
விடத்தல்தீவு மத்திய மாதர் அபிவிருத்தி சங்கம் - ஜனாப் கு. முஜம்மில்
விடத்தல்தீவு மத்திய மாதர் அபிவிருத்தி சங்கமானது 1990ம் ஆண்டு நீண்டகால இடப்பெயர்வுக்குப் பின்னர் மீள்குடியேற்றத்தின் பின் ஆரம்பிக்கப்பட்டது.
1990ம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட மாதர் சங்கமானது தொடர்ச்சியாக செயற்படவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு புதியதாக ஒரு மாதர் சங்கத்தினை உருவாக்குதல் வேண்டும் என்ற எண்ணத்துடன் நாங்கள் இந்த மாதர் சங்கத்தை உருவாக்கினோம்.
28/01/2018ம் திகதி அன்று ஞாயிறு பிற்பகல் 4.00 மணிக்கு 36 மாதர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட
கூட்டம் ஒன்று ஒழுங்கமைப்பு செய்யப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் சங்கத்தின் நோக்கம், செயற்பாடு,அபிவிருத்தி, பாதுகாப்பு, வாழ்வாதார திட்டங்கள், காலநிலை மாற்றம், சுகாதாரம் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன் முதல் நிகழ்வாக மாதர் சங்கமானது உருவாக்கப்பட்டதுடன் அதற்கான நிர்வாகத் தெரிவும் இட்ட்பெற்றது. அந்த வகையில்
* தலைவி: P. பஸ்மா
• உப தலைவர்: K. ஆசியா உம்மா
செயலாளர்: N. F. நஸ்றீன்
• உப செயலாளர்: N. பரீனா
• பொருளாளர்: R. பர்சானா
மேலும் 5 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்தக் கூட்டத்தின் வழிகாட்டியாக மாந்தை பிரதேச சபை உறுப்பினர் K. சன்ஹர், N. பாறூக், M.K.M. ஆதீர், K.முகம்மில் ஆகியோர் காணப்பட்டனர். பாலர் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு இக் கூட்டத்தை வழிநடத்தினார்கள்.
அதன்பின் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் வேதனங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒரு நபருக்கு ரூ.100 என்ற அடிப்படையில் 36 உறுப்பினர்களும் தங்களது அங்கத்துவத்தை உறுதிப்படுத்தி கொண்டனர்.
மதிப்பீட்டு நேர்காணல் கருத்துக்கள்:
பெண்களின் முன்னேற்றம்.
• மாதர் சங்கங்கள் சிறந்த முறையில் செயல்படுதல்
• சமய சிந்தனைகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம்.
• பாடசாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் சீரமைக்கப்படுதல்
• சுற்றாடல் பாதுகாப்பு.
அபிவிருத்தி நடவடிக்கைகள்:
சீரற்ற மின்சார வசதிகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்தல்.
• மக்கள் நோய்வாய்ப்படும் போது மன்னார் அல்லது யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை உருவாகிறது.
எனவே பள்ளமடு வைத்திய சாலை ஒரு சிகிச்சை நிலையமாக மாற்றப்பட வேண்டும்.
• இடர்பாடுகள் காலத்தில் தொடர்பு கொள்வதற்கென
076 90910633 என்ற தொலைபேசி இலக்கம் மக்கள் பாவனைக்காக பயன்பாட்டில் காணப்பட்டது.
இனப்பாகுபாடு பற்றிய கூற்று:
எமது கிராமத்தில் மண்ணெண்ணை இல்லை. மாடுகள் காலங்காலமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடலில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக மீன்களுக்குத் தேவையான வண்டல்கள், பாறைகள், மரங்கள் மற்றும் குறிஞ்சி வகை மூலிகைகள் அழிந்துபோயுள்ளன.
நடைபாதைகளை செப்பனிடும் பணியில் 2018
எமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள்:
1. 31/08/2018:
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றிசாட் பதியுதீன் அவர்களின் அனுசரணையில் எங்கள் சங்கத்தின் ஊடாக வீதி செப்பனிடும் பணியில் எமது மாதர் சங்கமும் முன்னின்று செயற்பட்டது. அலிகார் பாலர் பாடசாலை வரை இந்த வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
2. 24/12/2018:
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றிசாட் பதியுதீன் அவர்கள் எங்கள் மாதர் சங்கத்தினூடாக முன்நின்று
மைய வீதிக்கு தேவையான பணி விபரங்களை கொடுத்து அது வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.
3. 09/01/2019:
அன்று பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் ஒதுக்கீட்டினை எங்கள் சங்கத்தினூடாக பெற்றுக்கொண்டு கிரவல் வீதிகள் அமைக்கப்பட்டன.
4. 24/05/2024:
பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் அவர்களின் ஒதுக்கீட்டினை
எங்கள் சங்கத்தினூடாக பெற்றுக்கொண்டு K. ஐகைஸ் என்பவரோடு இணைந்து தார் வீதியானது வெற்றிகரமாக அமைக்கப்பட்டது.
5. 15/10/2024:
மக்தூம் வீதி புனரமைப்பு பணிக்காக
பிரதேச செயலகத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியை
எங்கள் சங்கத்தின் ஊடாக சலமோன் என்பவரோடு இணைந்து
மக்தூம் 3வது வீதியானது புனரமைக்கப்பட்டது.
மத்திய மாதர் அபிவிருத்தி சங்கத்தின் மூலம் மேற்கொண்ட முக்கிய திட்டங்கள்:
* அலிகார் பொது கட்டிடம் (பாலர் பாடசாலை)
சுற்றுச்சுழலில் பசுமைத் தொட்டி அமைத்தல்
• மழைக்காலத்தில் தேக்கத்திற்கான உள்ளக வீதி அமைத்தல்
மேலும் மாணவர்கள் நலனுக்கான கல்வி மற்றும் சுகாதாரம் என்பனவற்றின் வளர்ச்சி இச்சங்கத்தின் இலக்குகளாகும்.
ஊரில் உள்ள காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் இச்சங்கத்தின் நோக்கமாகும்.
தற்போது உள்ள நோக்கங்கள்:
கிராமத்தின் வாழ்வாதார நிலையானது மேம்பட வேண்டும்.
வெள்ளநீர் காரணமாக ஏற்படும் சேதங்களின் நிலைமையினை தவிர்ப்பதற்காக அணைக் கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
தற்போதைய நிர்வாகம்:
* செயலாளர்: R. சிகரா
* உப செயலாளர்: N. றக்கானா
• தலைவி: N. சித்தி றசிதா
* உப தலைவி: P. பஸ்மா
* பொருளாளர்: R. பர்சானா
நிர்வாக உறுப்பினர்கள் (8 பேர்):
1. N. முனபரா
2. T. றசானா 3.A. சிபானா
4. F. சறூரா
5. S. றூபியா உம்மா
6. K. அயிஷா உம்மா
7. S.பைறூசா
8. A. றிப்கா
தகவல்
மத்திய மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் தலைவி: N. சித்தி றசிதா
இடம்: விடத்தல்தீவு, 11 ஆம் வட்டாரம்.