விளையாட்டுத் துறையில் பிராகாசித்த விடத்தல் தீவு வீர  வீராங்கனைகள்

Football யாம்பவான்கள்

ஒரு Football விளையாட்டுக் கழகத்தில் விளையாடும் வீரர்கள், நல்ல திறமையான வீரர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீரரினதும் தனிப்பட்ட திறமை மட்டுமல்லாது, குழுவாக இணைந்து விளையாடும் திறனும் பெற்றிருக்க வேண்டும். ஒரு Football கழகத்தின் வெற்றிக்கு இவை இன்றியமையாத அம்சங்களாகும். ஆயினும் ஒவ்வொரு கழகத்திலும் சில மிகத் திறமையான வீரர்கள் இருப்பார்கள். இவர்களே அணியின் வெற்றிக்குத் தூணாக இருப்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் முன்வரிசையில் விளையாடி, கோல்களைப் போடும் வீரர்களாகவும், சிறந்த கோல் காப்பாளர்களாகவும், தடுப்பாளர்களாகவும் திகழ்வார்கள். உதாரணமாக பிரேசிலுக்கு பெலே (Pele - 72 Goals in 92 international matches) ஆர்ஜென்டீனாவுக்கு மரடோனா, மெஸ்ஸி (அசாத்திய திறமை கொண்டவர்கள்) போத்துக்கலுக்கு, ரோனால்டோ போல. அத்துடன், இவர்களே அணியில் ஆட்ட நாயகர்களாகவும், (Man of the Match) போட்டி நாயகர்களாகவும் (Mar of the Tournament) அறிவிக்கப்படுவார்கள்.

விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழகத்திலும் இப்படிப்ட்ட சிறந்த வீரர்கள் பவர் உள்ளனர். இவர்களின் அபார திறமையால் நூற்றுக்கணக்கான வெற்றிகளை விடத்தல்தீவு உதைபந்தாட்டக் கழகம் பெற்றுள்ளது. பிரபல விளையாட்டு வீரர்களான Brother. சுவக்கீன் ஸ்ரனிஸ்லஸ், திரு ஜோண்சன் புறுணோ பயஸ், திரு. அந்தேனிமுத்து எலியாஸ், திரு. நீக்கிலாப்பிக்ளை அன்ரணி இசுதோர் (Keeper), திரு பஞ்சலிங்கம் எட்வேட்ராஜா, திரு. சவேரியான் பெல்மன் அல்மெய்டன், திரு பரமநாதன் உதயகுமார், திரு. வெற்றிவேல் சதாநந்தன் (Keeper), திரு. நேசராசா லக்ஷ்மன் (Keeper)திரு பொன்ராசா தயானந்தன் (வசந்தன்), திரு. சந்தியாப்பிள்ளை சாந்தகுமார், அமரர், சூசைப்பிள்ளை எட்வின் ஜோன்றாஜ் (Keeper), திரு. மரியாம்பிள்ளை மதுரநாயகம், திரு. செபமாலை எட்வெட் ஜோர்ஜ், திரு. மகாலிங்கம் ராஜநாயகம் (ரெஜி) அமரர் குருசுமுத்து சகாயராசா, அந்தோனிப்பிள்ளை(தங்கரெத்தினம்) ஜீவராஜ் போன்ற வீர்ரகள் சிறந்த விளையாட்டு வீர்களாக திகழ்தனர்.

அதேபோல் லெம்ட மற்றும் அல்பத்தாஹ் கழகங்களில் விளையாடிய 1.A.R. மக்கீன்.M.S.M. சுகார் ,H.M. தௌதீர், H.M. முஜாகித், R.A. அன்பஸ், A.J. அக்ரம்,A.R. முஸவ்விர், N.M. சபீக், I. முர்சித் ,N.P. பிர்தௌஸ் ஆகியோர், திறமையான உதைபந்தாட்ட வீரர்களாக இருந்திருந்தனர்.

பிரசித்தி பெற்ற உதைபந்தாட்ட வீரர்கள்

எமது ஊரில் விஷேடமாக குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல திறமை வாய்ந்த உதைபந்தாட்ட வீரர்கள் இருந்து வத்துள்ளனர். இவர்கள் எமது ஊரின் உதபந்தாட்ட நட்சத்திரங்ளாக திகழ்ந்தனர் (Football stars). இவர்களுள், ஆசிரியர் திரு சூ. இம்மானுவேல் அவர்கள், விடத்தல்தீவின் உதைபந்தாட்ட வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிக்கிறார். அவர் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வல்லுனர் விளையாட்டுக்களில் சிறந்து விளங்கியது மட்டுமல்லாது, தனது அபாரத் திறமையின் மூலம் மன்னார், மாந்தை பிரதேசங்களில் விடத்தல்தீவின் பெயரை பிரபல்யம் பெறச்செய்தார். இவர் சிறந்த உதைபந்தாட்ட வீரனாகவும், பயிற்றுவிப்பாளராகவும், விளையாட்டு நடுவராகவும் திகழ்ந்தார். ஐக்கிய விளையாட்டுக் கழக உருவாக்கத்தில் இவர் முக்கியமான பங்களை வகித்திருந்தார். தொடக்க காலங்களில், எமது வீரர்களை உதைபந்தாட்டத்திலும் ஏனைய விளையாட்டுகளிலும் பயிற்றுவித்து, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று போட்டிகளில் பங்கேற்க வைப்பதிலும், இவர் முக்கிய பங்காற்றியிந்தார். எமது உதைபந்தாட்ட சரித்திரத்தில் இடம்பெறுகின்ற மற்றுமோர் முக்கியமான நபர், திரு. யாகப்பர் ஞானசீலன் ஆவார். இவர் ஒரு சகலதுறை ஆட்டக்காரராக இருந்தார். இவர் புனித சவேரியார் கல்லூரியில் கல்விபயின்ற காலங்களில் உதைபந்தாட்டம் மற்றும் தடகள அணிகளில் இணைந்து, பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்திருந்தார். 1973 ல் பொலிஸ் சேவையில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், மன்னார் பொலீஸ் உதைபந்தாட்ட அணியிலும் இடம்பெற்றிருந்தார். இவர் எமது ஐக்கிய விளையாட்டுக் கழக A அணியில் இணந்து மாந்தை மேற்கு பிரதேசப் போட்டிகளிலும் சம்பியனாக வலம் வந்தார். எல்லாவற்றிற்கும் மேலக விளையாட்டு நடுவராக பயிற்சி பெற்ற இவர், எமது ஊரிலும், வெளியிடங்களிலும் நடைபெற்ற சகல (உதைபந்தாட்டம் உட்பட) போட்டிகளிலும் நடுவராக பணியாற்றி, விளையாட்டின் வளர்ச்சிக்கு பெரும் சேவையாற்றியிருந்தார். திரு. ஞானசீலன் அவர்களும், எமது ஊரின் உதைபந்தாட்ட யாம்பவான்களில் ஒருவரான திரு புறுணோ பயஸ் அவர்களும், எமது தமிழ் பிரதேச நடுவர் சங்கத்தில் அங்கத்தினர்களாக இருந்தனர் என்பதும், இங்கு குறிப்பிடத்தக்கது.

எமது கிராமத்தின் உதைபந்தாட்ட வரலாற்றில் மிகவும் சிறந்த வீரர்கள் வரிசையில் இடம் பிடித்தவர்கள் என்றால், அது புறுணோ பயஸ் மற்றும் எலியாஸ் ஆகிய இருவருமே. 1980/90 களில், இவர்கள் இருவரும் எமது அணியில் முன் வரிசையில் விளையாடும் சிறந்த வீரர்களாக திகழ்ந்தனர். அத்துடன் இவர்கள் இருவரும் மாந்தை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் 1000, 200me ஓட்டப் பந்தயங்களிலும், முதல் இடங்களை பெற்று வந்தனர். இதனால், மிக வேகமாக ஓடி பந்தை கையாளும் திறமை கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் இனைந்து களமிறங்கினால் அணி இலகுவாக வெற்றி பெறும் என்ற அளவுக்கு, அணியின் ஆட்ட நாயகர்களாக வலம் வந்திருந்தார்கள். அணிக்காக கோல்களைப் போடுவதும் இவர்களே விடத்தல்தீவில் மட்டுமல்ல, மாத்தைப் பிரிவு பிரதேசங்களிலும் இவர்களின் பெயர் பிரபலம் பெற்றிருந்தது. மேலும் திரு. பயஸ் அவர்கள் நீளம் பாய்தலிலும் மன்னார் மாவட்டத்தில் முதலிடம் பெற்று, (1984) தேசிய மட்டத்திலும் பங்குபற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விடத்தல்தீவின் focthall என்றதும், முதலில் ஞாபகத்துக்கு வருவது எலியாஸ் அண்ணனும் பயஸ் அண்ணனுமே.

எமது ஊர் உதைபந்தாட்ட வீரர்களில் Brother சுவக்கீன ஸ்ரனிஸ்லஸ் முக்கியமானவர். இவர் Football மட்டுமல்லாது. Basketball, Table Tennis போன்ற விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்கிய ஒரு பல்துறை ஆட்டக்காரராக இருந்தார். மன்னாரில் Football இன் தந்தை என்று அழைக்கப்படும் அளவுக்கு விளையாட்டு வளர்ச்சியில் உறுதுணையாக இருந்தார். இவர் டிலாசால் அருட்சகோதரராக புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஏனைய இடங்களிலும் விளையாட்டுக் கலையினை (football, basketball) இளைஞர்களுக்கு பயிற்றுவித்து அவர்களுக்கு சிறந்த ஆலோசகராகவும் இருந்தார்.

இவரது திறமை யாழ் பல்கலைக்கழகத்திலும் வெளிப்பட்டது. அங்கே Football, Basketball Table Tennis மற்றும் மெய்வல்லுனர் போன்ற அணிகளில் இணைந்து விளையாடியிருந்தார். இது மன்னார் மாவட்டத்திற்கும், குறிப்பாக விடத்தல்தீவிற்கும் பெருமை சேர்த்தது.

இவ்வாறு எமது ஊரின் பெயரை பல்கலைகழக மட்டத்தில், உதைபந்தாட்டத்தில் பிரபல்யம் பெற வைத்த வீரர்கள் வரிசையில், திரு குருசுமுத்து மரிய நியூமன், திரு அருளப்பு நீல் ஆம்ஸ்ரோங், திரு. சந்தியாப்பிள்ளை சாந்தகுமார், திரு. நடராசா ஜெயதீபன், திரு. மரியாம்பிள்ளை மரியசெல்வம், திரு. மரியாம்பிள்ளை மதுரநாயகம், திரு. செபஸ்ரியாம்பிள்ளை சத்திய தீபன், திரு.யேசுதாசன் கரன் ராஜ், திரு ஸ்ரனிஸ்லஸ் ஸ்ரனி கிஷோகர், திரு. புறுனோபயஸ் டிலுசன் பயஸ், திரு ஜெரோம் எமில் றொஸ்கின் யோண்ஸ், திரு இம்மனுவேல் அல்வின் கமல்ராஜ், திரு. சூசைதாஸ் சுயந்தன், திரு. சூசைதாஸ் சுயான், திரு.டேவிட் யூட்கிறேன்டிசன், திரு. புறூனோபயஸ் சிறின் பயஸ், திரு. எமிலியாலுஸ்பிள்னை டெயான்சன் சார்லஸ், திரு. பாஸ்கரன் றொயான்சன், திரு கோல்டன் ரனி டெல்ஷிகன் ஆகியோர் அடங்குவர்

அன்று தொட்டு இன்று வரை எமது ஊரைச் சேர்ந்த சில உதைபந்தாட்ட வீரர்கள், அவர்களின் சிறந்த விளையாட்டுத் திறனின் காரணமாக, மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட அணிக்காக தெரிவாகி, சில முக்கியமான போட்டிகளில் விளையாடி, ஊருக்கு பெருமை சோர்த்திருந்தனர். திரு இம்மனுவல் எட்வின் அமல்ராஜ், திரு சவேரிதஸ் பெல்மன் அல்மெய்டன், திரு. பொன்ராசா தயானந்தன், அமரர். சூசைப்பிள்ளை எட்வின் ஜோண்றாஜ், திரு. மரியாம்பின்னை மதுரநாயகம், திரு. யோகறாயன் ஜோசெப் ஜோண்சன், திரு. பாஸ்கரராசா டினோசன் ஆகிய வீரர்கள் மாவட்ட மற்றும் தேசிய அணிக்காக தெரிவாகியிருந்தனர். இதில் திரு. ஜோண்சன், நாட்டின் பாடசாலை மட்டத்திலான தேசிய அணியில் 18 வயதிற்கு கீழ் பிரிவிலும், 19 வயதிற்கு கீழ் பிரிவிலும் இடம்பிடித்து, ஜோர்தானிலும், தாய்லாந்திலும் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதேபோல் திரு. டினோசன் நாட்டின் பாடசாலை மட்டத்திலான தேசிய அணியில் 19 வயதிற்கு கீழ் பிரிவில் இடம்பிடித்து, இந்தோனேசியாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டுள்ளார். எமது கிராமத்தவர்கள் நாட்டின் தேசிய அணியில் இடம்பெற்றிருப்பது நாம் அனைவருக்கும் பெருமையே.

அதேபோல் 1995 ஆம் ஆண்டு, வடமாகாண ரீதியாக யாழ்ப்பாணத்தில் நடந்த ஈழநாதம் உதைபந்தாட்டப் போட்டியில், மன்னார் மாவட்ட அணி, விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திரு. ஜான்தலைமையில் வந்து பங்குபற்றியிருந்தது. அந்த அணி முதல் ஆட்டங்களில் சிறந்த முறையில் விளையாடியிருக்காத நிலையில், எமது அணியின் சிறந்த உதைபந்தாட்ட வீரர்களாக இந்த காலங்களில் வலம் வந்த திரு மகாலிங்கம் எட்வின்றோஜ், திரு. சந்தியாப்பிள்ளை சாந்தகுமார் ஆகிய இருவரும் திரு. ஜான் அவர்களால் விஷேடமாக அழைக்கப்பட்டு, மன்னார் மாவட்ட அணிக்காக மேற்குறிப்பிட்ட போட்டிகளில் விளையாடி இருந்தனர் (இவர்கள் இருவரும் கல்விக்காக இந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர். இவர்களின் திறமையான ஆட்டத்தினால் யாழில் சிறந்த அணியான ஞானமுருகன் அணியையும், மாவடியைச்சேர்ந்த அணியையும் முறையே 2:0, 6:0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பின்னர் சென் அன்ரனிஸ் பாசையூர் அணியுடன் 0 : 2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றனர். இப்போட்டிகளில் திரு. சாந்தகுமார் மொத்தமாக 4 கோல்களை அடித்து சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றிருந்தார்.

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட ஜாம்பவான்கள்

1980, 90 களில் கழகத்தின் முன்னணி வரிசை வீரர்களாக திரு. யோன்சன் புருனோ பயஸ், திரு. அந்தோனிமுத்து எலியாஸ், திரு. சவேரியான் பெல்மன் அல்மெய்டன் திரு பரமநாதன் உதயகுமார், திரு மகாலிங்கம் ராஜநாயகம், ஆகியோர் விளையாடிவந்த காலங்களில், இவர்களின் சிறந்த விளையாட்டினால் ஏராளமான கோல்களை விரைவாக அடித்து, பல வெற்றிகளை கழகத்திற்கு ஈட்டித் தந்தனர். இவர்களில் பலர் ஆட்ட நாயகர்களாக (Mar of the Matek), போட்டி நாயகர்களாக (Man of the Tournament) தேர்ந்தெடுக்கப்பட்டிந்தனர்.

இடப்பெயர்வின் பிற்பாடும், யோசவாஸ் நகரத்திலும், விடத்தல்தீவிலும், ஐக்கிய விளையாட்டுக் கழகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கி உதைபந்தாட்ட போட்டிகளில் பங்குபெறத் தொடங்கிய பின்னர், மிகவும் திறமையான வீரர்கள் உருவாகியிருந்தனர்.

இவர்களில் முக்கிய வீரர்களாக திரு செபஸ்ரியாம்பிள்ளை சத்திய தீபன், திரு. யோகறாயன் ஜோசெப் ஜோண்சன், திரு. ஸ்ரனிஸ்லஸ் டெசில், திரு அந்தோனிப்பிள்னை டெலக்ஷன், திரு. புறூணோபயஸ் சிறின் பயம், திரு. யேசுராசா கரண்ராஜ், திரு ஸ்ரனிஸ்லஸ் கபில்தேவ், திரு. ஸ்ரனிஸ்லஸ் ஜான்சன், திரு ஸ்ரனிஸ்லஸ் விதர்சன், அமரர் செல்வராஜ் டயஸ் போன்ற வீரர்கள் காணப்டுகின்றனர்.

இவர்களில் ஜோண்சன், டெசில், சிறின் பயஸ் ஆகியோர் பாடசாலை கல்வியை முடித்து கழகங்களில் விளையாடத் தொடங்கிய 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில், மன்னாரிலும், யாழ்ப்பாணத்திலும் மாவட்ட மட்ட போட்டிகளில் கலந்துகொண்டு, ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு ஏராளமான வெற்றிகளைத் தேடித்தந்தனர் என்றால் அது மிகையாகாது. அதே போல் திரு. சத்திய தீபன், ஐக்கியவிளையாட்டுக் கழகம், Unior கழகம் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டோர் FC போன்ற கழகங்களில் களமிறங்கி தனது அபாரத் திறமையால் கோல்களைப் போட்டு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார். இவர் 2023 ல் வணபிதா ஆயர் ஜோசப் இராயப்பு ஆண்டகை நினைவுச் சுற்றுப் போட்டியில், அதிகூடிய கோல்களை போட்ட வீரராகவும் தெரிவு செய்யப் பட்டிருந்தார்.

உதைபந்தாட்டத் துறையில் விடத்தல்தீவு வீரர்களின் முக்கிய பங்களிப்பு

எமது கிராமத்தைச் சேர்ந்த பலர் மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் உதைபத்தாட்டதை மேம்படுத்த பல சேவைகளை ஆற்றி வருகிறார்கள் அவர்களில் குறிப்பாக, மாவட்டத்திலும், மாவட்டத்திற்கு வெளியிலும் பாடசாலைகளில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாகவும்,

உடற்கல்வி ஆசிரியர்களாகவும், திரு.யோ. ஜோண்சன், திரு. அ. டெலக்ஷன், திரு. ஞானசேகரம் கிசோகுமார் மற்றும் திரு. எட்வேட்ராஜா ஜெனோசன் ஆகியோர் பணியாற்றிவருகின்றனர். எமது மண்ணின் மைந்தர்களா உடற்கல்வி ஆசிரியர்களாக இருக்கும் இவர்கள், எமது ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் வீரர்கள் என்பது, கழகத்திற்கும், ஊருக்கும் பெருமை சேர்க்கும் விடையமாகும்.

இதே போன்று 1970, 80 காலப்பகுதிகளில் எமது ஊரின் விளையாட்டுக் கழகங்களுக்கா விளையாடி பின் இலங்கை பொலிஸ் சேவையில் தன்னை இணைத்துக் கொண்ட திரு சிலுவைராசா பொனிப்பாஸ் அவர்கள் 2013 ம் ஆண்டு வரை பலவேறு மட்டங்களில், இலங்கை பொலிஸ் உதைபந்தாட்டக் கழகத்தில் (Member of the Sri Lanka Police Footbal team) அங்கத்தவராக இருந்ததுடன் 1994 ஆம் ஆண்டில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் தேசிய உதைபந்தாட்ட நடுவராக (National Football Referee of the Football Federation of Sri Lanka) நியமனம் பெற்று பணியாற்றியிருந்தார். அத்துடன், 2007 இல் உதைபந்தாட்ட நடுவர்களை பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித் திட்டத்திலும் தன்னை இணைத்து, நாட்டின் உதைபந்தாட்ட மேம்பாட்டிற்கு தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.

அதேபோல திரு மரியாம்பிள்ளை மதுரநாயகம் அவர்கள் 2013 - 2024 காலப்பகுதியில், மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட லீக்கின் ஸ்தாபகத் தலைவராகவும், 2018 இல் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் மருத்துவ மற்றும் ஆராச்சி அபிவிருத்தி செயற்குழு உறுப்பினராகவும், (Member of medical committee, research and development committee of Football Federation of Sri Lanka) மேலும் 2019ம் ஆண்டிலிருந்து ஆசிய பிராந்தியத்தின் உதைபந்தாட்ட கூட்டமைப்பில் ஒரு மருத்துவ அதிகாரியாகவும், ஊக்க மருந்து தடுப்பு அதிகாரியாகவும், மற்றும் தொற்றுநோய்த் தடுப்பு அதிகாரியாகவும் (AFC.Medical officer, Doping Control officer, Infection Control Officer) பணியாற்றி வருகின்றார். இதை விட இவர் ஒரு உதைபந்தாட்ட நடுவராகவும் (Grade 3 football referee) தகுதி பெற்றுருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது எம் மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

அதேபோல் மண்ணின் மைந்தனும் ஐக்கிய விளையாட்டுக்கழக முன்னாள் உதைபந்தாட்ட வீரருமான திரு கிறிஸ்தோப்பர் சுரேஸ், கடந்த 27 வருடங்களாக புனித பத்திரிசியார் கல்லூரியின் உதைபந்தாட்ட பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுகின்றார். இதுவும் நம் ஊருக்கு பெருமையே.

ஐக்கிய விளையாட்டு கழக வலைப்பந்தாட்ட அணி - Netball Team

எமது கிராமத்தில் அன்றிலிருந்து இன்று வரை பெண்கள் மிகவும் திறமைசாலிகளாக இருந்து வந்துள்ளனர். கல்விதொட்டு, கலை. விளையாட்டு என்று எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் நின்று சாதனைகள் புரித்து வருகிறார்கள். அதிலும் சிறப்பாக கல்வியிலும், விளையாட்டிலும் அண்மைகாலங்களில் விடத்தல்தீவு பெண்களின் திறமைகளும் சாதனைகளும் அதிகரித்து வருவதை நாம் நேரடியாக காணக்கூடியதாக உள்ளது. இந்த வரிசையில் எமது பெண்களின் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு சிறந்த உதாரணமாக எமது வலைப்பந்தாட்ட அணியை குறிப்பிடலாம்.

விடத்தல் தீவில் 1979 / 1980 காலப்பகுதிகளில் இருந்து வலைப்பந்தாட்டம் பிரபல்யம் பெறத்தொடங்கியது எனலாம். ஆரம்ப காலகங்களில் இவ்விளையாடில் ஈடுபட்டிருந்தவர்களில் முக்கியமானவர்களாக: திருமதி. தங்கமலர் (கிறிஸ்ரியான்) சேகர். திருமதி. அலிஸ் மேரி(அந்திரேஸ்)ஞானசீலன், திருமதி.கன்னிமலர் (செபமாலை) செல்வம், திருமதி. கலாமதி (ஞானமணி) மோகன், செல்வி. கிறிசாந்தி கிறிஸ்ரியான், செல்வி. அமலோற்பவி யாகப்பு, திருமதி. மரியசீலி (செபரத்தினம்) றோய் றமேஸ்குமார், திருமதி ஐறின்றோகினி (யாகப்பு) பீற்றர் திருமதி. உருசில்வா (தொபியாஸ்) தேவராசா, திருமதி மேரிராணி (சவேரியான்)/பீற்றர், திருமதி. அமலோற்பவி (மிக்கேல்) பேர்னாட் ஆனந்தநாயகம், செல்வி. மேரியன்னா அந்தோனிப்பிள்ளை, ஆகியோர் காணப்படுகின்றனர். இவர்களில் திருமதி. தங்கமலர் திருமதி, கலாமதி, திருமதி. அவிஸ் மேரி, செல்வி கிறிசாந்தி, திருமதி கன்னிமலர் ஆகியோர் தங்கள் பாடசாலைகளில் வலைப்பந்தாட்டத்தில் பெற்ற அனுபவங்களை, எம் வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கும் சொலிக்கொடுத்து, ஆரம்ப நாட்களில் இணைந்து விளையாடி வந்தனர். மேலும் எம் வீராங்களைகளுக்கு வலைப்பந்தாட்ட விதிகள், நுட்பங்களை சொல்லிக் கொடுத்து பயிற்சிகளை வழங்கி வந்ததுடன், வலைப்பத்தாட்ட போட்டி நடுவர்களாகவும், பணியாற்றியிருந்தனர். மேலும் திருமதி கன்னிமலர் அவர்கள் விளையாட்டு பயிற்சி ஆசிரியராகவும் பெண்களுக்கான விளையாட்டு அதிகாரியாகவும் (L. S. O.) 1982 ல் எமது மண்ணில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எமது வலைப்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு உற்சாகமூட்டி ஒவ்வொரு தடவையும் அணியினர் வெளியிடங்களில் நடைபெறுகின்ற போட்டிகளில் கலந்து கொள்ள, பதிவுகள், போக்குவரத்து மற்றும் ஏனைய அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் ஐக்கிய விளையாட்டு கழக நிர்வாகிகள்(தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள்) முன் நின்று செயற்பட்டு வந்துள்ளனர். இவர்களில் முக்கியமானவர்களாக: திரு யா. ஞானசீலன், அமரர். சு. இம்மானுவேல், திரு. ஜோண்சன் புறுணோ பயஸ் ஆகியோர் காணப்படுகின்றார்கள்.

வலைப்பந்தாட்ட விளையாட்டில் எமக்கென ஒரு வரலாறு உண்டு. அதாவது 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற இடப்பெயர்வுக்கு முன்னுள்ள காலப்பகுதிகளில், மன்னார் மாவட்டத்தில் எமது வலைப்பந்தாட்ட அணி ஒரு சிறந்த அணியாகத் திகழ்ந்ததுடன், மாந்தை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்லாப் போட்டிகளிலுமே தொடர்ந்து சம்பியனாக வலம் வந்ததே. அந்த வரலாறாகும். இது எமக்கென ஓர் அடையாளத்தை பிராந்திய மட்டத்தில் ஏற்படுத்தி இருந்ததுடன், எமது விளையாட்டு பண்பாட்டில் ஒரு முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

எமது ஐக்கிய விளையாட்டுக் கழக வலைப்பந்தாட்ட அணியினர் தொடர்ந்து வெற்றிகளை பெற்று, எமது பிரதேசத்தில் இருந்த ஏனைய அனைத்து வலைப்பந்தாட்ட அணிகளுக்கும் சவாலாக இருந்துள்ளனர். பயிற்றுவிப்பாளர்கள் எவரும் இல்லாமல், நாளாந்தம் நேரங்களில் விளையாடுவதை மட்டும் பயிற்சிகளாகக் கொண்டு போட்டிகளில் கலந்து வெற்றிகளைக் குவித்தனர். அந்த அளவுக்கு இவ்விளையாட்டுக்குத் தேவையான உடல்வாகும் (உயரம்) களைக்காது நீண்ட நேரம் விளையாடும் ஆற்றலும் எம் கிராமப் பெண்மணிகளிடம் இயல்பாகவே காணப்பட்டது.

எமது பெண்களின் வலைப்பத்தாட்ட திறன் பற்றி அவ் அணியில் அங்கம்வகித்த செல்வி மேரி சுஜாதா ஜோன்சன் பின்வருமாறு கூறுகிறார்:-

"நாங்கள் வலைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டுவதற்கு காரணமாக அமைந்தது எமது மூத்த சகோதரிகளின் வினையாட்டுத் திறன் என்றால் அது மிகையாகாது. நாங்கள் சிறுவயதில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போது. எம்மவரின் விளையாட்டுக்களை கண்டு ரசித்து. ஈர்க்கப்பட்டோம். அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஈட்டிய வெற்றிள், மேலும் மேலும் விளையாடின் மீது அபார பற்றை ஏற்படுத்தியது. சிறப்பாக திருமதி S.கலாமதி திருமதி S.சகாயமேரி (விற்றேசன் )திருமதி P.பிரேமலதா, திருமதி S. நேசமலர் போன்ற வீரர்களிள் விளையாட்டு மிகவும் சிறப்பாக இருக்கும். இவர்கள் வலைப்பந்தாட்டப் போட்டிக்குச் சென்றால் வெற்றிக் கிண்ணங்களுடனேயே எது கிராமம் திரும்புவார்கள். இவ்வாறு இவர்கள் விளையாட்டை நேசித்த விதம், விளையாட்டின் மீது கொண்ட தாகம், விளையாட்டிற்கு கொடுத்த முக்கியத்துவம் எமக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தியது. எனவேதான் பள்ளிப் பருவத்திலே, பாடசாலை மைதானத்தில் பெரியவர்களோடு சேர்ந்து விளையாடுவோம். நாம் பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில், 15 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் வலைப்பந்தாட்ட விளையாட்டுக்களில் பங்கு பற்றி, கொத்தணி மற்றும் வலய மட்டப் போட்டிகளில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது"

எமது விடத்தல்தீவு வலைப்பந்தாட்ட அணி ஒரு திறமைவாய்ந்த அணியாக இருப்பதற்கு இன்னுமொரு காரணம், பாடசாலை மட்டத்தில் பெறப்படும் வலப்பந்தாட்ட விளையாட்டுப் பயிற்சிளும் போட்டிகளுமே எமது கிராம வலைபந்தாட்ட வீராங்கனைகளில் பெரும்பாலானவர்கள் தங்கள் பாடசாலை நாட்களிலிருந்தே வலைப்பந்தாட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களே.

விடத்தல்தீவின் சிறந்த வலைப்பந்தாட்ட (Netball) வீராங்கனைகள்

எமது கிராமத்தின் வலைப்பத்தாட்ட வரலாற்றில் பல திறமை வாய்ந்த வீராங்கனைகள் தோன்றி சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். எல்லோரும் தாங்கள் விளையாடும் நிலைகளில் (positions) திறமையானவர்களாக இருந்தனர். குறிப்பாக: கலாமதி, கன்னிமலர், கிறிசாந்தி, சகாயமேரி (விற்றேசன்) நேசமலர், பிறேமலதா, மேரி சுஜாதா, ஷைமினி, பெமிலா செறின், கிரிஜா, எமிலி, ஆன் சௌமியா, டன்சி டிலைக்சினி போன்றவர்கள் சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனைகளாகவும் வலைப்பந்தாட்டத்தில் சிறந்த சூட்டர்ஸ் ( hest sheeters ) ஆகவும் விளங்கினர். இவர்கள் தங்கள் கையில் பந்தை எடுத்து சூட் பண்ண எத்தனிக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும், அது வலைப்பந்து வளையத்துக்குள் விழுவதை 100 வீதம் உறுதியாக்குவார்கள். அந்த அளவுக்கு திறமை வாய்ந்த வீராங்கனைகளாக திகழ்தார்கள். இவர்களில் பலர்ஊருக்கு வெளியே பிராந்திய, மாவட்ட தேசிய மட்ட அணிகளிலும் மற்றும் பல்கலைக்கழக அணிகளிலும் விளையாடி, எமது ஊரின்

பெயரை உலகறியச் செய்தவர்கள். இவர்களில் குறுப்பாக திருமதி. நேசமலர் ஸ் ரீபன் (யாழ் பல்கலைக்கழக வலைப்பந்தாட்ட அணி), திருமதி. பிறேமலதா பிறீமன்ராசா (யாழ் பல்கலைக்கழக வலைப்பந்தாட்ட அணி) செல்வி கிரிஜா அருள்பிரகாசம் (மாந்தை மேற்கு வலைப்பந்தாட்ட அணி, மன்னார் மாவட்ட வலைப்பந்தாட்ட அணி, யாழ் பல்கலைக்கழக அணி) செல்வி. எமிலி பியாண்டா மோனிசா (மாந்தை மேற்கு வலைப்பந்தாட்ட அணி, மன்னார் மாவட்ட வலைப்பந்தாட்ட அணி, கிழக்கு பல்கலைக்கழக வலைப்பந்தாட்ட அணி) செல்வி. துசிக்கா சிலுவைராசா (மாந்தை மேற்கு வலைப்பந்தாட்ட அணி, மன்னார் மாவட்ட வலைப்பந்தாட்ட அணி), மேடம் குஜானா எட்வேட்ராசா (மாந்தை மேற்கு வலைப்பந்தாட்ட அணி, மன்னார் மாவட்ட வலைப்பந்தாட்ட அணி) செல்வி லக்சினி (பெல்மன் ராஜன்) நிசாந்தன் மாந்தை மேற்கு வலைப்பந்தாட்ட அணி) செல்வி. மறிஸ்ரெலா தேவ அமலதாஸ்(மாந்தை மேற்கு வலைப்பந்தாட்ட அணி)

மேலும் செல்வி. கிரிஜா அருள்பிரகாசம் யாழ் பல்கலைக்கழக வலைப்பந்தாட்ட அணியில் - (2022 - 2024) இணைந்து சிறந்த வீராங்கனைக்கான விருதுகளையும் (Net ball Fall colour award 2022 - 2024), ஸ்ரீலங்கா யுத் கோர்ப்ஸ் போட்டி சிறந்த வீராங்கனை விருது ( Sri Lanka Youth Corps Tournament Best playver award fowr Netball in 2017), மன்னார் மாவட்ட வலைப்பந்தாட்ட அணியின் சிறந்த வீராங்களை விருது, (Mannar District Nethall Association Best Player award for Netball - 2022) மற்றும் யாழ்ப்பாண மாவட்ட வலைப்பந்தாட்ட சம்மேளத்தினால் நடத்தப்பட்ட போட்டி- சிறந்த சூட்டர்ஸ் விருது (Jaffna District Netball association best shooter award in -2024) போன்ற பல விருதுகளை வென்று மண்ணிற்கு பெருமை சேர்திருக்கிறார்.

கிரிக்கெட் ( Cricket) ஆட்டத்தில் முக்கிய பங்கு வகித்த வீரர்கள்

எமது கிராமத்தில் மும்மதத்தையும் சேர்ந்த இளைஞர்கள் அதிக ஈடுபாடு காட்டி விளயாடி வந்த விளைவியாட்டு என்றால் அது கிரிக்கெட் விளையாட்டுத்தான். எமது ஊரில் இருந்து யாழப்பாணம் கல்வி கற்க சென்றவர்களே இவ் விளையாட்டை அறிமுகப்படுத்தினர். ஆரம்ப காலத்தில் அப்பலோ !! என்ற கழகத்திலும் பின்னர் ப்புளூ ஸ்ரார் அணியிலும் பின்னர் லெம்டா மற்றும் அல்பதாஹ் அணிகளிலும் இணைந்து விளையாடி வந்தனர்.

ஆரம்பகால அப்பலோ வீரர்களின் விபரங்கள் பின் வருமாறு.

  • திரு. மீரான் முகைதீன் ஷாஜஹான்

  • திரு. அப்துல் மஜீத் முகம்மது முஹ்ஸின்

  • திரு. துரையப்பா அந்தோணிப்பிள்ளை (மின்னி)

  • திரு. முகம்மது இஸ்மாயில் றவூப் நிஸ்தார்

  • திரு. முகம்மது சுல்த்தான் முகம்மது மதீன்

  • திரு. முகம்மது கௌது அப்துல் வாகித்

  • திரு. இஸ்மாயில் மீரான் முகைதீன்

  • திரு. சுல்தான் அப்துல் காதர் முகம்மது சாலிஹ்

  • திரு. சோமசுந்தரம் பாலேந்திரா

  •  திரு. முகம்மது அலி சாகுல்ஹமீது

  • திரு. சாகுல்ஹமீது சகாப்தீன்

  •  திரு. முகம்மது கௌது காலீத்

ப்ளூ ஸ்டார் கிரிகெட் கழகம் (Blue star cricket club)

எமது ஊரில் கிரிக்கெட் விளையாடில் ஆர்வம் கொண்டிருந்த இளைஞர்கள், 1975ம் ஆண்டளவில் Blue Star என்ற அழகான பெயரில் தங்களை ஒரு Cricket கழகமொன்றுக்குள் ஒழுங்கமைத்து தாமாக பயிற்சிகளை மேற்கொண்டு, ஊருக்குள்ளேயும் வெளியேயும் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்கள். திரு. யா. டொமினிக், திரு. ம. அல்போண்ஸ், திரு. நீ சீமான்பிள்ளை (GS) திரு. சி. பொனிப்பாஸ், திரு. இ. எட்வின் தேவராஜ் (ரவி), திரு. மி.மரியதாஸ், திரு. ச மாசில்லாமணி, திரு. ஞா. பெர்னாட், ஆனந்தநாயகம், திரு. மி. தியூசியார், திரு. அ. லோறன்ஸ், திரு செ. அந்தோனிப்பிள்ளை ஆகியோர் Blue Star கழகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியிருந்தனர்.

லெம்டா விளையாட்டுக் கழகம்:

1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லெம்டாகழக ஸ்தாபகர்களில் முக்கிய உறுப்பினர்களாக: ஜமால்தீன் முறுசலீன், அசன் ராவுத்தர் மக்கீன், அமீர் முகம்மது பாயிஸ் முகம்மது அப்துல் காதர் அமீன், மற்றும் முகம்மது காஸிம் சுஐப், ஆகியோர் இயங்கி வந்தனர் . இதன் போஷகர்களாக முகம்மது கௌது அப்துல் முகைமீன், முகம்மது இஸ்மாயில் றவூப் நிஸ்தார் ஆகிய இருவரும் இருந்து செயலாற்றி வந்தனர். லெம்டா விளையாட்டுக் கழகத்தின் Cricket அணி, கிராமத்தில் மிகத்திறமைவாய்ந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழ்ந்தது. அதி சிறந்த வீரர்கள் இதில் இணைந்து ஊருக்குள்ளேயும் பிராந்திய மற்றும் மாவட்ட மட்டங்களில் நடைபெற்ற அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று தமது அபார திறமையை வெளிப்படுத்தி இருந்தனர். இதேவேளை உதைபந்தாட்ட கழகமாக உருவாக்கப்பட்ட அல்பத்தாஹ் விளையாட்டுக் கழகமும், காலப்போக்கில் கிரிக்கெட்டிலும் ஓர் அணியை உருவாக்கி போட்டிகளில் பங்குற்றி வந்தனர்.

Vidathaltivu Hindu Young club

எமது கிராமத்தில் 85, 86 களில் கிரிக்கெட் விளையாட்டு பிரசித்தி பெற்றிருந்த காலகட்டத்தில் Blue Sta மற்றும் லெம்டா போன்ற கிரிக்கெட் கழகங்கள் செயற்பட்டு வந்த நிலையில், விளையாட்டில் ஆர்வம் கொண்ட எமது இந்து சிறுவர்கள் இணைந்து உருவாக்கிய கழகமே Vidathal tivu Hindu Young club ஆகும். இது எமது கிராமத்தை சேர்ந்த அரசரெட்டினம் நக்கீரனின் முயற்சியில் உருவான ஒரு சிறிய கழகமாகும். இதில் எமது ஊர் இந்து சிறுவர் மற்றும் இளைஞர்கள் இணைந்து கிரிக்கெட் மற்றும் உதைபந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களில் ஈடுபட்டதுடன், ஊரில் உள்ள ஏனைய சிறுவர் கழகங்களுடன் இணைந்து போட்டிகளிலும் பங்குபற்றி வந்தனர்.

இதில் இணைந்து விளையாடிய விளையாட்டு வீரர்களின் விபரங்கள் கீழ் வருமாறு.

  • நடராஜா உதயதீபன்

  • நடராஜா ஜெயதீபன்

  • அரசரெட்டினம் நக்கீரன்

  • அரசரெட்டினம் புஷ்பகாந்தன்

  • துரைராஜா நிர்திகன்

  • துரை ராசா கமல்கரன்

  • சிறந்த வீரர்கள் (Cricket)

எமது Blue star cricket அணியின் ஆரம்ப கால இடது கை துடுப்பாட்ட வீரராக ஆ.யேசுதாசன் அவர்களும், சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக ச. மாசில்லாமணி, மி. தியூசியான். யா. டொமினிக், சி. பொனிபாஸ், மி. மரியதாஸ், ஞா. பெர்னாட், ஞா. மங்களதாஸ், அ.வோறன்ஸ், அ. அருள் நாயகம் சிறில், உ சறூன்றபீக் ஆகியோர் விளங்கினர். அணியின் சிறந்த பந்துவீச்சாளராக தோ. மரியதாஸ், அதிக விக்கட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்திருந்தார். அத்துடன் Blue Star cricket அணியின் keeper செ.அந்தோனிப்பிள்ளை சிறப்பான கிறிக்கெட் ஆட்டத்தையும் வெளிப்படுத்திய அந்த நாட்கள் என்றும் பசுமையே.

எமது லெம்டா அணியிலும் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக A.R. மக்கீன், H.M. நௌதீர், M. சுஐப், H.M. முஜாகித், R.A. அன்பஸ், A.J. அக்ரம், A.S. பாயிஸ், A.M. பாயிஸ், A.M. ஹலீம் ஆகியோர் திகழ்ந்தனர்.

ஜோசேப்வாஸ் நகர ஐக்கிய விளையாட்டுக் கழக புதிய கடினப்பந்து கிரிக்கெட் கழகம் (Lether ball Cricket club)

இடப்பெயர்வின் பிற்பாடு நீண்ட காலமாக கிரிக்கெட் கழகம் ஒன்று இல்லாத நிலையில், ஒரு புதிய கழகம் ஒன்றை உருவாக்கி செயற்படுத்தும் முயற்சியில் எமது கிராமத்தைச் சேர்ந்த சிவ கிரிக்கெட் ஆர்வலர்கள் அயராது முயற்சித்து வந்தனர். இவர்களின் அயராத முயற்சியின் பயனாக 2022 ம் ஆண்டு, மன்னார் கிரிக்கெட் துடுப்பாட்ட சங்கத்தில் ஜோசேப்வாஸ் நகர ஐக்கிய விளையாட்டுக் கழக துடுப்பாட்ட அணி என்ற பெயரில், ஒரு கடினப்பந்து கிரிக்கெட் அணியாக (Leather ball cricket club) பதிவு செய்யப்பட்டு செயற்படத் தொடங்கியது. இதளை ஆரம்பிப்பதில் முன் நின்று உழைத்தவர்களில் முக்கியமானவர்களாக: திரு. சசிகரன் திரு. றெக் ஷன், திரு றொஜிற்றன் கெனடி மற்றும் திரு. கொலிங்ரன் ஆகியோர் உள்ளனர். இவ்வளவு காலமும் மென்பந்து கிரிக்கெட்டில் ஈடுபட்டு வந்த எமது ஊர், முதல் தடவையாக கடினப்பந்து கிரிக்கெட் ஆட்டத்தை ஆரம்பித்த விடையமானது, எமது கிரிக்கெட் வராலாற்றில் ஒரு பெரிய விடையமாக பாரட்டப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

எமது அணியில் பல சிறத்த துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுகின்றார்கள். எமது கழகத்தில் இருந்து விண்ணப்பித்த 13 பேரில் 9 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு மன்னார் super league போட்டியில் விளையாடியிருந்தனர். இது எமது கழகத்துக்கு பெருமையை அனிக்கும் ஒரு விடையமாகும். எமது கழக வீரர் பிரவிந் போட்டி ஒன்றில் சிறப்பாக விளையாடி சதம் (147 றண்) அடித்திருந்தார். அதேபோல் பேடின் பெனோ கொலிங்ரன் மற்றும் டெலக்ஷணும் வேவ்வேறு போட்டிகளில் அரை சதம் அடித்திருந்தார்கள். மேலும் சிறந்த பந்து வீச்சாளர்களாக றொஜிற்றன் கெனடி, பேடின் பெனோ, சானுஜன் கௌடி மற்றும் அமல்ராஜ் ஆகியோர் காணப்படுகின்றனர். இவர்களில் அமல்ராஜ் முருகன் கோயில் சுற்றுப்போட்டியில் சிறந்த பந்து வீச்சானராக தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மெய்வல்லுனர் போட்டிகளில் விடத்தல் தீவு வீர வீராங்கனைகள்

பாடசாலை மட்டங்களில் மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்துவதில் இருந்து, உதவி அரசாங்க அதிபர் பிரிவு , மாவட்ட, தேசிய மட்ட போட்டிகள், மற்றும் பல்கலைக்கழகளின் தடகள் போட்டிகள் வரை, எமது ஊரவர்கள் காலாகாலமாக கலந்து கொண்டு சாதனைகளை படைத்து வருகின்றனர். ஆரம்ப காலங்களில், அடம்பன் உதவி அரசாங்க அதிபர் பிரிவினால் நடத்தப்படும் மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்வதை, எமது கிராம இளைஞர் யுவதிகள் வாடிக்கையாக கொண்டிருந்தனர். இப்போட்டிகளில் குறிப்பாக 100 மீற்றர், 200 மீற்றர், தூர ஒட்டங்கள், உயரம் பாய்தல், நீளம் பாய்தல், குண்டெறிதல் ஆகிய போட்டிகளில் எமது வீர வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இவ்வாறு பங்குபற்றிய போட்டிகளில் முதலாம், இரண்டாம் இடங்களை பெறுபவர்கள் அனேகமாக எமது வீர வீராங்கனைகளாகவே இருக்கும். இதனால் பல தடவை எமது கிராமமே அதவது எமது ஐக்கிய விளையாட்டு கழகமே, AGA division மெய்வல்லுனர் போட்டிகளில் சம்பியனாக (Overall champion in games and athletic) தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

இப்போட்டிகளில் கலந்துகொண்டு எமது கிராமத்திற்கும் தமக்கும் பெருமை சேர்த்த வீர வீராங்கனைககளின் விபரங்கள் கீழ வருமாறு:

மீள்குடியமர்வின் பின்னரான மெய்வல்லுனர் சாதனைகள்

எமது இளைஞர், யுவதிகள் 2000 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதிகளில், மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகளில் ஈடுபாடு காட்டிவருவது மிகவும் குறைவகவே காணப்படுகிறது. 1999 ஆண்டு இடப்பெயர்வும் இதற்கொரு முக்கிய காரணமாகும். இப்போட்டிகளில் நாம் மீண்டும் பங்குபற்ற தொடங்கியபின், மறுபடியும் நாம் எமது ஐக்கிய விளையாட்டு கழகம் சார்பில் போட்டியிட்டு எமது திறமைகளை வெளிப்படுத்தத் தொடங்கினோம். எடுத்துக்காட்டாக: எமது ஐக்கிய விளையாட்டு கழகம் 2011 ஆண்டுகளில் மாந்தை உதவி அரசாங்க அதிபர் பிரிவு மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்று சம்பியனாக வந்தது.

எமது கிராமத்தில் அண்மைக்காலமாக செயற்பட்டு வரும் Union கழக வீர வீராங்கனைகள், இவ்விளையாட்டுக்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் என்பது, மாந்தை பிரதேச மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இவர்களின் சாதனைகளிலிருந்து தெரியவருகிறது. இவர்கள் மாந்தை பிரதேச மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில், கடந்த 6 வருடங்கள் (2018 - 2023 வரை) -1 ம் இடத்தைப் பிடித்து, overall சம்பியனாக வந்து சாதனை படைத்துள்ளனர் (2024-3 ம் இடம்- 2nd runner up). இது எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு விடையமாகும்.

இதேவேள எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணியின் வீர வீராங்கனைகளும் மாந்தை பிரதேச மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொண்டு கடந்த இரண்டு வருடங்களாக (2023, 2024) இரண்டாம் இடத்தை பெற்றிருந்தனர். எனவே ஒட்டுமொத்தத்தில் இவ் மெய்வல்லுனர் போட்டிகளில் எமது ஊரைச் சேர்ந்த வீர வீராங்கனைகளே overall சம்பியனாகவும், 2 ம் இடத்தையும் ( Rumner up) பிடித்து மாந்தைப் பிராந்தியத்தில் பெயர் பதித்துள்ளனர்.

இலங்கைப் பலகலைக்கழகங்களின் விளயாட்டு வரலாற்றில் சாதனைகளும் எம்மவரின் பங்களிப்பும்

எமது ஊர் மக்கள், அவர்கள் செல்லுமிடமெல்லாம். ஏதோ ஒரு வகையில் தங்கள் அடையாளத்தை பதித்து வந்துள்ளனர். ஆரம்ப காலங்களில் கூடுதலாக கலை மற்றும் விளையாட்டுத் துறையிலேயே இந்தப் பங்குபற்றலும், திறமைகளை வெளிப்படுத்தி வருவதும் அமைந்திருந்தது. ஆனால், சமீபத்திய காலங்களில் இந்த சாதனைகள் பொதுவாக எல்லாத் துறைகளிலும் நிகழ்த்தப்படுகின்றன. அதிலும் குறிப்பாக கல்வியில் எம் ஊரவரின் சாதனைகள் பெயர் சொல்லும்படியாக உள்ளது. அந்த வகையில், பல்கலைக்கழக அளவில் எமது ஊர் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பங்குபற்றிய விளையாட்டுக்களின் விபரங்களையும், அதில் காட்டிய திறமைகளையும் இத்தலைப்பின் கீழ் சுருக்கமாக பார்க்கலாம்.

  • அருட்சகோதரர் சுவக்கீன் ஸ்ரனிஸ்லஸ்: யாழ் பல்கலைக்கழக்கம் (1986/1987) உதைபந்தாட்ட அணி- Full colours award, மேசைப்பந்தாட்ட அணி (Table tenmis) - Full colours award மெய்வல்லுனர் அணி (athletic- 400M ground record)- Full colours award, கூடைப்பந்தாட்ட அணி (Basketball)- Full colours award, Sports கவுன்சில் தலைவர் (Sports council president), Table tennis (Noth east province)

  • குருசுமுத்து மரிய நியூமன் பேராதனைப்பல்கலைக்கழகம் (87/88) உதைபந்தாட்ட அணி - Captain, Full colours award

  • அருளப்பு நீல் ஆம்ஸ்ரோங் : யாழ் பல்கலைக்கழக்கம் (1989-1990) உதைபந்தாட்ட அணி- Full colours award. கூடைப்பந்தாட்டம் அணி (Basketball), மெய்வல்லுனர் அணி (athletic - ground record in 110m hurdle high jump, 400m hurdle)- Full colours award and vice-captain. மேசைப்பந்தாட்டம் (Table temmis)- Half colours award, Table temmis சம்பியன் (Jafna district 1998) சூசைப்பிள்ளை கருணாகரன் -பேராதனை பல்கலைக்கழகம் (1997/1998)- கூடைப்பந்தாட்ட அணி (Basketball)- Full colours award

  • மரியாம்பிள்ளை மரியசெல்வம்- யாழ் பல்கலைக்கழகம் (1997/1998). உதைபந்தாட்ட அணி Full colours award, மெய்வல்லுனர் அணி (athletic 100m and 3000m)- Full colours award, கூடைப்பந்தாட்ட அணி (Basketball)-captain, Full colours award and member of Jaffna district team. Sports கவுன்சில் தலைவர் (Sports council president-2000), பேராசிரியர் அழகையா துரைராஜா பல்திறனர் விருது (Prof A. Thurairajaha Gold Modal for all round performance University of Jaffna 2000), பேராசிரியர் அழகையா துரைராஜா பல்திறனர் விருது கலைப்பீடம் (Prof A

  • Thurairajaha Gold Modal for all round performance at Faculty of Arts University of Jaffna 2000.)

  • திருமதி நேசமலர் (செபஸ்ரியாம்பிள்ளை) ஸ் ரீபன் - யாழ் பல்கலைக்கழக்கம் (1991/1992). வலைப்பந்தாட்ட அணி

  • திருமதி பிறேமலதா (மரியநாயகம்) பிறீமன்ராசா: யாழ் பல்கலைக்கழகம் (1991/1992) வலைப்பந்தாட்ட அணி and Hockey அணி

  • சந்தியாப்பிள்ளை சாந்தகுமார்: யாழ் பல்கலைக்கழகம் (1991/1992). உதைபந்தாட்ட அணி- Vice captain, Full colours award. Hockey - Full colours award,

  • நடராசா ஜெயதீபன்: யாழ் பல்கலைக்கழகம் (1999/2000). உதைபந்தாட்ட அணி- Full colours award. Hockey அணி – Vice captain and Captain, Full colours award. யாழ் மாவட்ட Hockey அணி.

  • மரியாம்பிள்ளை மதுர நாயகம்:பேராதனை பல்கலைக்கழகம் (2000/2001). உதைபந்தாட்ட அணி - Captain, Full colours award and won SLUSA award. மேசைப்பந்தாட்டம் (Table temis) - Half colours award. Sports Member-2003

  • செபஸ்ரியாம்பிள்ளை சத்திய தீபன்: ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் (2002/2003) உதைபந்தாட்ட அணி- சிறத்த வீரர் விருது and Full colours award, மெய்வல்லுனர் அணி (athletic- ground record in pole vault)-சிறந்த மெய்வல்லுனர் விருது

  • திரு, இம்மனுவேல் அல்வின் கமல்ராஜ்: உதைபந்தாட்ட அணி- Full colours award,பேராதனை பல்கலைக்கழகம் (2003/2004 ).

  • திரு. புறூனோபயஸ் சிறின் பயஸ்: யாழ் பல்கலைக்கழகம் (2009/2010). உதைபந்தாட்ட அணி-Captain and Full colours award and Won SLUSA award. மெய்வல்லுனர் அணி-(athletic 100m, 110m Hurdle and long jump) Sports govej (Sports council president), and outstanding spotman award.

  • திரு.யேசுதாசன் கரன் ராஜ் யாழ் பல்கலைக்கழகம் (2009/2010). உதைபந்தாட்ட அணி- Full

  • colours award,

  • திரு. ஸ்ரனிஸ்லஸ் ஸ்ரனி கிஷோகர்: மொறட்டுவைப் பல்கலைக்கழகம் (2009-2010) உதைபந்தாட்ட அணி- Full colours award. Played for Moratuwa university football team in Asian university tournament in Malaysia 2010.

  • திரு. புறுனோபயஸ் டிலுசன் பயஸ்: ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் (20011/2012). உதைபந்தாட்ட அணி- Full colours award,

  • திரு. ஜெரோம் எமில் றொஸ்கின் யோண்ஸ்: யாழ் பல்கலைக்கழகம் (2013/2014). உதைபந்தாட்ட அணி-Captain and Full colours award, Won SLUSA award. I participated in the 15th national Olympic academy.

  • திரு எமிலியாலுஸ்பிள்ளை டெயான்சன் சார்லஸ்: யாழ் பல்கலைக்கழகம் (2013/2014). உதைபந்தாட்ட அணி

  • திரு. சூசைதாஸ் சுயந்தன்: யாழ் பல்கலைக்கழகம் (2017/2018). உதைபந்தாட்ட அணி திரு. சூசைதாஸ் சுயான்: யாழ் பல்கலைக்கழகம் (2021/2022) உதைபந்தாட்ட அணி திரு. டேவிட் யூட்கிறேடின்சன்: சப்ரகமுவ பல்கலைக்கழகம் (2022/2023) உதைபந்தாட்ட அணி

  • திரு. பாஸ்கரன் றொயான்சன் :மொறட்டுவைப் பல்கலைக்கழகம் (2019 -2020). உதைபந்தாட்ட அணி- Full colours award

  • திரு.கோல்டன் ரனி டெல்ஷிகன்: இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம்(SLIIT 2024) உதைபத்தாட்ட அணி

  • செல்வி எமிலி பியாண்டா மோனிசா- கிழக்குப் பல்கலைக்கழகம் (2019/2020) வலைப்பந்தாட்ட அணி

  • செல்வி அருள்பிரகாசம் கிரிஜா- யாழ் பல்கலைக்கழகம் 2021/2022 வலைப்பந்தாட்ட அணி சிறத்த வீராங்கனை விருது, Full colours award, கூடைப்பந்தாட்ட அணி (Basketball), பேராசிரியர் அழகையா துரைராஜா பல்திறனர் விருது கலைப்பீடம் (Prof A. Thurairajaha Gold Modal for all round performance at Faculty of Arts University of Jaffna in 2024.

வலம்புரி சைக்கிள் ஓட்டச் சாதனை

கிருயா, கிறிஸ்ரின், கொலஸ்ரிக்கா, பெலிற்றஸ் என பல வீராங்கனைகளை எம் மண்ணுக்குத் தந்த நீக்கிலாப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை (முத்துராசா ) அவர்கள், ஒரு அசாத்திய தனையாளன். இவர் 1960 ஆம் ஆண்டு எமது யாகப்பர் ஆலய வளவில், மாலை 4 மணிக்கு ரம்பித்து தொடர்ச்சியாக 12 மணத்தியாலங்கள் நிறுத்தாமல், சைக்கிளின் பின் புறமாக இருந்து, கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு வட்டமாக சுற்றிச் சுற்றி சைக்கிளை மிதித்து, வலம்புரி சைக்கிள் ட்டச் சாதனையை நிகழ்த்தியிருந்தார். அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட ஒரு சாதனை பலரையும் யப்பில் ஆழ்த்தியிருந்தது. பலராலும் மறந்து போன இச் சாதனையை இப் புத்தகத்தில் பதிவிடுவதன் மூலம் அவரது அசாத்திய திறமையையும் எமது மண்ணின் சிறப்பையும் உலகறியச் செய்யலாம்.

ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் கரப்பத்தாட்ட அணி

ஆரம்ப காலங்களில் எமது கிராம பெண்கள் வலைப்பந்தாட்டத்திலும். தடகள் விளையாட்டுக்களில் மட்டுமே ஈடுபட்டு வந்தனர். மன்னார் மாவட்டத்தில், பெண்களுக்கான கரப்பத்தாட்டம் 1982 ஆம் ஆண்டளவிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் உள்நாட்டுப் போரின் காரணமாக, இது கிராம மற்றும் பிரதேச மட்டங்களில் பெருமளவு பிரபல்யம் பெற்றிருக்கவில்லை. 1987/1988 களில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் பெண்கள் கரப்பந்தாட்டம் ஊக்குவிக்கப்பட்ட காலகட்டத்திலேயே, மன்னார் பிரதேசத்தில் இவ்விளையாட்டு பிரசித்தி பெறத் தொடங்கியது எனலாம். இதனால் எமது கிராம பெண்கள் இவ் விளையாட்டில் இடப்பெயர்வுக்கு முன்னான காலப்பகுதியில் ஈடுபட்டிருக்கவில்லை. எமது ஊர் மக்கள் இடம்பெயர்ந்து தோட்டவெளியில் குடியிருந்த ஆரம்பகாலங்களிலேயே, எமது பெண்கள் இவ் விளையாட்டில் ஆர்வம் கட்டத் தொடங்கியிருந்தனர்.

எமது விளையாட்டுப் பண்பாட்டில் பெண்கள் கரப்பந்தாட்டம், ஒரு புதிய விடையமாக அமைந்திருந்தது. எவ்வித முன் அனுபவங்களும் பயிற்சிகளும் இல்லாத ஒரு சூழ்நிலையிலேயே, எமது மகளீர் அணியினர் இந்த விளையாட்டில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர்.ஆனால் தற்போது கடந்த பல ஆண்டுகளாக எமது ஊரே பெண்கள் கரப்பந்தாட்டத்தில் தொடர்ந்தும் சம்பியன் பட்டத்தை தக்கவைத்து, மன்னார் மாவட்த்தில் சாதனைபடைத்து வருகின்றது.

ஜோசப்வாஸ் நகர் பெண்கள் கரப்பந்தாட்டமும் தொடர்கால வரலாறும்:

சமூகம் எனப்படுவது தனியே தனி மனிதர்களின் தொகுப்பை மட்டும் கொண்டதல்ல. இதனடிப்படையில் எமது விடத்தலூர்ச் சமூகமானது தனது கலாச்சாரத்தின் பகுதிகளாக மக்களிடையே அன்னியோன்னிய தொடர்புகளையும், அனைத்து சமூக அம்சங்களையும், கற்றல்களையும் கொண்டமைந்தத ஒரு சிறந்த சமூகமாக விளங்குகின்றது. எமது சமூக மக்களிடையே, பல்வேறுபட்ட திறமைகள் இயல்பாகவே காணப்பட்டது.

இப்பன்முகத்திறமைகள் எம் சமூகத்தினரால் உலகெங்கும் பரவ விடப்பட்டு அவை வெற்றிச் சூழ்நிலைகளை உருவாக்க தொடங்கின. குறிப்பாக விளையாட்டு எனும் திறனானது தொடக்க காலங்களில் இருந்தே முதன்மையான ஒரு பகுதியாக காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், வெற்றி பேசும் விடயமாக பெண்கள் கரப்பந்தட்டம் (volleyball) எங்கள் கிராமத்தில் அண்மைக்காலங்களில் பிரசித்தி பெற்று வருவது பற்றியும், சிறப்பம்சங்கள் பற்றியும் இப்பதிவிலே நாங்கள் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.

எமது சமூகப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணி மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் தங்களது சாதனைப் பதிவுகளை நிலைநாட்டி வந்தமையே, கரப்பந்தாட்டத்தில் நாம் வலுவான அத்திவாரமொன்றை 2000 - 2008 வரையான காலத்தில் அமைக்க காரணமாயிற்று எனலாம். எமது வலைபந்தாட்ட முன்னாள் வீராங்கனைகளாலேயே இந்த அத்திவாரம் இடப்பட்டது என்பது காலத்தின் வரலாறாகும்.

இவர்களின் தொடக்க கால முயற்சிகள் பாடசாலை, மற்றும் வலய மட்டங்களிலில் இருந்து ஆரம்பித்து, கழகரீதியாக பிரதேச மட்டங்களிலும் பெண்கள் கரப்பந்தாட்டத்தைக் கொண்டு செல்ல வித்திட்டது . இதனைத் தொடர்ந்து 2006-2009 காலத்தில், எமது விளையாட்டுப் பண்பாட்டின் பயனாக எம் அடுத்த தலைமுறை வீராங்கனைகள் விளையாட்டில் பிரதேச மட்டத்தில் மட்டுமல்லாது மாவட்ட மட்டத்திலும் தம் பங்கு பற்றுதல்களை உறுதி செய்திருந்தனர். எங்கள் அணி 1ம், 2ம் சுற்றக்களில் வெற்றிகளை பெற்று, இறுதிப் போட்டிகளுக்கு தங்களை நகர்த்தியிருந்தது சிறப்பான விடயமாகும். இருந்த போதிலும் பிரதேச, மாவட்ட மட்ட வெற்றிகள் (முதல்நிலை வெற்றிகள்) எட்டாக் கனியாகவே காணப்பட்டது,

2006-2009 காலப்பகுதிகளில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கழக வீராங்கனைகளுக்கு தொடர் பயிற்சிகளை ஆசிரியர் எமெட் குரூஸ் அவர்களும் பயிற்றுவிப்பாளர் திரு. பாஸ்கர் அவர்களும் வழங்கினர். இவர்கள் தங்களது உடனிருப்பையும் உடல் உழைப்பையும் முற்றுமாக வழங்கி, தொடர்ந்தும் புதிய வீராங்கனைகளை உருவாக்குவதிலும், வெற்றியை நிலைநாட்ட வைப்பதிலும் சழைக்கமால் பாடுபட்டனர் என கூறுவது பொருத்தமானதாகும். இவர்களின் இந்த உழைப்பும் வீராங்களைகளின் அர்ப்பணிப்புமே எம் கமூகத்தின் மகளீர் கரப்பந்தாட்ட அணியின் தொடர் வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது.

போட்டிகளும் சாதனைகளும்

எமது பழய வீராங்கனைகளின் திறன்களையும் எமது சமூகத்தின் ஒருங்கிணைப்பையும், எமது வெற்றிகளையும், மேலும் கரப்பந்தாட்ட மைதானத்தின் வெளியாக நின்று பந்துகளை எடுத்து கொடுத்து (எமது பாசையில் பந்து பொறுக்கி கொடுக்கும் கூட்டம்) எம் பழைய வீரங்கனைகளுக்கு உற்சாகமூட்டடிய தற்போதைய பெண்கள் கரப்பந்தாட்ட வீராங்களைகளின் ஆர்வத்தையும், அவர்கள் கரப்பந்தாட்டத்தில் காட்டிய ஈடுபாட்டையும் ஆசிரியர் திரு. எமட் குரூஸ் அவர்கள் நன்கு அறிந்திருந்தார். இதனால் 20108 ம் ஆண்டில், எமது கரப்பந்தாட்ட அணி, மாவட்ட போட்டி ஒன்றில் விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றக் கொடுத்தார். அதன் பயனக 2008 ம் ஆண்டு, எமது அணி மாவட்டச் சம்பியனாக தனது முதல் வெற்றியை மன்னார் மாவட்டத்தில் பதிவு செய்து, வரலாற்றில் இடம் பிடிக்கத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து பல இடையூறுகளின் மத்தியிலும் மாவட்டம், மாகாணம், தேசியம் என, எமது அணி ஆசிரியர் எமட் குரூஸ் அவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, போட்டிகளில் பங்குபற்றி பல அனுபவங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், எமது பெண்கள் கரப்பந்தாட்ட அணி, கடந்த 20 - களுக்கு மேலாக மாவட்ட முதல் நிலை அணி என்ற இடத்தை தக்கவைத்து சாதனை புரிந்து வருவதோடு, மாகாண மட்டத்திலு வெற்றிகளை ஈட்டிவருவது பாராட்டுக்குரியது. வெற்றி பெறுவதைவிட பெற்ற வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் எமது வீராங்கனைகளான

  • திருமதி விதுசா (சகாயராசா) டினுசன்

  • செல்வி டிவினியா செறின் பிரான்சிஸ்.

  • செல்வி நியூனின் வரப்பிரகாசம்.  

  • செல்வி ஆனந்தறோகினி தேவதாஸ்.

  • செல்வி றொசிக்கா அகஸ்ரின்.

  • திருமதி பிறேமாத்தினி (பொமிக்கா) கான்சன் தேவராஜ்

  • திருமதி. சியாந்தனா (பர்ணபாஸ்)டெலிஸ்ரன் நிசாந்

  • செல்வி. ஜெனிபாகென்றிக்

  • செல்வி. ஜௌனி கென்றிக்

  • செல்வி ஜென்சிகா கென்றிக்.

  • செல்வி. நிலைக்சனா கில்டன்டயஸ்.

  • செல்வி றோகினி ஜீவானந்தன்.

  • செல்வி. ஆன்ஸ் லயா மரியசேவியர்.

  • செல்வி.பேடின் ஸ்பெல்வினி வோள்டஸ் பேர்டினன்ற.

  • செல்வி. ஜெயநிசா கில்டன் டயஸ்.

ஆகியோர் இன்று வரை தம் ஆர்வத்தை காட்டி தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இவர்களைத்தவிர ஆரம்ப காலங்களில் இருந்து விளையாடி வந்த வீராங்கனைகளின் விபரங்கள் வருமாறு:

எமது தற்போதைய பெண்கள் கரப்பந்தாட்ட அணி, கடந்த 2022ம் ஆண்டு மன்னார் மாவட்டம் சார்பாக களமிறங்கி, 20 வருட காலமாக முறியடிக்கப்படாத சாதனையை முறியடித்து, மன்னார் மாவட்டத்துக்கு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்து, வடமாகாணத்தில் மாவட்டத்தின் பெயரையும், ஊரின் பெயரையும் பதிவு செய்தது. இதன் போது மாவட்ட அணியின் தலைவியாக, டெ சியாந்தனா எமது கழகத்தில் இருந்து பங்காற்றியதும் குறிப்பிடத்தக்கது. இச்சாதனையின் விளைவாக, அந்த வருடம் எமது அணி அரசாங்க அதிபர் உயர் திருமதி ஸ்ரான்லி டிமல் அவர்களால் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படட்டதும் பெருமைக்குரிய விடையமாகும்.

தொடர்ந்தும் 2024 ம் ஆண்டு நடைபெற்ற வடமாகாண கரப்பந்தாட்ட போட்டியிலும், எம் அணி செல்வி நியூளின் தலைமையில் களமிறங்கி யாழ் அணியை வீழ்த்தி, 3 ம் இடத்தை பெற்றிருந்தது. இதன்போதும் அரசாங்க அதிபர் உயர்திரு க. கனகேஸ்வரன் அவர்களால் எமது அணி பாராட்டி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த வருடம் 2025 ம் ஆண்டு பிரேதச வெற்றியைப் பெற்று. மாவட்ட போட்டிக்காக எமது அணி இன்றும் தங்களை அர்பணித்து தயாராகி வருகின்றனர்.

மேலும் 2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற வடமாகாண ரீதியான கடற் கரை கரப்பந்தாட்ட (Beach volleyhall) போட்டியில் சியாந்தனா தலமையிலான எமது பெண்கள் அணி, 3ம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

அத்துடன் மன்னார் மாவட்ட பொலிஸ் அணி, மற்றும் மன்னார் நகர பிரதேச செயலக பெண்கள் கரப்பந்தாட்ட அணிக்கும் எமது கழக வீராங்களைகள், அணித் தலைவி டெ சியாந்தனா தலைமையில் பயிற்சிகளை வழங்கி தயார் செய்ததும் பாராட்ட தக்க விடயமாகும்.

நிதியுதவிகளும் ஆதரவும்

இந்த 20 வருட தொடர் வெற்றிக்கு சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள், பயிற்சியாளார்கள், சமூக நிகழ்ச்சிகளை முகாமைத்துவம் செய்யும் அமைப்புக்கள், சமூக அக்கறை கொண்ட தனி நபர்கள் என பல்வேறு பட்ட ஊர் என்ற உணர்வை மட்டும் கொண்ட நல்லுள்ளங்கள் ஒன்றிணைந்து, எமது பெண்கள் கரப்பந்தாட்ட அணிக்கு உதவி, ஒத்துழைப்புக்களை அன்றிலிருந்து இன்று வரை வழங்கி வருவது, முக்கிய உறுதுணையாக இருந்து வருகின்றது. அந்த வகையிலே அமரர் றூபன். றொயிற்றன், மகாலிங்கம் எட்வின்றோர்ஜ். திரு. மகாலிங்கம் ராஜநாயகம், திரு. பிரான்சிஸ் கிங்ஸ்லி திரு. கோமஸ் கோல்டன்ரனி, செபஸ்ரியாம்பிள்ளை கொலாஸ்ரின். திரு. நீக்கிலாப்பிள்ளை அன்ரனி இசிதோர், திருமதி. கவிதா கிருபாகரன், திரு. யோகராஜா சிந்துஜன். திரு அனுரா டெறன்ஸ் திரு. பத்மநாதன் சதீஸ்குமார். செல்வி சந்தியா எலியாஸ், திரு. இம்மனுவேல் யூட்வின் டிமல்றாஜ், திரு இம்மானுவேல் கோட்வின் விமல்றாஜ், திரு.இம்மானுவேல் அல்வின் கமல்றாஜ், திரு பாக்கியராசா ஆனந்தகுமார் (மதன் )ஆகியோரை நன்றியோடு நினைப்பது சாலச் சிறந்தது.

கழகத்தின் உதவியோடும். எமது சமூகத்தின் ஒத்துழைப்போடும் விளையாட்டுக்கனில் பங்கு பற்றி வெற்றியீட்டி வந்தாலும், மாவட்ட மாகாண வெற்றிகளைப் பெற்றுக் கொள்ள மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி, மன்னார் நகர விளையாட்டு அதிகாரி மற்றும் ஏனைய துறைசார்ந்த மாவட் டத்தின் பயிற்றுவிப்பாளர்களின் உதவிகளயும், அர்பணிப்பையும் நாம் இங்கு மறந்து விடவும் முடியாது.

தொடர்ந்தும் ஒவ்வொரு விளையாட்டாடு நிகழ்வின் போதும். எமது பெண்கள் அணியோடு இருந்து பாதுகாப்பினை வழங்கி வந்த அமரர் றூபன் றொயிற்றன். திரு டெலிசிஸ்ரன் நிஷாந் திரு. கான்சன் தேவறாஜ், திருமதி மெரீனாடயஸ், திருமதி மரியசேவியர் சிறாணி ஆகிய நல் உள்ளங்களையும் நினைத்து பாராட்டுவதில் பெருமை அடைகின்றோம்.

எவ்வாறான இடையூறுகள் ஏற்பட்ட போதிலும், எமது சமூகம் இவ்வெற்றியை தொடர்ந்து அனுபவித்து பெருமிதம் கொள்ள வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே, எமது பெண்கள் கரப்பந்தாட்ட அணிக்கு மனவலிமையையும், உடல் வலிமையையும் கொடுத்தது வருகின்றது. இருப்பினும்,போருக்குப்பிந்திய அல்லது அழிவுகுப்பிந்திய மீள்கட்டமைப்புக் காலங்களைவிட ஒரு மோசமான நிலமை விளையாட்டுத்துறையில் தற்போது காணப்பட்டு வருகின்றமை கவலைக்குரிய விடயமாககும்.

சமூகத்தின் அபிவிருத்தி, முன்னேற்றம் மற்றும் வெற்றி என்பன பங்குபற்றுதலிலேயே தங்கியுள்ளது எனும் அனுபவச் சான்றின் அடிப்படையில், தற்போதான பங்குபற்றல் நிலை, குறைவடைந்து செல்கின்ற தன்மையை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தலைமுறையின் பாரிய இடை வெளியானது. இதற்கான முக்கிய காரணமாக காணப்படுவேதே உண்மையாகும். எமது சமூகத்தின் வெற்றியின் ஒரு பகுதியாக இவ்விளையாட்டுக்களை மதித்தும், தற்கால தலைமுறையினருக்கு வரலாறுகள் ஊடான உணர்வினை ஊர்ப் பெரியவர்கள் ஊட்டியும், சமூக அக்கறையோடு தனிநபர் சார் நலன்களை விடுத்து ஒன்றிணைந்து பங்குபற்றுவோமேயானால், எமது சமூகம் தொடர்ந்தும் பாரிய சாதனைகளை நிலைநாட்டுவது சாத்தியாமாகும்.

சமூகம் என்ன செய்தது என்ற கேள்விகளை விடுத்து, சமூகத்திற்கு நாம் என்ன செய்தோம். செய்யப் போகிறாம். என்ற மனநிலையை வளர்த்துக் கொள்வோம். சாதிப்போம்!

விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் கரப்பத்தாட்ட அணி

நாம் 2009ஆண்டில் மீண்டும் குடியமர்ந்த போது, எமது பாபம்பரிய விளையாட்டுக்களை விளையாட ஆரபம்பித்திருந்தோம். இதன் போது எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் சார்பில் பெண்கள் கரப்பந்தாட்ட அணி ஒன்று, 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உதவி அரசாங்க அதிபர் பிரிவு போட்டியில் பங்கேற்று, சம்பியன் பட்டத்தை வென்றது. இப்போட்டியில் எமது கிராமத்தைச் சேர்ந்த யுவதிகளான

  • திருமதி மெலானி (பெல்மன்றாஜன்) நிஷாந்தன்

  • திருமதி ஜெசீனா (பிலிப்பு யாகப்பு) ஜேசுப்பிரகாஷ்

  • செல்வி சுகர்னியா ஞானசேகரன்

  • செல்வி. தர்ஷினி அந்தோனிப்பிள்ளை

  • திருமதி. ஐனேக்கியா (சூரியகுமார்) பிரசாந்த்

  • திருமதி அஜித்தா( சிவனேசன்) கிஷோர்குமார்

  • செல்வி பாத்திமா பியாசா பிரஸ்கான்

  • திருமதி பிறிக்கில்டா(எட்மன் ஜஸ்ரின்) எடிசன்

ஆகியோர் இணைந்தது வினையாடி இருந்தனர்.

இதன்பிற்பாடு நீண்ட இடைவெளிக்குப்பின், எமது ஐக்கிய வினையாட்டுக்கழக மகனீர் கரப்பந்தாட்ட அணி, 2024 ம் ஆண்டு எமது கிராமத்தில் நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டியில், சென் தோமஸ் ஆண்டாங்குளம் அணியையும், Union கழகம் விடத்தல்தீவு அணியையும், சென் அன்ரனிஸ் நெடுங்கண்டல் அணியையும் எதிர்த்து போட்டியிட்டு, சம்பியன் பட்டத்தை வென்றது.

அதேபோல் 2025 ஆம் ஆண்டு றொக்கெற் விளையாட்டுக் கழகத்தால் வண்ணாகுளத்தில் நடத்தப்ட்ட போட்டியில் கலந்து கொண்ட எமது கரப்பந்தாட்ட அணி, சென் தோமஸ் ஆண்டாங்குளம் அணியையும், றொக்கெற் அணியையும் வெற்றிகொண்டு, சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்திருந்தது.

இந்த சம்பியன் அணியில் பின் வரும் விராங்கனைகள் பங்கேற்றிருந்தனர்.

  • திருமதி அனுஜா (பிறேமானந்தன்) சாருந்தன்

  • திருமதி. வினுஜா பிறேமானந்தன் (சசிகுமார்)

  • திருமதி தனுஜா(பிறேமானந்தன்)ஜான்சன்

  • செல்வி. டெய்சி ரவிக்குமார்

  • திருமதி டிஷாந்தினி (எட்மன்றமேஸ் ) லிதர்சன்

  • செல்வி மறிஸ்ரெலா அன்ரன் சேவியர்

  • செல்வி. நிஸ்மியா கிறிஸ்து மேனன்

  • திருமதி மெலானி (பெல்மன்றாஜன்) நிஷாந்தன்

  • செல்வி. யூடிற் றொணிஷா அமிர்தறாஜ்

  • திருமதி விதுஷாளினி (சேகரன்)அமலதாஸ்

  • திருமதி றிக்க்ஷானா (ஜெயராசா) யூட் நிதர்சன்