
கலாசார மற்றும் ஆன்மீக வாழ்க்கை
கலாசார ரீதியாக நோக்குமிடத்து விடத்தல்தீவின் காலனித்துவத்திற்கு முற்பட்ட காலப்பகுதியில் ஒரு வலுவான அடையாளமாக தமிழ் மொழி காணப்பட்டதுடன் அதன் கடல்சார் தொடர்புகளால் வளப்படுத்தப்பட்டது. தமிழ் மொழி மற்றும் கலாசாரம்(நாட்டுப்புற இசை, கூத்து போன்ற நடனம் மற்றும் திருவிழாக்கள்) அன்றாட வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தின. மாந்தை துறைமுகமானது சுற்றுப்பாதையில் அமைந்துள்ளதனால் கிராமவாசிகள் வெளிநாட்டு மாலுமிகளை (இந்திய, அரபு, மலாய் )சந்தித்து புதிய உத்திகள் மற்றும் தொழிநுட்பங்களைக் கற்றுக்கொண்டிருப்பார்கள் உதாரணமாக படகு கட்டும் முறைகள் அல்லது கப்பல் பாதைகள் தொடர்பான அறிவுகள். இருப்பினும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் இந்து நம்பிக்கைகளில் வேரூன்றி இருந்தன. கிராமத்தில் காவல் தெய்வங்களுக்கும், அம்மனுக்கும் (தாய் தெய்வம்) சிறிய கோவில்கள் இருந்திருந்தன அவை வளம்நிறைந்த மற்றும் பாதுகாப்பான பயணங்கள்,விவசாயம் மற்றும் கடல்சார் நம்பிக்கைகளை பிரதிபலிக்கின்றன. திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் ஆண்டுதோறும் நடைபெறும் கோயில்திருவிழாக்களின்போது விடத்தல்தீவுஉட்பட மன்னார் முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்த்தன இது கிராமங்கள் முழுவதும் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தை பகிர்ந்து வலுப்படுத்தியது. மேலும் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (காலனித்துவத்திற்கு முன்னரான காலப்பகுதி), இஸ்லாமிய மதத்தின் செல்வாக்கானது கடலோர இலங்கையிலும் பரவியிருந்தது. மூரிஷ் வர்த்தகர்களும் தமிழ் முஸ்லிம்களும் மன்னார் கடற்கரையினை அடிக்கடி வந்தஇறங்கிய சிலர் சிறிய இடங்களில் குடியேறியிருக்கலாம். போர்த்துகீசியர்கள் வருவதற்கு முன்பே விடத்தல்தீவில்
அல்லது அதற்கு அருகில் ஒரு சிறிய முஸ்லிம் சமூகம் இருந்திருக்கலாம் என்பது நம்பப்படுகிறது. அவர்கள் வழிபாட்டிற்காக ஒரு சாதாரண மசூதியை (தமிழில் பள்ளி) அமைத்து உள்ளூர் வர்த்தகத்துடன் இணைந்திருப்பார்கள். பள்ளிக்குடா (இந்தப் பெயரே ஒரு விரிகுடாவின் அருகே உள்ள பள்ளி அல்லது வழிபாட்டுத் தலத்தைக் குறிக்கிறது) போன்ற அருகிலுள்ள கிராமங்களில் பழைய புனிதத் தலங்கள் இருந்திருக்கலாம். ஒருவேளை பெளத்த அல்லது இஸ்லாமிய இப்பகுதியின் மத பன்முகத்தன்மையைக் குறிக்கும் புராணக் கதைகள் (சில்வா, 1984; தொல்பொருள் துறை, 2015). காலனித்துவத்திற்கு முந்தைய விடத்தல்தீவின் கலாச்சார நிலப்பரப்பு, பல நூற்றாண்டுகளாக சர்வதேச வர்த்தகத்தின் தாக்கங்களால் (சோழ இளவரசர்களால் ஆதரிக்கப்பட்ட இந்து கோயில்கள், அரபு வர்த்தகர்களிடமிருந்து இஸ்லாமிய நடைமுறைகள் மற்றும் வர்த்தகம் மூலம் ஐரோப்பிய தொடர்புகளிலிருந்து மொழியியல் கடன்கள் கூட) மேலோட்டமாக இருந்த பூர்வீக தமிழ் இந்து மரபுகளின் ஒரு திரைச்சீலை ஆகும்.