ஊருக்கு போகின்றேன் ~ மஸாஹிரா கனி-

====

ஊருக்குப் போகின்றேன் உடையாத நினைவோடு

காலாற நடை நடந்து மனமாற கதை பேச பள்ளமடுப் பாலம் நாயா ஆற்று நீர் கை அசைக்க

ஆனா, ஆவன்னா அரவனைத்து அறிவு தந்த அலிஹார் பள்ளி காண ஆசையுடன் அமர்ந்து அங்கே -

கணிக்காத சில கணக்கும் கண்டு களித்த கனவுகளும் விஞ்ஞான கூடத்தின் தொக்கி நிற்கும் - ஆவர்த்தனம். எழவாய் - பயனிலையும் எதுகை - மோனைகரளும் எழுந்து நின்று ஒப்பிக்கும் என் கணக்கு தப்பாமல்

மனையியல் கூடமும் மாற்று வழி கொட்டகையும் மாணவ மன்றத்தின் கவித் தலைப்பை வாசிக்க ஊருக்கு போகின்றேன் உடையாத நினைவோடு

என் குச்சி குடிலுக்குள் உரல், உலக்கை அம்மியுடன் பணை ஓலை பெட்டிகளும் பெட்டகமும், வட்டாவும் குளக் கரையின் மறுகரைக்கு மாராப்பு முட்டை கட்டி படிக்கட்டில் நானமர்ந்து பழய கதை பேச உம்மாவின் கை பட்ட. மண்பானை சட்டி எல்லாம் தயிர் கடைந்த நெய்வாசம். மணம்வீசும் இடம்காண

பசு ஈன்ற வெண் நாகு விசுவாசமாய் எனை பார்க்க பூவரசு மர நிழலோ ஏக்கமுடன் எனை நோக்க

அன்றாட அடுப்புக்கு சுடராக விறகு தந்த கன்னா காட்டை கண்ணாற கண்டு வர ஊருக்கு போகின்றேன்

உடையாத நினைவோடு குடி தண்ணி கிணற்றுள்ளே பல வாளி அடிபட்டு குடம் சுமந்த குமரிகளாய் கூடி நின்று கதை பேச

சங்கக்கடையும், சரிந்து நின்ற பூவரசும் சுந்தாரத்தார் உழகலப்பை

சுபைர் நாநா மாட்டுவண்டி சுகம் கேட்டு உறவாட

ஊருக்குப் போகின்றேன் உள்ளார்ந்த நினைவோடு

ஊசி மல்லிகையும், காசித்தும்பையும் மாதுளையும், கொய்யாவும் மாறுபடிவா - எனக்கூற மறக்காமல் கதை பேச பள்ளிக் காலமதில் அந்த நாள் பருவத்தின் அவனும், அவளும் கொண்ட காதலின் மீதிக் கதை-கேட்க ஊருக்குப் யோகின்றேன் உடையாத நினைவோடு. வயல்வெளியின் கதிரெல்லாம் என வரவேற்று தலை அசைக்க நெல் அறுத்த கிளி வந்து நேற்றய கதை சொல்ல

உப்பளத்து கீறல்களால் பாதத்து ரணம் அன்று இறால் ஓடைக் கரைதனை ஒரு முறை காண்டு வர

ஒழுக்கமும்,ஓதலும் ஒப்புவித்த ஓதும் பள்ளி பள்ளயாக் குன்று

பாசித் தண்ணியுடன் கதை

பேச ஐயனார் கோயில் அட்சனைத் தட்டும் மாதாகோவில்

மணியோசையும் மறவாத இடம் காண கடலோரக் கனவுகளும் குட்டூறு வெள்ளோர எட்டூரும் மீன் கொடுக்கும் எம்மூரின் கதை பேச

ஊருக்குப் போகின்றேன் உடையாத நினைவோடு ஆலமரக் குயிலும் அதில் அமற்தே மைனாவும்

என் வரவை பார்த்திருக்க ஆறஅமர அழகாக் கதை பேச

ஒற்றை வடலியிடம் ஒப்பிவித்த கதை கொஞ்சம் ஒருவருக்கும் தெரியாமல் ஓசையின்றி கேட்டுவர

ஊருக்குப் போகின்றேன் உடையாத நினைவோடு.....

ஒலைக்கிடுகெடுத்து உன் வீட்டுக் கூரைவேய மரநிழலின் விருந்தோம்பல் ஒற்றுமை இடம் தேட;;

சுதந்திரக் காற்றும் சுத்தத் தமிழும் வஞ்சமற்ற நெஞ்சுரமும் விருந்தோம்பல் பண்புகளும்

முழுதாய் விட்டுச்சென்ற என் மூதாதயர் ஆசி பெற ஊருக்குப் போகின்றேன் உடையாத நினைவோடு ;;

உள்ளத்தில் உந்தி நிற்கும் ஊர் நினைவு போகுமட்டும்

வருவாயா? என்றுமட்டும் கேட்காதீர் விரும்பிய நிறை வாழ்க்கை திரும்பி வரும் வரைக்கும்

நான். ஊருக்குப் போகின்றேன் உடையாத நினைவோடு;,