
அலிகார் எனும் அமுத ஊற்றே! வி.எம்.காசிம்
அலிகார் எனும் அருங்கலை நிலையம் அமுத ஊற்றாய் விளங்கிய தன்று கலையக சரித்திரம் பெருமை மிக்கது கல்விப் போதனையில் முதலிடம் பெற்றது
தகைமையும் திறமையும் மிக்க நல்லதிபர்கள் தந்த நற் பணிகளால் கலையகம் உயர்ந்தது முன்னோடியாகக் கலை யகம் உயர முயன்ற சான்றோர் அனைவர்க்கும் நன்றி
அதிபர் பதவி வகித்தோர் அனைவரும் அர்ப்பணிப் புடனே நற்பணி செய்தனர் ஆசிரியப் பணி செய்தோர் அனைவரும் அரும் பெரும் கல்விப் போதனை செய்தனர்
உபகரணங் களின் குறைபாடு நீக்கியே உரிமைகள் சமமாய் மாணவர்க் களித்தனர் தம்மிடம் வந்த மாணவர் தமக்குத்
தக்கபடி நல் லுதவிகள் செய்தனர்
ஆசிரியத் தொழில் சார்ந்த முறைகள் அனைத்தும் நீங்கிட வழிவகை செய்தனர் அனைவரும் ஒரு தாய் மக்கள் போலவே அன்புடன் பழகியே கல்வி புகட்டினர்
ஆசிரியர் செய் பணியினை ஒழுங்காய் அவதானிக்கவும் முறைமை வகுத்தனர் பெற்றோர் ஆசான் அதிபர் தம்மிடையே உற்ற நல் லிணக்கம் மலர்ந்து சிறந்தது
புரிந்துணர் வுடனே கருமங்கள் நடந்தன புத்துயிர் பெற்றது மாணவர் கல்வி ஒழுக்க சீலத்தில் உயர் பண்புகளில் விழுப்பம் அடைந்தனர் மாணவர் அனைவரும்
பழைய மாணவர் குழாம் ஆற்றிய
பயன் தரும் பணிகளை கலையகம் பெற்றது பெற்றோர் ஆசான் கூட்டங் களிலே படிப்பின் தேவை உணர்த்தப் பட்டது
சாந்தம் தவழும் அலிகார் கலையகம் தமக்கே சொந்தமாய்க் கலைப்பணி செய்தது கல்வியே செல்வம் கல்வியே வாழ்வென அறிஞர்கள் பலரை ஆக்கிய கலையகம்
உம்மு ஹபீபா தவமணி கிறிஸ்ரி ஒரு தாய் பிள்ளை போல் அன்புடன் பழகினர் இன நல்லுறவுக் கிலக் கணமாக
எங்கள் கலையகம் இயங்கியது அன்றோ!