
சுறா கறியும் சுட்ட கருவாடும் வ.நிஷாந்தான்
சுறா கறியும் சுட்ட கருவாடும்
குட்டூறு கறியும் குஞ்சு கணவாய் பொரியலும்
அரிசி மா பிட்டும் அடுக்கடுக்காய் குழல் புட்டும்
பெரியமடு மாம் பழமும் பெரிதான பிலா பழமும்
பழங்கஞ்சியும் பானையில் அவித்த ஓராவும் பனையோர காத்தும் பானையில் கள்ளும்
வெள்ளை பிட்டி மண்ணும் வெள்ளி பார்த்த வானும்
அட்டத்தீவு பிட்டியும் அதில் இருக்கும் முயலும்
பள்ளமடு குளமும்
படுத்துறாங்கும் ஆலமர நிழலும் குடித்தண்ணி கிணறும் கூடி நின்ற சனமும்
வயல் வெட்டு காலமும் வயலினிலே சமையலும்
கொடுவா பள்ளமும் கொம்புத்தூக்கி ஆறும்
கல்லோடை கல்லும் கரையினிலே இறாலும்
மர வள்ளமும் மறைந்திருந்த பூச்சியும்
கண்ணா காடும் கண் திறந்த கிளி குஞ்சும்
சல்லி கடலும் சண்டையிடும் மீன் கூட்டமும்
மத்தேஸ் அப்பா கடையும் மருந்து பெட்டியும்
மீரான் காக்கா கடையும் மீன் காசை நம்பி கடணும்
வையித்தியசலையும் வாங்கியஊசிகுத்தும்
கழுத்து பிடிப்பும் கால் ஏலா சின்னப்பையா வைத்தியமும்
கண்டி வலையும் கைநிறைய காசும்
பள்ளி பருவமும் பட்டம் விட்ட காலமும்
மரங்களில் கோழியும் மறைந்து பிடித்த நேரமும்
திருவிழா காலமும். திரும்பி பார்க்கும் காதலும்
நோன்பு காலமும் நோன்பு காஞ்சி ருசியும் பிள்ளையார் கோவிலும் பிட்டு உண்ட வடையும்
விளையாட்டு கழகமும் விடாத வெற்றியும்
இன்னும் எத்தனை எத்தனை இன்பங்கள் கிடைக்குமா? இனிவரும் காலங்களில்