சுமந்தவளை நாம் சுமப்போம் -வ. நிஷாந்தான்

படைத்தவனும் படைத்திட்டான் பாரினிலே பாவி எம்மை

பத்து மாசம் எம்மை சுமந்தாள் பத்திரமாய் தாய் எம்மை

எம் தாயை சுமந்தவள் நீ என்னவென்று உன்னை மறப்போம்

தவண்டு நாம் திரிகையிலும் தடம் பதித்து நடக்கையிலும் தடுமாறி விழுந்திடாமல் தாங்கியே சுமந்தவள் நீ

படிப்பதற்கு பள்ளி தந்தாய் படிப்பிக்க நல் ஆசான் தந்தாய்

குளிப்பதற்கு குளம் தந்தாய் குடிப்பதற்கு நல் நீர் தந்தாய்

பணம் சேர்க்க கடல் தந்தாய் பயிர் செய்ய வயல் தந்தாய்

வந்தோரை வாழ வைத்தாய் வாயார புகழ வைத்தாய்

வயிறார உணவளித்தாய்

வாய்க்கு ருசியா மீன் தந்தாய்

பழகிடவே நல் பண்பு தந்தாய் பண்பான மனிதர் தந்தாய்

எம்மையும் சுமந்தவள் நீ எம் பிள்ளைகளையும் சுமக்கின்றாய்

பரம்பரையாய் வாழ்கின்றோம் பார் எல்லாம் பரவி விட்டோம்

படைத்தவனை மறந்திடினும் பாவி மகன் உன்னை மறவேன்

எம்மை நீ சுமந்ததனால் உயிருள்ளவரை உன் நாமம் நாம் சுமப்போம்

சுமந்தவளை சுமந்துடுவோம்

பாரெங்கும் போற்றிடுவோம்