விடத்தல்தீவு நண்பர்கள் குழுவும் புதிய அபிவிருத்தி அமைப்பும் - சுதாமதி விஸ்வலிங்கம்

விடத்தல்தீவு நண்பர்கள் குழு 12 ம் திகதி மார்கழி மாதம் 2019 ம் ஆண்டு திரு இராசேந்திரா சோமசுந்தரம், திரு நக்கீரன் அரசரெத்தினம் என்னும் இருவரினால் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் வசிக்கும் இரு விடத்தல்தீவு புலம் பெயர் நண்பர்கள்.

அதிகமான அளவு விடத்தில்தீவு சைவ புலம்பெயர் மக்கள் ஐக்கிய ராஜ்யத்தில் வசிக்கின்ற படியினால், நூற்றுக்கணக்கான நண்பர்களை இந்த குழுமத்தில் இணைத்து கொண்டனர். அதில் திருமதி சுதாமதி விஸ்வலிங்கம் ஆகிய நானும் ஒருவர் பிரான்ஸ், கனடா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, நோர்வே, ஆஸ்திரேலியா இப்படி பல நாடுகளிலும் வசிக்கும் எமது ஊர் உறவுகளை ஒருவர் மூலம் ஒருவரை அறிமுகம் செய்து இன்னும் 50/60 ற்கு மேற்பட்ட புலம் பெயர் விடத்தல்தீவு நண்பர்களையும் மேலதிகமாக இணைத்து கொண்டனர். இக்குழுமம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நண்பர்களுக்கு இடையிலான நன்மை தீமை சுக துக்கங்களை பகிர்ந்த வண்ணம் இருந்தது.

இந்த காலப்பகுதியில் திரு சக்தி இராமலிங்கம் என்பவரால் ஒரு ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அதுதான் விடத்தல்தீவு நுழைவாயில் வளைவு பற்றியது. விடத்தல்தீவு புலம்பெயர் மக்களின் ஒரே அபிலாசையாக முதல் முதலில் விடத்தல்தீவுக்கு செய்ய வேண்டிய பாரிய திட்டமாக, விடத்தல்தீவு - பள்ளமடு வீதியில் நுழைவாயில் வரவேற்பு வளைவு ஒன்று பிரம்மாண்டமாக அமைக்க வேண்டும் என்ற குறிக்கோள். இதற்காக புலம்பெயர் மக்களிடம் 2021 ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் நிதி சேகரிக்கும் பணியில் குழுமம் ஆர்வம் கொண்டு, நிதி சேகரிக்க ஆரம்பித்தார்கள். இந்த வளைவு பற்றிய விபரமான பதிவு தொடர்ச்சியாக கீழே தரப்படும். விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பு உருவாக்கப்பட்ட விதம்

விடத்தல்தீவு நண்பர்கள் குழுமம் 2021 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அளவில் எமது விடத்தல்தீவு கிராமத்திற்கு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு மேம்படுத்தும் நோக்குடன், திரு இராசேந்திராவும், திரு நக்கீரனும் விடத்தல்தீவு மக்களிலிருந்து தங்களுக்கு தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு, தங்களது குறிக்கோளை எடுத்து கூறினார்கள். அதற்கு இணங்க திரு கியோமர் பயஸ் என்பவருடன் தொடர்பை ஏற்படுத்தி, ஊரில் ஒரு அபிவிருத்தி குழுமத்தை உருவாக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் அதற்கு இணங்க தன்னுடன் இணைந்து பணியாற்றக்கூடிய சிலரை தெரிவு செய்து, சித்திரை மாதம் 19 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு அன்று, முதல் அங்குராப்பண கூட்டத்தை விடத்தல்தீவில் திரு கியோமர் பயஸ் அவர்களின் வீட்டில் ஒழுங்கு செய்து நடாத்தினார்.

இக்கூட்டத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்படுவதன் நோக்கங்கள் பேசப்பட்டது அதில், அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

1) தலைவராக அருட் சகோ.ஸ்ரனிஸ்லஸ்

2) செயலாளராக திரு கியோமர் பயஸ்

3) பொருளாளராக திரு வை சாரங்கன்

4) உபதலைவராக திரு அ டேவிட்

ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக உறுப்பினர்களாக

1) திரு சா அருட்பிரகாசம்

2) திரு அ ரோகித் இராசநாயகம்

3) திரு க துரைராஜா

4) திரு வி சுதாகர்

5) திருமதி பா கனககோதி

ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

குழும ஆலோசகர்களாக

1) அருட் பணி. எ டெனி கலிஸ்ரஸ்

2) அருட் சகோ. அ மனோரஞ்சிதன்

3) அருட் சகோ. சி ஞானசேகரன்

ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் ஆலோசனைக்குழு உருவாக்கப்பட்ட விதமும் நோக்கமும்

இந்தகாலப்பகுதியில் விடத்தல்தீவு நண்பர்கள்குழுவில் பலவிடத்தல்தீவு நண்பர்களும் இணைக்கப்பட்டனர்.

அப்போது ஊரில் உருவாக்கப்பட்ட, விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பை வழி நடாத்த ஒரு நல்ல ஆலோசனைக்குழு அத்தியாவசியம் என்பதனை உணர்ந்த குழுமத்தின் முக்கிய உறுப்பினர்கள், சேர்ந்து பனிரெண்டு அங்கத்தவர்கள் அடங்கிய ஒரு ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஆனி மாதம் 28 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டனர்.

ஆலோசனைக்குழு அங்கத்தவர்கள் விவரம்

I) திரு இராசேந்திரா சோமசுந்தரம்

2) திரு நக்கீரன் அரசரெத்தினம் 3) திரு மசாரிக் மஹ்ரூப்

4) திருமதி சுதாமதி விஸ்வலிங்கம் 5) திருமதி ஜெனகராணி சிவகுரு 6) திரு கனகேந்திரா சோமசுந்தரம் 7) திரு இ எட்வின் அமல்ராஜ் 8) திரு யே நோபெட் நிர்மலன் 9) திரு ஜெயதீபன் நடராஜா 10) திரு தவக்குமார் சுப்பிரமணியம் 11) திரு பாயிஸ் சமது

12) Dr ம மதுரநாயகம்

இக்குழுவானது ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்று கிழமைகளில் சூம் லிங் மூலம் எல்லா நாடுகளிலும் வசிக்கும் அங்கத்தவர்களின் நேர வசதிகளுக்கேற்ப நேரத்தை ஒழுங்கு செய்து, உள்ளூரில் தெரிவு செய்யப்பட்ட புதிய அபிவிருத்தி அமைப்பின் பிரதான அங்கத்தவர்களையும் இணைத்து (பிறதர் ஸ்ரனிஸ்லஸ், திரு கியோமர் பயஸ் & திரு வை சாரங்கன்) கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம். இறுதி முடிவு ஆலோசனைக்குழுவின் முடிவே நடைமுறைப்படுத்தப்படும். இதற்குரிய நிதி சேகரிப்புகளை ஆலோசனைக்குழுவே 95% சேகரித்தார்கள். ஒரு சிறிய தொகையே உள்ளூர் மக்களிடம் இருந்து பெறப்பட்டது.

விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பினால் செய்யப்பட்ட நிவாரணங்கள்

புலம்பெயர் நாடுகளின் அங்கத்தவர்களை கொண்ட ஆலோசனைக் குழுவும், உள்ளூரில் தெரியப்பட்ட விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி குழுவும், சேர்ந்து தமது முதல் பணியாக, நிவாரணங்களை கொடுக்க முடிவு எடுத்தது.

கொரோனா நிவாரணம்

2020 - 2021 காலப்பகுதியில் உலகளாவிய ரீதியாக, கோவிட் 19 என்னும் உயிர் கொள்ளும் வைரஸ் பரவிக் கொண்டிருந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல், வேலைகளுக்கோ பாடசாலைகளுக்கோ போக முடியாமல் இருந்த காலம்.

அந்த காலகட்டத்தில், எமது ஊர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உலர் உணவு பொதிகை வழங்க தீர்மானித்தோம்.

இதற்காக ஆலோசனைக் குழு அங்கத்தவர்கள் புலம்பெயர் மக்களிடம், உள்ளூர் மக்களிடமும் நிதி உதவி கோரி, அதனை பெற்று விடத்தல் தீவு மக்களுக்கும், அதனை சுற்றியுள்ள அயல் கிராமங்களான

சன்னார், ஈச்சளவக்கை, பெரிய மாடு, ஜோசப்வாஸ் நகர், புத்தளம் ஆகிய இடங்களுக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3,000 ரூபாய் பெறுமதியான பொதிகளை வழங்கி அவர்களுக்கு ஆறுதல் அளித்தோம். கிட்டத்தட்ட 8 லட்சம் ரூபாய் பெருமதியான உணவு பொதிகள் வழங்கப்பட்டது. சில புகைப்பட பிரதிகளை ணைக்க முடிந்தால் நினைத்து விடுகிறேன். இவ் உணவுப் பொருட்கள் 2021 ஆம் ஆண்டு ஆடி மாதம் 30, 31 ஆம் திகதிகளில் வழங்கினோம்.

இந்த வேலைகளில் பிறதர் ஸ்ரனிஸ்லஸ், கியோமர் பயஸ், சாரங்கன், சுதாகர் ஆகியோருடன், இன்னும் சில தொண்டர்கள் இந்த சமூக சேவையில் இணைந்து செயற்பட்டனர்.

வெள்ள நிவாரணம்

இதன் பின்னர் 2021 கார்த்திகை மாதம் விடத்தில் தீவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, கோயில்களில் தஞ்சம் அடைந்திருந்தனர். சுமார் 400 - 600 பேர்கள் வரை விடத்தில்தீவில் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் குழந்தைகளுடனும், வயோதிபர்களுடனும், இடம்பெயர்ந்து இருந்தமைக்கும் விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பினால் உதவிகளை வழங்கினோம். விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைக்க உணவுப் பொருட்களை விநியோகிக்க முன் வந்தோம். இதற்கு பல புலம்பெயர் மக்கள் தாமாகவே முன்வந்து நிதி உதவிகளை வழங்கினார்கள். உள்ளூர் மக்களில் சிலரும் எமது அமைப்பின் ஊடாக உதவிகளை வழங்கினார்கள். இந்த இக்கட்டான நிலையில் ஜோசப்வாஸ் 

நகர் மக்களுக்கும், புத்தளம் வாழ் விடத்தல்தீவு மக்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரூபாய் பெருமதியான உதவிகள் வழங்கப்பட்டது. ஆலோசனைக்குழுவின் அடுத்த கட்ட திட்டமிடல் இதே காலப்பகுதியில் எமது ஆலோசனை குழு கூட்டத்தில் அதில் இருக்கும் அங்கத்தவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர்களாக ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் பிரித்து அதை செயற்படவும் செய்தோம். அதில் 1) நிர்வாகம் - திரு இராசேந்திரா, திரு நக்கீரன்

2) கல்வி - திருமதி சுதாமதி, திரு அமல்ராஜ்

3) விளையாட்டு - Dr மருதநாயகம், திரு ஜெயதீபன்

4) சுற்றுச்சூழல் - திரு மசாரிக், திருமதி ஜெனகராணி, திரு நிர்மலன்

5) சுகாதாரம் - திரு பாயிஸ், திரு தவகுமார்

6) வளைவு - திரு கனகேந்திரா, திரு இராசேந்திரா.

விளையாட்டு

இதன் அடிப்படையில் விளையாட்டு துறையில் Dr மதுர நாயகம் 13 வயதுக்குட்பட்ட (ஜோசப்வாஸ் மகா வித்தியாலய மாணவர்கள்) மாணவர்களை வைத்து கால் பந்தாட்ட பயிற்சி கூடம் ஒன்று அமைக்க போவதாக உறுதியளித்து, அதை நடைமுறைப்படுத்தினார். 2021 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 17ஆம் தேதி இதை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தார். இதற்கு விடத்தல்தீவு கால் பந்தாட்ட கழகம் (VIFA) என்று பெயரும் சூட்டினார். அதற்கு திரு ஜெயதீபனும் ஒத்தாசையாக இருந்தார். அதற்குரிய பல செலவுகளை Dr மதுரநாயகம் தானே பொறுப்பேற்று பயிற்சி அளித்து வருகின்றார். எங்களது அமைப்பு அவர்களுக்கு, 2021 கார்த்திகை மாதம் தொடக்கம் 2022 ஆனி மாதம் வரைக்கும் 8 மாதங்களுக்கு அதன் பயிற்றுவிப்பாளருக்கு மாதம் 15,000 ரூபாய் வீதம் 120,000 ரூபாய் செலவு செய்துள்ளது. இந்த VIFA அணி மிகவும் பிரபலமான அணியாக (அகில இலங்கை ரீதியில்) அவர்களை ஊக்குவித்து, வார்த்தெடுப்பதாக Dr. மதுரநாயகம் உறுதியளித்துள்ளார். அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்களும் நல்லாசிகளும் உரித்தாகுக. “அவர்கள் எமது

மண்ணின் மாணிக்கங்கள்"

கல்வி

கல்வித்துறையில் விடத்தல் தீவில் இருக்கும் இரண்டு பாடசாலை மாணவர்களையும் நல்ல ஊக்கம் கொடுத்து அதாவது ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயார் படுத்தல், G.C.E. O/L மாணவர்களுக்கு அத்தியாவசியமான பாடங்களுக்கு 10 & 11 ஆம் வகுப்புகளுக்கு மாலை நேர மேலதிக வகுப்புகளை ஒழுங்குபடுத்தி, அதற்குரிய கட்டணங்களை வழங்குதல், அத்துடன் G.C.E A/L மாணவர்களுக்கு அவர்களின் பரீட்சைக்கு முன்னதாக கடந்த வருடங்களின் வினாத்தாள்களை செய்து பார்த்தல் (past paper classes) போன்ற செயல் அமர்வு வகுப்புகளையும் ஒழுங்கு செய்து, அதற்குரிய கட்டணங்களை வழங்குதல் போன்றவற்றை செயல்படுத்தினோம்.

2021 கார்த்திகை மாதம் தொடக்கம் 2023 சித்திரை மாதம் வரைக்கும், 18 மாதங்களாக மாலை நேர மேலதிக வகுப்புகளுக்கும், பரீட்சைக்கு முன்னான செயல் அமர்வுகளுக்கும் அண்ணளவாக சுமார் ஏழு லட்சம் வரை செலவிட்டுள்ளோம். இதில் முதல் வருடம் 2021 ல் ஐந்தாம் ஆண்டு scholarship வகுப்புகளுக்கு திரு எட்வின் அமல்ராஜ் தனது சொந்த செலவில் அவற்றை பொறுப்பேற்று செய்தார். கல்வி சம்பந்தப்பட்ட சகல நடவடிக்கைகளையும் திருமதி சுதாமதியும், திரு எடவின் அமல்ராஜும் கண்காணித்து வந்தனர். அத்துடன் பிறதர் ஸரனிஸ்லஸ் அவர்களும் கல்வி நடவெடிக்கைகளில் மிகவும் ஈடுபாடு காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே கல்விற்காக கணிசமான தொகை நிதியையும் திரட்டி தந்து உதவினார்.

எமது அமைப்பினால் பாடசாலைக்குரிய போட்டோ கொப்பி இயந்திரத்தை இரண்டு தடவைகள் ( 31,500 + 17,500 ) 49,000 ரூபாய் செலவில் திருத்தம் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது. இன்னும் ஒன்று குறிப்பிட வேண்டிய விடயம், பாடசாலைக்கு ஒரு போட்டோ கொப்பி இயந்திரத்தை அன்பளிப்பாகவும் திரு எட்வின் அமல்ராஜ் கொடுத்துள்ளார்.

அதே நேரம் பாடசாலை வலைப்பந்தாட்ட மாணவிகளை மாகாண ரீதியான போட்டிக்கு கொண்டு போவதற்கான போக்குவரத்து செலவினத்தை எமது அமைப்பின் மூலம் திரு நாகேந்திரா சோமசுந்தரம் தொகை 30,000 வழங்கி உதவினார்.

அத்துடன் பாடசாலைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நேரம் பயன்படுத்த என கூடாரம் அமைப்பதற்கு வேண்டிய உபகரணங்களை லண்டனில் இருந்து வாங்கி அமைப்பு சார்பில் திரு இராசேந்திரா சோமசுந்தரம் பொதியில் அனுப்பி வைத்தார். அதன் செலவுத்தொகை 250,000 ரூபாய் முடிந்தது. (முதலுதவிப்பெட்டிகள் உட்பட) விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பானது, விடத்தல்தீவு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தது. இதன் அடிப்படையில் அரசின் பொருளாதார நெருக்கடி நேரத்தில், பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு கொடுக்கப்படும் காலை உணவு நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த சமயம் நமது அமைப்பின் மூலம் கனடாவில் வசிக்கும் திரு நாகேந்திரா சோமசுந்தரம் என்பவரால் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் ஆறுமாதங்களுக்கு காலை உணவாக தானிய வகைகள் சத்துணவாக வழங்கினோம் என்பது குறிப்பிடத்தக்கது.

விடத்தல்தீவு பள்ளமடு சந்தியில் ஒரு பிரமாண்டமான வரவேற்பு வளைவு

எமது அமைப்பினால் செய்யப்பட்ட பெரிய செயல் திட்டம் இது. 2020ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு, புலம்பெயர் மக்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தையும் சேகரித்து சேமித்து வைத்திருந்து, பின்பு கோவிற் தொற்று நோய் தீவிரம் அடைந்துள்ள வேளையில், எமது இலங்கை நாடும் பொருளாதார ரீதியாக மிகவும் முட்டுக்கட்டை நிலைப்பாட்டில் இருந்த சமயம் அனைத்து பொருட்களும் விலைவாசி உயர்ந்து காணப்பட்டது. அதனால் கட்டிடப் பொருட்களின் விலையும் நான்கு மடங்காக உயர்ந்து இருந்தது. அதனால் ஒன்டரை இரண்டு வருட கால தாமதங்களின் பின், புலம் பெயர் ஆலோசனைக்குழு முடிவெடுத்தது எமது அமைப்பின் முதல் கனவை நனவாக்குவது என்று.

அதற்கு அமைய எமது மண்ணின் மைந்தன் பொறியியளாலர் திரு சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் அவர்களின் உதவியை நாடி, அதற்குரிய விளக்கத்தினை திரு இராசேந்திரா, திரு கனகேந்திரா ஆகியோர் அவருடன் தொடர்பு கொண்டு எங்களது ஊரில் முகப்பு வளைவு குறிப்பிட்ட சில விசேஷ அம்சங்களை கொண்டு அடங்கியதாக இருக்க வேண்டும் என்பதனை அவருக்கு வலியுறுத்தினர். இந்த வரவேற்பு வளைவு படத்தை வரைவது உடன் இல்லாமல், கட்டிட வேலைகள் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை எதுவித கட்டணமும் இன்றி வேலைகளை மேற்பார்வை செய்து அதற்குரிய ஆலோசனைகளையும் வழங்கி வந்தார் திரு சூசைப்பிள்ளை விமலேஸ்வரன். அதேசமயம் அவரே கட்டிட ஒப்பந்ததார்ரையும் ஒழுங்கு செய்து உதவியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரம்மாண்டமான வரவேற்பு வளைவு சிறப்புத் தன்மை வாய்ந்தது. இன மத மொழி பேதமில்லாத, ஊர் மக்களின் தொழில் சார்ந்த, கலாச்சார பண்பாட்டு, கல்வி விளையாட்டு என்பவற்றை பறைசாற்றும் ஒரு புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.வேறு எந்த ஊரிலும் இல்லாத சிறப்புமிக்க வளைவு, பார்க்கும் அனைவரையும் பிரமிக்க வைக்கும் அழகுரு கொண்ட அமைப்பு பெற்றது.

இதை கட்டிய கட்டட ஒப்பந்ததார்ரும் கட்டடகார்ரும் ஆகிய திரு அன்டன் மரியதாஸ் ஜெயதாஸ் அவர்கள் இந்த பிரமாண்டமான வரவேற்பு வளைவு வேலைகளை மிகவும் நேர்த்தியாகவும் நுணுக்கமான முறையிலும் செய்து முடித்து தந்துள்ளார் என்பதனை பெருமையுடன் கூறுகின்றோம்.

வரவேற்பு வளைவு..................

எந்த கட்டணமும் இன்றி கட்டிட வேலைகளை மேற்பார்வை செய்து உதவி புரிந்த

எமது ஊரைச் சேர்ந்த பொறியியலாளர் திரு சித்தீக் சிபான் அவர்களுக்கும் நன்றிகள் பாராட்டுக்கள் பற்பல இந்த வரவேற்பு வளைவு கட்டிட வேலைகளுக்கு இடையில் பல தரப்பட்ட சரீர உதவிகளை சமூக சேவகனாக, ஊர் தொண்டராக வின்சென்றி சுதாகர் விடத்தல்தீவு மகனாக நிறைய உதவிகளை ஊர் மக்கள் சார்பில் பணியாற்றினார். அவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும் பற்பல

வளைவிற்குரிய நிதிப்பங்களிப்பினை முக்கியமாக ஆலோசனை குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா ஒரு லட்சம் கொடுத்தும், புலம் பெயர் ஊர் மக்களிடமும் நிறைய முயற்சிகள் எடுத்து பெற்றுக்கொண்டனர். அத்துடன் ஊர் மக்களிடம் இருந்து ஒரு சிறிய தொகையையாவது, அவர்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆலோசனைக்குழு உறுப்பினரான திருமதி சுதாமதி விஸ்வலிங்கம் ஒரு அதிர்ஷ்ட லாபச்சீட்டு முறையை ஒழுங்குபடுத்தி, அதிலும் ஒரு லட்சத்து 32 ஆயிரம் பெற்றுக்கொண்டார். விடத்தல்தீவில் இருந்து புலம்பெயர்ந்த புத்தளம் மற்றும் கொழும்பு பகுதிகளில் வாழும் இஸ்லாமிய நண்பர்களும் இரண்டு தொடக்கம் மூன்று லட்சங்கள் (2 - 3) வரையில் நிதியுதவி செய்தார்கள்.

வரவேற்பு வளைவு கட்டிட நிர்மானிப்பு வேலைகளுக்கு முப்பத்திரெண்டு (32) லட்சங்களும் அதன் திறப்பு விழாவிற்கு மூன்று (3) லட்சங்களையும் விடத்தல்தீவு புதிய அமைப்பின் ஆலோசனை குழுவே முக்கிய பொறுப்பை ஏற்றுக் கொண்டது. உள்ளூரில் ஒரு சிறிய தொகையே சேகரிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு வளைவு கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா 18ஆம் தேதி பங்குனி மாதம் 2022ஆம் ஆண்டு சிறப்பான முறையில் திரு இராசேந்திரா சோமசுந்தரம் அவர்களின் தலைமையில், திரு சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் அவர்களின் முன்னிலையில் அத்துடன் விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் அங்கத்தவர்கள் அனைவரினதும் பங்கேற்புடனும் நல்ல முறையில் நடைபெற்றது.

வரவேற்பு வளைவு...

சில மாதங்களின் பின் ஆவணி மாதம் 29 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு முழுமையான கட்ட கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, மிகவும் நேர்த்தியான முறையிலும், நுணுக்கமான வேலைப்பாடுகளுடனும், வளைவு கட்டிடம் மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு, அது இனிதே நிறைவு பெற்றது. 14ஆம் தேதி தை மாதம் 2020 ஆம் ஆண்டு முழு வேலைகளும் பூர்த்தியாக்கப்பட்டது.

இந்த வரவேற்பு கட்டிட வேலைகளின் போது, அது ஒரு நல்லதொரு வடிவமைப்பு பெற வேண்டுமென்பதில் திரு ராசேந்திரா, திரு கனகேந்திரா, திரு மசாரிக், திருமதி சுதாமதி ஆகியோர் மிகுந்த அக்கறை கொண்டு, கட்டிடகாரனுடனும், பொறியியலாளர் விமலேஸ்வரனுடனும்அடிக்கடி தொடர்பு கொண்டு இதை செய்து முடித்தோம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கின்றோம்.தை மாதம் 15 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு மிகவும் கோலாகலமாக 500 தொடக்கம் 600 பேர்கள் அடங்கிய ஒரு பாரிய சிறப்பு நிகழ்வாக வளைவு திறப்பு விழா நிகழ்வு Band வாத்திய இசையுடன் பல பெரியார்கள் மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு செல்வம் அடைக்கலநாதன் சில பொலிஸ் மாஅதிபர்கள், பல மத தலைவர்கள், ஊர் பெரியவர்கள், வைத்தியசாலை வைத்திய அதிகாரி இப்படி பல சிறப்பு மிக்கவர்களுடனும்,, எமது விடத்தல்தீவு புதிய விருத்தி அமைப்பின் தலைவர் பிறதர் ஸ்ரனிஸலஸ், செயலாளர் கியோமர் பயஸ், பொருளாளர் சாரங்கன் இன்னும் பல குழும உறுப்பினர்களுடனும், முக்கியமாக புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்த ஆலோசனைக் குழு உறுப்பினர்களான திரு இராசேந்திரா சோமசுந்தரம், திரு கனகேந்திரா சோமசுந்தரம், திருமதி சுதாமதி விஸ்வலிங்கம், ஜெனகராணி சிவகுரு ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமை பெருமைக்குரியது. திரு சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் அவர்களினால் இந்த வளைவு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

வளைவின் இரு மருங்கிலும் ஞாபகர்த்த அடிக்கற்களும் அமைக்கப்பட்டு, அலோசனைக்குழு உறுப்பினர்களால் திரைநீக்கம் செய்யப்பட்டது. இந்த விழாவிற்கு வருகை தந்து கலந்து கொண்ட மக்களுக்கு சில கலை நிகழ்வுகளையும், உரைகளையும் தொடர்ந்து குளிர்பானம் சிற்றுண்டிகளும் வழங்கி இந்த விழாவை சிறந்த முறையில் நடாத்தி முடித்தோம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கின்றோம். பல ஊடகவியலாளர் எமது இந்த விழாவை பதிவு செய்தார்கள். அவர்களின் தொலைக்காட்சிகள் ஊடாக காட்சிப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. சிறப்புமிக்க ஒரு செய்தி இந்த வரவேற்பு வளைவு எங்கள் ஊர் மக்களின் வாழ்நாள் கால ஞாபக சின்னமாக விளங்குவது யாவரும் அறிந்ததே!!!

சுற்றுச்சூழல்

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விடத்தல்தீவு பள்ளமடு விதி இருமருங்கிலும் ஜேவிசி இயந்திரம் மூலம் கருவேலை மரங்களையும் ஏனைய தேவையற்ற சில மரங்களையும் அகற்றி சுத்தம் செய்து, 100 புங்கை மரங்களை 20 அடிக்கு ஒன்றாக நாட்டி சுற்றி வேலி அடைத்து, தண்ணீர் ஊற்றி (ஒருவரை கூலி கொடுத்து வைத்து) பராமரித்து ஊரை அழகு படுத்தினோம். ஓரளவு வளர்ந்த பின், சுற்றுவேலி அகற்றப்பட்டது. தண்ணீர் ஊற்றுவது நிறுத்தப்பட்டது. அந்த மரங்களை நாட்டுவதற்கு ஊரில் இருக்கும் கழகங்களும், சில ஊர் மக்களும், ஊர் நலன் விரும்பிகளும் தவணை முறையில் உதவி செய்தார்கள். கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு திரு இராசேந்திராவின் மேற்பார்வையில் வேலைகள் நடைபெற்றன. இதேபோல் 2024 மீண்டும் 50 புங்கை மரங்கள் சில இடங்களில் பிரதிக்கன்றுகளாகவும்வேறு புதிய இடங்களிலும் நிதி கொடுத்து நாட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. இந்த மரங்களை பராமரிப்பதில் ஒரே நலம் விரும்பியாக திரு வி சுதாகர் செயல்பட்டார்.

மருத்துவமும் சுகாதாரமும்

விடத்தல்தீவு வைத்தியசாலைக்கு மருத்துவ உதவியாக புதிய அபிவிருத்தி அமைப்பானது நாட்டின் பொருளாதார நெருக்கடி நேரத்தில், அவர்களுக்கு பற்றாக்குறையான மருந்து பொருட்களையும் இரத்த அழுத்தம் சோதிக்கும் கருவிகளையும் சில rechargeable bulbs ம் இப்படி இன்னும் பல தரப்பட்ட, அவர்களுக்கு பற்றாக்குறையாக இருந்த ரத்தம் சோதிக்கும் கருவியும் அதற்குரிய strips (600) ம், விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் ஊடாக, அதில் அங்கம் வகிக்கும் சிலர்... (திருமதி சுதாமதி விஸ்வலிங்கம் அவர்கள் 3 இரத்த அழுத்தம் பரிசோதிக்கும் கருவிகளையும், திரு மசாரிக் மஹ்ரூப் 3 rechargeable bulbs ம், திரு எட்வின் அமல்ராஜ் இரத்த அழுத்தம் பரிசோதிக்கும் கருவிகள் 2, ஒரு oximeter) போன்ற பொருட்களை கொடுத்து உதவினோம். இவை யாவும் இரண்டு லட்சங்களுக்கு மேல் பெறுமதி வாய்ந்தவை. இதில் எமது அமைப்பினால் 55,000 ரூபாய் செலவழிக்கப்பட்டது. அன்பளிப்பாக சில மருந்து பொருட்களை Dr ம மதுரநாயகம் தனது செலவில் வைத்தியசாலைக்கு அனுப்பியிருந்தார்.

விடத்தல்தீவு வைத்தியசாலைக்கு 2022-ல் எமது புதிய அபிவிருத்தி அமைப்பினால் ஒரு குடிநீர் வடிகட்டி கருவி ஒன்று பொருத்தப்பட்டு கொடுக்கப்பட்டது. இதற்கான செலவு 65,000 ரூபாய். 2022 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பொருத்தப்பட்டு கொடுக்கப்பட்டது. ஏறக்குறைய இதற்கான முழு முயற்சியும் திரு மசாரிக் மஹ்ரூப் அவர்களையே சாரும். அவருக்கு உதவியாக திரு ஷாகிர் அன்சாரியும் செயல்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஆயுள்வேத வைத்திய சாலைக்கும் அதே மாதிரி 65,000 ரூபாய் செலவில் குடிநீர் வடிகட்டி கருவி பொருத்தப்பட்டு கையளிக்கப்பட்டது. இதையும் மசாரிக்கும், ஷாகிரும் சேர்ந்தே உதவினார்கள்.

விடத்தல்தீவு மக்களுக்கு செய்யப்பட்ட காருண்ய செயல்பாட்டு உதவிகள்

ஒரு இளைஞனின் அகால மரணத்தின் போது அந்தத் தாய்க்கு ஆதரவளிக்கும் வகையில் 25,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கினோம்.

அதன் பின் ஊரில் முன்னைய காலத்தில் சமூக சேவை செய்த கோணாமலை என்பவரின் குடும்பத்திற்கு அவரின் இறப்பின் போது, அதை அவருக்கு நன்றியுடன் மரியாதை செலுத்தும் முகமாக அவரது குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கினர் இந்த புதிய விருத்தி அமைப்பு இப்படியான கருணையான செயற்பாடுகளையும் செய்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதைவிட வெள்ள அனர்த்தத்தின் போது சமூக சேவையில் ஈடுபட்ட ஒரு வாலிபனுக்கு உடம்பில் சாப்பாடு ஊற்றியதனால், அவருக்கு சில காலம் வேலைக்கு போக முடியாத நேரத்தில் அவருக்கு நிதி உதவியாக 25,000 ரூபாய் அமைப்பினூடாக திரு இராசேந்திரா சோமசுந்தரம் அவர்களும், திருமதி சுதாமதி விஸ்வலிங்கம் அவர்களும் சேர்ந்து அந்த நிதிப்பங்களிப்பை வழங்கினார்கள்.

1) மருத்துவ உதவியாக ஒரு சிறு நீரக மாற்று செய்த இளம் யுவதி ஒருவருக்கு மருத்துவச் செலவிற்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் (120,000) ரூபாய் காருண்ணியத்துடன் அளிக்கப்பட்டது. இதற்கு ஆலோசனைக் குழு அங்கத்தவர்கள் மட்டுமே நிதியுதவி செய்தார்கள். அவர்களின் நிதி உதவியுடன் அந்த உதவி வழங்கப்பட்டது

மருத்துவமும் சுகாதாரமும்....

2) இதேபோல் இன்னும் ஒரு பத்து வயது சிறுவன் புற்றுநோய்வாய்ப்பட்டு இருந்தபோது, அவரின் இளம்தாய் கணவனில்லாத பெண்மணிக்கு ஆறு மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும் பின்பு மூன்று மாதங்களுக்கு பத்தாயிரம் ரூபாயும் வைத்தியசாலையில் இருக்கும்போது அவர்களுக்கு உதவி தொகையாக ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் (150,000) ரூபாய் ஆலோசனை குழு அங்கத்தவர்களின் நிதிப் பங்களிப்பில் மட்டுமே அதையும் காருண்ணியத்துடன்செய்து முடித்தோம். பள்ளமடுக்குளம்

எங்களுடைய பாரம்பரிய புராதன கதைகள் பல சொல்லும் பள்ளமடுக்குளத்திற்குஅருகில் இருந்த காடுகளை ஜேவிசி மெஷின் உதவியுடன் எமது அமைப்பினால் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் செலவில் சுத்தம் செய்யப்பட்டது. 2023 ஆவணி மாதம் இதற்கு எமது விடத்தல்தீவு மண்ணின் மைந்தன் பிரான்சில் வசிக்கும் திரு ரவீந்திரா சோமசுந்தரம் முழுமையாக தனது பங்களிப்பை வழங்கி முற்றுமுழுதாக பள்ளமடு குளத்தை சுற்றி வர சுத்தப்படுத்தும் செயல்பாட்டில் தனது முழுப்பங்களிப்பை வழங்கினார். அவருக்கு உதவியாக ஆலோசனை குழு உறுப்பினரான திரு கனகேந்திரா சோமசுந்தரம் அவர்களும் அதில் தனது பங்களிப்பை வழங்கி உதவினார்.

பள்ளமடு நல்ல தண்ணீர் கிணறு

அதற்கு அடுத்த கட்ட வேலையாக பள்ளமடுக்கிணறு புணருத்தாரணம்.

பல ஆண்டு காலத்திற்கு முன் நமது ஊர் மக்கள் குடிதண்ணீர் அள்ளிய பாரம்பரிய கிணறு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது. அது மிகவும் பாழடைந்த நிலையில் காணப்பட்டதாலும், பதிவாகவும் இருந்தபடியாலும் அது ஒரு ஆபத்தான நிலையில் இருந்தது. தண்ணீரை சுத்திகரித்து, கிணறு புதிதாக பூச்சு பூசி, வெளிக்கட்டிடத்தை புதுசாக கட்டி, கலர் பூச்சு பூசி புனருத்தாரணம் செய்யப்பட்டது. அதற்கு இரண்டு லட்சத்து இருபதினாயிரம் ரூபாய் செலவானது.

பெண்கள் உடைமாற்றகம் அமைத்தல்

ஆலோசனை குழுமத்தினால் இதற்கு அடுத்ததாக செய்யப்பட்ட வேலை 2024 தை மாதத்தில் பள்ளமடு குளத்தின் பெண்கள் கரை பகுதியில் ஒரு கட்டிடம்,

ஒரே நேரத்தில் 2-4 நபர்கள் உடை மாற்ற கூடிய ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டு, அதற்குஅருகில் அமைந்துள்ள நீர் வடிகால்பகுதி ஒன்றும் திருத்தி அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. அதற்கு நிதியுதவி கனடாவைச் சேர்ந்த திரு நாகேந்திரா சோமசுந்தரம் அவர்கள் ஒரு லட்சம் வழங்கினார். அதற்கு செலவாக 150,000 முடிந்தது. ஆலோசனைக்குழு 50,000 ரூபாய் வழங்கியது. எமது அமைப்பின் தற்காலிகமும் அதன் எதிர்காலமும் விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பானது ஒரு நல்ல குறிக்கோள் உடன் ஆரம்பிக்கப்பட்டு, அதற்குரிய பல செயல்பாடுகளை ஊரில் நடைமுறைப்படுத்தி வந்தது பற்றி இங்கு மேலே குறிப்பிட்டுள்ளோம்.

தற்போதும் விடத்தல்தீவு வைத்தியசாலைக்கு வேலி அடைக்கும் பணியில், 5 - 6 லட்சம் ரூபாய் செலவில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவியை அவுஸ்ரெலியாவில் வசிக்கும் சதீஸ்குமார் தனது நண்பர்களுடன் இணைந்து வழங்கியமை குறிப்பிட தக்கது. அதற்குரிய வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட உள்ளூர் மக்களின் தெரிவாகிய விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பானது April 2021 தொடக்கம் - April 2023 வரைக்கும் தனது இரண்டு வருட கால சேவையுடன் தனது செயற்பாடுகளை முடித்துக்கொண்டது. அதன்பின் ஒரு வருட காலமாக புலம்பெயர் ஆலோசனைக்குழு அங்கத்தவர்கள் தனிச்சியாக தாங்களாகவே பல வேலத்திட்டங்களை செய்து முடித்தனர். உதாரணமாக:-பள்ளமடு குளம் சுத்திகரிப்பு, பள்ளமடு கிணறு புனரத்தாரணம், பெண்கள் உடை மாற்றகம் அமைத்தல், மருத்துவ நிதியுதவிகள் போன்றவை...இன்னும் சில....

அதன் பின் கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு மே மாதம் புதிய தெரிவு இடம் பெற்று புதிய நிர்வாகம் தெரியப்பட்டது. அதில்

1) தலைவர் வின்சென்றி சுதாகர் அவர்கள்

2) செயலாளர் திருமதி மெற்றில்டா அவர்கள்

3) பொருளாளர் திரு எடிசன் அவர்கள்

இன்னும் பல உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர். புதிய குழுவினருடன் ஒரு சில சூம் சந்திப்பு மூலம் சில கலந்துரையாளர்கள் இடம் பெற்றன.

இவ்வமைப்பானது கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் அண்ணளவாக 850,000 லட்சம் ரூபாய்கள் ஊர் அபிவிருத்திக்காக செலவிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இனிவரும் காலங்களில் உள்ளூர் மக்களும், புலம்பெயர் மக்களும் முழுமையான ஆதரவு கொடுத்தால் எங்களது சமூக சேவை இனிதே நல்ல முறையில் தொடரும்.... வாருங்கள் எங்களது ஊரை முன்னேற்றுவோம். நீங்கள் கை தாருங்கள் நாங்களும் கை கொடுப்போம்

1999 இடப்பெயர்வும் - ஐக்கிய விளையாட்டுக்கழகமும் - ஜேம்ஸ். சுதாகரன்,ஐகார்த்தா,இந்தோனேசியா. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1999ம் ஆண்டு இடம்பெயர்ந்த நாம் பேசாலை நலன்புரி நிலையத்தில் வாழ்ந்த காலப்பகுதி போரின் தாக்கத்தாலும், சொந்த இடத்தை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்த நிலையில் மனவுளர்ச்சியாலும் மனோநிலை,பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த எமக்கு அடிக்கடி இராணுவ சுற்றுவளைப்புகள், கெடுபுடிகளால் முடக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்துறை இல்லாமல் அதிகநேரம் 10:10 அளவுடைய நிரைகொட்டில்களுக்குள் வசித்த எமக்கு மாலைநேர விளையாட்டே சற்று மனதுக்கு ஆறுதலை தந்திருந்தது என்றால் அது மிகையாகாது.

நலன்புரி நிலைய ஆலமர முன்பற்றியதாக கிடந்த தவரைபற்றைகளை துப்பரவு செய்து அதில் பின்னேரத்தில் விளையாட்டில் ஈடுபட்டோம். அதே நேரம் ஏற்கனவே அங்கே அமையப்பெற்ற கரப்பந்தாட்ட மைதானத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களோடு எம்மவர்கள் இணைந்து கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அந்த நாட்களில் ஊரில் நாம் கொண்டிருந்த எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை தொடர்ந்து இயக்கும் முகமாக பழைய உறுப்பினர்கள், விளையாட்டில் ஆர்வமுடையோர், நலன்விரும்பிகள் என ஒண்றிணைந்து ஐக்கிய விளையாட்டுக்கழக நிர்வாகத்தை தெரிவுசெய்து அந்த நிர்வாகத்தில் செயலாளராக முன்மொழியப்பட்டேன். அந்நாட்களில் கழகம் சார்பாக பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகளில் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக பெயருடன் பங்குபற்றியிருந்தோம்.

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அப்போதைய தலைவரும் Pஸிபன் எலைக்றோனிக் விற்பனை நிலைய உரிமையாளருமான அமரர் அன்ரன் ஆல்வாப்பிள்ளை அவர்களது தலமைத்துவத்தின் கீழ் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தில் முதன்முதலாக பதிவுசெய்தேன்.

எமது ஐக்கிய விளையாட்டுக்கழக பொதுக்கூட்டத்தை 3 மாதங்களுக்கு ஒரு தடவை நடாத்தி, நிர்வாக கூட்டத்தை மாதத்தில் ஒரு தடவை நடாத்தி மன்னார் மாவட்ட விளையாட்டு அதிகாரி அவர்களுக்கும் ,மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்திற்கும் அறிக்கைகளை சமர்பித்து சீரான முறையில் நிர்வாகத்தை பேணும் விளையாட்டு கழகம் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் என்ற நன்மதிப்பையும், பாராட்டையும் மன்னார் மாவட்டஉதைபந்தாட்ட சம்மேளனத்தால்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. நாம் பேசாலை நலன்புரி நிலையத்தில் இருந்த காலப்பகுதியில் மாவட்ட விளையாட்டு அதிகாரியாக கடமையாற்றிய திரு.ஜேம்ஸ் அவர்கள் உதைபந்து உட்பட சில விளையாட்டு உபகரணங்களை எமக்கு வழங்கி பல்வேறுபட்ட உதவிகளை ஆற்றியிருந்தார்.

எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் 2001ம் ஆண்டு பேசாலை நலன்புரி நிலைய அருகாமையில் அமைந்துள்ள பேசாலையை சேர்ந்த முன்னாள் அயன் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் அமரர் றெக்ஸ் குலாஸ் அவர்களுக்கு சொந்தமான காணியை அவரது அனுமதியோடு துப்பரவு செய்து மேதினத்தை முன்னிட்டு மீனவர் கூட்டுறவு சங்க அனுசரனையுடன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்தியிருந்தோம்,அந்த விளையாட்டு நிகழ்வு மிகவும் கோலகலமாக எமது ஊரவர்கள் மன்னாரில் இருந்து வருகைதந்திருந்த சிறப்பான நிகழ்வாக அமைந்திருந்தது.

இடம்பெயர்ந்த நிலையில் பேசாலை வெற்றிநாயகி ஆலய வளாகத்திலும் பேசாலை புனித பற்றிமா மகாவித்தியாலயத்திலும், பேசாலை பெண்கள் பாடசாலையிலும் கல்வியை தொடர்ந்த எம் மாணவர்களுக்காக நலன்புரி நிலையத்தில் எமக்கென தனியாக எமது ஜோசப்வாஸ் மகாவித்தியாலய பாடசாலையை அமைத்து விளையாட்டு போட்டியை மிகவும் சிறப்பாக நடாத்தியவர்களுள் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகமும் முக்கியமானதாகும்.

உதைபந்தாட்டத்திற்கு பேசாலை நலன்புரி நிலைய காணி மணல் பாங்கான இடமாக இருந்ததால் சில நேரம் பத்திமா மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாட பேசாலை விளையாட்டு கழக நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தோம், அதன் பின்னர் முருகன் கோவில் பகுதி நண்பர்கள் சிலரின் ஆதரவுடன் முருகன் கோவில் முடிவு எல்லையில் அமைந்திருந்த புல்தரையான இடத்திற்கு சுமார் IKm தூரம் வரை சென்று அந்த இடத்தில் ஒவ்வொருநாளும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம். அங்காங்கே நடைபெற்ற கிரிக்கட் போட்டிகளுக்கும், உதைபந்தாட்ட போட்டிகளுக்கும் தலைமன்னார் பகுதிகளுக்கு சென்றிருந்தோம், இன்னும் விளையாட்டு பயிற்சிகளே இல்லாது, பயிற்றுவிப்பாளர்கள் இல்லாமல் பள்ளிமுனை மைதானத்தில் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு கழகத்தால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிவரை சென்று இறுதியாட்டத்தில் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழக அணியுடன் தோல்வியுற்றோம்.

மன்னார் நகர பகுதியில் மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட பல போட்டிகளில் பங்குபற்றி பல அணிகளுடனான போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும் சம்பியனாக வெற்றிபெற முடியாமல் சம்பியன் கனவு எமக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. அந்தகாலப்பகுதியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக அணியில் அஎட்வேட், பொ.தயாந்தன், அறெஜி ராஜநாயகம், வ.தேவானந்தன், கெரென்சிபேர்டினன்ற, கெஎட்வேட்ஜோரக், கி.றவிசங்கர், கி.செல்வராஜ், யே.கமல்றாஜ், சூ.எட்வின் கமல்ராஜ், சிமரியசேவியர்,எமெலிட்டஸ், வி.பெல்ஸ்ரன், ம.ராஜநாயகம், றூறொயிற்றன், கெஎட்வின் கெனடி, புத்தளத்திலிருந்து விளையாட வரும் கீப்பர் போன்ற எமது ஐக்கிய விளையாட்டுக்கழக முன்னாள் உதைபந்தாட்ட வீரர்களுடன் நாம் எமது கழகத்திற்காக விளையாடியிருந்தோம்.

மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன முன்னாள் தலைவர் அமரர் அன்ரன் ஆல்வாப்பிள்ளை அவர்கள் எமது கழகத்திற்காக விளையாட்டு உபகரணங்களை வழங்கி பல உதவிகளை நல்கியிருந்தார் . நலன்புரி நிலையத்தில் ஐக்கிய விளையாட்டுக்கழக செயலாளராக இருந்த காலப்பகுதியில் ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவுசெய்ததுடன்,இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன அடையாள அட்டையை எமது கழக உறுப்பினர்களுக்கு வழங்க எனக்கு பெரிதும் உதவியவர் எமது முன்னாள் மன்னார் உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் அமரர் அன்ரன் ஆல்வாப்பிள்ளை அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பேசாலை நலன்புரி நிலையத்தில் வசித்த காலப்பகுதியில் எமக்கான விளையாட்டு சீருடை பெறுவதில் அக்காலப்பகுதியில் எமது கழகம் இருந்த பொருளாதார நிலையில் மிகவும் இக்கட்டான நிலை காணப்பட்டது. அந் நேரத்தில் பாக்கிஸ்தானில் தனது கற்கைக்காக சென்றிருந்த எமது மண்ணின் மைந்தன் அருட்சகோதர் மனோ றஞ்சிதன் அவர்கள் மூலமாக அங்கிருந்து நீலம் வெள்ளை நிறத்திலான எமது கழகத்திற்காக சீருடைகளை பெற்றிருந்தோம்.

இடப்பெயர்வால் அனைத்தையும் ஊரில் விட்டுவிட்டு நலன்புரி நிலையத்தில் இருந்த நாட்களில் விளையாடுவதற்கு பாதணிகள் இல்லாதிருந்த வேளையில் எமது மண்ணின் மைந்தனும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களினால் ஒரு தொகுதி பாதணிகள் எமக்கு வழங்கப்பட்டதுடன் அவற்றை மானிய விலை அடிப்படையில் எமது கழக வீரர்களுக்கு எமது நிர்வாகம் வழங்கியிருந்தது.

அதே காலப்பகுதியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழக முன்னாள் விளையாட்டு வீரன் ஒருவனுடைய என்பு மச்சை சத்திரசிகிற்சைக்காக எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் சார்பாக எமது மக்களிடமிருந்து ரூபா 50000/= நிதியினை திரட்டி அவ் வீரனுடைய மருத்துவ சிகிற்சைக்காக வழங்கியிருந்தோம்.

நாட்கள் கடந்தன யுத்தம் சுமார் ஒரு வருடத்தின் பின் சற்று ஓய்ந்திருந்து மக்களது அன்றாட நடைமுறைகள் வழமைக்கு திரும்பவே ஊரைவிட்டு இடம்பெயர்ந்து தேவன்பிட்டியில் வாழ்ந்த எமது மக்கள் ஊருக்கு திரும்பியிருந்தார்கள். ஊரில் உள்ள ஐக்கிய விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஊரில் இருந்த நிர்வாகத்திற்கு உதவியாக இடம்பெயர்ந்த நிலையில் இருந்த நாம் ஐக்கிய விளையாட்டுக்கழக நிர்வாகத்தில் ஒரு அங்கமாக செயற்படத்தொடங்கினோம்.

வன்னி பெருநிலப்பரப்பில் மண்ணின் மைந்தர்கள் நினைவு கிண்ணம், மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு விளையாட்டு நிகழ்வுகள், முத்துக்கள் மூன்று நினைவு கிண்ணம், மண்ணின் மாவீரர்கள் நினைவு கிண்ணம்,குமரன், ஞாபகர்த்த நினைவு கிண்ணம்,கீப்பிங் ஸ்ரார் நினைவு கிண்ணம், முழங்காவில் ,வலைப்பாடு போன்ற அதிகளவு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெற்ற காலத்தில் மன்னாரில் இருந்து சென்று விளையாடியதும் மறக்க முடியாது.

அந்த வகையில் ப.எட்வேட் றாஜா, அமரர் றொறொபின்சன், அமரர் சூஜோண்றாஜ், சூ.சர்வானந்தன் (குட்டி) றொதிரஞ்சன். ம.பரமானந்தன். வ.தேவானந்தன். கெரென்சி. ஸ்ரனிஸ்லஸ்(டெலாஸ்), கெஎட்வின் கெனடி கெபோல்றாஜ், பொதயானந்தன் ( வசந்தன் ), அ.றெஜீஸ் ராயநாயகம், றூறொஜிற்றன், கெஎட்வேட் ஜோர்ச் யே.கமல்றாஜ், வி.பெல்ஸ்ரன், சிமரியசேவியர், எமெலிட்டஸ் போன்றோருடன் இணைந்து அதிகளவு போட்டிகளில் விளையாடியிருந்தோம்.

கடல் பாஸ் கெடுபிடிகள் நிறைந்திருந்த காலம் பூட்ஸ், கடலால கொண்டு போகமுடியாத காலங்களில் கூட தோணியில போய் நாட்கணக்கில் நின்று விளையாடி வென்றுவந்த காலங்கள் அதுவும் மன்னார் பாலத்தடி துறையாலும் வங்காலப்பாட்டு துறை ஊடாகவும் போட்டில் போய் நேவி கிட்ட வந்த நேரம் பூட்ஸ கடலுக்குள் போட்டு அவங்க போனபிறகு திரும்ப எடுத்து கொண்டுபோய் விளையாடிய அனுபவங்களை எளிதில் மறந்துவிட முடியாது.

ஊர் துறையில் எங்களை கண்டவுடன் எங்களுக்கு இருந்த வரவேற்பு இருக்கே அப்பப்பா சொல்லிமீளாது. தேவானந்தன்,ரென்சி, கமல், பெலிஸ்ரன, றொஜிற்றன், டினேஸ் கிருபாகரன், ஸ்ரனிஸ்லஸ் போன்றோருடன் அடிக்கடி ஊருக்கு கடலால போய் விளையாடி வந்தோம். பாஸ் எடுப்பதில் இருந்து மூன்று நேர சாப்பாடு நேரம் தப்பாமலும், காலம பயிற்சிக்கு தேத்தண்ணி கிரவுண்டுக்க வருவதிலிருந்து எங்களுக்கு கிடைத்த வரவேற்பு வாழ்க்கையில் மறுக்கமுடியாத நினைவுகள்.

தேவன்பிட்டியில், மூன்றாம்பிட்டியில்,காத்தாங்குளம்,ஆண்டான்குள மைதானங்களில் நடக்கும் AGA டிவிசன் போட்டிகளுக்கு சென்றதும், முழங்காவில், பள்ளிக்குடா, வலைப்பாடு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளுக்கு சென்றதும், வட்டக்கண்டலில் நடைபெற்ற லீக் உதைபந்தாட்ட போட்டிகளில் பங்கேற்றதும், குமரன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்று போட்டிகளுக்கு காத்தாங்குள மைதானத்தில் விளையாடியதும்,முத்துக்கள் மூன்று வெற்றிக்கண்ண உதைபந்தாட்ட போட்டி,பாலம்பிட்டி, தட்சனாமருதமடு மண்ணின் மைந்தர்கள் நினைவு கிண்ண போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய நினைவுகளும், வெற்றிக்கொண்டாட்டத்திற்கு மாடறுத்து அருள்மாரி மண்டபத்தில் ஊரே கூடி சாப்பிட்டு மகிழ்ந்திருந்த காலங்கள் என்றும் பசுமையான நினைவுகள்.

நண்பனும் முன்னாள்ஐக்கிய விளையாட்டுக்கழக கோல் காப்பாளருமான ஜோண்றாஜ் அவர்களது இறப்பின் முதலாவது ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நடாத்த தீர்மானித்து விடத்தல்தீவு அருள்மாரி மண்டபத்தில் முன்னாள் தலைவர் ஸ்ரனி(மதி) உபதலைவர் அமரர் ஜோண் சகாயராசா அவர்களுடன் நானும் மன்னாரிலிருந்து கலந்துரையாடலுக்காக சென்ற செல்வின், எட்வின், ஆகியோருடன் கலந்துரையாடி எமது கழகத்தால் அமரர் நண்பன் ஜோண்றாஜ் நினைவாக நடாத்தப்போகும் உதைபந்தாட்ட சுற்றோப்போட்டிக்கு நண்பன் ஜோண்றாஜ் நினைவாக “கீப்பிங் ஸ்ரார் “ ( KEEPING STAR TROPHY) வெற்றிக் கிண்ணம் என்று பெயர்சூட்டியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நண்பன் அமரர் ஜோண்றாஜ் அவர்களது சகோதரி அசுந்தா மேரி அவர்களின் நிதிப்பங்களிப்பினூடாகவும் ஊரில்திரட்டிய நிதிப்பங்களிப்பினூடாகவும் மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளன அனுசரனையுடன் அதன் தலைவர் அமரர் அன்ரன் ஆல்வாப்பிள்ளை அவர்களது நெறிப்படுத்தலின் கீழ் மன்னார் மாவட்ட நடுவர் சங்க நடுவர்களின் பங்களிப்புடன் 2004 ம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ம்,6ம்,7ம் 8ம் திகதிகளில் எமது பாடசாலை மைதானத்தில் எமது கழகத்தால் KEEPING STAR வெற்றிக்கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் முதலாவது பரிசாக 10000/= ரொக்கபணமும்,பதக்கங்களும் வெற்றிக்கிண்ணமும் இரண்டாவது அணிக்கு 5000/= ரொக்கப்பணமும், பதக்கங்களும், கிண்ணமும் வழங்கப்பட்டது. இவ் போட்டிக்கு எமது மண்ணின் மைந்தன் அமரர் மெரிட்டஸ் (பாப்பு) அவர்கள் கோல் கம்பங்களை எமக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார்.

மேற்படி போட்டியில் வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள சுமார் 35 க்கும் மேற்பட்ட கழகங்களை பங்குபற்றியதில் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக அணி இறுதிப்போட்டியில் காத்தாங்குளம் சென் ஜோசப் அணியை 3:0 என்ற கோல்களின் அடிப்படையில் வெற்றியிட்டி முதலாவது KEEPING STAR TROPHY யை சுவீகரித்துக்கொண்டமை வரலாற்றில் மறக்க முடியாததாகும். இவ் இறுதி போட்டிக்கு எமது மண்ணின் மைந்தனும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ செல்வம் அடைக்கல நாதன் அவர்கள் விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

இவ் கீப்பிங் ஸ்ரார் வெற்றிக்கிண்ணம் இரண்டாவது தடவையாகவும் எமது முன்னாள் கோல்காப்பாளர் அமரர் ஜோண்றாஜ் நினைவின் இரண்டாவது ஆண்டை முன்னிட்டு எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மாந்தை மேற்கு பிரதேச கழகங்களுக்கிடையே முன்னாள் தளபதி ஜாண் அவர்களது தலமையில் வீரப்பிரசவ ஐக்கிய விளையாட்டுக்கழக வெற்றிக்கிண்ணத்திற்காக வட்டக்கண்டல் மைதானத்தில் நடாத்தப்பட்ட லீக் போட்டியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகம் இறுதிபோட்டியில் ஆண்டான்குளம் சென் தோமஸ் அணிக்கு எதிராக 6 கோல்களை பெற்று வெற்றியீட்டிய வரலாறும் மறப்பதற்கல்ல. பாலம்பிட்டி,தட்சனாமருதமடு மண்ணின் மைந்தர்கள் நினைவு கிண்ண உதைபந்தாட்டசுற்றுப்போட்டிகளில் சம்பியனாக வெற்றிவாகை சூடியதும் முத்துக்கள் மூன்று உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற பசுமையான நினைவுகளும் உண்டு.

காத்தான்குள மைதானத்தில் நடைபெறும் அமரர் குமரன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி,AGA டிவிசன் உதைபந்தாட்ட போட்டிகளுக்காக மன்னாரில் இருந்து வந்து விளையாடி வெற்றிவாகை சூடியதும், பலத்த எதிர்பார்ப்புடன் சென்ற வலைப்பாடு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்பால் அரையிறுதி போட்டியில் தோல்வியுற்றமையும் மறக்கமுடியாததாகும். விளையாட்டுக்காக ஊருக்கு வரும் ஒவ்வொருவருக்கும் சாப்பாட்டுக்கு பஞ்சம் இருக்காது எம்மை ஒருரூபாய் கூட செலவு செய்ய விடமாட்டார்கள் எமக்கு பாஸ் எடுப்பதில் இருந்து காத்தாங்குளம் பொயின்ரில் இருந்தும்,கடலால வருபவர்களுக்காக ஊர் கடற்கரையில் இருந்தும் விளையாட்டு நடக்கும் இடங்களுக்கு எம்மை ஏற்றிச்செல்ல ஊரவர்களது மோட்டர் சைக்கிள்கள் வரிசையாக காத்து நிற்கும்.

ஊரில் அந்த காலப்பகுதியில் எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்தில் அமரர் சகாயன், ஸ்ரனி (மதி) நிலா கடலுணவு வாணிபம் லக்ஸ்மன் (LNKG ) இவர்களது பங்களிப்பும் இவர்களால் நாம் பெற்ற உதவிகளும் மன்னாரில் இருந்து விளையாட வரும் எமக்கு வாழ்நாளில் மறக்கமுடியாததாக இருக்கிறது.

இவ்வாறு இடம்பெயர்ந்த நிலையில் பேசாலை நலன்புரி நிலையத்தில் இருந்த நேரத்திலும்,ஜோசப்வாஸ் நகரில் இருந்தும் ஊருக்காக விளையாட வேண்டும் என்ற அவாவினால் பல நாட்கணக்காக வெவ்வேறு இடங்களுக்கு சென்று பல இக்கட்டான நெருக்கடியான சூழ்நிலைகளில் கூட எமது ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்காக விளையாடி வெண்று வந்தோம்.

ஜோசப்வாஸ் நகரில் தனியாக கழகம் ஆரம்பிக்க சில ஏற்பாடுகள் நடைபெற்ற வேளையில் அமரர் சூ.இம்மனுவேல், ஸ்ரனி ( மதி) நே.லக்ஸ்மன், அமரர் ஜோண் சகாயராஜா போன்ற நிர்வாக உறுப்பினர்கள் ஜோசப்வாஸ் நகருக்கு வருகைதந்து ஐக்கிய விளையாட்டுக்கழக உறுப்பினர்கள்,மற்றும் ஊர் மக்களோடு நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் தொடர்ந்தும் எமது விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழகம் சார்பாக விளையாடுவது என்ற தீர்மானத்தின் பிரகாரம் நடைபெற்ற போட்டிகளில் விளையாடிவந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் எமது இளைஞர், யுவதிகளின் தேவை கருதி எமது ஜோசப்வாஸ் நகரில் ஐக்கிய விளையாட்டுக்கழகம் ஜோசப்வாஸ் நகர் என்ற பெயருடன் கழகத்தை அங்குரார்ப்பணம் செய்த சந்தர்ப்பத்திலும் செயலாளராக பதவிவகுத்திருந்து மேதின விளையாட்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடாத்தியிருந்தோம்.

மேலும் ஜோசப்வாஸ் நகர் ஐக்கிய விளையாட்டுக்கழகம் சார்பாக மன்னார் சாந்திபுர விளையாட்டு மைத்தானத்தில் புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகம் பனம்கட்டுகொட்டு அணியுடனான போட்டி ஊர் சார்பாக நான் விளையாடிய எனது இறுதி உதைபந்தாட்ட போட்டியாக அமைந்தது.

இவ்வாறு அனைத்தையும் மறந்து எமக்காக எழுது ஊருக்காக என்று விளையாடவன்னி எங்கும் அலைஞ்சு திரிஞ்சது என்றும் எமது மனதில் பசுமையே.....