மூத்தோர் சங்க வரலாறு- ஜோசப் வாஸ் நகர்

கடல் அலை தாலாட்டக் கடல் அன்னை கடல் வளங்கள் அள்ளி வழங்க, கடல் காற்று இதமான தண்வீசஇ கிரே தேவாலயங்களில் மூவேளை செப் மணி ஒலிக்க, திருப்பலிகள், ஆராதனைகள், மக்கள் கிரே. ஆலயத் திருவிழாக்கள் இறைபற்றுடன் மக்கள் நிறைவாக இறைபு, புகழ்பாட புனித அன்னை, புனித யாகப்பர் ஆசிவழங்கி எம் கிராமத்தை காக்க, எம் கிராமம் வாழ்ந்த இந்து, முஸ்லீம் சகோதரர்களுடன் அன்போடு மகிழ்வூடன் பங்குபற்றி எம் விடத்தல் மண்ணில் வாழ்ந்து, எம் முன்னோர் விசுவாச வாழ்வில் செழித்து, கல்வி, கலை, கலாசாரத்துடன் விசுவாச வாழ்வூ வாழ்ந்து, பின் சந்ததியினருக்கு யாம் அளிக்கும் எம் இவைகள் தாம் என சிந்திக்கும் இவ்வேளையிலே போரின் தாக்கம் அதிகரிக்கஇ குண்டு வீச்சுகளும்இ வான் ஊர்தியின் குண்டுகளும் எம் கிராமத்தை அகலக் கொண்ட வேளையிலே இறைவனின் சன்னிதியில் ஆலயங்களிலும் தஞ்சமடைந்துஇ மக்கள் செயலை அறியாது பரதவிக்க, திடீரென எம் கிராமத்தை விட்டு அனைவரும் வெளியேறும்படி செய்ய, போரின் உச்சக்கட்டத்தில் கண்ணீரோடும்,அச்சத்தோடும், பதறிப் பதறிஇ தெய்வத்தின் பாதம் பற்றிப் பிடித்தவர்களாக எம் பூர்வீக கிராமமாம் விடத்தல் தீவில் இருந்து கடல் வழியாக 29.6.1999 அன்று மன்னார் தீவை நோக்கி வெளியேறினோம்.

தொடர்ந்து 30.6.1999ல் பேசாலை மு.கூ.ஊ முகாமில் தங்கியிருந்தோம். அச் செய்தி கேட்டு அமரர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆயர் ஆண்டகை அவர்கள் எம்மை அணுகி, விடத்தல் தீவூ மக்களின் விசுவாசம் குன்றா வண்ணமாய் எழுந்து ஒளி வீச தாங்கள் விரும்புவதாக எம் மக்களுக்கு உறுதியளித்து தோட்டவெளியில் தமக்கு சொந்தமான காணி உண்டு. அங்கு சென்று குடியிருங்கள் என்று எம் மக்களுக்கு ஆசி வழங்கி, அங்கு சிறுகுடிசை அமைக்க செய்து சிற்றாலயம் அமைத்து இறைவழிபாடுகள் நடைபெற வழிவகுத்து, புதிதாக அமைந்த கிராமத்திற்கு “ ஜோசப் வாஸ் நகர்” என்று பெயரிட்டு எம் மக்கள் மகிழ்ச்சியூடன் வாழ, ஆசி அளித்து, எம் மக்களை தம் கண் 100மூ அன்பில் வைத்து அடிக்கடி எம் மக்களை துன்ப துயரம் அணுகாமல் காத்து நின்றார்.

அவ்வேளையில் ஆயர் தந்தை அவர்கள் தம் தலைமையில் 60 வயதுடையவர்களை மூத்தோர் சங்கத்தில் இணைவிக்கும்படி வண குரு முதல்வர் விக்ரசோசை அவர்களை எம் மத்தியில் அனுப்பினார். அவர் மூலமாக 2005இல் எம் கிராமத்தில் முதன்முதலாக மூத்தோர் சங்கம் தோன்றிற்று ஆயர் தந்தை மேதகு இராயப்பு யோசப் ஆண்டகை எம் சங்கத்திற்குப் “ ஜோசேவாஸ்” என்று நாமம் சூட்டினார்.

ஜோசப் வாஸ் நகர் சிற்றாலயத்தில் முதன்முதலாக திருஞா தேவதாஸ் அவர்கள் தலைவராக, அவர்கள் தலைவி பதவியை ஏற்று கூட்டம் 2005ல் முதல் தடவையாக ஆரம்பமானது. பின்னர் திரு. அ இசக்கியேல் - திரு ஞானமணி ஆகியோர் தலைவராகவூம், திரு ம யக்கோவா செயல்வாளராகவூம், திருமதி மேரி மக்ரலின் பொருளாளராகவூம் சங்கக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எம் சங்கம் சமூக சேவைச் குடும்ப பணிமன்றத்தில் பதிவூ செய்யப்பட்டு குடும்பப்பணிமன்ற ஆணையாளர் தலைமையில் கண்காணிக்கப்பட்டு நடக்கிறது.

பின்னர்இ மூத்தோர் சங்கம் நடத்த சொந்தமான இடம் தேவை எனத் திரு அ இசக்கியேல் தலைவர் அவர்கள் பங்குத்தந்தை வண. இரா. இராயநாயகம் அடிகளாரின் பணிக்காலத்தில் பங்குத்தந்தையின் ஆசிவழியூம் மீன்பிடி சேவை ஊழியர் நலன்புரிகளும் பங்குமக்கள் சங்க உறுப்பினர்கள் தலைவர் திரு. அ. இசக்கியேல் அவர்கள் பணி உறுதியூடனும் உடல் உழைப்புடனும்இ பங்குத்தந்தை வண. இராயநாயகம் அடிகளாரின்இ உறுப்பினர்கள் பங்களிப்பும் அனைவரின் உதவியூடனும் இ தலைவரின் விடாமுயற்சியாலும் புதிதாகக் கட்டிடம் அமைக்கப்பட்டு 1.10.22 அன்று வண இராயநாயகம் அடிகளார் ஆசிவழி அளித்துஇ மூத்தோர் சங்க கட்டிடம் திறக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்துஇ மூத்தோர் சங்க நிர்வாகம் சக உறுப்பினர்கள் யாவரும் அதையிட்டு மகிழ்ந்தோம். ச் சங்கக் கூட்டம் மாதம் ஒருமுறை நடைபெறுகிறது. பங்குத்தந்தையர்கள் எம் சங்கத்திற்கு வருகை தந்து எமக்கு உடல் மற்றும் உள்ள ஆலோசனைகள் தந்துஇ "மூத்தோர் இரண்டாம் மழலைகள்” என எமக்கு மகிழ்வூ+ட்டிச் செல்வர்.

எம் சங்கம் ஆயர் தந்தையின் கண்காணிப்பில் இருப்பதால்இ கிறிஸ்துமஸ் ஒளி விழாஇ மூத்தோர் விழாதியானம் போன்ற நிகழ்வூகளில் எம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் அவ்வவ் வேளைகளில் அழைப்பு விடுக்கப்படுவார்கள். மேலும்இ எம் சங்கம் ஒளிவிழாஇ மூத்தோர் விழாஇ பங்குத்தந்தை இடமாற்றம் ஆகிய தருணங்களில் விழா ஏற்பாடு செய்து மகிழ்கின்றௌம்.

எம் சங்க உறுப்பினர் இல்லத்தில் வழியாரும் இறந்தபின் அப்பணி இல்லத்தில் இறுதிக் கிரியைகளிலும் எம் சங்க உறுப்பினர்கள் செயலில் இருக்கின்றனர். எம் சங்க உறுப்பினர்கள் ஒருவர் மரணம் அடைந்த பின் மரண நிதியினால் ஒரு மரண நிதியம் எம் சங்க உறுப்பினருக்கு வழங்கப்படும். இதை உருவாக்கிய அமரர் மேதகு ஆயர் தந்தை இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களுக்கு வண அடிகள் குரு முதல்வர் விக்ரசோசை அவர்களுக்கும் குடும்பப் பணிமன்றத்தின் எங்கள் மூத்தோர் சங்க இயக்குநர் குருக்களுக்கும் எங்கள் அங்கம் மேற்பார்வையாளர்களுக்கும் எங்கள் சங்கம் தமது துணிந்த நன்றியூம் வணக்கத்தையூம் தெரிவித்துக் கொள்கின்றது.