அலிகார் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் - கு. முஜம்மில்

1990 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலத்தில், 1905ம் ஆண்டு காலப்பகுதிகளில் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட வரலாறு காணப்படுகிறது. அந்தக் காலத்தில் கல்வி பயிலும் மாணவர்களால் “பழைய மாணவர் சங்கம்” என்ற பெயரில் காலத்திற்கேற்ப பழைய மாணவர் சங்கங்களை ஏற்படுத்தி, ஒவ்வொரு அதிபரின் தலைமையின் கீழ் இதனை நடைமுறைப்படுத்தி வந்தனர். இது 90களில் முடிவுக்கு வந்தது. அக்கால பழைய மாணவர்களால் இப்பாடசாலைக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

மூன்றாம் மற்றும் நான்காம் தரம் வரையிலான மாணவர்கள் அதிகமாக காணப்பட்டனர். முஸ்லிம் பெற்றோர்கள் அதிகமாக காணப்பட்டதால் ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டனர். இந்து, கிறிஸ்தவ மாணவர்களும் கற்றதோடு அவர்களின் பெற்றோர்களும் சங்கங்களில் காணப்பட்டனர். பழைய மாணவர்கள் பாடசாலைக்காக பௌதீக வசதிகளை வழங்கினர். காணி விஸ்தீரணங்கள்

சுற்றுலாவிற்கு தேவையான வசதிகள்.

விளையாட்டு மைதானங்கள் புனரமைப்பு

திறமையான பழைய மாணவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகள்

விளையாட்டுக்களிலும் மாணவர்கள் சாதித்து வந்தனர்.; பாடசாலை சார்ந்த விளையாட்டு போட்டிகளிலும் ஊர் சார்ந்த விளையாட்டுகளிலும் பொது வேலைகளிலும் சங்கங்கள், அமைப்புகள் மேற்கொண்டு உருவாக்கப்பட்டன.

பாடசாலையில் மட்டுமன்றி ஊர்களிலும் சிரமதான நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன பாதைகள் சீரமைக்கப்பட்டன, பாலர் பாடசாலை விருத்தி செய்யப்பட்டு, நூலக விருத்தி தொடர்பாகவும் அரச அலுவலகங்களுக்கும் இச்சங்கங்களினால் பங்களிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்களின் இடப்பெயர்வானது, ஊர்களை மட்டுமன்றி பாடசாலையையும் மூட வேண்டிய நிலைக்கு கொண்டு சென்றது.

யுத்த காலம் முடிந்த பின்னர் 2012–01–30 ஆம் திகதி, அதிபர் K. முஜம்மில் அவர்களின் தலைமையில் பாடசாலை மீண்டும் உருவாக்கப்பட்டது. அப்போதைய காலத்தில் பழைய மாணவர்களான

A. ஐனுஸ் கான்

S.H. சனூஸ்

K. நிஹால்

A. ஐயுப்கான

A. R. சுகைல்

A.பாயிஸ்

M. B. பாரூக்

S.M. ஆரிப்

A. R. நவுர்கனி

M. B. மினூஸ்கான்

L. மிரஸ்

M. ஹசீப்

F. குழந்தம்மா

ஆகியோரின் உதவியால், இப்பாடசாலையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளப்பட்டு ஆரம்ப கட்டமாக தகரக் கொட்டகை ஒன்று அமைக்கப்பட்டு, பாடசாலை தோற்றம் பெற்றது. இக்காலத்தில் பாடசாலையின் முன்பக்க பகுதி துப்புரவு செய்யப்பட்டு, காடுகள் வெட்டப்பட்டன. இடிந்த நிலைகளில் காணப்பட்ட கட்டிடங்களும் கற்களும் அகற்றப்பட்டன. தற்போதைய இரு பிரதான மண்டபம் உடைந்த நிலையில் காணப்பட்டபோதிலும், முன்பக்கத்தில் காணப்பட்ட பாடசாலையின் இலச்சினை A. றுஸ்கான் அவர்களால் மை பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

இவ்வாறான கால ஓட்டத்தில் மேலும் சில வெளிநாட்டிலும் மற்றும் உள்நாட்டிலும் வாழ்கின்ற மாணவர்களின் கருத்துக்கள் கலந்தாலோசிக்கப்பட்டன. குறிப்பாக கனடாவில் வாழ்கின்ற M.மசாரிக் அவர்களால் ஆரம்பத்தில் சிரமதானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதிபர் கலீம் அவர்களின் முயற்சியால் குழாய் நீர் பெற்றுத் தரப்பட்டது. சோமசுந்தரம் ராஜேந்திரா மற்றும் அதிபர் M.A.C. அமீன் அவர்களும் வருகைதந்து பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கலந்தாலோசித்த வரலாறும் உண்டு,

அப்போதைய பிரதேச சபை உறுப்பினராக இருந்த M.K.M. ஆதிர் அவர்களும் சில பங்களிப்புகள் செய்துள்ளார்.

இவ்வாறாக பல கட்டங்களாக முன்னேறிய நிலையில், உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழ்வோர் சமூக வலைத்தளங்களின் மூலம் திருமதி சுதாமதி தலைமையில் கீழ் ஒருங்கிணையத் தொடங்கினர். இதன் விளைவாக, இப்பாடசாலைக்கு கற்றல் திரைக்கான வகுப்பறை நிர்மாணிக்கப்பட்டது. அத்துடன், இவர்களினால் இரு கட்டங்களாக சிரமதான செயல்பாடுகள் நடைபெற்றன . இதில் வெளிநாடுகளில் மற்றும் உள்நாட்டில் வாழும் பழைய மாணவர்களும் உள்ளூர்மக்களும் பங்கேற்றிருந்தனர். இந்த தொடர்பாடலின் தொடராகவே புத்தகப்பைகள், காலணிகள், அச்சுப் பிரதி, மின்விசிறி, முதலுதவிப் பெட்டி, வகுப்பறை மறைக்கும் தட்டி போன்றவை வழங்கப்பட்டன. இப்பாடசாலையின் முன்பக்கமாக வாழ்ந்த சிவகுரு ஜனகம் அக்கா இதில் பங்களித்தார்.

கலைவிழாக்காட்சிக்கான உதவிகளும் அவரால் மேற்கொள்ளப்பட்டன. சோமசுந்தரம் நாகேந்திரா ஐயா அவர்கள் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்மொழிந்ததுடன் இம்மாணவர் நலனுக்காக 2022 ஆம் ஆண்டிலிருந்து பசுப்பால் வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தியிருந்தார். .

இதற்கு கனடாவில் வாழும் அமீர் வியாஸ் அவர்களின் பங்களிப்பும் மகத்தானது. இதனுடன், இவர்களால் தரம் 5 மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளும் நடத்தப்பட்டன.

அத்துடன் கீழ்க்காணும் பழைய மாணவர்களும் பங்களித்துள்ளனர்:

S. பாயிஸ்

A. Y. சாஹிர்

R. அன்பஸ்

I. சப்ரி

S. கனகேந்திரன்

S. றஹீம்

S. காலித்

S.றகுமான்

I. அனிஸ்

N.சரஜின்

அகியோருடன் தற்போது இவ்வூரில் வாழும் சிலரும் உதவி செய்துள்ளனர். அவர்களின் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், அவர்கள் பழைய மாணவர்களாக இருந்தது உறுதி.

இவர்களால் பழைய மாணவர் சங்கம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.