கண்ணாப் பற்றை - விடத்தலீகன்னிமலர் செல்வம் (செபமாலை)

விடத்தல்தீவு எனும் சிறு கிராமத்தில் அடியாளும் ஒருத்தி

இங்கு வாழ்ந்தவள்நான் என்று அதை உரக்கச் சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி இது மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டது

விடத்தல்மரங்களையும் கொண்டுள்ளதால் இதற்கு விடத்தல்தீவு எனும் பெயர்

வந்ததோ இங்கு கிறீஸ்தவர்கள் முஸ்லீம்கள்

இந்துக்கள் என்று மூவின மக்களும் வாழ்கின்றார்கள்

ஆகா

விடத்தல்தீவினை நினைத்தாலே எனது உள்ளம் குமுறுகின்றது பசுமையான நினைவுகள் இனிமையான எண்ணங்கள் இங்கு நின்று இதன் காற்றை சுவாசித்துப் பார்கதை சொல்லும் சுத்தமான காற்றும் சுத்தமான உள்ளங்களும் வாழ்ந்த காலம்

அது

தெரியுமா உங்களுக்கு

மூன்று சமூகங்கள்

அன்பாக வாழ்ந்த காலம் அறிந்தவர்களுக்கு அமிர்தம்

பள்ளமடுக்குழத்திற்கு ஒருமைல் வரை

நடந்த காலம் தலையில் தண்ணீர்க்

குடம் சுமந்து அன்புச்சண்டை போட்டு வந்தகாலம் இந்தக்காலத்தில் வாழ்ந்த எங்கள்

வாழ்க்கை இனிமையிலும் இனிமை மாதா கோவில் மணி" ஆறு மணிக்கு

அடித்ததும் திருப்பலிக்கு ஓடிச்செல்வோம் திருப்பலிமுடிந்து வீட்டிற்கு வந்து உள்ளதை உண்டு வெள்ளை சீருடை அணிந்து பாடசாலைக்கு புறப்படுவோம் அது அப்போ

றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன்

பாடசாலையாக

இருந்தது இப்போ பெயர் மாற்றம்

பெற்று விட்டது பாடசாலைக்கு நேரத்துடன் செல்லவேண்டும் எட்டு மணிக்குப் பிந்தினால் வாசல்க் கதவைப் (கேற்றை) பூட்டி விடுவார்கள் பின்னர் இராயப்பு அதிபரும் பெனடிற் மாஸ்ரரும் வந்து கையை நீட்டச்

சொல்லி பிரம்பினால் இரண்டு அடி அடித்து

உள்ளே போகச்

சொல்வார்கள்

எட்டு மணிக்கெல்லாம்

ஒழுங்காக வரி வரியாக வெள்ளை சீருடைகளில்

அணி வகுத்து நிற்க கடவுள் புகழ் பா தொடங்கும் இறைவனைப் பாடித் துதித்து அனைவரும் வகுப்பறைக்குள்

செல்வோம்

இராயப்பு அதிபரும் பெனடிற் மாஸ்ரரும் பொலீன் ரீச்சரும் அல்வீனஸ் ரீச்சரும் அமீன்மாஸ்ரரும் அரியம் மாஸ்ரரும் இம்மானுவேல் மாஸ்ரரும் யாழ்ப்பாண ஆசிரியர்களும் பாடம் கற்ப்பித்த

காலம்.

அது

கல்வித் தகுதிகளிலும் விளையாட்டுத்துறைகளிலும் பாடல் போட்டிகளிலும் தழைத்தோங்கிய காலம் அது குரு முதல்வர்களாக றெஜீஸ்ராஜநாயகம் அடிகளாரும்

ஜெயசேகரம் அடிகளாரும் இருந்த

காலம்

விடத்தல் மண்ணின் எழிற்சிக்காலம் விழாக்கோலம் பூண்ட காலம் ஒளி விழாக்களும் பட்டிமன்றங்களும்

விளையாட்டுப்போட்டிகளும் போட்டி

போட்ட காலம்

உழவு வண்டிகளில் ஏறி விளையாட்டுப் போட்டிகளுக்கு சென்ற காலம் கிறீஸ்தவர்கள் முஸ்லீம்கள் இந்துக்கள் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் ஒன்றாக ஆடிப்பாடிய காலம் ஒன்றாக உணவு உண்ட காலம் அப்போ கிராம சேவகராக திரு இஸ்சதீன் G S இருந்தார் அவரின் தலைமயின் கீழ் விளையாட்டுப் போட்டிகளுக்கு அடம்பன் வரை சென்ற காலம் வெற்றி வாகை சூடி வந்து ஊரைச் சுற்றி வெற்றி முழக்கம் இட்ட காலம் ஊர் மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு பாடசாலைக்கு முன் நிமிர்ந்து நின்று எங்களை வாழ்த்திய

காலம்

கால்பந்தாட்டம் வலைப்பந்தாட்ட மைதானத்துக்குள் இளையோர் முதியோர் என்று கூடி நின்று கூச்சல் போட்ட காலம்

இந்தக் காலத்தில் விடத்தல் மண்ணில் வாழ்ந்தவர்கள் இருந்தால் இரை மீட்டிப் பாருங்கள்

ஆகா ஆகா இனிமை அது மட்டுமா மூன்று பக்கமும்

கடலால் சூழப்பட்ட ஒரு அழகிய தீவு கடல் அலை அடித்துக் கரை ஒதுங்கும்மீன்கள் மழை பெய்து வெள்ளம் எடுத்தால் இறால்கள் கரையில் துள்ளி விளையாடும் இறால் முட்டைகளை காலால் மிதித்து விளையாடியகாலம்

கண்ணாப் பற்றைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்களா

கடலுக்குள் கண்ணாப் பற்றைகளின் அழகு

வள்ளங்களும் போட்டுகளும்

அழகழகாக அணி வகுத்து நிற்கும்

வலைகளை கரையில்போட்டு நண்டுகளும்

மீன்களும் இறால்களும் தெரிவு செய்வார்கள்

இவற்றை வாங்குவதற்கு வரும் மூவினத்தோர் களை கட்டும் கடற்கரை அது மட்டுமா வள்ளங்களை பழுது பார்ப்பவர்கள் வள்ளங்களைக்

கடலுக்குள் இறக்குபவர்கள் வள்ளங்கள் செய்பவர்கள் என்று ஒரு பகுதி காட்சி அளிக்கும் கண்ணாப் பற்றைகளின் சிறப்பைப் பார்த்தால் இந்தப் பற்றைகள் வளர்ந்து மரங்களாகும் இந்த மரங்களை

வெட்டி வந்து வெய்யிலில் காய வைப்பார்கள் பின்பு இவற்றைப் பட்டைகளாகத் தட்டுவார்கள் இந்தப் பட்டைகளை தண்ணீரில்போட்டு அடுப்பில் கொதிக்க வைத்தால் இது சிவப்புக் கலராக மாறி வரும் இதனை புதிதாக வாங்கும் வலைகளுக்கு சாயம்

இடுவார்கள் வெள்ளை வலைகள் சிவப்பாக மாறிவிடும் வெய்யில் காய வைத்து பின் கடலுக்கு கொண்டு செல்வார்கள்

இந்த வலைகளை

நடுவதற்கு தேவையான கம்புகளையும் இந்தக் கண்ணாப் பற்றைகளே தருகின்றன கண்ணாப்பற்றைகள் வளர்ந்து மரங்களாகியதும் இதனை கண்டல்

மரங்கள் என்றழைப்பார்கள் இதனை வெட்டி வந்து 'சீவிக் காய வைத்து இந்தக் கம்புகளை கடலுக்குள் வலைகளை நடுவதற்கு பயன்படுத்துவார்கள்இயற்கை அன்னை எங்களுக்குத் தந்த அளவில்லா செல்வங்களிவை ஆலமரங்களையும் அரச மரங்களையும் தந்த மண் நெற்செய்கைக்குரிய வளங்களைத் தந்த மண் மூன்று கால போகங்களிலும் விளைச்சலைத் தந்த மண்

இங்கு வாழும் மக்களுக்குத் தேவையான உணவு

வகைகளை இங்கேயே பெற்றுக் கொள்வோம்

மறப்போமா எங்கள் மண்ணை

வளங்கள் பல நிறைந்த விடத்தலம் பதியை மறக்க முடியுமா புலம் பெயர் நாட்டிலிருந்து

ஏங்கித் தவிக்கின்றேன் அடைக்கலமாதா ஆலயமும் யாகப்பர் ஆலயமும் கடைத்தெருக்களும் கடற்கரையோரங்களும் ஓடி ஆடித்திரிந்த இடங்கள் நெஞ்சில் சுகமான வேதனையைத் தருகின்றன விடத்தல்தீவில் வாழ்ந்தோர் பலர் உள்ளனர் அநுபவித்தவர்கள்

சிலர் உள்ளனர் இவற்றையெல்லாம் அறிந்தவர்களும் உள்ளனர் அறியாதவர்களும் உள்ளனர் எங்கள் விடத்தலம் பதியினைப் பற்றி அறியாதோர் அறிந்து கொள்ளுங்கள் தெரியாதோர் தெரிந்து கொள்ளுங்கள் இவற்றில் நானும் பங்கு கொண்டவள்

நான்உணர்ந்தவற்றை அறிந்தவற்றை

கண்களால்

பார்த்தவற்றை உங்களுக்குத்

தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் விளையாட்டுப் போட்டிகளிலும் பாடல்போட்டிகளிலும் கல்வியிலும் வெற்றி வாகை சூடியவர்களில் நானும் ஒருத்தி

என்னை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும் காலத்தின் கட்டாயம் நாங்கள் ஒருசிலர் நாடு விட்டு நாடு வந்து விட்டோம் பள்ளித்தோழர் ஒரு சிலர் இறைவனடி சேர்ந்து விட்டார்கள் இருப்பவர்களும் சிதறிப் போய் இருக்கின்றார்கள் ஆனாலும் எங்கள் விடத்தல் மண் தற்போது பல கல்விமான்களையும் வைத்தியர்களையும் அதிபர்களையும் ஆசிரியர்களையும்

பல அரச ஊளியர்களையும் தந்து ஆலமரமாகி விழுதாகித் தாங்கி நிற்கின்றது எங்கள் விடத்தலம்பதி அன்னை இருகரம் நீட்டி இளைஞர்களை வரவேற்க்கின்றாள்