இறால்...... தாசீன்

விடத்தல் தீவின் கல்லோடை றைவன் தந்த அருட்கொடை

கல்லோடை முதல் கள்ளியடி வரை

கல்லோடை முதல் பாப்பாமோட்டை வரை

சிற்றாறுகள் பல சின்ன ஓடைகள் பல

சின்ன குடாக்கள் பொரிய குடாக்கள்

அவற்றிற்கு பெயருண்டு

அடையாளம் காண்பதற்கு

கண்ணாப் பற்றைகளும் கண்டல் காடுகளும்

சதுப்பு நிலமும்

சடை முளைகளும்

காக்கா கூடுகளும்

கொக்கு கூடுகளும்

கிளி பொந்துகளும் மைனா பொந்துகளும்

வெள்ளை சிப்பிகளும் கருப்பு ஊரிகளும்

சிவப்பு சிறுநண்டுகள்

கருநீல பெருநண்டுகளும்

இயற்கை சாகியத்தை இறக்காமல் காத்திட

அடைக்கலம் அக்காவும்

ஆயிஷா ராத்தாவும்

தாவீது அண்ணாவும் தாவுது காக்காவும்

பாஸ்கரன் தம்பியும் கிரிகரன் தம்பியும்

வேவியும் தேவியும்

பற்றிமாவும் பாத்துமாவும்

நாமும் எமது பெற்றோர்களும் எமது பெற்றோர்களின் பெற்றோரும்

இதிலிருந்து வாழ்வாதாரத்தை பெற்றனர்

கடல் வற்றினை அறிந்து காற்றின் திசையினை அறிந்து அமவாசை பௌர்னமியென காலத்தையும் அறிந்து

சந்திரனைப் பார்த்து கடல் வற்றினை கணிப்பர்

யூரியா பேக்கினை இடுப்பில் கட்டி செருப்பின்றி சேறு சுரி தாண்டி

ஆற்றில் இறங்கி ஆழமாக இருந்தாலும்

வெறும் கையினால் வெகு நேரத்தில்

துள்ளி திரியும் இறாலினை துள்ளியமாக பிடிப்பர்

வெள்ளை இறால் கருப்பு இறால்

மட்டை இறால்

மள மள வென

கலக்கு என்றால் கட கட வென

வெற்றுப்பையை நிறப்புவர் வெற்றிலை பாக்கு உண்டு

வெற்று வாயில் அசைபோட்டு வெற்று வயிற்றின் பசிபோக்கி

கருத்த நண்டின் கடிவாங்கி கதரும்போது

கொழுத்த நண்டின் கொடுக்குத்தான்

காலின் கட்டைவிரலை கடித்தபடிகளட்டிய கொடுக்கு

கலிமா ராத்தாவின் கதறலை கத்தரீன் அக்கா கண்டு

களற்ற வேண்டு மென்று கடித்தாள் கொடுக்கினை

களைந்தது பூட்டு களர்ந்தது கொடுக்கு

கடலில் கை வைக்க பயம் காசு தேவை கை நிறைய

டசின் கணக்கில் பிள்ளைகுட்டி டபிள் செலவு சித்து

பை நிறைய இறால் கை நிறைய பாரம்

செபமாலை சம்மாட்டி சலமோன் சம்மாட்டி

கொட்டிலிலே இறாலை கொட்டி

இறாத்தல் தராசினில் இறாலை இடைபோட்டு

ராசிக் நானவிற்கு ரசீதும் கிடைத்தது

சம்மாட்டி வீட்டினில் சாயிமானம் சல்லியும்

கை நிறைய காசு கைச் செலவு செய்திட

வீறு நடைபோட்டு வீடு வந்து சேரும் முதல் தேவையில்லை முத்து ஐயாவிற்கு

முயற்சிதான் தேவை முகமட் நானவிற்கு

பாடசாலை லீவு காலத்தில் பக்குவமாய் மாணவரும்

பழகிடுவர் இறால் பிடிக்க பணம் சேர்த்திடுவர்

புத்தகம் வாங்கிடுவர் புதிய பேனா வாங்கிடுவர்

விடத்தல் தீவு என்பது வித்தியாசமான ஊரு

புயலில் பள்ளிவாயல் குளத்தில் இறால் இருந்ததாம்

பள்ளமாடு ரேட்டில் பக்கதிலுள்ள துருஸடியின்

பள்ளங்களில் இறால்களை

பானைகளில் பிடித்தனரே கோவாலி கட்டு ஆற்றில் கோலகலமாய் குடும்பமாய்

இறால் பிடித்தனரே இறால் சோறு ஆக்கினரே

இறால் ரொட்டி இறால் வற்றல் போட்டனரே

எல்லார் வீட்டினிலும் எல்லா மரக்கறியினுள்ளும்

இறால் தூள் போட்ட இறால் தேங்காய் சம்பல் அந்தகால அம்மாக்களின் அஜின மோட்டோ

அந்த இறால் தூள் அதி வாசம் அதி சுவை.