5. விடத்தல்தீவு எனும் நம் சொந்த பண்டையூர் - ஜனகராணி ஜெகநாதன்

ஒரு மைல் சுற்றளவு கொண்ட கடலால் சூழப்பட்ட தீவு. மூன்று பக்கம் கடல், தரைவழிப் பாதை பள்ளமடு வரை உள்ளது. பள்ளமடு இங்கிருந்து ஒரு மைல் தூரம் ஆகும். மூவின மக்கள் முறையே கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் ஆகியோர் தனித்தனியே வழிபாட்டு தலங்கள் கட்டி வாழ்ந்தார்கள், முதன்முதலில் ஒரு பிள்ளையார் கோயில் தனி ஒருவரால் கட்டப்பட்டு, அதற்கான மானியங்கள், காணிகள், சொத்துக்கள் ஆகியன கோவிலுக்காக தானம் செய்யப்பட்டு இயங்கி வந்தன.இவர்களது வாழ்க்கை அக்கம்பக்க நடைமுறையில் இல்லாதது. ஊர் மக்கள் அனைவரும் குளிக்கவும் சலவை செய்யவும் பள்ளமடு குளம் மட்டுமே தனிக் குளமாக இருந்தது.நாளாந்தம் அதிகாலையில் மக்களும் குளமும் விழித்து விடும். விரைந்து நீர் வற்றும் காலங்களிலும் கூட, அக்கம்பக்கம் உள்ள சிறு சிறு நீர்நிலைகளில் குளித்து, மிகச் சிரமப்பட்டும் வாழ்ந்தாலும் திடம்காத்திரமும் ஆரோக்கியமும் கொண்டே வாழ்ந்தார்கள்.

ஊரின் வடக்குப் பக்கமாக மூன்று கோவில்கள், ஒரு கிராமிய சபை, ஒரு கிராமிய நீதி மன்றம், ஒரு சிறு வைத்திய நிலையம் ஆகியனவும் தெற்கு கடற்கரைப் பக்கமாக ஊரின் மத்தியில் எட்டு எட்டு தொடுத்துக் கட்டப்பட்ட வாளி மலசலகூடங்களும் இருந்தன.

ஊரின் பாதையை கூட்டிப் பெருக்க மூவர், சுத்திகரிப்பிற்காக மூவர் என்று தொழிலாளர்களும் கிராமசபைக்கு உட்பட்டு இருந்தனர். ஊரின் மத்தியில் ஓர் உடையார் வளவு பணிமனையும் அவ்விடமே சாகுல் ஹமீது என்பவரே உடையாராக இருந்தார். அவரே ஊரின் செயல்பாட்டிற்கும் சமூக வேலைகளுக்கும் உரிமையாளர். அவர் அயல் கிராமங்களுக்கும் இரு ஊழியர்களோடு மாட்டு வண்டியில் பயணம் செய்வார். இஸ்லாமியர்களில் உடையாராக வேலை பார்ப்பது மிக அரிது. இருந்தும் இவ்வூர் உடையார் ஒரு முகம்மதியரே ஆவார்.

சிறு வைத்திய நிலையம்

இங்கே அன்றாட நோய்களுக்கும் காயங்களுக்கும் வைத்தியம் செய்யப்படும்.

அங்கு முதன்முதலில் மருந்துக் கலவையாளராகவும் இரத்தக் காயங்களுக்கு வைத்தியம் செய்யவும் அமரத்தப்பட்டவர் அமரர் திரு வல்லிபுரம் கந்தையா அவர்கள். அவருக்குப் பின் திரு வல்லிபுரம் சின்னையா அவர்கள் ஓய்வு பெறும் வரை பணி புரிந்தார். வைத்தியரின் தங்குமிடம் வைத்திய நிலையத்தின் பின்புறம் இருந்தது. இவரே பள்ளமடு வைத்தியசாலைக்கு, தினந்தோறும் சென்று வைத்தியம் பார்ப்பார். நாட்டு வைத்தியராக அடைக்கலம் பரியாரியார் அவர்கள். அவரது தந்தையும், பேரன் அமிர்தநாதனும் வைத்தியப் பணி செய்தவர்கள். (பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கல நாதனின் தந்தையார்) முதலில் புனித யாகப்பர் தேவாலயமும் பின்னர் மாதா கோவிலுமாக இரண்டு கிறிஸ்துவர் தேவாலயங்கள் கட்டப்பட்டன. இஸ்லாமியர் பள்ளிவாசல் குளக்குண்டு மையமாக, நடுவே ஓர் கொட்டுக்கிணறும் இருந்தது. காலப் போக்கில் தைக்காப்பிட்டியில் ஓர் பள்ளிவாசலும் இருந்தது.

மாணவர் கல்விக்கூடங்கள்

இரண்டு - ஒன்று கடற்கரை பிட்டியில் புனித யாகப்பர் தேவாலயத்திற்கு அருகே ஒரு கிறிஸ்தவ ரோமன் கத்தோலிக்க பாடசாலை. இது முழுக்க முழுக்க தேவாலய மக்களின் வழி நடத்தப்பட்டதாகும். இந்துக்களும் இங்கேயே கல்வி பயின்றனர். பள்ளிவாசலுக்கு அருகே ஊரின் மத்தியில் அரசுப் பள்ளி இயங்கியது. அது 1905ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதில் பெரும்பாலும் முஸ்லீம் மாணவர்களே அதிகம் இருந்தனர். வாசிப்புக் கட்டமைப்புபத்தாம் ஆண்டுவரை காணப்பட்டது. அலி ஆசிரியர் மற்றும் மீரா லெப்பை ஆசிரியர் ஆகியோரும் வகுப்பு நடத்தினர். முதலில் ஐந்தாம் ஆண்டிற்கு கீழேயான வகுப்புகளே இருந்தன. காலப்போக்கில் பத்தாம் ஆண்டு வரை வகுப்புகள் உயர்ந்தன. இந்துகளுக்காக பள்ளி இருக்கவில்லை. அதனால் அவர்கள் இரு பள்ளிகளிலும் (கிறிஸ்துவர் மற்றும் அரசுப் பள்ளி) கற்றார்கள். அயல் கிராமத்துப் பிள்ளைகளும் இங்கேயே கல்வி பயின்றனர்.

தொழில்

மீன்பிடித் தொழிலே முக்கியத் தொழிலாக இருந்தது. கடற்கரையை அண்டியுள்ள கிறிஸ்தவர்கள் இதனை தொழிலாகக் கொண்டனர். இவர்கள் முற்குகன் வெடியரசன் கடற்கோட்டை கட்டியாண்ட முற்குகன் வழிவந்தவர்கள். முக்கியர் எனப்படுவர். சிலர் விவசாயமும் செய்தனர். விவசாயம் இந்துக்களும் முஸ்லீம்களும் செய்தனர். அதிகமாக முஸ்லீம்கள் கால்நடை வளர்ப்பும், வியாபாரமும் செய்தனர். மற்றையோர் தம் சொந்த தேவைக்காக வீடுகளில் பசுமாடுகளை வளர்த்து பயன்பெற்றனர்.

கட்டிடம்

கல்லால் ஆன வீடுகள் அதிகம் இருக்கவில்லை. இருந்த வீடுகள் முருகக்கற்களால் கட்டப்பட்டன. இந்துக்கள் கிராம மத்தியில் வாழ்ந்தார்கள். அவர்களின் வீடுகளில் சில முருகக் கற்களால் கட்டப்பட்டிருந்தன. முக்கிய வீடுகள்:

இராசையாப்பா, கந்தையாப்பா, பொன்னையாப்பா, குரும்பி கந்தையாப்பா, ஆறுதல் மடம், பிள்ளையார் கோவில், துரையப்பர், மாதா நீக்கிலாப் பிள்ளை உடையார் வீடு, பத்தர் வீடு, மாரிமுத்தாச்சி ஆகியோரின் வீடுகள் முருகக்கற்களால் கட்டப்பட்டன. தென்னங்கீற்றுக் கிளைகளைப் பயன்படுத்தி கட்டப்பட்ட வீடுகளே அதிகமாக இருந்தன. அவை ஓட்டுவீடுகளாக அமைந்திருந்தன.

பயிர்ச் செய்கை

முன்னர் தோட்டப் பயிர்ச்செய்கையாக புகையிலையையே முக்கியமாகச் செய்தனர். அட்டைதீவு, பள்ளமடு, குளத்துத் தோட்டப்பிட்டி எல்லா இடங்களிலும் புகையிலைத் தாவரமே பயிரிடப்பட்டது. மாட்டெரு, ஆட்டெரு ஆகியனவே இந்தப் பயிர்ச் செய்கையில் பயன்படுத்தப்பட்டன. நெற்செய்கை ஊர் எல்லையைத் தாண்டி பள்ளமடுப் பக்கம் சுல்தான் கமம், புலக் காடு, இலவக் குளம், கிழவிகமம், கரம்பை, மொங்கனா குளம், பம்போசடி, வாடியடி ஆகிய இடங்களிலும் நடைபெற்றது.

நீதித் துறை

ஒரு கிராமிய நீதிமன்றம் ஊருக்கு மத்தியில் இயங்கியது. இது ஐரோப்பிய காலத்தில் “அமர்வு நீதிமன்றம்” என்ற பெயரில் ஏனைய ஊர்களையும் உள்ளடக்கிய நீதிமன்றமாக இருந்தது.

மாதத்திற்கு ஒரு முறை இயங்கி வழக்குகள் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிகமாக விவசாயிகள் தொடர்பான வழக்குகள் இருந்தன.

பதிவுகள்

இறப்பு, பிறப்பு பதிவுகள் முன்னர் கிறிஸ்தவ தேவாலயங்களில் இருந்தன. பின்னர் அரசு முறைப்படி பதிவு செய்யப்பட்டது. முதல் இறப்பு, பிறப்பு பதிவாளராக திரு சிவகுரு அவர்கள் பின்னர் ஜனாப் காதர் முகையதீன் ஆகியோர் பணியாற்றினார்கள்.

ஊரமைப்பு

ஆங்காங்கே கேணி, கிணறு, குளம் எனத் தூணீர் சேரும் குண்டுகள் இருந்தன முக்கியக் கிணறுகள்/ குளங்கள்: பிள்ளையார் கேணி, புதுக்கட்டுக் குளம் (வயல்வெளியின் முன்பக்கம்), அருகில் முத்தம்மாச்சி குண்டு, பள்ளிவாசல் அருகே கிணறும் குளமும், யாகப்பர் கோவில் முன்றலில் துரவிக் குளம். ஊரின் நீர் தேங்கி நிற்காமல், இதன் வழியாகச் சிறு சிறு குண்டுகளில் தேங்கி நிற்கும். பிறகு கால்வாய்கள் வழியாக வெளியேறும். இது கால்நடைகள் பசியாறவும் மக்கள் பயன்பெறும் வகையிலும் அமைந்த அமைப்பாக இருந்தது.

மேடுகள் (பிட்டிகள்):

கிராமிய இடங்களில் உயர்ந்த மேடுகளை 'பிட்டி' என்பர். பொதுவாக: பிள்ளையார் பிட்டி கஸ்பார் பிட்டி, வடலிப் பிட்டி சுடுகாட்டுப்பிட்டி, மையத்துப்பிட்டி, தைக்காப்பிட்டி புதையாப்பிட்டி அட்டைத்தீவுப் பிட்டி

அட்டைத்தீவுப் பிட்டி ஊருக்கு தெற்குப்பக்கம் சற்று தொலைவில் அமைந்திருந்தது.

இது மிக உயர்ந்த பிட்டியாக அமைந்தது, ஏனெனில் பழைய இராசதானியாக இருந்த இடம் ஆகும். அங்கு செல்ல ஒரு பாதையும் இருந்தது.

வரலாறு கொண்ட விடத்தல்தீவு

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானில் நனிசிறந்தனவே... நாம் பிறந்து வளர்ந்த மண்ணின் வரலாற்றுச் சிறப்பை சிறந்த ஆய்வுகள் மூலம் துல்லியமாகக் கூற முடியும். கண்டி இராச்சியத்தில் நெடுங்காலமாக தடுப்புக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரித்தானியரான றொபேட் நொக்ஸ் 17 ஆம் நூற்றாண்டில் எழுதிய நூலில் தமிழர் தேசம் பற்றிய குறிப்புகள்பல ஆதாரங்களோடு உள்ளதால் அதனையும் அடிக் குறிப்பிட்டு திரு ஜே. பி. பி. லூயிஸ் எழுதிய இலங்கையின் வன்னி மாவட்டங்கள்: ஒரு கையேடு என்ற நூலில் விடத்தல்தீவு பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், விடத்தல்தீவு ஒரு பெரிய வியாபாரச் சந்தை என்றும், இது ஒரு தனி மாவட்டமாகவும் இருந்தது என்றும், இந்தத் தீவில் இருந்து பெரும்பாலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டதாய்**கூறப்பட்டுள்ளது.

வாடிக்கைகள்/தொகுப்புகள்: உப்பு, புகையிலை, சுங்கம், நெஷ், அங்கு, நத்தை, முத்து, மீன், மீன் முள்ளு, மாட்டு எலும்புகள், நிறை கூடிய மீன் சுறாக்கள். இவைகள் அனைத்தும் வணிகமாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வணிகப் பாதைகள் மொத்தம் 18, அதில் விடத்தல்தீவு ஒரு முக்கியப் பாதை ஆகும். இதன் வழியே யாழ்ப்பாண வியாபாரிகள் வர்த்தகம் செய்தனர். அதற்காக வரி வசூலிக்கப்பட்டது.

தீவு என்பதாலே கடல்வழிப்பயணம் சுலபமானது. அதே காரணமாக, பிரெஞ்சுப்பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்திற்குள் இத்தீவு வந்தது. அதனால், இத்தீவிலிருந்து இறக்குமதி, ஏற்றுமதி ஆகியன இடையூறு இல்லாமல் நடைபெற்றன வறுமைக் குறைவு, வருமான உயர்வு ஆகியவை வியாபார சந்தை மூலமாகவே இருந்தன.

நிறைவு:

வன்னியோடு அல்லது மன்னாரோடு இணைந்த ஒரு தனி மாவட்டமாக விடத்தல்தீவு இயங்கியிருக்கிறது. வன்னி நிர்வாகத்திற்கு விடத்தல்தீவு நெற்கனிஞ்சிகள் (அதாவது விளைச்சல் தரும் தரையகங்கள்) மட்டுமே தொடர்புடையது; மற்ற எந்த நிர்வாக அதிகாரமும் இத்தீவுடன் நேரடி தொடர்பில் இல்லை. விடத்தல்தீவு தனது காலத்தில் அமர்வு நீதிமன்றம், துறைமுக அதிகாரம் ஆகியவற்றை கொண்டிருந்தது — இது அதன் உயரிய நிர்வாக நிலையை வெளிப்படுத்துகிறது.

அமர்வு நீதிமன்றம் விடத்தல்தீவு: அமர்வு நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள வீடு, ஊரின் மத்தியில் 100 வருடங்களாக இருந்த ஒரு பாரம்பரிய மாளிகை ஆகும். களஞ்சியம் மாண்ட காப்பீட்டுத் திட்டத்தில் 15 டொலருக்குள் தொகுக்கப்பட்டுள்ளது. அதேத் தரவிலேயே காணொளி, தாசில்தார், செயலாளர், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் கிளார்க் ஆகியோரின் பங்களிப்பும் பதிவாகியுள்ளது.