விடத்தல் என் ஊர்.

பெனடிற் பொனவெஞ்சர்.

கோடையில் வரண்டிருக்கும் ஓடைகளில் நீர் இருக்கா அன்பு என்ற சொல்லிருக்கும் அது பாசத்துடன் கலந்திருக்கும். கணபதியும் கஸ்பாரும் காதருடன் கதைபேச பஸ்ராண்டு ஒன்றிருக்கும் கந்தையா கடை இருக்கும் தம்பர் கடையினிலே மூக்கரிக்கும் தூள் இருக்கும்.

மத்தேசர் கடையினிலே மிட்டாசுதான் இருக்கும் சின்னத்தம்பி கடையினிலே இன்சுவை தேனீர் இருக்கும். மீரான் கடையிருக்கும் பலசரக்கு நிறைந்திருக்கும் கடைத்தெருவை நாடிவரும் பெருங்கூட்டம் அங்கிருக்கும் மாதா ஆலயமும் யாகப்பர் ஆலயமும் பள்ளிவாசலுடன் பிள்ளையார் கோவிலும் மறை உணர்வை வளர்த்திடும் பாங்கான தலங்கள் உண்டு.

யக்கோ கடல் சென்று கடல்படும் திரவியமாம் விளமீனும் ஓராவும் பாலையும் பாரையும்

வகைவகையாய் மீனினம்

கொண்டுசேர்ப்பர் அனுதினம்

வயல் வெளியின் படங்களை வாறிடும் மரைக்காரும் அறுவடை செய்து நடையுடன் வீடு வருவர்.

தோட்டத்துக் காணிகளில்

படர்ந்திருக்கும் காய்கறிகள்

பக்குவமாய் அதை அறுத்து

பாங்குடன் விற்பாரே

பாஸ்கரதாஸ் என்பவரும்.

சோறுண்டு நல்ல மீணுண்டு

இலை கறியும் அங்குண்டு பெரியமடு மாம்பழமும் எம்மூரே களித்திருக்கும் சத்தியம் இது சத்தியம்.

வளைவு சுளிவுகள் எமக்கில்லை வளைந்து கொடுக்கும்

நல்ல மாண்பு காண்பீர்

நுளைந்துபோக சூரியக்கீற்றும்

நற்காவல் பதியும் நம் ஊர்தானே.