
நடந்து வந்த பாதை - ஜனகம் ஜெகநாதன்
நடந்து வந்த பாதை கடந்து போனகாலங்களில் நாம் நடந்து வந்த பாதைகள் இன்று பறந்து போய் விட்டதோ இல்லை மறந்து தான் போனோமா? நாம் தினம் குளிக்க ஒரு மைல் நடந்தோம் மனம் கனக்கும் நேரமில்லை ஆங்கே மனதிற்குப் பிடித்த நண்பர்களைக்
காணின்
கனத்த சுமையது கடிதில் பறந்திடுமே நடந்தோம்
பள்ளமடுக்குளம் பச்சையாய் வற்றி
விடும்
உள்ளவே உள்ளதே உடையான்
கேணி
உதலிப்பழமரமேறிக் குத்திய உடமுள்
உடனடி தேய்த்த எச்சில் வைத்தியம்
ஊர்ந்தூர்ந்து நடந்தோம் மொங்கனார் குளம் முழுகச் சென்றோம் நொங்குமரச்சோலை கடந்து வந்தோம் அங்கு குளமில்லை நீருமில்லை
அருகில் பூவல் பள்ளங்களில்
படுத்துக்குளித்து
வாதம் நோக நடந்தோம் காட்டிலே பாலைப் பழம்
பனையோலைப்
பெட்டியோடு மேட்டுப்பக்கம் இலைந்தைப்பழம் வாட்டும் வெப்பம்
வழி தெரிந்த இடமெங்கும் நடந்தோம் அட்டைத்தீவு சற்று அருகில் தானே ஆற்றில் பாயும் நீரில் இறால் பிடிக்க அற்றுப்பறந்து
அவசரமாய் நடந்தோம் நீரெடுக்கப் போகும் ஊற்றாங்கரை நெடுந்தொலைவாய் தெரியாது நிழலாற
அங்கு மரமோ கிடையாது நிதானித்து வர நேரமும் பத்தாது நடந்தோம்
கண்ணாக்காடு விறகும் கல்லாய் குத்தும் மூச்சு வேர்
முள்ளும் கிள்ளும் பாதமதை கண்ணை மறைக்கும்
புழுதிக் காற்று
எம்மையும் தள்ளும் நடந்தோம் உப்பும் ஊரியும் சுமந்தோம் ஊரோடு உறவாட
ஊரையும் சுமந்தோம் காலணியில்லாக் காலால் காலமாகிப்போகும் வரை நடந்தோம் சொல்லிக்கொள்ள
வளமற்ற வரண்ட நிலமது சுற்றியுள்ள காடும் களனியும் கடலும் கண்ணாப்பற்றையும் கொண்டலும்
வாடையும் சோழமும் தென்றலாய் தந்த இதம்கண்டு நடந்தோம் இன்று வைத்தியரோ நடநடவென்கிறார் அன்று நாம் நடந்த
நடை அவருக்குத் தெரியுமா?
அரைமணியாவது நடவென்கிறார் வெறுந்தரையில் நடக்கத்தள்ளாடும் காலது தவிக்கிறது தான் நடந்த பாதையை நினைத்து ஏனோ ஏங்குகிறது.