ஒற்றைப் பனை மஸாஹிரா கனி~

செவ்வானம் கீழ்த்திசையில் செங்கதிரோன் கிளர்ந்தெழும்ப ஒருஜோடி ஓலைஅசைவுறு தென்றல் பனங் கூடல் அழகொழி௪;;

ஆணி வேர் ஊண்றி மண்ணறுத்து உறுதியுடன் விண்ணுயர வாழ்ந்தோங்கி சர சரத்த சாரலதாய்;;

பள்ளமடுப் பாதையிலே பரம் பரையாய் நீ.. வாழ விதை, விதைத்தோம்... அன்று விருட்ச்சமாய்.... இன்று ;;

அன்றிலுடன், அணில் பேச குயில் கூவி மரம் தாவ

என் ஒற்றைப் பனை மரமே உன்.. விந்தை என் என்பேன்;;

உன் வேர் முதல் நார்வரை பயனாகும் மனிதனுக்கு காலத்தின் தேவையாய் பலன் தரும் பக்குவமும்;;

சுற்றி வர வேலிகட்ட மட்டையும், ஓலையும்

சுவர் எழுப்பி மனையமைக்க கப்பும், கைமரமும்;;

குருத்தோலை பிரித்து ஈக்கில் கிழித்து பல வண்ணமிட்டு பாய், பெட்டி இழைத்து;;

பிட்டவிக்க நீத்துப் பெட்டி சமையலுக்குஅஞ்சறைபெட்டி நெல் அரிசிக்கு கடகப்பெட்டி காசுவைக்க தைலாபெட்டி;;

வளம் கொழிக்கும் எம் ஊரில் வளமாக வளர்ந்திருந்தும்

பணப் பயிர் இது என

கனம் பண்ணவில்லை அந்நாளில்......;

குளிப்பதற்கு குளம் நோக்கி

பனை, பனையாய் பழம்தேடி உடையார் கேணியும் அய்யனார்கோயில் மதகடியும்;;

ராமன்குளமும், புலியாகம்மும் தட்டாம் பிட்டியும் கொம்பு தூக்கியும் பனம் பழம் பொறுக்க;}

கால் நடந்த கதை சொல்ல.....

எவ்வூர் சென்றிடினும் எம்மூர் போலில்லை பனைகள் அங்கில்லை

பனங் கள்ளும் அங்கில்லை;;

பனங்கள்ளும், பதநீரும் பனங்கற்கண்டாய் மாறியே

பனம்பழமும், பலகாரமும்

பனாட்டும், பனங்கழியும்;;

வெயில்கால வியர்குரு

நுங்கு குடித்து தண்ணீர் தேய்க்க

விரைந்தோடிடும் விந்தை;;

கூடலின் நடுவே

கூட்டாய் ஒன்று கூடி நுங்கு வெட்டி நோண்டி குதூகலமாய் குடித்தகாலம்;;

பருவகாலப் பங்குனியில் பனங்கிழங்கு, தவன்கொட்டை தவனது உள்ளீடு

தேனமுது எங்களுக்கு;;

பச்சை, புழுங்கலாய் காயவைக்கும் கிழங்குதனை மாவாகப் பதனிட

உருசியான ஒடியற் கூழ்;;

இத்தனையும் வழங்கி நிற்க்கு

என்... ஒற்றைப் பனைமரமே..

இளமைப் பூங்காற்று உன் போல் பூப்பூக்க அற்றை நாளதனில் ஆனந்த கூத்தாட;}

உள்ளம் நினைந்த ஒன்று ஊருக்குச் சொல்லாமல்

உன் மேல் வரைந்து வைத்தேன உறவொன்றை அந்நாளில்;;

ஊர் துறந்த வேளையிலே நான் உனைநிமிர்ந்து பார்க்கையி=ே

கருக்கு மட்டையால் கழுத்தறுத்த உணர்வாய்

நீ... ஊமையாய் அழுதகுரல்

ஒலைச் சரசரப்பாய்.... இன்னும் .. என்.காதுகளில்;;

மௌனமாய்... நீ