
4. சித்திர பெருநாளும் விடத்தல்தீவாரும். - ஜேம்ஸ். சுதாகரன்
மன்னார் மாவட்ட கிராமங்களில் மாந்தை மேற்கு பகுதியில் அதிகளவான கத்தோலிக்கர் வாழ்ந்த எமது விடத்தல்தீவில் கத்தோலிக்க திருமறை சார்ந்த அனைத்து விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்பட்டவை என்றால் அது மிகையாகாது.
திருச்சபையால் கொண்டாடப்படும் திருவிழாக்கள், வருடத்தில் வரும் எமது இரண்டு ஆலயங்களின் திருவிழாக்களோடு நத்தார், வருடப்பிறப்பு,மடுத்திருவிழாகாலங்கள் என்பவற்றுடன் சித்திரை பெருநாளும் எம்மவர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவதுண்டு.
திருநீற்றுப்புதன்.
இயேசு கிறிஸ்து பாடுகள் பட்டு உயிர்த்தெழும் தவக்கால நாட்கள் குறோசும என்று எம்மவர்களால் அழைக்கப்படும் சித்திர பெருநாள். இது திருநீற்று புதன் அன்று அமளிதுமளியாக ஆரம்பிக்கப்படும். இந்த திருநீற்றுப்புதன் அன்று கடந்த வருடத்தில் குருத்தோலை ஞாயிறு தினத்தில் வழங்கப்படும் குருத்தோலைகளை அறவீட்டில் கொடுத்து அதை அவர்கள் எரித்து சாம்பலாக வைத்து குறோசும தொடங்கும் திருநீற்றுப்புதன் அன்று கோயிலில் நெத்தியில் சிலுவை அடையாளம் வரையப்பட்டு” மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்கு திரும்புவாய் மறவாதே என்றும் “என்ற பாடலோடு சாவு பற்றிய பயத்தையும் ஞாபகப்படுத்தி தவசுகாலம் தொடங்கும்.
பல மந்திரவாதிகளுக்கு கட்டுப்படாத பரம்பர குடிகாரர்கள்இ யார் சொல்லியும் எவருடைய பேச்சையும் கேட்காத குடிகாரர்கள்இ கள்ளு தவறனையே தஞ்சம் என்டு காலம வெள்ளநண்டோட போய் நடுராத்திரி வரைக்கும் அங்கேய படுத்தெழும்பும் ஆக்கள் எல்லாம் குடியை விட்டு பரிசுத்த சம்மனசுகளாக அவதாரம் எடுக்கும் நாட்களாக இந்த குறோசும 40 நாளும் இருக்கும்.
எங்கட ஊரில சிறுசுகள் தொடங்கி பெரியவர்கள் வரைக்கும் திருநீற்று புதன்கிழமய கொண்டாடி தீர்ப்பார்கள். தங்கட முற மச்சான்இ மச்சாள்மாருக்கென்றே முட்டைகளை தாட்டுவச்சு அவற்றை எடுத்து தருணம் பாத்து தலையில் அடிப்பதும்இ ஒரு வீடு விடுபடாமல் எல்லா வீடுகளிலும் இருந்து சாம்பலை வாளி வாளியாக கரைத்து வாற போறவர்களை இலக்கு வைத்து ஒருவர் தப்பாமல் எத்துவதும் இசாம்பல் முடிஞ்ச கையோட றோட்டில கிடக்கிற சாணிகளால் எதிரே வருபவர்களை பதம்பார்ப்பதுமாக அந்த நாள் முடியும். அதிலும் சில பேர் தங்களுக்கு முட்டையால அடிப்பார்கள்இ சாம்பலால எத்துவார்கள் என தெரிந்தும், அடிக்கடி வீட்டில் இருந்து வெளியே வந்து இடம் எடுப்பதும் வேடிக்கையாக இருக்கும்.
அத்தோடு திருநீற்று புதன் அன்றில் இருந்து மாலை நேரங்களில் வியாகுல பிரசங்கம் வாசித்து ஒப்பாரி பாடுவது. எமது ஊரின் பழமைகளில் முக்கியமானவைகளில் ஒன்றாகும் தொடர்ந்து வரும் ஞாயிறு திருப்பலிகளில் நற்கருணை வழங்கப்படும் போது நற்கருணை பாடல் பாடப்படமாட்டாது அவ்வேளையில் வியாகுல பிரசங்கம் வாசிக்கப்படுவதும் எமது ஊரின் வழமையாகும். எமது பாடசாலையில் வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் வாரத்தில் இரு நாட்களில்சிலுவைப்பாதை வழிபாடுகள் ஆலயங்களிலும் இடம்பெறுவதும் வழமையே.
அத்துடன் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒருசந்தி புடிச்சு ஒறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதும் எமது ஊரின் பாரம்பரிய பழக்கவழக்கமாக இருந்து வருகிறது.
குருத்தோலை ஞாயிறு.
குருத்தோல ஞாயிற்றுக்கிழமைக்கு முதல் நாள் குருத்தோலைகளை வெட்ட பெரியமடுவிற்கு போய் அத வெட்டிக்கொண்டுவாற பொறுப்பு ஊரில இருக்கிற பூசைக்கு உதவிற ஞானப்பிரகாசியார் கூட்ட சிறுவர்களையே சார்ந்திருக்கும் .எங்கட ஊரில 2 கோயில்கள் இருக்கிறதால ஒரு கோயில்ல இருந்து மற்ற கோயிலுக்கு குருத்தோலைகள ஏந்தி பவனியாக வந்து பூச நடக்கும். அந்த குரருத்தோலைகள் குருசாக செய்து வீட்டில வைச்சிருப்போம் அதுதான் அடுத்த வருசம் திருநீற்று புதன் அன்று எரித்து சாம்பலாக எடுக்கபடும்.
பெரிய கிழமை புனித வார நிகழ்வுகள்.
கத்தோலிக்க விசுவாச நடைமுறைகளை கைக்கொண்டு கிறிஸ்தவ பாரம்பரியத்தில் தழைத்தோங்கி அதிலே அதீத நாட்டம் கொண்ட எமது ஊரில் பெரிய கிழமை வழிபாடுகள் சிறப்பாக அனுஸ்டிக்கப்படும். அந்த வகையிலே பெரிய வியாழன் வழிபாடுகள் நடைபெற்று பாதம் கழுவும் சடங்கு நடைபெறம் அந்த வேளையில் பாடப்படம் :உங்களுக்கன்பு நான் செய்தது போலவே" ...என்ற பாடல் மனதை அதன்பால் ஈர்க்கும் தருணமாகவே அமையும். நற்கருணை இடம்மாறுவதற்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் நற்கருணை எழுந்தேற்றம் பண்ணிவைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவதும் எமது ஊரில் உள்ள வழமையான நிகழ்வாகும். பாதம் கழுவப்படுவதற்கு ஊரில் உள்ள மூத்த வயோதிபர்களே தெரிவுசெய்யப்படுவார்கள் அவர்கள் ஒவ்வொருவருக்கும் பங்குத்தந்தையால் பாண் வழங்கப்படுவது இன்றுவரை தொடர்கின்றது.
பெரிய வெள்ளி.
பெரிய வெள்ளி தினத்தில் எமது ஊரில் யாருமே தொழிலுக்கு போகமாட்டார்கள். காலம பெரிய சிலுவைப்பாதை ஊரச்சுத்தி நடைபெறும். அது முடிய அங்க இங்க எண்டு மூல முடுக்கெல்லாம் எங்கட ஊரில தாகசாந்தி வழங்கப்படும்.இத அந்த காலத்தில எங்கட ஊரில இருந்த VAJ, PMS, DDR சம்மாட்டிமார் வாகனத்தில கொண்டு ஊர சுத்தி கொடுப்பார்கள், இன்னும் சிலபேர் தங்கட தங்கட வசதிகளுக்கு இ அந்தஸ்துக்கு ஏற்றால்போல் தாகசாந்திய வழங்குவார்கள்.
இப்படி ஒருபக்கம் தாகசாந்தி வழங்கப்படும் போது எங்கட ஊரில இருக்கிற பக்தி சபையினர்கள் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட ஒழுங்கு முறைகளுக்கு ஏற்ப தங்கள் தங்கள் நேர அட்டவணையில் கோயில்ல வந்து நற்கருணை வழிபாட்டை நடத்துவார்கள். மற்றும் தனிப்பட்ட ரீதியாகவும்இ குடும்பம் குடும்பமாகவும் வந்து எமது கோயில் அன்றைய நாள் வழிபாடுகளால் அதிரும். நற்கருணை வழிபாட்டில் ஈடுபடும் இளசுகள் அடிக்கடி தங்கட உடுப்புகள மாத்தி மாத்தி மணிக்கு ஒரு தடவையென நற்கருணை சந்திப்பில் ஈடுபடுவதும் எம்மூரில் நடந்தேறும்.
பின்னேரம் மூன்று மணிக்கு பொது வழிபாடு இடம்பெறும். இடைக்கிடைய வியாகுல பிரசங்கம் வாசிக்கப்பட்டு ஒப்பாரி பாடப்படுவதும் எமது ஊரின் வழமையே. தொடர்ந்து மாலை வழிபாடுகள் இடம்பெற்று சிலுவை முத்தி செய்யும் நிகழ்வு இடம்பெறும்இ சிலுவை முத்தியின் போது பாடப்படும் ஆணி கொண்ட உம் காயங்களை....என்று தொடங்கும் பாடல் அந்த தருணத்தில் பல நெகிழ்ச்சிகளை உண்டுபண்ணும்.
சிலுவை முத்தியை தொடர்ந்து வழிபாடுகள் நிறைவுற்று இயேசுவின் சிலுவை மரண திருப்பாடுகளின் காட்சி காண்பிக்கப்படும்.
அதற்காகவே கோயில் கல்லற பெட்டிக்குள் வைத்திருக்கும் இயேசுவின் திருவுருவத்தை எடுத்து சரிபிழைகளை பாத்து பெயின்ற அடித்து சரிக்கட்டி வைத்துவிட்டுவார்கள். பின்னர் அதனை உரிய இடத்தில் சிலுவையில் நிறுத்தி இயேசுவின் மரண நிகழ்வை பிரதிபலிக்கும் காட்சி காண்பிக்கப்படும் அந்த வேளையில் பிரசங்கம் வாசிக்கபபட்டு ஒப்பாரி பாடப்படும். எம்மவர்கள் வடமோடி இராகத்தில் ஒப்பாரி பாடுவதில் வல்லவர்கள். அவர்கள் பாடும் விதம்இ பிரசங்கம் வாசிக்கும் விதம் என்பன மனதை அந்த நிகழ்விலே ஒருங்கிணைய செய்துவிடும். எமது ஊரில் ஒப்பாரி,பிரசங்கத்திற்கு பெயர்போனவர்கள் பலர் அதிலும் அமரர் வ. செபஸ்தியாம்பிள்ளை இம.பிரான்சிஸ் இருவருடைய குரலும் அவர்கள் பிரசங்கம் வாசிக்கும் விதமும் ஒப்பாரி பாடம் தன்மையும் கேட்போரை மெய்மறக்கச்செய்துவிடும்.
அந்த தருணத்தில் தனது மாஜாஜால ஒளி மற்றும் ஒலி அமைப்புகளால் அந்த நாட்களில் இயேசு இறக்கும் போது நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் மனக்கண்முன்னே கொண்டுவந்திடுவார் எமது ஊரின் யா.ஜோசப் அண்ணன் அவர்கள்.
திருப்பாடுகளின் காட்சி நிறைவுற்றதும் சிலுவையில் இருந்து இறக்கப்படும் இயேசுவின் திருவுடல் ஏற்கனவே கோயில்ல இருக்கும் தோம்ப எனப்படும் இறந்தவர்களை சவுக்காலைக்கு தூக்கிச்செல்ல பயன்படுத்தப்படும் சாதனத்தை கறுப்பு வெள்ளை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு ஆசந்தி பவனியாக எமது ஊரச்சுத்தி ஊரவர்கள் கையல் மெழுகுவர்த்திகளை ஏந்தியவர்களாக கொண்டுவருவார்கள் அந்த நேரத்தில் எம்மவர்களால் பாடப்படும் ஒப்பாரிகளும்இ தாழிசைகளும் குறிப்பாக' ஐயோஇ ஐயோ என் மகனே ..... என்ற ஒப்பாரி பாடலும் ஒருவர் இறந்துவிட்டதான உணர்வை மக்களிடத்திலே உண்டுபண்ணும். இவ்வாறு ஊரை சுத்தி ஆசந்தி பவனியாக கொண்டுவரப்பட்ட இயேசுவின் திருவுடல் ஆலயத்தின் போட்டிக்கோவில் வைத்து இறுதியில் புனிதர்கள் பிராத்தனை வாசிக்கப்பட்டு மக்களின் அஞ்சலிகளோடு நிறைவுறும்.
கிறிச்சான் குறுப்பின் பங்கு.
பெரிய வெள்ளி இயேசுவின் பாடுகள் மரணத்தை முன்னிட்டு ஆலயங்களில் ஆலய மணி ஓசை எழுப்பப்படாது மாறாக ஆலயத்தின் வழிபாடுகளுக்கான நேர காலத்தையும் அவை ஆரம்பமாகுவதையும் அறிவிக்கும் பொருட்டு கிறிச்சான் குழு ஊரில் உள்ள மூலை முடுக்கெல்லாம் திரிஞ்சு அறிவிக்கும் பழக்கம் எமது ஊரில் இருந்து வருகிறது. இந்த கிறிச்சான் குழுவில் அதிகமாக புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் சபையினரே இருக்கவேண்டும் என்பது மாற்றப்படாத விதியாக இருந்துவருகிறது. முதலாம் மணியாம்..... ஆய்த்தமணியாம் இ12 மணியாம்....என்ற கோசத்தோடு கிறிச்சான் குழு ஊரை வலம்வரும் . 12 மணியாம் என்ற கோசம் ஊரின் சில பகுதிகளில் சொல்லப்படும் போது மணிக்கூட்டில் மணி ஒண்டை தாண்டியிருப்பதும் வேடிக்கையானதாகும். சூஅல்லேலூயா சனி.
பெரிய வெள்ளியன்று இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பு தியானிக்கப்பட்டு மறுநாள் சனிக்கிழமை அல்லேலூயா சனியாக எமது ஊரில் அறியப்பட்டு வருகிறது.
அல்லேலூயா சனிக்கிழமை ஆசந்தியாக தூக்கிவரப்பட்ட இயேசுவின் உடலை ஆலயத்தினுள் வைத்திருப்பார்கள். அந்த நேரத்தில் இயேசுவின் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் நூல் அளந்து அதை கையில் கட்டுவது எம்மவர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கத்தரின் நூல் அளந்து கையில் கட்டும் செயல்பாடானது இளஞர்களிடேயே அந்தநாட்களில் விரும்பத்தக்க செயலாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அல்லேலூயா சனியில் அலகைகளின்இ பேய்களின் அட்டகாசம் சொல்லிமீளாது. இயேசுவை கொன்று அவரின் சாவை தங்கள் வெற்றிநாளாக எண்ணிய அலகைகளின் செயல்பாட்டை மனக்கண்முன்னே கொண்டுவரும் செயல்பாடாக அலகைகள் போல வேடமிடப்பட்டு எமது ஊரையே அலப்பறைசெய்யும் அலகைகளின் அட்டகாசமும் அந்நாளில் அல்லோலகல்லோலப்பட வைத்து நடந்தேறும்.
அத்தோடு குறோசும காலம் 40 நாளும் எமது ஊரில் முடி வெட்டி தாடி வளிக்காமல் குறோசுமய கடைப்பிடித்து இருந்த எமது ஊரவர்கள் முடிவெட்டி தாடி வளிக்க எமது ஆசமுத்து அண்ணணுடைய கடையில் முந்தியடிப்பதும் வாடிக்கையானதொன்றாகும்.
சனி நள்ளிரவு திருப்பலி
உயிர்த்த சனி எனப்படும் நள்ளிரவு திருப்பலியின் போது எங்கும் இருள் நிறைந்திருக்கும் மின்குமிழ்கள் ஒளிரா, அவ்வேளையில் ஆலய முன்றலில் புதுநெருப்பு மூட்டி பாஸ்கா மெழுகுவர்த்தி ஏற்றியவாறு ஆலயத்தினுள் செல்வோம் அங்கே பாஸ்காவிழாவை முன்னிட்டு ஆசிநீர் தெளிக்கப்பட்டு ஞானஸ்ஞானத்தின் போது நாம் வழங்கிய வார்த்தைப்பாடு புதுப்பிக்கப்படும். தொடர்ந்து திருப்பலியின் போது இயேசுவின் உயிர்ப்பு விழாவாக கொண்டாடப்படும்.
உயிர்ப்பு ஞாயிறு,
குறோசும காலத்தில விட்ட அனைத்தும் தொடரப்படும் நாளாகவே இந்த உயிர்ப்பு ஞாயிறு அமையும். காலம பூசைக்கு போய் பூச முடிஞ்சபாதி முடியாத பாதியாக இறச்சி கடைக்கு போய் வரிசையில நிண்டு இறச்சிய வாங்கி குடுப்பதோடு வீட்டு கடம முடியும்.
தங்கள் தங்கள் வயதுபிரிவினரோடு மெச் விளையாட சில இளஞர்கள் கிரவுண்டுக்கு போவார்கள். சிலர் பெரியவர்கள் பழைய குருடி கதவ திறடி என்பதைப்போல குறோசும நாளில நிப்பாட்டிவைச்சத திரும்ப தொடர பள்ளமடு கள்ளு தவறணைக்கு நடப்பார்கள். வேறு சிலர் வீட்டில் விருந்து வைத்து தமது இனம் சனத்தோடு உறவினரோடு விழாவை தொடங்குவார்கள்.
காலம பூச முடிஞ்ச கையோட தொடங்கும் சிலரது பாட்டி சாமம் சென்றாலும் முடியாது அது மட்டுமா விடிய திங்கட்கிழம கடல போகாமல் இருக்கும் அளவிற்கு பாட்டி தொடர்ந்து எங்கட சித்திர பெருநாள் முடிவுக்கு வரும்.