
அலிகார் பாடசாலை அபிவிருத்தி சங்கம் - கு.முஜம்மில்
இப்பாடசாலையானது பழமை வாய்ந்த பாடசாலையாகும். இது 1905 களில் உருவாக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1990 களில் முஸ்லிம்கள் இடப்பெயர்வை சந்தித்தனர். இந்த இடப்பெயர்வு வடிவமானது தென்னிலங்கையை நோக்கிய குடிப் பெயர்வாக மாற்றமடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக 2012.01.30 வரை பாடசாலை மூடப்பட்டு காணப்பட்டது.
காடுகள் முளைத்து தளபாடங்கள் இல்லாமல் கட்டடங்கள் இடிபாடுடைய சூழ்நிலை காணப்பட்டது. 1990ற்கு முற்பட்ட காலத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்கமொன்று கால சூழ்நிலைக்கேற்றவாறு அமைக்கப்பட்டு இயங்கி வந்த நிலை காணப்பட்டது. ஒரு பாடசாலையை இயக்குவதென்றால் SDS சங்கமானது பிரதான வகிபாகத்தை கொண்ட போக்கு காணப்படுகிறது. அந்த அடிப்படையில் 2012.01.30 இல் இவ்வூரைப் பிறப்பிடமாக கொண்டவரும் இப்பாடசாலையின் பழைய மாணவருமாகிய K. முஜம்மில் அவர்கள் இப்பாடசாலைக்கு அதிபராக நியமனம் பெற்று பாடசாலையை வழிநடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
அதன் விளைவாக அலிகாரை மீள் அலிகாராக உருவாக்க வேண்டிய ஒரு மகத்தான பணி தேவையும் உணரப்பட்டது. யுத்த முடிவுக்குப் பின்னர் மீள் குடியேறிச்சென்ற மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு மாணவர்களை சேர்க்கும் பணி ஆரம்பமானது. அந்த ஆரம்பத்துடன் 2012.01.30 இல் பாடசாலையை மீள இயக்க வைத்ததுடன் SDS சங்கம் ஒன்றும் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த அடிப்படையில் பெற்றோர்களையும் பழைய மாணவர்களையும், நலன்விரும்பிகளையும் ஒன்றுசேர்த்து பிற்காலத்தில் அமைக்கப்பட்ட தகரக் கொட்டகைக்குள் கூட்டத்தை கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கு அதிபர் K. முஜம்மில் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் செயலாளராக ஒருவரை தெரிவு செய்யுமாறு கேட்டதற்கிணங்க பெற்றோர் சார்பாக M.B. பினுஸ்கான் அவர்கள் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். பொருளாளராக கோட்டக் கல்விப் பணிப்பாளர் K. முடியப்பு அவர்கள் செயற்பட்டார். பழைய மாணவர் சார்பாக கிராம சேவகராக கடமையாற்றிய A. பினுஸ்கான் அவர்களுடன் சங்க உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆக,இடப்பெயர்விற்கு பின்னர்முதல்முறையாக இப்பாடசாலையில் பாடசாலைச்சங்கம்அரம்பிக்கப்பட்டது. சங்கத் தெரிவுகளுக்கு பின்னர் அதிபர் அவர்களால் பாடசாலை தேவையை கருத்தில் கொண்டு எதிர்காலத் திட்டங்களும் நோக்கங்களும் கலந்துரையாடப்பட்டன. காடழித்தல் பிரதான நோக்கமாக கருதப்பட்டது. பாடசாலையின் எல்லைப்புறத்தை அடையாளம் இடுவதுடன் சுற்று வேலி அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. உரிய அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கட்டிடம் ஒன்று அவசரமாக பெறப்பட பேண்டியது பற்றி கலந்துரையாடப்பட்டது. சிதைவடைந்து கிடக்கின்ற கட்டிடங்களை துப்பரவு செய்வதுடன் மாணவர் ஆசிரியர் நலன் கருதி அத்தியாவசிய தேவைகளான தண்ணீர், மின்சாரம், மலசலகூடம் போன்றவற்றை பூர்த்தி செய்வதற்கும் கலந்தாலோனைகள் மேற்கொற்பட்பட்டன. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அப்போதய அமைச்சராக இருந்த அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதுடன் தொலைபேசி உரையாடலை அமைச்சருடன் மேற்கொண்டபோது குறிப்பிட்ட வேலைகளை தரமாக செய்து தருவதாக வாக்களித்தார்.
அது போலவே சில வேலைகளை அமைச்சரால் செய்து தரவும் முடிந்தது. அத்துடன் கற்றல் உபகரணங்கள், அலுவலகப் பொருட்கள், நூலகப் பொருட்கள், நீர்த்தாங்கி ஒன்று ஆகியவற்றை பெறுதல், சிறுவர் பூங்கா அமைத்தல் தொடர்பாகவும் ஆலோசனை கருத்துப் பரிமாறலாக கலந்தாலோசிக்கப்பட்டது. இவ்வாறாக ஆரம்ப சங்கத்தினூடாக நடைமுறைப்படுத்தப்பட்டு சங்கத்தின் காலங்கள் முடிகின்ற பொழுது புதிய சங்கங்கள் புதுப்பிக்கப்பட்டன. இச்சங்கத்தின் பெயராக SDECS என புதிய பெயர் கொண்டு சங்கங்கள் உருப்பெற்றன. அச்சங்கங்களினால் கூட்டங்கள் கூட்டப்பட்டு பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கருத்துப் பரிமாறல் மேற் கொள்ளப்பட்டு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் இப்பாடசாலைக்கு மேற்கொற்றாய் பட்டன. அத்தோடு புதிய தற்போது நடைமுறையிலுள்ள சங்கமானது 19.04.2024ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
இச்சங்க உறுப்பினர்களாக K. முஜம்மில், அதிபர், தலைவராகவும் திருமதி A. சிபானா செயலாளராகவும் பொருளாளராக திருமதி A.சுதி ஆசிரியர் அவர்களும் சங்க உறுப்பினர்களாக திருமதி M.கொன்செய்ரா, ஆசிரியர் திருமதி F.F.M.சர்மில், ஆசிரியர் L. மதுத் இஸ்லாமிய பாட வளவாளர் வலயப் பிரதிநிதியாகவும் சங்க உறுப்பினர்களாக திருமதி ட பஸ்மி, ம றமீஸ்தீன், டறினாஸ் ஆகியோர்களும் தற்போது உள்ளனர்.
பாடசாலையின் முதுகெலும்பாக உள்ள இவர்கள் பாடசாலையின் வளர்ச்சி போக்கிற்காக தங்களது பங்களிப்புகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். கூட்டங்கள் கூட்டப்படுகின்ற போது கூட்டறிக்கைகள் வாசிக்கப்பட்டு கூட்டத் தீர்மானங்களை ஆவணப்படுத்தி வைக்கப்பதுடன் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த இவர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கத்தக்க விடயமாகக் கருதலாம். எனவே இவ்வாறாக இப்பாடசாலை SDS சங்கம் செயல்படுவதை காண முடிகின்றது.
விடத்தல் தீவும் விடத்தல் தீவு புதிய அபிவிருத்தி அமைப்பும் - யோகியோமர் பயஸ் விடத்தல் தீவின் மண்வாசனை மறவாத மக்கள் பலர் புலம்பெயர் தேசங்களில் பரந்து வாழ்கின்றனர். இவர்களுள் சிலர் தாம் வசித்துவரும் நாடுகளிலுள்ள நம் உறவுகளின் நன்மை தீமைகள் பற்றி அறிந்து கொள்ளவும் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவவும் வேண்டுமென்ற நோக்கில் 2019ம் ஆண்டில் ஒரு whats app குழுமத்தினை ஆரம்பித்திருந்தனர்.
இவ் குழுமத்தினூடாக பரஸ்பர உறவவுகளை தொடர்ந்துவந்த வேளை லண்டனில் வசித்துவரும் திரு அரசரெட்டினம் நக்கீரன் என்பவருடைய எண்ணத்தில் இக்குழுமம் மூலம் நமது பிறந்த மண்ணாகிய விடத்தல்தீவை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று விருப்பம் உருவானது இதனை தனது நண்பன் திரு. சோமசுந்தரம் இராசேந்திரா என்பவருடன் பகிர்ந்து கொண்டார். இவர்களிடையே பரிமாறப்பட்ட விடத்தல் தீவின் அபிவிருத்தி தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் வலுவடைந்து whats app குழு நண்பர்களுடன் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில் விடத்தல்தீவு நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டு பலம் பெற்றது. எனவே எமது கிராமத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் விடத்தல்தீவு கிராமத்தில் தற்போது வசித்து வரும் மக்களும் இணைந்து கொள்ளவேண்டும். அவ்வாறு இணைந்து கொள்ளும் போதுதான் வேலைத்திட்டங்களை நேர்த்தியாக செய்ய முடியும் என்பதனை ஏற்றுக்கொண்ட புலம்பெயர் நண்பர்கள் விடத்தல்தீவிலுள்ள (உள்நாட்டில் வசிக்கும்) மக்களுடன் தொடர்புகளைஏற்படுத்த ஆரம்பித்தனர்.2021ம் ஆண்டு பங்குனிமாதத்தில்திரு. சோ. இராசேந்திராஎன்னுடன் (யோ:கியோமர் பயஸ்) Whats app மூலம் தொடர்பை ஏற்படுத்தி எமது கிராமத்தைச் சேர்ந்த கிராமத்தை அபிவிருத்திசெய்வதற்கு பணியாற்றக்கூடிய நபர்களை இணைத்து குழு ஒன்றினை உருவாக்கும்படிகூறினார் இதனடிப்படையில் 2021.04.19 அன்று விடத்தல்தீவில் உள்ள எனது வீட்டில் அங்குரார்ப்பணக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைப்பின் பிரதான மற்றும் ஏனைய நோக்கங்கள் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் குழுமத்தை உள்நாட்டில் வழிநடத்திச் செல்வதற்கான நிர்வாக அமைப்பு தெரிவு செய்யப்பட்டது.
தலைவராக, அருட் சகோ. ௧ ஸ்ரனிஸ்லஸ் அவர்களும்
செயலாளராக திரு. யோ கியோமர் பயஸ் (அதிபர்) அவர்களும் பொருளாளராக திரு. வை. சுராங்கள் (MSO) அவர்களும்
உப தலைவராக திரு அ டேவிற் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
நிர்வாக உறுப்பினர்களாக
திரு. வி. சுதாகர்
திரு. சா. அருட்பிரகாசம்
திரு. அ றெஜிஸ் ராசநாயகம்
திரு. க. துரைராஜா
திருமதி பா. கனகசோதி (SPM) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
குழு ஆலோசகர்களாக
அருட்பணி. எ. டெனி கலிஸ்ரஸ்
அருட் சகோ. அ மனோரஞ்சிதன்
அருட் சகோ. சி. ஞான சேகரன்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். தொடர்ந்து குழுவுக்கான பெயர் சூட்டுதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நீண்ட கருத்துப் பரிமாற்றங்களின் பின் விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பு (VNDO) என்னும் பெயர் பரிந்துரைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
கொரோனா
இதனைத்தொடர்ந்து VINDO தனது பணிகளைத் தொடர்ந்தாற்றியது. இப்பணிகளில் விடத்தல்தீவின் நுழைவாயில் பிரதான வளைவு ஒன்றினை அமைப்பதே முக்கியத்துவமும் முதன்மையும் கொண்டதாய் ஆராயப்பட்டு வந்தது. ஆயினும் 2019 தொடங்கி பல வருடங்கள் நீடித்த கொரோனா(Covid19)தாக்குதலுக்கு உள்ளாகி வறுமை நிலையை சந்தித்த மக்களுக்கு மனிதாபீமான அடிப்படையில் உதவ வேண்டிய அவசியம் ஏற்பட்டதனால் முதலாவது வேலைத்திட்டமாக விடத்தல் தீவூ சன்னார், பெரியமடு, மன்னார் ஜோசவாஸ் நகர் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் வசித்து வந்த விடத்தல்தீவு உறவுகளுக்கு உலருணவுப் பொருட்களை விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பு வழங்கி உதவியது.
வெள்ளப்பெருக்கு
அதனைத் தொடர்ந்து புயல் மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட விடத்தல்தீவு ஜோசப்வாஸ் நகர் மற்றும் புத்தளம் வாழ் உறவுகளுக்கு உணவு சமைத்து வழங்கும் பணிகளில் புதிய அபிவிருத்தி அமைப்பு பணிபுரிந்தது.
கல்வி
மேலும் 2022, 2023ம் ஆண்டுகளில் விடத்தல்தீவவு மாணவர்களின் கல்வி நலன் கருதி மாலை நேர மேலதிக வகுப்புகளை ஒழுங்கமைத்து தரம் 05, தரம் 10, 11 மற்றும் தரம் 12, 13 ஆகிய வகுப்புகளுக்கு ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கான ஊதியத்தினை வழங்கி கல்வி வளர்ச்சிக்கு உதவியது. இதேபோன்று ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்டு வந்த காலையுணவு இடைநிறுத்தப்பட்டதனால் குறிப்பிட்ட பீமாத காலத்திற்கு அம்மாணவர்களுக்கான காலை இடையுணவை வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் போசாக்கு விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்டது. இக்கல்வி நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் பற்றி அறிந்து கொள்ளும் நோக்குடன் VNDO வின்தலைவர் அருட் சகோ. எ ஸ்ரனிஸ்லஸ் அவர்களின் தலைமையில் 15 மீளாய்வுக் கூட்டங்களும் நடத்தப்பட்டு ஆலோசனைகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டதுடன் பெற்றோர்களுக்கான 0.5 விழிப்புணர்வுக் கூட்டங்களும் இடம்பெற்றது.
விளையாட்டு
விடத்தல்தீவின் உதைபந்துக் கலையை எதிர்காலத்திலும் தொடர்ந்து எழுச்சி பெறச் செய்யும் நோக்குடன் 12 வயதிற்குட்பட்ட ஆண் பிள்ளைகளை இணைத்து VIFAAcademy என்னும் பெயரில் பயிற்சி மையம் ஒன்று உருவாக்கப்பட்டு உதைபந்தாட்டப்பயிற்சிகளும் சினேகபூர்வ போட்டிகளும் நடாத்தப்பட்டது. இப்பயிற்சி மாணவர்களுக்கு உதவியாக திரு. இ. எட்வின் அமல்ராஜ் அவர்களினால் ஒரு தொகுதிகாலணிகளும் உதைபந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டது. சமைத்த உணவுகளை வழங்கும் பணிகளின் போது ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வாலிபன் ஒருவருக்கு விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பினூடாக திரு. சோ. இராசேந்திரா என்பவர் ரூபா 25000/- அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மருத்துவர் எம். மதுரநாயகம் கால்பந்தாட்ட அகாடமி நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
சுகாதாரப்பணி
நோயாளர்களின் நலன் கருதி பள்ளமடு வைத்தியசாலைக்கு மருத்துவப் பொருட்களை பலதடவை இலவசமாக வழங்கியதுடன் மருத்துவ உபகரணங்களும் குடிநீர் வடிகட்டியும் (Water Filler) என்பனவும் VNDO வினால் இலவசமாக வழங்கப்பட்டது.
கிராம ஒருங்கினைப்பு
கிராமத்தில் காணப்பட்ட இரண்டு கழகங்களுக்கிடையிலான முரண்பாடு காரணமாக கிராமத்திற்குள் ஏற்பட்டிருந்த பிளவுகளை தீர்க்கும் நோக்குடன் கலந்துரையாடல்கள் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
கிராமத்தினை அழகுபடுத்தும்பணி
விடத்தலிதீவு பள்ளமடு பிரதான வீதியின் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்பட்ட அடர்ந்த கருவேல மரங்களை அகற்றி வீதியின் இருமருங்குகளையும் சீர் செய்ய எண்ணியதுடன் JCB இயந்திரம் மூலம் காடு அழிக்கப்பட்டது. மேலும் வீதியின் இருபுறமும் நிழல் தரும் மரங்கள் 100 நடப்பட்டு பராமரிக்கப்பட்டது. இவ்வேலைகளை விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பு முழுவதுமாக பொறுப்பேற்று செய்து முடித்தது. நிதிவழங்கலும் விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பினதே. இவ்வேலைத்திட்டத்தில் மக்கள், கழகங்கள், சங்கங்கள் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் சிரமதான அடிப்படையில் சுமார் 15 தடவைகள் பணியாற்றினார்கள்.
விடத்தல்தீவை அடையாளப்படுத்தும் பிரமாண்டமான வரவேற்பு வளைவு
விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பினது பணிகள் அபிவிருத்தி நடவடிக்கைகள் அனைத்திற்கும் மகுடம் சூட்டும் வகையில் அர்ப்பணிப்புக்களின் சிகரமாக உருவாக்கப்பட்டதே விடத்தல்தீவின் பிரதான நுழைவாயில் இப்பிரதான நுழைவாயிலை அமைக்கவேண்டும் என்னும் எண்ணத்தை வெளிப்படுத்தி அதற்கான முதலாவது நிதிப்பங்களிப்பை வழங்கியவர் திருஇராமலிங்கம் சண்முகலிங்கம் (சக்தி) அவர்களாகும். இது 2020ம் ஆண்டில் இவரால் முன்வைப்பு செய்யப்பட்டு நிதி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான இரண்டாவது நிதிப் பங்களிப்பு திரு. அரசரெட்டினம் நக்கீரனும் மூன்றாவது நிதிப்பங்களிப்பினைதிரு அரசரெட்டினம் தீபன் அவர்களும் நான்காவது பங்களிப்பினை திரு சோமசுந்தரம் இராசேந்திரா அவர்களும் வழங்கினார்கள்.தொடர்ந்து பல விடத்தல்தீவு உறவுகள் நிதிப்பங்களிப்பினை வழங்கினர்.இதற்கு அமைய இவ்வளைவினை அமைப்பதற்கு ஆரம்பத்தில் 800,000/= ரூபாவினுள் செய்து முடிக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும் covid 19, வெள்ளப்பெருக்கு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பன அதன் செலவை அதிகரிக்க காரணமாய் அமைந்தது. இதனால் இவ்வளைவினை செய்து முடிக்க ரூபா முப்பத்து இரண்டு இலட்சங்கள் (SLR) விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பினால் செலவிடப்பட்டது.இவ்பிரமாண்டமான வளைவிற்கான படவரைபினை இலவசமாக வரைந்து கொடுத்ததுடன் கட்டுமானப்பணிகளை அடிக்கல் நாட்டிய நாள்முதல் இறுதிவேலை முடியும்வரை எவ்வித கொடுப்பனவுகளையும் பெறாது மேற்பார்வை செய்து ஆலோசனைகளை வழங்கிய பெருமை எமது மண்ணின் மைந்தன் பொறியியலாளர் விமலேஸ்வரன் சூசைப்பிள்ளை ஆவார் என நாம் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இவ் அழகுறு கட்டுமானப்பணியினை நேர்த்தியாக செய்து முடித்தவர் ஒப்பந்த தாரரும் மேசனுமாகிய எமது கிராமத்தைச் சேர்ந்த திரு. அன்ரன் மரியதாஸ் ஜெயதாஸ் ஆவார். இப்பணிகளுக்கு உதவி மேற்பார்வையாளராக எமது கிராமத்தின் சிவில் பொறியியலாளர் திரு சித்திக் சிபான் அவர்கள் கடமைபுரிந்தார்.
பார்ப்போர் அனைவரினதும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட வனப்புமிகு பிரதான வளைவானது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் புலன்பெயர் தேசங்களிலிருந்தும் உள்நாட்டு பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் எமது தாய் மண்ணில் வசித்துவரும் மக்கள் ஆகிய விடத்தலூர் உறவுகளாக இணைந்து மிகுந்த கோலாகலத்துடன் இரண்டாயிரத்து இருபத்து மூன்றாம் ஆண்டு தைத்திங்கள் 15ம் நாள் விடத்தல்தீவு அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அருட் சகோ க ஸ்ரனிஸ்லஸ் அவர்களின் தலைமையில் பிரதம விருந்தினர் பொறியியலாளர் திரு சூ. விமலேஸ்வரன் அவர்களால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவிற்கு மதகுருக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடத்தல்தீவின் புலம்பெயர் உறவுகள், இலங்கை வாழ் விடத்தலூர் உறவுகள் (ஜோசப்வாஸ் நகர், புத்தளம், மன்னார்) அரசு, அரச சார்பற்ற அதிகாரிகள் அயலூர் பிரதிநிதிகள் என சுமார் எழுநூறிற்கு மேற்பட்டோர் பங்கெடுத்து சிறப்பித்தனர். விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் அபிவிருத்திச் செயற்பாடுகளை திட்டமிட்டு ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தி கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கென ஆலோசனைக் குழுவொன்று பரிந்துரைக்கப்பட்டு மிகச்சிறப்பாக இயங்கி வருகின்றது அதன் உறுப்பினர்களாக
திரு. சோ இராசேந்திரா
திரு அ நக்கீரன்
திருமதி. வி. சுதாமதி
திரு. சோ கனகேந்திரா
திருமதி. ஜெ. ஜனகராணி
திரு இ. ஏட்வின் அமல்ராஜ்
திரு. யே. நோபேட் நிர்மலதாஸ்
திரு. ம. மதுரநாயகம்
திரு. ஏ. எவ். பாயிஸ்
திருஎம். எம். மஸாரிக்
திரு க தவக்குமார்
திரு. யோ கியோமர் பயஸ்
அருட் சகோ. க ஸ்ரனிஸ்லஸ்
திரு, வை. சாரங்கன்
இவ் பிரதான நுழைவாயில் வளைவு வேலைகளின் போது பள்ளமடு - விடத்தல் தீவு பிரதான வீதிக்கு வடக்கு மாகாணத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முதன் முதலாக கார்பெட் வீதி அமைக்கப்பட்டதும் குறிப்பிடப்பட்டது.
மேற்படி விடத்தல் தீவு புதியஅபிவிருத்தி அமைப்பினால் 2023ம் ஆண்டு வரை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக இலங்கை ரூபாவில் சுமார் ஆறு மில்லியன் (600,000/-) செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கான நிதியினை எமது விடத்தல் மண்ணின் மைந்தர்களாக பிறந்து புலம் பெயர் தேசங்களில் வாழ்ந்து வரும் மக்கள் அதிகளவு பங்களிப்பினை வழங்கியுள்ளனர். அதேவேளை எமது கிராமத்தைச் சேர்ந்த உள்நாட்டு மக்களும் தம்மாலான உதவிகளை வழங்கியுள்ளனர். சிறப்பாக வெளிநாட்டிலுள்ள உறவுகளிடம் நிதி சேகரிக்கும் பணியில்
திரு சோ. இராசேந்திரா
திரு அ நக்கீரன்
திருமதி. வி. சுதாமதி
திரு சோ. கனகேந்திரா
திருமதி ஜெ. ஜனகராணி
திரு இ. ஏட்வின் அமல்ராஜ்
திரு. யே. நோபேட் நிர்மலதாஸ்
திரு எம். எம். மஸாரிக்
திரு ௧ தவக்குமார் ஆகியோர் முன்னின்று உழைத்தனர். கல்விக்கான நிதியில் பெருமளவை அருட் சகோ. ௧ ஸ்ரனிஸ்லஸ் (தலைவர்) சேகரித்தமையும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக மூன்று வருடங்களின்பின் 2024 வைகாசி மாதம் 12ம் திகதி புதிய நிர்வாகத்திடம் விடத்தல் தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டது.•
விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் அமைப்புமுறைச் சாசனம்
1. பெயர்: விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பு
2. முகவரி: விடத்தல்தீவு
3. செயற்பாட்டு பிரதேசம்: விடத்தல்தீவு வடக்கு (ஆ/நி11), விடத்தல்தீவு கிழக்கு (ஆ'நி13), விடத்தல்தீவு மேற்கு (ஆ/நி10), விடத்தல்தீவு மத்திய (ஆ/தி12) எனும் நான்கு கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கிய நிலப்பரப்பு
4. நோக்கங்கள்:
4.1. விடத்தல்தீவின் மக்களின் நலன்களை மேம்படுத்தல், பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல்
4.2. விடத்தல்தீவின் பூர்வீகம் அல்லது குடிமூலம் கொண்ட குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு கல்வி, விளையாட்டு, சுகாதாரம், கலை மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான ஆதரவு வழங்குதல்
4.3. விடத்தல்தீவில் அல்லது அதன் சார்பில் பிற பகுதிகளில் நடைபெறும் மதச்சார்பற்ற, அரசியல் சார்பற்ற பொது நிகழ்வுகளுக்கு உதவல்
4.4. கிராம அபிவிருத்திக்கான சேவைகளை வழங்குதல்
5. அமைப்பின் கட்டமைப்பு:
தலைவர் ஒருவர் பொதுக்கூட்டத்தில் பொதுச்சபையின் பெரும்பான்மையால் தெரிவுசெய்யப்பட வேண்டும்.
பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள், தொடர்ச்சியாக இரு தவணிக்குமேல் பதவி வகிக்க முடியாது. தலைவர் பதவி காலத்துக்குள் வெற்றிடமாயின், உபதலைவர் இடைக்காலத் தலைவராக செயற்படுவார். மூன்று மாதங்களுக்குள் புதிய தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும்.
செயலாளர், பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர் ஆகியோர் பொதுக்கூட்டத்தில் நியமிக்கப்பட
வேண்டும்.
6. நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:
தலைவர், செயலாளர், பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர்
மேலும், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவில் குறைந்தது 2 பேர் என மொத்தமாக 10 பேர் மொத்தமாக 15 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இருப்பர்
7. சிறப்பு குழு உறுப்பினர்கள்:
சிறப்புக் குழு ஒன்றை அமைப்பது கட்டாயம்
இந்த குழுவினர் விடத்தல்தீவு நண்பர்கள் குழுமத்திலிருந்து தெரிவுசெய்யப்பட வேண்டும் இவர்கள் ஆலோசனைகள் முக்கியமானவை
8. நிரந்தர உறுப்பினர் தகுதி:
விடத்தல்தீவு(வடக்கு, கிழக்கு, மேற்கு, மத்திய) கிராம சேவகர் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தது 5 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் அல்லது
பிறப்பிடமாக விடத்தல்தீவை கொண்டிருக்க வேண்டும்
9. பொதுஅங்கத்தவர் தகுதி:
மேலுள்ள பிரிவுகளில் பூர்வீகம், வசிப்பிடம் அல்லது பிறப்பிடம் விடத்தல்தீவாக இருக்க வேண்டும்
10. உறுப்புரிமை இழப்புக் காரணங்கள்:
10.1. உறுப்பினரின் மரணம்
10.2 தன்னிச்சையான விலகல்
10.3. சங்க நோக்கங்களுக்கு முரணான செயற்பாடுகள் மேற்கொண்டு, விசாரணையுடன் பொதுசபையில் தீர்மானமிடப்பட்டால்
10.4. தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களில் பங்கேற்காமை
11. நிதியாண்டு:
ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை
12. நிதி மூலங்கள்:
12.1. வருடாந்த உறுப்பினர் சந்தா
12.2 உள்ளக நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புகள்
12.3. வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் அன்பளிப்புகள்
13. நிதி நிர்வாகம்:
13.1. நிதிகள் அரச அங்கீகாரம் பெற்ற வங்கியில் சங்கத்தின் பெயரில் வைப்பாக இருக்க வேண்டும் 13.2. கணக்குகள் ஆண்டுதோறும் ஒரு கணக்காயலரால் சோதிக்கப்பட வேண்டும்
13.3. பணம் பெறும் செயல்கள் தலைவர் மற்றும் பொருளாளரின் கையொப்பத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும்
13.4. ரூ.300,000/- வரை உள்ள தொகைகளை நிர்வாகச் சபை தீர்மானத்தின் அடிப்படையில் பெற முடியும் 13.5. ரூ.300,000/- கடந்து போனால் சிறப்புக் குழுவின் அனுமதி கட்டாயம்
13.6. நிதி நிர்வாகக் குழு கூட்டங்கள் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டும் 13.7. நிர்வாக உறுப்பினர்களுக்கான போக்குவரத்து மற்றும் உணவுச் செலவுகள் வழங்கப்படமாட்டாது 14. கூட்டங்கள் மற்றும் தீர்மானங்கள்:
14.1. ஆண்டுதோறும் குறைந்தது ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்
14.2. கூட்டத்திற்கு ஒரு மாத முன்னே அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்
14.3. தை மாதம் 31 ஆம் தேதிக்கு முன்னர் பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்
14.4. நிர்வாக உறுப்பினர்களில் 2/3 பேரின் வேண்டுகோளின் பேரில் விசேட பொதுக்கூட்டம் நடத்தலாம் 14.5. தீர்மானங்களுக்காக, கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களில் 2/3 பங்கு வாக்களிக்க வேண்டும்