கள் எமது விடத்தல்தீவில் சுவக்கீன், செபமாலை (முத்தம்மா) ஆகியோருக்கு மூத்த மகனாக 1935ம் ஆண்டு ஆவணி மாதம் 28ம் திகதி பிறந்தார்.
மணி மாஸ்ரர் அவர்கள் தனது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் தொடர்ந்து மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியிலும் கற்றுத்தேர்ந்தார். கலாசாரப் பசுமை கொழிக்கும் கடற்கரை கிராமமான விடத்தல்தீவில் பிறந்த மணி மாஸ்ரர் அழைக்கப்படும் திரு குசைப்பிள்ளை அவர்கள் கிறிஸ்ரின் சகுந்தலா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து ஜாக்குலின், கருணாகரன், லோகேஸ்வரன் மற்றும் விமலேஸ்வரன் ஆகிய நான்கு பிள்ளைகளை பெற்று கற்பித்தல் ஒரு தொழில் என்பதை தாண்டி தனது சேவைக்காலத்தில் சிறப்பான சேவையை வழங்கி இலங்கைத் தமிழ் கல்வியின் பொற்காலத்தின் பிரதிநிதியாக விளங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தின் மதிப்புமிக்க ஆசிரியராகப் தனது ஆசிரிய பணியின் முதல் நியமனத்தை பெற்று பணியாற்றத் தொடங்கிய மணி மாஸ்ரர் அவர்களது கல்வித்துறை சார்ந்த அடையானமாக விளங்கிய இலங்கையின் ஒரு பழமையான இலங்கை வித்தியாப் பதிவு அடையான ஆவணத்தில்" பதிவாகியுள்ளது.
திரு க.சூசைப்பிள்ளை மணி மாஸ்ரர் அவர்கள் தனது கல்வி துறை சார் கற்பித்தல் பணியில் முதல் நியமனத்தில் அம்பிட்டிய றோமன் கத்தோலிக்க பாடசாலையில் 1957ம் ஆண்டு தை மாதம் 16ம் திகதி ஆசிரியராக சேவையை ஆரம்பித்திருந்தார்.
தொடர்ந்து தனது பணியை மன்னார் மாவட்டம் முழுவதும் குறிப்பாக மடு மற்றும் மன்னார் வலய பாடசாலைகளில் பணியாற்றியிருந்தார் தனது பணிக்காலத்தில் ஒழுக்கமிக்க கற்றலையும், சமூக முன்னேற்ற மனப்பாங்கான செயல்களையும் கொண்டிருந்ததுடன் கண்டிப்புடன் கூடிய வழிகாட்டியாகவும், வகுப்பறை கற்பித்தல் நடவடிக்கையில் அதிகாரமிக்க அரவணைப்புடன் அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்கியிருந்தார் மணி மாஸ்ரர் அவர்கள்.
16/1/1957ம் ஆண்டு அம்பிட்டிய றோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஆரம்ப நியமனத்தை பெற்று 30/6/1958ம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார். தொடர்ந்து மன்னார் முசலி பகுதியில் முத்தரிப்புத்துறை பாடசாலையிலும் சூரியகட்டைக்காடு றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், அதன் பின்னர் எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு மாற்றலாகி வந்து ஆசிரியராக பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னரான காலப்பகுதியில் மன்னார் பேசாலை மகாவித்தியாலயத்திலும், மன்னார் கோவில்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும், பாலைக்குழி றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் சிறப்பான சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மன்னார் உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், மராத்தி கன்னாட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், மன்னார் தேவன்பிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், அடம்பன் மகாவித்தியாலயத்திலும் ஆசிரியராக கடமையாற்றிவிருந்தார் மணி மாஸ்ரர் அவர்கள்.
அதன் பின்னரான காலப்பகுதியில் பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் மீண்டும் இரண்டாவதுமுறையாக எமது விடத்தல்தீவுறோமன்கத்தோலிக்கதமிழ்கலவன்பாடசாலையிலும்,மன்னார் பரப்புக்கடத்தான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் மூன்றாவது தடவையாக எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் பண்டிவிரிச்சான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் தமது ஆசிரிய பணியை சிறப்பாக ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் மன்னார் பெரிய கட்டைக்காடு பாடசாலையிலும் பணியாற்றியிருந்தார்.
சமூக நலன் சார்ந்த சேவையிலும்,சமூக மேம்பாட்டிற்கும் உழைத்த மணி மாஸ்ரர் ஒரு சாதாரண ஆசிரியரைவிட மேன்மையானவராக மதிக்கப்படுகிறார். எமது கலாச்சார விழுமியங்களை கைக்கொண்டு ,ஒழுக்கத்தை கடமையோடும், கண்ணியத்தோடும் உயிராய் நடத்தும் நற்பண்புடையவர் மணி மாஸ்ரர் - எழுத்து, வாசிப்பு, கணிதம் கற்பிப்பதைத் தவிர, மாணவர்கள் தங்களது அடையாளம் மற்றும் மரபுகளை மதிக்கக் கற்றுக்கொள்ளுவதற்கு மணி மாஸ்ரர் அவர்களே காரணகர்த்தாவாவார்.
விடத்தல்தீவு கிராமத்தில் மணி மாஸ்ரர் தனது ஆசிரிய பணிவாழ்வில் கிராமத்தின் ஓர் அடையாளமாக மாறினார். பல மாணவர்கள் வெறுங்காலில் பாடசாலைக்கு வந்திருந்தும் அவரிடம் கல்வி கற்றுக்கொண்டு அவர் அன்று விதைத்த நம்பிக்கையுடனும் எதிர்கால கனவுகளுடனும் அவர்கள் தத்தமது இல்லம் திரும்பியதும் வரலாறாகும்.
மணி மாஸ்ரர் அவர்கள் எமது மன்னார் மாவட்டத்தில் அனேக பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றி சிறப்பான சேவை செய்திருந்ததுடன் எமது பகுதியில் கொத்தனி அதியராகவும், வலய கல்வி உதவி பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மணி மாஸ்ரர் தனது கற்பித்தல் மற்றும் கல்வி சார் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றபின்பும் அவர் சமூகத்துடனான உறவைத் தொடர்ந்து பேணி வருகின்றார். மணி மாஸ்ரர் திருக்குறன் மனன போட்டிகளை எமது மாவட்ட ரீதியில் முன்னெடுத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் குறிப்பாக தமிழ் வளர்ச்சியில் பெரிதும் உதவுவதுடன் எமது சமூகம் சார்ந்த கல்விமேம்பாட்டுக்காகபலதரப்பட்டகலந்துரையாடல்களிலும், ஆலோசனைகளிலும், விழாக்களிலும் அவரது பங்களிப்பு இருந்து வருகிறது.
கற்பித்தலில் சிறந்த ஆளுமையை மட்டுமல்ல, மதிப்பிற்குரிய நல்வாழ்வு பாரம்பரியத்தையும் பிரதிபலித்துக்கொண்ட மணி மாஸ்ரர் விடத்தல்தீவு புதிய சமூகம் சார்ந்த இளம் தலைமுறைகள் வளர்ச்சியின் பாதையில் பேசப்படும் தாரக மந்திரமாக, "சூசைப்பிள்ளை" மணிமாஸ்ரர் என்ற பெயர் இன்னும் பாடசாலை நிரல்களில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருப்பது சிறந்த உதாரணமாக காணப்படுகிறது
மணி மாஸ்ரர் எமது மன்னார் மாவட்டத்திற்கு ஆற்றிய கல்வி துறைசார் சேவைகளை பாராட்டி கல்வி வலயம் மற்றும் கல்விச்சமூகம் மணி மாஸ்ரர் அவர்களை கௌரவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டிய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.































நிரந்தர மறைவாழ்வு பணியாளராக மரிய செல்வன் அவர்கள்.
விடத்தல்தீவு கிராமத்தில் இராயப்பு மரியம்மா ஆகியோருக்கு மகனாக 1947ம் ஆண்டு தை மாதம் 10 ம் திகதி பிறந்தார். கிறிஸ்தம்மா, சந்தானம்மா, சிப்பீரியன், மற்றும் மரிய நாயகி ஆகியோர் இவரது உடன்பிறப்புகளாவார்கள்..
மரிய செல்வன் அவர்கள் 1974-05-15 அன்றைய தினம் சகாயராணி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து டென்சில் நியோமி, பீலிக்ஸ் பேக்ஸ்மன் அருட்பணி பிராஜ் டஃவ் (IvDi) மற்றும் இருதயராஜ் ஆகிய பின்னைகளுடன் வழ்ந்துவருகின்றார்.
மரியசெல்வன் அவர்கள் தமது 30 வது வயதில் இறைவார்த்தைப் பணியை ஆற்ற மறைவாழ்வுப் பணியாளராக, மரியாயின் சேனை ஊழியனாக, வின்னென்றிபோல் சபை அங்கத்தவராகவும், இச்சயைகளின் நிர்வாக உறுப்பினராகவும், ஆலயசபையின் பொருளாளராக 1990 ம் ஆண்டு தொடக்கம் 1993 ம் ஆண்டு வரை தன்னை அந்த பணிகளில் இணைத்து அதிலே பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்பணி றெஜீஸ் இராஜ நாயகம் அடிகாளர் எமது பூர்வீக கிராமமாகிய விடந்தல்தீவில் பங்கும் தந்தையாகப் பணியாற்றிய போது அக்காவத்தில் அருட்பணியாளர்களும், குருக்களும் மறைமாவட்டத்தில் பற்றாக்குறையாக இருந்தமையினால் எமது விடத்தல்தீவு பங்கின் துணைப் பங்குகளான பெரியமடு, கள்ளியடி, கத்தாளம்பிட்டி, இலுப்பைக்கடவை,தேவன்பட்டி ஆகிய கிராமங்களுக்கு பாதணிகளின்றி கால்நடையாகவும், துவிச்சக்கரவண்டியிலும் சென்று பூசைத்தியானங்கள், மறைக் கல்வி வகுப்புக்கள், வீட்டுத்தரிசிப்புக்கள், திருவருட்சாதன ஆயத்தங்கள், திருமண ஆயத்த வகப்புங்கள் என்பவற்றை அர்ப்பணத்தோடு நடாத்திவிருந்த பெருமைமரிய செல்வன் அவர்களையே சாரும். .
1977 ம் ஆண்டு எமது விடத்தல்தீவு பங்குத்தந்தை அருட்பணி றெஜீஸ் இராஜ நாயகம் அடிகளாரால் சங்கிஸ்தமாக நியமிக்கப்பட்டு. பூர்வீக கிராமமாகிய விடத்தல்தீவிலும், இடப்பெயர்வின் போது தேவன் பிடியிலும், இடப் பெயர்வுக்குப் பின் பேசாலை நலன்புரி நிலையத்திலும். 2001ல் ஜோசப்வாஸ் நகரில் மீளக்குடியேறிய பின்னரும் ஆலய செயற்பாடுகளிலும், திருச்செபமாலை, வழிபாடுகள் நடாத்துதல் மரிததோர் இல்லங்களில் வழிபாடுகளை நடாத்துதவு, அடக்கச் சடங்குகளை நிறைவேற்றுதல், போன்ற செயற்பாடுகளில் தியாக உள்ளர்துடன் பணியாற்றிவந்தது மரியசெல்வன் அவர்களது பணிவாழ்வின் றெப்பாகும்.
பங்குத் தந்தையர்களின் அனுமதியுடன் வீட்டிற்கு முலைக்கல் வைத்தல், முற்கியவைபவங்களுக்கு கன்னிக்கால் வைத்தல், புதுமனைகளை ஆசீர்வதித்தல், போன்ற சடங்குகளை செவ்வனே செய்தார். எமது பங்கு வேதசாட்சிகளின் ஆலயத்தோடு இணைத்திருந்த காலப் பகுதியான 2007ம் ஆண்டு தொடக்கம் 2008 ம் ஆண்டுகளில் அருட்பணியாளர்காரின் அனுமதியுடன் *திருப்புகழ் மாலையை சிற்றாலயத்தில் செபித்து மக்கள் இறைவனை புகழ வழிசெய்தார்.
1978 ம் ஆண்டு, 1998 ம் ஆண்டுகளில் திருப்பாடுகளின் காட்சியில் புனித பேதுருவாக பாத்திர மேற்றதோடு இன்றும் பல நாடகங்களிலும் பல கதாபாத்திரங்களை பொறுப்பேற்று மேடையேறி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மரியசெல்வன் அவர்கள் 1991ம் ஆண்டு நிரந்தர மறைவாழ்வுப் பணியாளராக அருட்பணி A. பிலிப் அவர்களால் நியமிக்கப்பட்டார். மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி தடுநிலையத்தில் முழுநேரப்பணியாளராக, பல இயக்குநர்களின் கீழ் பணி புரிந்தார் இக்காலப் பகுதியில் மறைமாவட்டத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட அனைத்துப் பணிகளையும் மறைமாவட்ட எல்லைப்புற பங்குகளிலும், தேவையேற்பட்ட அனைத்துப்பங்குகளிலும் பலநாட்கள் தங்கியிருந்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
1993 ம் ஆண்டு திருந்தந்தை 2ம் ஜோண்போல் அவர்கள் காலி முகத்திடலில் ஜோசப்ம்வாஸ் அடிகளாருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் வழங்கும் நிகழ்வில் கலத்து கொண்ட போது மறைமாவட்டம் சார்பான காணிக்கையை திருப்பலியின் போது கொடுத்து அவரது மோதிரத்தை முத்தம் செய்து அவர் கைகளாலே திவ்விய நற்கருணை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வுகளை தமது வாழ்வின் ஆசீர்வாதத்தின் நாட்களாக எண்ணி மகிழ்ந்தார் மரியசெல்வன் அவர்கள். 2006ல் இந்தியாவிலுள்ள "டிவைன் தியான இல்லத்திற்கு விசேட தியானத்திற்காக மறைமாவட்டத்தினால் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பல விசேட பயிற்சிகளையும் பெற்றும் கொண்டார்.
1977 ம் ஆண்டு தொடக்கம் -2023ம் ஆண்டு வரையான 46 வருட நீண்ட காலம் சங்கிருத்தமாகப் பணி புரித்து 2024 ம் ஆண்டிற்குப் பின்னர் சுகயீனம் காரணமாக அனைத்துப் பணிகளிலிருந்தும் ஒய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மரியசெல்வன் அவர்கள் விடத்தல்தீவு கிராமத்தனதும் கிராம மக்களினதும் விசுவாச நமபிக்கை வாழ்வில் மறக்கமுடியாத பல்வேறுபட்ட முன்னோடிகளில் முன்னுதாரணமாகவும் முக்கியமானவராகவும் கருதப்படுவது சிறப்பாகும்.
பாராட்டை பெற்ற எமது கலைஞர் ஜோசப்.
விடத்தல்தீவு என்றவுடன் நினைவுக்கு வருவது எம்மவர்களதுகல்வி, விளையாட்டு மற்றும் கலைத்துறையில் எம்மவர்கள் கொண்ட ஆற்றல்மிகு திறமைகளுடனான மேம்பாடுகளுமே.
அந்த வகையில் கலைத்துறை கார் வித்தகர்களை நோக்குமிடத்து யாகப்பு, திரேசம்மா தம்பதிகளுக்கு மகனாக 1947 ம் ஆண்டு மார்கழி மாதம் 09ம் திகதியில் பிறந்து 3 தம்பிகளுடனும், 2 தங்கைகளுடனும் வாழ்ந்துவருபவர் தான் திரு ஜோசப் அவர்கள்.
ஜோசப் அவர்கள் தனது ஆரம்ப கல்வியை எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 6 வரை கற்றுள்னபோதும் இவர் கலைத்துறையில் செய்யும் நுட்பமான வேலைகளை பார்த்து வியந்து மலைத்துப்போனவர்களே அதிகம் அந்தளவுக்கு நுட்பமான பல கலைத்துறை சம்மந்தமான வேலைகளை ஆற்றிவருகிறார்.
தனது சிறுவயதில் தந்தையாருடன் கோபித்துக்கொண்டு சென் மேரிஸ் லொறியில் ஏறி நீர்கொழும்புக்கு சென்று அங்கே வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையத்தில் 4 மாதங்கள் வேலைசெய்திருந்தார். ஜோசப் அவர்களது துட்பமான வேலையை பார்த்து எரிச்சலடைந்த உரிமையாளர் ஜோசப் அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிடவே தனது 20 வது வயதில் தனது தாய் மாமனான அமரர் திருஞானம் அவர்களது பரிந்துரையின் நிமித்தம் தன்னாடி சந்திவில் அந்தநாட்களில் அமைத்திருந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் ஒரு சிங்கள மொழி பேசும் உரிமையாளரின் வேலைகளை மிக நுட்பமாக செய்துவந்தார். ஆனால் அவரது வேலையிலும் அவரிலும் அதிதிருப்த்தியான அந்த உரிமையாளரிடமிருந்து விலகி மீண்டும் தனது மாமன் திருஞானம் அவர்களிடமிருந்து 5=ரூபா பணத்தையும் ஒரு சிபார்சு கடிதத்தையும்
பெற்றுக்கொண்டவராக யாழ்ப்பாணத்தில் இருந்த தேவராசா அவர்களது வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் 4 மாதங்கள் பல நுட்பங்களுடனான வேலையை செய்திருந்தார்.
அங்கு வேலைசெய்த பின்னர் மீண்டும் ஊருக்கு வந்து கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காலத்தில் கண் பார்க்க கை செய்யும் என்பதற்கு ஒப்பாக இயற்கையில் தான் கண்ணால் கண்ட யாவற்றையும் மனதில் இருத்தி அவற்றை சித்திரமாக வரைவதிலும், உருவமாக உருவாக்குவதிலும் யாருடைய உதவியுமின்றி வலு துட்பமாக செய்துமுடிக்கும் அசாத்திய திறமையை திரு.ஜோசப் அவர்கள் கொண்டிருப்பது சிறப்பு.
1971ம் ஆண்டு ஆடி மாதம் 16ம் திகதி அந்தோனியாப்பிள்ளை (தங்கப்பொன்) அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து ஜோர்ஜ் டிமன் வேட்ஸ், அன்ரனி பெனிற்றா, அன்ரனி நோகா, ஜோர்ஜ் ஸ்ராலின் வேட்ஸ், யூஜின் வேட்ஸ், மேரி சுபாசினி மற்றும் அன்ரனி அணுசா ஆகிய பிள்ளைகளை பெற்று வாழ்ந்து வரும் ஜோசப் அவர்கள் ஆலய வேலைகளிலும், சோடினை, அலங்கார வேலைகளிலும் ஈடுபட்டு ஒலி ஒளி அமைப்புகளை நேர்த்தியான முறையில் செய்து பல்வேறுபட்ட துட்பங்கள் நிறைந்த காட்சி அமைப்புகளையும் உருவாக்கிவருகிறமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பலதரப்பட்ட சோடினை வேலைகளுக்கும், நுட்பமான வேலைகளுக்கும் அழைக்கப்பட்டு தனது நுட்பமான வேலைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்ததார். எமது ஊரில் நடைபெறும் நாடகங்கள், நாட்டுக்கூத்துகள், பாடசாலை நிகழ்வுகள் என்பவற்றுக்கு ஒளி, ஒலி வசதிகளை அந்தந்த நிகழ்வுகளுக்கு ஏற்றால் போல் வழங்குவதும் எமது ஆலயங்களின் திருவிழா காலங்களில் அதற்கான கோடினைகளை துட்பமாக செய்துமுடிப்பதிலும் திரு. வாகப்பு. ஜோசப் அவர்கள் கைதேர்ந்தவர்.
அந்த வகையில் விடத்தல்தீவு புனித யாகப்பர் ஆலய திருவிழாவிற்காக இரண்டு பிரமாண்ட மீன்கள் வளைந்திருக்கும் வகையில் அதனை உருவாக்கி மிகவும் அழகான முறையில் உயிருள்ள ஓவியமாக உருவாக்கியதுடன் நற்கருணை எழுத்தேற்றம் முதல்நாள் நற்கருணை திருவிழாவிலும் அடுத்தநாள் பெருநான் புனித யாகப்பரின் திருச்சுருபத்தை இரு மீன்களின் இடையே வைக்கப்பட்டிருந்த அந்த தந்துரூப காட்சி இன்றும் எம்மிடையே பேசப்படுகிறது.
மன்னார் மறைமாவட்ட ஆலயங்களில் வேறெங்கும் இல்லாத பழமைவாய்ந்த எமது ஆலயங்களில் உள்ள இரண்டு கர்த்தர் கரூபங்களில் ஒன்றான யாகப்பர் ஆலய கர்த்தர் கரூபத்தில் காணப்பட்ட திருத்த வேலைகளை மிகவும் தத்துரூபமாக திருத்திமுடித்து அவற்றை கடந்த பெரியவெள்ளி தினத்தில் இயேசுவின் மரண திருக்காட்சியை காட்சிப்படுத்தியதுடன் அடைக்கலமாதா ஆலய கர்த்தர் சுரூபத்தில் அதன் கண் திறந்து மூடுவதை மிகவும் நுட்பமாக செய்துமுடித்துள்ளார் எமது ஜோசப் அவர்கள்.
எமது ஜோசப்வாஸ் நகர் நற்கருணை ஆண்டவர் ஆலயத்தில் கர்த்தர் திருச்சுரூபத்தை மிகவும் நுட்பமான முறையில் பயன்படுத்தி இயேசுவின் மரணத்தை காட்சிப்படுத்தியதும் எமது ஜோசப் அவர்களே. இடம்பெயருவதற்கு முன்னர் எமது 3ம் வட்டாரத்தில் VC,க்கு அருகாமையில் செம்மறி ஆடு சிலுவையை தாங்கிய வகையில் உருவத்தை உருவாக்கியிருந்ததுடன் 1999ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் பின்னரான இடம்பெயர்வின் பின்னர் பேசாலை நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற மாதா வருகையை முன்னிட்டு அதனை வரவேற்கும் வண்ணம் அழகுற அமையப்பெற்ற பிரமாண்டமான இரு மீன்கள் வளைந்த சிகரத்தை உருவாக்கியதுடன் வானதூதர் மருதமடு மாதாவிற்கு மலர்தூவி வரவேற்பதை மிகவும் நுட்பமாக தயாரித்திருந்தமையும் மறப்பதற்கல்ல.
வாகப்பு ஜோசப் அவர்களது உருவாக்கத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வைகாசி மாதம் 1ம் திகதி கடற்கரையில் Boat இல் பீடமானது தயாரிக்கப்பட்டு அதில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதும் ,எமது மண்ணின் மைந்தன் அருட்பணி ஸ்ரிபன் ராஜா அடிகளாரது குருப்பட்டத்தின் பின்னரான முதல் நன்றி திருப்பலி வரவேற்பின் போது 6 அடி உயரத்தை கொண்ட பெலிக்கான் பறவை தனது இதயத்தை கொத்தி தனது குஞ்சுகளுக்கு உணவளிப்பதை சித்தரிக்கும் வகையிலான பிரமாண்டமான அந்த காட்சியை உருவாக்கயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
எமது ஆலயங்களின் பிடத்தின் அலங்கார சோடினைகளை செய்வதில் இருந்து எமது ஆலயங்களில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஜோசப் அவர்கள் தனது கைவரிசையை காட்டியிருப்பார் அந்த வகையில் இயேசுவின் உயிர்ப்பு விழா திருப்பலியில் ஒருமுறை கல்லறை வாசல் திறக்க உயிர்த்தாண்டவர் புகை மண்டலத்தினுள் மறைந்த வண்ணமாக மெது மெதுவாக எழுந்தருளி வருவதை சித்தரிக்கும் காட்சி இறைமக்களின் விசுவாசவாழ்விற்கு உந்துதலாக இருந்துள்ளது. அதே போல் ஒருமுறை நற்கருணை வழிபாட்டில் நற்கருணை எழுந்தேற்றத்தின் போது நற்கருணையை சுற்றி பற்றியெரியும் நெருப்புப்போன்ற காட்சியை அமைத்திருந்தமையும் இன்றுவரை எமது மக்களிடையே பேசப்பட்டுவருகிறது.
அதுமட்டுமல்ல எமது ஊரில் நடைபெற்ற நாடகங்கள், நாட்டுக்கூத்துகள், இயேசுவின் பாடுகள், மரணம் உயிர்ப்பை பிரதிபலித்த திருக்காட்சி நாடகத்திலும் ஜோசப் அவர்கள் ஒலி, ஒளி அமைப்புகளை சிறப்பாக வழங்கியிருந்ததுடன், மேடை அலங்கார சோடினை வேலைகளையும், காட்சி அமைப்பு சீனறி வேலைகளையும் மிகவும் நுட்பமாக அமைத்திருந்தார். ஜோசப் அவர்களுடைய நுட்பமான வேலையில் சந்தியோகுமையோர் நாட்டுக்கூத்தில் குதிரையை செய்து அந்தரத்தில் பறக்கவிட்டு குதிரையின் மேல் இருந்து சந்தியோகுமையோர் வாளேந்தி போரிட்டதை பிரதிபலித்த காட்சியமைப்பை மிகச்சிறப்பான முறையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
அலங்காரசோடினைவேலைகளில் ஈடுபட்டிருந்தது மட்டுமல்ல நாடகம், நாட்டுக்கூத்துகளிலும்கலைஞனாக பாத்திரமேற்று நடித்துள்ளார் அந்த வகையில் சந்தியோகுமையோர்,சூழ்ச்சியும் வீழ்ச்சியும், ஏது மாங்கல்யம், தேவசகாயம்பிள்ளை, தூக்கு தூக்கி,வீர பாண்டிய கட்டப்பொம்மன் ஆகிய நாடகங்களில் கலைஞனாக நடித்ததுடன் தங்கையா தாரமா என்ற நாடகத்தை எழுதி இயற்றியிருந்தார். அத்துடன் ஜோசப் அவர்கள் முஸ்லிம் வேடத்தில் பாத்திரமேற்று நடித்தது இன்றும் எமது மக்களிடையே பேசப்பட்ட பாத்திரமாக அமைந்திருந்தது.
வெள்ளறாலும் பொன்ராசாவும்.
மன்னாரில் கடல்வனம் பெருகி செழிப்புற்ற கிராமங்களில் எமது விடத்தல்தீவும் ஒன்று. அதன் வரலாற்றில் கடற்றொழிலை சார்ந்து அதனை சீபனோபாயமாக மேற்கொண்ட எம்மவர்களால் காலத்திற்கு காலம் பல்வேறுபட்ட தொழில்முறைகளையும், தொழில்நுட்பங்களையும் கைக்கொண்டு மேற்கொண்ட கடற்றொழிலில் ஒருசிலர் தாம் புரிந்த கடற்றொழிலில் இன்றுவரை ஊரவர்கள் மத்தியில் பேசப்படும்வகையில் தமது கடின உழைப்பாலும்,நுட்பமான முறைகளை கைக்கொண்டதாலும் ஒப்பீட்டளவில் அதிகளவு கடல்வளங்களான மீன் மற்றும் இறால் போன்ற கடலுணவுகளை பிடித்து வாழ்க்கையில் உயர்வுபெற்று வந்த வரலாறுகளுக்கு சொந்தக்காரர்களாக காணப்படுகிறார்கள்.
அந்த வகையில் வில்லுக்கு விஜயன் என்பதைப்போல வெள்ளறாலுக்கு பொன்ராசா என்று சொல்லும் அளவிற்கு எமது விடத்தல்தீவு வரலாற்றில் எம்மவர்களிடையே வெள்ளறாலுக்கு பிரசித்திபெற்ற தொழிலாளியாக தோணி தோணியாக வெள்ளறால் பிடித்தவர் என்றால் அது மிகையல்ல.
பொன்ராசா அவர்கள் மக்கோப்பிள்ளை, முத்தம்மா அவர்களுக்கு மகனாக 8 சகோதர சகோதரிகளுடன் விடத்தல்தீவில் 1935ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் திகதி பிறந்தார். அவரது 13 16 வயதில் தனது தந்தையுடன் கொட்டுவலை,மணல வலை போன்றவற்றுக்கு சென்றுவந்ததுடன் முரலுக்கான வளிச்சல் வலை தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். மரியபூரணி அவர்களை திருமணம் செய்து 10 200 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
1963 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இரவு நேரங்களில் மணலை வலை தொழிலை செய்துகொண்டு விடிந்தவுடன் கண்டி வலைத்தொழில் செய்திருந்தார். பொன்ராசா அவர்கள் ஆரம்ப கால கண்டி வலை தொழிலை எமது கடற்பரப்பில் காணப்படும் தாழைகளை கொண்ட பகுதிகளில் பாய்ந்து மீன் வகைகளை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து எமது ஊரில் தங்கியிருந்த வயோதிபர் ஒருவரின் அறிமுகம் கிடைக்கவே அவர் மேல் ஏற்பட்ட கருணையை அடிப்படையாக கொண்டு அவரை தனது விட்டில் கூட்டிவந்து உணவளித்து தன்னோடு தங்க ஏற்பாடுகளை செய்துகொடுத்திருந்தார் .அந்த வயோதிபரோடு அளவளாவிய நேரத்தில் பொன்ராசா அவர்கள் செய்யும் தொழிலை பற்றி கேட்டறிந்த அந்த முதியவர் தானைகளுக்கிடையில் வலைபாய்ந்து மீன் பிடிப்பதற்கு பதிலாக கண்ணா அருகில் பாய்ந்து வெள்ளறால் பிடிக்கலாம் என்றதன் அடிப்படையில் வெண்னறாலுக்காக அந்த வயோதிபர் கூறிய அறிவுரைகளின் படி அவர் சொன்ன நுட்பங்களை பயன்படுத்தி முதன்முதலாக கண்ணாவை அண்டிய பகுதிகளில் பொன்ராசா அவர்கள் வெள்ளறாலுக்கு வலைபாய்ந்த வரலாறுக்குரியவரானார்.
பொன்ராசா அவர்கள் தனக்கு உதவியாக எமது ஊரின்கனிபாகாக்கா அவர்களையும், அத்த வயோதிபரையும் அழைத்துக்கொண்டு முதன் முதலாக எமது நாயாற்றுமுனையில் உள்ள கண்ணா அருகில் வைத்து வெள்ள இறாலுக்காக வலைபாய்ந்து நூற்றுக்கணக்கா கிலோ வெள்ள இறாலை பிடித்திருந்தார் இவ்வாறு அந்த வயோதிபர் வழங்கிய அறிவுரைகளின் படியும், அவர் காட்டிய துட்பங்களையும் கொண்டு அதிகனவு வெள்ள இறால் அந்நாட்களில் பிடிபட்டது இவ்வாறு சுமார் மோத காலமாக அந்த வயோதிபர் பொன்ராசா அவர்களோடு வெள்ள இறால் வலைப்பாச்சலில் உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பொன்ராசா அவர்களுக்கு தோணி கணக்கில் இறால் படுவதை கண்ட எமது மீனவர்கள் சிலர் அவர் பாய்ந்த இடத்திற்கு அருகிலும், அவருக்கு உள்ளாலும், மேற்காலையும் வைத்து வலை பாய்ந்திருந்தும் பொன்ராசா அவர்களுக்கு படும் இறால் தொகை குறைந்தபாடு இல்லை அந்தளவுக்கு வெள்ள இறால் பிடிப்பது சம்மந்தமாக அனைத்து நுட்பங்களையும் கொண்டு வலையாய்வது பொன்ராசா அவர்களது தனிச்சிறப்பாகும்.
எமது துறை நேரிலும், கொம்புதீவு ஆறு, பூவரசு ஆறு போன்ற எமது பகுதிகளில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வருடா வருடம் இறால் வலை பாய்வது பொன்ராசா அவர்களது வாடிக்கையாக இருந்தது. அந்தந்த காலப்பகுதியின் காலநிலைக்கு ஏற்றால் போல் அந்தந்த நீர் ஓட்டத்திற்கு தக்கதாக மிகவும் துட்பமான முறையில் வலைபாய்ந்து பார்போர் மலைத்துப்போகுமளவிற்கு வெள்ள இறால் பிடித்திருந்தார் பொன்ராசா அவர்கள்.
பொன்ராசா அவர்கள் இறாலுக்கு வலை பாய்ந்து பெருமளவிலான இறால் பிடிப்பதை கண்டு எமது ஊரவரான தாவீது அவரது பிள்ளைகள் மங்களம் ஆகியோர் வெள்ள இறாலுக்காக வலை பாய்த்திருந்தனர். ஆனால் பொன்ராசா அவர்களுக்கு படும் இறாலுக்கு குறைவே இல்லாத வகையில் தோணி கணக்கில் பொன்ராசா அவர்களுக்கு இறால் பிடிபட்டது.
இறால் வலை பாய்ச்சலில் பல நுட்பங்களை கொண்டு பட்டி வலை முழுமையாகவும் வேலி வலைக்கும் பஞ்சிப்படாமல்மண்தள்ளுவதில் இருந்து ஒவ்வொருபட்டிஇழுவைக்கும் நுட்பமாகவலையின் தன்மையை அவதானிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். ஆரம்ப காலங்களில் ஒரு கிலோ இறாலை 15/=, 20/= வீதம் விற்று அதன் பின்னரான காலப்பகுதிகளில் 1975/ 1976 ம் ஆண்டு காலத்தில் ஒரு கிலோ இறால் 20/=, 25/= வீதம் விற்பனை செய்து அதன் பின்னரான காலப்பகுதிகளில் 1980ம் ஆண்டுகளில் ஒரு கிலோ இறால் 80/=, 100/=க்கு எமது VAJ உரிமையாளர் சலமோன் அவர்களுக்கு விற்பனை செய்திருந்தார்.
வெறும் மரக்கல் தாங்கல் இருந்த அந்த காலத்தில் சுமார் இரண்டு அல்லது மூன்று வலைகளை ஆற்றில் பாய்ந்து விடியப்புறம் 3 மணிக்கு நாயாத்து முனை வரைக்கும் சென்று இறால் பிடித்த அனுபவசாலி பொன்ராசா அவர்கள் 1983களின் பிற்பாடு வெளியிணைப்பு இயந்திரத்தின் பாவனையில் எமது கடற்பரப்பில் அனைத்து ஆறுகளிலும் வலையாய்ந்து 200 கிலோ, 300 கிலோ,500 கிலோ என தோணி மட்டத்திற்கு இறால் பிடித்த வரலாற்றுக்குரியவர் தான் பொன்ராசா அவர்கள்.
இவ்வாறு பொன்ராசாவாரும் வெள்ளறாலும் என்று சொல்லும் அளவிற்கு கண்ணா அருகிலும், ஆறுகளிலும் வலையாய்ந்து வெள்ளறால் பிடித்த பொன்ராசா அவர்கள் 1991ம் ஆண்டு கார்த்திகை மாதம் 22ம் திகதி இறைபதமடைந்தார்.
அபிலாசைக்க அப்பாற்பட்ட வாழ்க்கை: ஞானசீலன் நீக்கிலாப்பிள்ளை
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
சவிரிப்பிள்ளை என எமது மக்களால் அறியப்படுகிற நீக்கிலாப்பிள்னை. ஞானசீலன் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் உள்ள விடத்தல்தீவு என்ற எமது கடலோர கிராமத்தில் தை மாதம் 2ம் திகதி 1939ம் ஆண்டு
பிறந்தார். அவர் மீனவர்சமூகத்தைச்சேர்ந்தவராக இருந்தாலும், எதிர்காலப்பாதையாக விவகாயத்துறையால் அவர்.ஆழமாக ஈர்க்கப்பட்டார். ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் இலங்கையின் விவசாய இதயத்தால் வடிவமைக்கப்பட்டார். தனிப்பட்ட லட்சியத்தை விட சேவை வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து விவசாயத்தில் ஒரு தொழிலைத் தொடர்ந்த அவர், விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் மன்னாரில் உள்ளூர் விவசாயிகளை ஆதரிப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, விவாசயத் திணைக்களத்தின் விவாசய போதனாசிரியராக ஆனார்.
ஞானசீலன் அவர்கள் குண்டகசாலை விவகாயப்பயிற்சிக் கல்லூரியில் விவசாயக்கல்விப் பாடநெறி மற்றும் தொழில்முறைப்பயிற்சியைப் பெற்றார். ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு என்னவென்றால், கிராமத்திற்கு அவர் முதன்முறையாகக் கொண்டு வந்த மஹா ஃபீல்ட் பைக்கைப் பார்த்து முழு கிராமமும் மகிழ்ந்தது.
தனது பதவிக் காலம் முழுவதும், முருங்கன், ஹிங்குராகோடா, பரத்தன், விடத்தல்தீவு, இறுதியாக மன்னார் என பல பகுதிகளில் பணியாற்றினார். அவர் எங்கு சென்றாலும் அர்ப்பணிப்பின் தடயங்களை விட்டுச் சென்றார்.
அவரது குடும்பம் நிதி ரீதியாக சிரமப்பட்டாலும் - ஒரு சாதாரண அரசாங்க சம்பனத்தில் உயிர்வாழும் போதும் - ஞானசீலன் பொருள் சார்ந்த ஆசைகளால் அசைக்கப்படவில்லை. அவர் நல்ல தகுதி வாய்ந்தவராக இருந்தபோதிலும், பதவி உயர்வுகள் அல்லது தனிப்பட்ட ஆதாயங்கள் அவரைத் தூண்டவில்லை. மாறாக, அவர் தனது அழைப்புக்கு உண்மையாக இருந்தார்: விவசாமிகளுக்கு சேவை செய்தல் மற்றும் இடைவிடாமல் சுய கல்வியைத் தொடர்ந்தம். நிலம், மக்களின் சேவகர் அவரது வாழ்க்கை அவர் சேவை செய்த விவசாய சமூகங்களுடன் ஆழமாகப் பின்னிப் பிணைந்திருந்தது.
விட்டத்தல்தீவில், அவர் வயல்களில் நன்கு அறியப்பட்ட நபராக இருந்தார், அனைத்து பின்னணியிலிருந்தும் விவசாமிகளுக்கு நேரடி ஆதரவை வழங்கினார். கிராமத்தில் முஸ்லிம் விவசாமிகளுடன் அவர் கொண்டிருந்த நெருங்கிய ஒத்துழைப்பு, பகிரப்பட்ட உழைப்பு மற்றும் அறிவு மூலம் ஒற்றுமையை வளர்ப்பதற்கான அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது. அவரது விவசாயக் கடமைகளுக்கு அப்பால், ஞானசீலனின் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் சரளமாகப் பேசுவது அவரை உள்ளூர் மக்களுக்கு நம்பகமான மொழிபெயர்ப்பாளராகவும் கடிதம் எழுதுபவராகவும் மாற்றியது.
நிர்வாகத்தடைகளுடன் போராடிய பலகிராமவாசிகள், அறிக்கைகளைவரைவதாக இருந்தாலும் சரி அல்லது அதிகாரப்பூர்வ ஆவணங்களை மொழிபெயர்ப்பதாக இருந்தாலும் சரி, அதிகாரத்துவத்தை வழிநடத்த நம்பகமானவழிகாட்டியை அவரிடம் கண்டறிந்தனர். வாழ்நாள் முழுவதும் கற்றவர்தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் சரளமாகப் பேசக்கூடிய ஞானசீலன் ஒரு உண்மையான பன்மொழிப் புலமை மற்றும் தன்னியக்கக் கல்வியாளர். அவரது நாட்கள் பயிர்களுக்கு மத்தியில் மட்டுமல்ல, புத்தகங்களுக்கிடையேயும் கழிந்தன.
கல்வி என்பது ஒரு கட்டம் அல்ல, ஆனால் ஒரு வாழ்க்கை முறை என்று அவர் நம்பினார் - அமைதியான ஒழுக்கத்துடன் அவர் கடைப்பிடித்த ஒரு நம்பிக்கை, கட்டளை மூலம் அல்ல, முன்மாதிரியாக தனது குழந்தைகளுக்குக் கடத்தினார். அவரது வீடு மீன்தன்மை மற்றும் கற்றல் இரட்டைத் தூண்களாக இருந்த ஒன்றாகும். பொருளாதார நெருக்கடிகள் இருந்தபோதிலும், அவரும் அவரது மனைவி வேதநாயகம் கொண்சன்ரீனம்மாவும் (வில்லி ) - குடும்பத்தின் வரையறுக்கப்பட்ட நிதியை திறமையாக நிர்வகித்த ஒரு இல்லத்தரசி - தங்கள் குழந்தைகள் அனைவரும் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்தனர். அவர்களின் மரபுப்படி இரண்டு மருத்துவர்கள், ஒரு பொறியாளர் மற்றும் கல்வியாளரான பேராசிரியர் ஜெயசீலன் ஞானசீலன் ஆகியோர் அடங்குவர்.
குடும்பம் மற்றும் மரபு வேதநாயகம் கொண்சன்ரினம்மா (வில்லி) அவர்களை மணந்த ஞானசீலன் (பி. மே 21, 1949, நாவந்துறை,
யாழ்ப்பாணம்), பணிவு, சேவை மற்றும் விடாமுயற்சியை வலியுறுத்தும் ஒரு குடும்பத்தை உருவாக்கினார். அவர்களின் குழந்தைகள் விட்டை விட்டு வெளியே படிக்கும் சவாலான காலங்களில் அவரது மனைவியின் உறுதியான ஆதரவு மிக முக்கியமானது. அவர்கள் ஒன்றாக, கடின உழைப்பு, கல்வி மற்றும் சமூக சேவை ஆகியவற்றின் மதிப்புகளை தொடர்ந்து நிலைநிறுத்தும் ஒரு குடும்பத்தை வளர்த்தனர். ஞானசீலன் நிக்கிலாப்பிள்ளையின் கதை தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, மற்றவர்களுக்கு சேவை செய்வதும் உறுதியான கற்றலும் தலைமுறைகள் முழுவதும் மாற்றத்தின் அலைகளை உருவாக்க முடியும் என்பதற்கான வாழும் சான்றாகும்.
இலட்சியத்தை விட நேர்மையைத் தேர்ந்தெடுத்து தனது சமூகத்தில் ஒரு அழியாத முத்திரையை பதித்த விதத்தல்தீவின் உண்மையான மகன். அவரது மூத்த மகன், பேராசிரியர் ஜெயசீலன் ஞானசீலன், தனது தந்தையின் ஆழ்ந்த செல்வாக்கைப் பற்றிப் பேசுகிறார்: "பெற்றோர் வளர்ப்பில் எங்கள் தந்தையின் அணுகுமுறை திணிப்புக்கு பதிலாக உத்வேகத்தை அளித்தது; அவர் முன்மாதிரியாக இருந்து, கல்வியின் மதிப்பையும் கற்றலில் சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் நிரூபித்தார்." பங்குனி மாதம் 13,ம் திகதி 1996 ம் ஆண்டு அன்று, இலங்கையின் உள்நாட்டு மோதலின் கொந்தளிப்புக்கு மத்தியில், ஞானசீலன் மன்னாரில் காலமானார்.
போர்க்கால ஷெல் தாக்குதலின் மன அழுத்தமும், அவரது உயர் இரத்த அழுத்தமும் சேர்ந்து, அவரது அகால மரணத்திற்கு வழிவகுத்தது. அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, அவர் விடாமுயற்சியுடன் பணியாற்றிய சமூகத்திற்கும் ஒரு இழப்பாகும். ஞானசீலன் நிக்கிலாப்பிள்ளையின் வாழ்க்கை அர்ப்பணிப்பு, மீள்தன்மை மற்றும் கல்விவின் மாற்றும் சக்திவின் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறது. அவரது மரபு அவரது குழந்தைகன் மற்றும் விவசாயத்தில் அவரது பணி மற்றும் சுற்றலுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மூலம் அவர்தாக்கத்தை ஏற்படுத்திய எண்ணற்றதனிநபர்களின் வாழ்க்கையிலும் தொடர்கிறது. அவர் நினைவுகளை விட அதிகமாக விட்டுச் சென்றார்; அமைதியான கண்ணியம், தன்னலமற்ற சேவை மற்றும் அங்கீகாரம் அல்லது வெகுமதியைக்கேட்காமல்மற்றவர்களின் வாழ்க்கையைமேம்படுத்துவதற்கான வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மரயை அவர் விட்டுச் சென்றார்.
இசைத்துறையில் கலாபூசண விருதைவென்ற சந்தியாப்பிள்ளை அருளானந்தம் மாஸ்ரர்
திரு சந்தியாப்பிள்ளை அருளானந்தம் அவர்கள் விடத்தல்தீவில் திரு.திருமதி சந்தியாப்பிள்ளை, திரேசம்மா
ஆகியோருக்கு மகனாக 1945 ம் ஆண்டு வைகாசி மாதம் 25 ம் திகதி திகதி பிறந்தார்.
சிறுவயதில் ஆலய திருப்பலிகள், செபமாலை சொல்லுதல், விளையாட்டுகள் ஆகியவற்றில் பயிற்சி பெற்று SSC சித்தியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கற்றுத்தேந்தார். இந்தியா சென்று தமிழ்நாடு பூந்தமல்லியில் மறைக்கல்வியும், வேதாகம பயிற்சியும் பெற்றார்.
ஆனந்தம் மாஸ்ரர் அவர்கள் எமது கிராமத்தின் ஆயூள்வேத வைத்தியரான முடியப்பு அவர்களது மகன் செபமாலைகுமாரி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து 2 ஆண் பிள்ளைகளையும், 2 பெண் பிள்ளைகளையும் பெற்று வாழ்ந்துவருகிறார்.
இசைத்துறையில் கொண்டிருந்த ஆர்வம் மிகுதியால் திருப்பாடல்களையும், சினிமாப்பாடல்களையும், சீங்கீதப்பாடல்களையும் செவிப்புலனாக கிரகித்து தானாகவே பாடல் பயிற்சி பெற்றார். இசைக்கருவிகளை கற்பித்தல் மூலமும்,அவருக்கு கிடைத்த ஞானத்தின் மூலமும் தான் கற்றுக்கொண்டவற்றை தனது மாணவர்களுக்கும் கற்பித்து பல மாணவர்கள் இசைத்துறையில் வளர்ந்து,உருவாக காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.ஆனந்தம் மாஸ்ரரிடம் மாணவர்களாக இசைத்துறையில் கற்ற பலர் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும், இசை கச்சேரிகளிலும், ஆலய திருப்பலிகளிலும் இதைஜாம்பவான்களாக சிறப்பித்து வருகின்றார்கள். ஆர்மோனியம், வயலின்,மற்றும் ஓர்கன் இசை கருவிகளை மீட்கும் திறமையை கொண்டிருந்து இசைபயணத்தில் தொடர்ந்து பயணிப்பது ஆனந்தம் மாஸ்ரர் அவர்களது சிறப்பம்சமாகும். 1975ம்ஆண்டுகளில் எமது விடத்தல்தீவு முன்னான் பங்குத்தந்தை அருட்பணி றெஜீஸ் ராஜநாயகம் அடிகளார் தலமையில் திருவிவிலிய போதனைகளை நாடகங்களாக மேடையேற்றியிருந்தார். 1976ம் ஆண்டு மன்னார் நானாட்டான் பங்கில் முன்னாள் ஆயர் அதிவந்தனைக்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்கள் குருவாக பணி ஆற்றிய காலங்களில் பல நாடகங்களை படைத்து மேடையேற்றியிருந்தார். ஆண்டான்குளம், நானாட்டான், உயிலங்குளம், விடத்தல்தீவு, வவுனியா போன்ற பங்குகளில் உள்ள ஆலயங்களில் இசை கருவிகளை மீட்டு,நாடகங்களை மேடையேற்றியதுடன் இசை ஆர்வத்தை தூண்டி பல மாணவர்களுக்கு கற்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இசை கருவிகளை மீட்டுவதில் தமிழ் சுரங்கள், ஆங்கில குறியீடுகளுடன் கூடிய குறிப்புகளை கையாளும் விதத்தைபயிற்றுவித்து, இசையை சுருதி,தானம் என்பனவற்றைசரியாக பயன்படுத்திபாடவும்,மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி இசை கலையானது அழிந்துபோகாவண்ணம் எமது சமூதயத்தில் வாழையடி வாழையாக பரவ வேண்டும் என்ற நோக்குடன் எல்லோரிடத்திலும் நட்புடனும், குறிப்பாக எல்லா மதத்தினரையும் மதிக்கும் சிறந்த குணவியல்புகளை கொண்டு "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்றதன் அடிப்படையில் விடத்தல்தீவின் வீணையாய், விசிடும் காற்றில் இசையாய் உதித்து திருவிவிலியத்தை நாடகமாய் உரைத்து இன்றுவரை மாஸ்ரர் என எம்மவர்களால் அழைக்கப்படுகின்றார் அருளானத்தம் மாஸ்ரர் அவர்கள்.ஆனந்தம் மாஸ்ரர் அவர்கள் இசைத்துறையில் பல்வேறுபட்ட விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். அந்த வகையில் மாந்தை மேற்கில் கலைமதி விருதினையும், 2016 ம் ஆண்டு வடமாகாண கௌரவ முதலமைச்சர் அவர்களால் இசைத்துறைக்காக முதலமைச்சர் விருதையும், மன்னாரில் மண்எழில் விருதையும் கொழும்பில் கௌரவ கலாச்சார அமைச்சரால் கலா பூசண விருதையும் பெற்றுள்ளமை சிறப்பாகும்.
ஓய்வு நிலை மறையாசிரியரும், கலா பூசண விருது வென்றவருமான ஆனந்தம் மாஸ்ரர் அவர்கள் தமிழ் இலக்கிய,பண்பாட்டு துறையிலும் மிளிரும் நட்சத்திரமாக கவிதைகளை எழுதி இணையத்தின் மூலமாக அவற்றை வெளியிடுவதுடன்,நடைபெறும்கலைவிழாக்களில் கவிதைகளை புனைந்து வாசித்து வருகின்றார். அவரது கவிதைகளில் கதைகள், பழமொழிகள், இறைவனை பற்றிய அன்பு சார்ந்த மொழிகள், காதல்சுவைகள், என்பன அதிகளவில் உள்ளடக்கப்பட்டதாக காணப்படும்.
எமது கிராமத்தின் நாடக ஒப்பாரி மற்றும் இசை கலைஞர்கள் எமது கிராமத்தின் நாடக ஒப்பாரி மற்றும் இசை கலைஞர்களில் ஒருவரும் அமரத்துவமடைந்தவருமான மாசில்லாமணி மற்றும் அவரது துணைவியார் அக்னஸ் விடத்தல்தீவின் கலாச்சார கட்டமைப்பில் திரு மாசில்லாமணியின்பெயர்.ஆழமாகப்பிணைக்கப்பட்டுள்ளது.நாடகம் மற்றும் இசையில் அவரது கலைத்திறன் மூலம், அவர் நமது மரபுகளின் ஆன்மாவைப் பதித்தது மட்டுமல்லாமல், பாதுகாத்து அனுப்பினார். அவரது மரபு வாழ்கிறது - அவரது நிகழ்ச்சியைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமல்ல, கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைக்கின்றது. விடத்தல்தீவு மீதான அன்பு அவரது சேவை மற்றும்
அர்ப்பணிப்பு உணர்வை உறுதி செய்வதை அவரது சந்ததியினர் காண்பது மிகவும் நெகிழ்ச்சியூட்டுகிறது. அவரும் திருமதி. ஆக்னஸும் அடுத்த தலைமுறையை தொடர்ந்து வடிவமைக்கின்றனர். இது கலாச்சாரம், நினைவகம் மற்றும் நீடித்த கிராமப் பெருமைக்கு ஒரு அஞ்சலி.
கற்பித்தலில் ஓய்வு பெறாதா ஆசான் பறுனாந்து பெனடிக்ற் மாஸ்ரர் அவர்கள்
பெனடிக்ற் மாஸ்ரர் என்று எமது மக்களால் அறியப்படுகிற ஆசிரியர் பெனடிக்ற் அவர்கள் 1933ம் ஆண்டு பங்குனி மாதம் 05ம் திகதி பறுணாந்து மற்றும் மதலேனாள் ஆகியோருக்கு மகனாக யேசுதாசன், எலிசபேத், கிறேஸ் ஆகிய சகோதர சகோதரிகளுடன் விடத்தல்தீவில் பிறந்தார்.
தனது ஆரம்ப கல்வியை விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்கதமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்கல்வியை மன்னார் நல்லாயன் பாடசாலையிலும் (தற்போதைய புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி) கற்று 1954ம் ஆண்டுகளில் அவரது 21வது வயதில் ஆங்கில ஆசிரியராக மண்/விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைவில் நியமணம் பெற்று பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னர் கொழும்புத்துறை வாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் தமிழ் மொழி ஆசிரிய பயிற்சியை 1955ம் ஆண்டு தொடக்கம் 1956ம் ஆண்டு வரை பயின்றார். ஆசிரிய கலாசாலை பயிற்சிக்கு பின்னர் மன்னார் முன்ளிக்குளம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 5 வருடங்கள் உதவி ஆசிரியராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1961ம் ஆண்டு சித்திரை மாதம் 12ம் திகதி திரேசம்மா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்த பெனடிக்ற் மாஸ்ரர் அவர்கள் மரிய கொண்சி சான்ஸ் ஜோசப் (ஆசிரியர்),பொனவெஞ்சர் டிலாசால் சபை அருட்சகோதரர், பெனர் (பொறியியலாளர்) ஆகிய பிள்ளைகளை ஈன்றெடுத்தார்.
தொடர்ந்து 1963 ம் ஆண்டு தொடக்கம் 1963ம் ஆண்டுகள் வரையான காலப்பகுதியில் மன்னார் பேகாலை
மகாவித்தியாலயத்தில் உதவி ஆசிரியராகவும், 1966ம் ஆண்டில் இருந்து 1972ம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் 1973ம் ஆண்டு தொடக்கம் 1974ம் ஆண்டு வரை மன்னார் பாலைக்குளி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும்,1975 களில் மன்னார் ஓலைத்தொடுவாய் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் உதவி ஆசிரியராக சிறப்பான பணியாற்றிவிருந்தார் பெனடிக்ற் மாஸ்ரர் அவர்கள்.
அதன் பின்னர் உதவி அதிபராக பதவி உயர்வு பெற்று 1976ம் ஆண்டு தொடக்கம் 1978ம் ஆண்டு வரை மன்னார் விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் சேவையாற்றிலிருந்ததுடன் 1979ம் ஆண்டு மன்னார் பரப்புக்கடந்தான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு அதிபராக பதவி உயர்வு பெற்று அங்கே பணியாற்றியிருந்தார். பின்னர் 1980 ம் ஆண்டு மன்னார் பேசாலை மகாவித்தியாலயத்திற்கு மாற்றலாகி அங்கே ஆசிரியராக பணியாற்றியிருந்தார்.
தொடர்ந்து 1981 ம் ஆண்டு தொடக்கம் 1982ம் ஆண்டு வரை மன்னார் பள்ளிமுனை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்று அங்கே பணியாற்றியிருந்ததுடன், 1983ம் ஆண்டில் இருந்து 1984ம் ஆண்டு வரை மன்னார் துள்ளுளுடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராக பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன்பின்னரான காலப்பகுதியில் 1985ம் ஆண்டு தொடக்கம் 1987ம் ஆண்டு வரைமன்னார் எழுத்தூர்றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராக கடமையாற்றியதுடன் 1988ம் ஆண்டில் 6 மாதங்கள் மன்னார் தாழ்வுபாடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாட்சாலையில் அதிபராக பணியாற்றியிருந்தார். தொடர்ந்து 1988ம் ஆண்டு தொடக்கம் 1993ம் ஆண்டு பங்குனி 05ம் திகதி வரை எமது விடத்தல்தீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராகவும், கொத்தணி அதிபராகவும் பெனடிக்ற் மாஸ்ரர் அவர்கள் கடமையாற்றியிருந்தார்.
1994ம் ஆண்டு தொடக்கம் 1998ம் ஆண்டு புரட்டாதி மாதம் 26ம் திகதி வரை பகுதி நேர ஆங்கில ஆசிரியராக மடுவலயத்தில் அமைந்துள்ள எமது விடத்தல்தீவு தூய ஜோசப்வாஸ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றியிருந்தார். தொடர்ந்து 1998ம் ஆண்டு புரட்டாதி மாதம் 26ம் திகதி இறைபதமடைந்தார்.
பெனடிக்ற் மாஸ்ரர் அவர்கள் விடத்தல்தீவு சனசமூக நிலைய தலைவராகவும், எமது பங்கு புனித ஞானப்பிரகாசியார் பிடப்பணியாளர் மன்றத்தின் போசகராகவும் 1977ம் ஆண்டு மற்றும் 1978ம் ஆண்டு காலப்பகுதியில் பதவிவகித்திருந்தார். மற்றும் எமது விடத்தல்தீவு ஆலய அருட்பணிப்பேரவையின் செயலாளராக கடமையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.
திரு பெனடிக்ற் : பணிவும் புலமையும் சேவையையும் ஒட்டிய ஒளிவிளக்கே!
குழந்தைப் பருவத்திலிருந்தே மரியாதை, பணிவு, ஒழுக்கம் ஆகியவை அவரின் இயல்பான பண்புகளாகும். இவர் சந்தித்த அனைவரிடமும் ஈர்ப்பும் நம்பிக்கையும் ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டிருந்தார். இவை வளர்ந்தபோது, அவை தலைமைத்துவ திறனாகவும், இரக்க உணர்வாகவும், மனஅமைதியை ஒளிரச் செய்கின்ற மனவலிமையாகவும் பரிணமித்தன.
அவரது கல்விப் பயணம் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற புனித பட்ரிக் கல்லூரியில் தொடங்கியது. இக்கல்லூரியில் அவர் தனது அறிவாற்றலும், ஒழுக்கமும் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விரும்பப்படுகிற மாணவராக விளங்கினார். பின்னர் மன்னார் மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க புனித சேவியர் ஆண்கள் கல்லூரியில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார். இங்கும் அவர்கல்விச்செயல்பாடுகளில் மட்டும் அல்லாது சமூக சேவையிலும் தனித்துவத்தை காட்டினார்.
பின்னர், அவர் சிறுபிள்ளைகளின் கல்விக்கு அர்ப்பணித்துப் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றினார் — விடத்தல்தீவு, எழுத்தூர் அடம்பன், சிலாபம், கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் அவரது சேவைகள் மாணவர் வாழ்வில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தின. குறிப்பாக கிளிநொச்சியில் உள்ள ஜோசப் வாஸ் கல்லூரியில் பணியாற்றியபோது, அவர் பள்ளியின் கல்வி மற்றும் ஒழுக்க ஒழுங்கு நிலைகளை உயர்த்தும் பணியில் அரும்பணி செய்தார்.
"பெனடிக்ட் மாஸ்டர்" என்பது ஒவ்வொரு விடத்தல்தீவு குடும்பத்தின் இதயங்களிலும் அன்பாகப் பதிந்த ஒரு பெயர். அவர் ஒரு ஆசிரியரை விட அதிகம்; அவர் ஒரு லேகான வாய்மொழி நையாண்டி கலைஞர், அவர் தீவிரமான பாடங்களைக் கூறும்போது கூட மக்களை சிரிக்க வைக்கக்கூடிய ஒருவர். அவரது தனித்துவமான பாணி - நகைச்சுவையில் மூடப்பட்ட ஒழுக்கம், புத்திசாலித்தனத்துடன் வழங்கப்பட்ட திருத்தம் - அவரை மறக்க முடியாததாக மாற்றியது. அவரது கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகள் கூட கற்றலைப் போற்றத்தக்க நினைவாக மாற்றிய ஒரு வசீகரத்தை எவ்வாறு கொண்டிருந்தன என்பதை அவரது மாணவர்கள் அன்புடன் நினைவு கூர்கிறார்கள்.
கண்டிப்பான ஒழுக்கம், நேர்மையான ஆன்மா மற்றும் அன்பான வழிகாட்டியான பெனடிக்ட்மாஸ்டர்,தனது ஞானத்தால் மட்டுமல்ல, மகிழ்ச்சியையும் நேர்மையையும் கலந்த அவரது ஆளுமையாலும் தலைமுறைகளை வடிவமைத்தார். இன்றும் கூட, யாராவது அவரது பெயரை உச்சரிக்கும்போது, அது அன்பான கதைகள் மற்றும் புன்னகைகளின் வென்னத்தைத் தூண்டுகிறது, இது அவரது மாணவர்கள் மற்றும் பரந்த சமூகத்தின் மீது அவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு ஒரு உண்மையான சான்றாகும்.
தமிழும் ஆங்கிலமும் இரு மொழிகளிலும் அழுத்தமான அறிந்தும் ஆர்வத்துடனும் கற்பித்தவர். கல்வி என்பது தொழிலல்ல, அது ஒரு புனிதமான சேவையென நம்பியவர். பணிவு, நேர்மை, ஒழுக்கம், அடக்கம் ஆகியவை அவரது வாழ்வின் நெறிகளாக இருந்தன. பாராட்டுகள் வேண்டாமென நினைத்தவர்; ஆனால், அவர் விட்டுச் சென்ற நிழல்கள் கூட பாராட்டுக்குரியவை.
அவரது மாணவர்களில் நற்சிந்தனையும், சீரான மொழிப்பயிற்சியையும், கலாச்சாரப் பாரம்பரியத்தின் மதிப்பையும் வளர்த்தார். கல்வி என்பது மனித மனதையும் ஆன்மாவையும் உயர்த்தவேண்டிய ஒன்றெனும் கருத்தை அவர் மனப்பாடமாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
ஓய்வு பெற்ற பின்னரிலும், சமூகத்தின் நினைவிலும் மாணவர்களின் நெஞ்சிலும் அவர் ஒரு அழிக்க முடியாத சின்னமாக இருந்தார். அவர் உரைகள் கொடுத்துப் பேசாதவர்— செயல் மூலமாய் பாடமனித்தவர். அமைதியான புரட்சியாளராக, ஒவ்வொரு மாணவனின் வாழ்க்கையையும் மெல்ல மெல்ல மாற்றியவர். அவர் விட்டுச்சென்ற தாக்கமும், நேர்மையும், சேவையும் இன்றுவரை காற்றிலும், கல்விக்கூடங்களிலும் வாழ்கின்றன. அவரது நினைவு, அவருடன் கற்றோரும் பணியாற்றியோரும் நெஞ்சனவில் கொண்டாடும் ஒரு கலசமாகவே உள்ளன.
அக்காலத்தில் எமது ஊரிலும்,பாடசாலையிலும், ஆசிரியர்கள் குறிப்பாக கணித பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருந்த காலம், தேவையான ஆசிரிய வனம் வழக்கப்படமையால் ஊரிலும்,ஊருக்கு வெளியிலிருந்தும் ஆசிரியர்கள் தொண்டர் ஆசிரியராக பணிசெய்தனர்.
வெள்ள சேட், வெள்ள வேட்டியும், சில வேளைகளில் புன்கை சேட்டை உள்ள விட்டு ரவுசர் அணிந்து கான்ரிலில் பன் bag கொழுவியபடி சாதாரணமாக சைவிக்கிளில் சரியான நேரத்திற்கு பள்ளிக்குடம் வரும் அதிபர் எமது பெனடிக்ற் மாஸ்ரர்.
அலுப்பு பஞ்சி இல்லாதவர். கடும் சொற்களை அறவே கொண்டிராதவர், பள்ளிக்கூடம் முடிய வீடு வந்தவுடன் தொடக்கும் வகுப்பு சில வேளை விளையாட போக கூட விடாமல் நிறைய கற்பித்தார். பாடசாலையில் 10 ம்,11ம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் வகுப்புக்களுக்கு கூட்டி சென்று ஆங்கில மொழியில் அவர் கற்பித்த அனைத்திலும் கேள்வி கேட்டு சோதிக்க சொல்லி சவால்விட்டு பெருமைப்படுவார். பல காலமாக ஏறத்தாழ 2வருடங்கள் தனியாக ஆங்கில வகுப்பு எடுத்து ஒரு ரூபாய் கூட பெற்றுக்கொள்ளாத உத்தமர் அவர். தனது பிள்ளைகளை போல அரவணைத்து சுற்றுத்தந்த உன்னத ஆசான்.
பாடசாலையில்..........
ஆம் என்றால் ஆம் இல்லை என்றால் இல்லை என்பது அவரிடமிருந்த பண்புகளில் ஒன்று. நேரம் தவறாதவர், கடமையில் கண்ணும் கருத்துமாய் இருந்து, பாடசாலை நிர்வாகத்தை திறம்பட ஆற்றியவர். ஆசிரிய வளங்களையும், பெளதீக வளங்களையும், மிக நேர்த்தியாக கையாண்டவர். இன்னும் சொல்ல போனால் பாடத்திட்டங்களோடு, இணைப்பாடவிதானங்களையும் ஒருங்கே சிறப்பாக கையாண்ட அதிபர் என்பது மிகையல்லபாடவேளையில் நிலத்திலும்,ஆகாயத்திலும் எழுத்துக்களை எழுதிய பின்னரே நாம் கொப்பியில் ஏழுதுவோம். தொடு,வளை, மேல போ, கீழ வா என்டு ABCD எழுத பழக்கப்பட்டோம். பாடசாலை வேலி அடைக்கும் பொழுது கட்டைகளை பள்ளம் தோண்டி நட்டிவிட்டு, முள்ளுக்கம்பிகளை இழுத்து அடிச்சுமட்டைகளை வரியும் போது அங்கே வந்து ஒருக்கா கட்டையை கையால் தள்ளிப்பார்த்தபின் “தம்பி விழுமா?” எனக்கேட்பார் இல்ல சேர் என்போம், உடனே “எப்ப விழும்?" என்று கேட்டு சிரிப்பை வர வைப்பார். பாடசாலை காலை ஒன்றுகூடல் சற்று அதிகமாக இருந்தாலும் சொல்ல வேண்டிய அனைத்தையும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உரியமுறையில் கொண்டுபோய் சேர்த்திடுவார். கொஞ்ச பயந்த சுபாவம் அந்நாட்களில் விமான தாக்குதல்,விமான சத்தங்கள் பிதியை ஏற்படுத்தியதில் ஐயமில்லை.
பாடசாலை மாணவ உதைபந்தாட்ட அணி அதிரடி அணி என்ற பெயரில் வெற்றிகளை பெற்ற வேளை குறிப்பாக எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை வென்ற அந்த நாட்களில் அவர்கள் ஒவ்வொருவருடைய புகைப்படத்தையும் பாடசாலை விளம்பர பலகையில் இட்டு காலைக்கூடத்தில் அவர்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்திருந்த நாட்களை மறக்க முடியாது.
அடிக்கடி விடுதலை புலிகளின் நிகழ்வுகளுக்காக பல்வேறு போட்டிகளுக்கும், நினைவு தினங்களுக்கும், ஏனைய நிகழ்வுகளுக்காகவும் சென்றுவருவது வழமை, அந்த காலப்பகுதியில் முழங்காவில் நிகழ்ச்சிக்காக சென்ற மாணவர்களுக்கு காப்பிட்ட சாப்பாடு (பணிஸ்) ஒத்துவராமல் சாப்பிட்ட10ம் ஆண்டு மாணவிகள் ஒருவரை ஒருவரை பெயர் சொல்லி கூப்பிட்டு மயங்கி விழுந்த வேளை பெனடிற்மாஸ்ரர் பதறிப்பட்டு திகைப்புற்று அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் அவர்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை பட்ட அங்கலாய்ப்பு சொல்லி மீளாது.
பாடசாலைக்கு பெயர்மாற்றி தூய ஜோசப்வாஸ் ம.வி. என பெயரிட்ட பெருமையும், மாணவ முதல்வர்களை உருவாக்கி வெள்ளியிலான மாணவ முதல்வர்களுக்கான சின்னங்களை பெற்று கொடுத்த பெருமையும் பெனடிற் மாஸ்ரரையே சாரும்.
அக்காலத்தில் அச்சடிக்கும் இயந்திரங்கள், போட்டோகொப்பி எடுக்கும் இயந்திரங்கள் இல்லாத நேரம். ஆங்கில பரீட்சைக்காக தினைக்களத்தில் இருந்து வழங்கப்படும் வினாத்தாள்களை வைத்துவிட்டு தான் எமக்கு படிப்பிச்ச பாடத்திற்குள் வினாக்களை முதல்நானே எம் கைப்பட எழுத தந்து அடுத்தநாள் ஆங்கில பரீட்சையை நாடாத்துவதும் நினைவில் உள்ளது. வயிற் சீற் தட்டுப்பாடான காலம் சித்திர சோதனை வேனையில் கீறிய சித்திர பேப்பருக்கு பின்புறம் மற்றுமொரு பேப்பரை வைத்து இணையுங்கள் அதனால் உங்கள் சித்திரம் அழகாகும் என நகர்காக சொல்லுவார்.
எமது வகுப்பில் ஒருதடவை ஆங்கில பாடத்திற்கு வந்த பெனடிற் மாஸ்ரரிடம் றெமியும்,கமில்ரனும் நடந்துகொண்டது சிரிப்பை அடக்கமுடியாததாக இருந்தது. ஆங்கில பாடத்தை கடத்துவதற்காக றெமி" சேர் வயிற் சீற் இருக்கு கொண்டரவா"? என்டு கேட்கவும் "எத்தின பேப்பர்? எண்டு திரும்ப அவர் கேட்க *20 பேப்பர் என்டு றெமி சொல்ல படான்ரா எண்ட அவர் கமில்ரனிடம் "எத்தின பேப்பர்? என கேட்கவும் அவன் “50 சேர் என்டவுடன் இவன்தான்ரா நன்பன் என்டு சொல்லி ரெண்டுபேரையும் வயிற்றே எடுக்க வீட்ட விட்டிருந்த சம்பவமும் நினைவில் உள்ளது.
அந்தந்த பெனடிற் மாஸ்ரருடைய காலத்தில் பாடவேளைக்கு ஆசிரியர்கள் நேரசூசிகைக்கு ஏற்ப பாடங்களுக்கு செல்வதும், ஆசிரியர் இல்லாத வகுப்பை அவர் தனது ஆங்கில பாடமாக கையாள்வதும் சிறப்பே. கரடிப்போக்கு,சிலாவத்துறை போன்ற இடங்களில் இருந்து பாடசாலைக்கு பற்றாக்குறையான தளபாடங்களும், பாடசாலை கட்டட உபகரணங்களும் பல கஸ்டங்களுக்கு மத்தியில் கொண்டுவந்து சேர்த்ததும் நிளைவில் உள்ளது.
ஊரில்,பெனடிற் மாஸ்ரர் ஊரில் பல்வேறு நாடகங்களிலும், குறிப்பாக இயேசுவின் திருப்பாடுகள் நாட்டுக்கூத்தில் முக்கிய வேடத்திலும் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். சனசமூக நிலைய நிர்வாக சபையில் இருந்தவர். ஆங்கிலத்தில் வரும் கடிதங்கள் வாசிக்கவும், படிவங்கனை நிரப்பவும் ஊரவர்களால் நாடப்படும் ஒருவராக இருந்தார். 6 ம் வட்டாரத்தில் அமரர் குணநாயகம் அவர்களது வீட்டின் ஊடாக ஆரம்பித்து புதுக்கட்டு தபால்கந்தோர் வீதியை அடையும் வீதிக்கு புனித டிலாசால் விதி என்டு பெயரிட்டு அதனை சம்பிரதா பூர்வமாக திறந்து அவ்வேளை டிலாசால் அருள்தா வரம் தா நிதமே என்ட பாடலை நாங்கள் பாடியதும் வரலாற்று நிகழ்வே. இவ்வாறு பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் நினைவுகூரப்பட வேண்டியவர்களில் முதன்மையானவர் எமது பெனடிற் மாஸ்ரர்.













